Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
‘நாட்டாமை’க்கு நல்ல காலம்?
Page 1 of 1 • Share
‘நாட்டாமை’க்கு நல்ல காலம்?
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி
முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடாக
இருந்தாலும் தேங்கிப்போயிருக்கும் அதன் வளர்ச்சிப்
பணிகளை எம்.எல்.ஏ. வால் சரியாக்க முடியும்
என்பதே நிதர்சனம்.
அடிப்படை வசதி ஏதுமில்லை. உடன்குடி அனல்மின்
நிலையப் பணி கிடப்பில், திருச்செந்தூர் தொகுதியில்
இதுவரை நடைபெற்றுள்ள 13 தேர்தல்களில்
அ.தி.மு.க. ஆறு முறையும் தி.மு.க. ஐந்து முறையும்
வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் இந்தத் தொகுதியில் விசிட்.
* அ.தி.மு.க. தரப்பில் நடிகரும், சமத்துவ மக்கள்
கட்சி தலைவருமான சரத்குமார் களம் இறக்கப்
பட்டுள்ளார். தி.மு.க. சார்பில் தொகுதியின் எம்.எல்.ஏ.,
அனிதா ராதாகிருஷ்ணன், இதுபோக பா.ஜ.க., தே.மு.தி.க.,
பா.ம.க., சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள்
போட்டிக் களத்தில் உள்ளனர்.
நடிகர் சரத்குமார் அ.தி.மு.க.வின் இரட்டை இலை
சின்னத்திலேயே நிற்பது அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்.
அத்துடன் நாடார்கள் நிறைந்துள்ள திருச்செந்தூர்
தொகுதியில் அவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகம்.
சரத்குமார் தமது மனைவி ராதிகாவுடன் தொகுதி
முழுக்க உற்சாகமாகச் சென்று வாக்குகளைச் சேகரித்து
வருகிறார். ஆரம்பத்தில் சரத்குமாருடன் செல்வதற்குத்
தயங்கிய அ.தி.மு.க.வினர் இப்போது கைகோர்த்து
செல்வது கூடுதல் பலம்.
சரத்குமார், தொகுதிக்கு புதியவர் என்றபோதும் நடிகர்
என்ற முறையில் அனைவரும் அறிந்தவராவார்.
நடந்து சென்று வாக்கு சேகரிப்பது, மனைவியுடன்
பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பது என்ற ரீதியில்
வீடு தவறாமல் சென்று வாக்குகளை சேகரித்து
வருகிறார்.
அதுவும் தற்போது சின்னத் திரையில் ‘வாணி
ராணி’யாக கலக்கி வரும் ராதிகாவைப் பார்ப்பதற்காக
பெண்கள் அணிதிரண்டு வந்து விடுகின்றனர்.
இந்தக் கூட்டம் எல்லாம் வோட்டாக மாறிவிடும்
என்று சொல்லமுடியாது.
இருந்தபோதும், கூடும் மக்கள் கூட்டத்தால் நடிகர்
தரப்பு வெற்றி நமக்குத்தான் என்ற ரீதியில் பெரும்
உற்சாகத்துடன் திகழ்கிறது.
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மூன்று முறை
சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தொகுதியில்
குறிப்பிடும்படியான வளர்ச்சிப் பணிகள் நடைபெறாதது
அவருக்கு மைனஸ் பாயிண்ட்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும்
அ.தி.மு.க.வில் இணைவதற்காக அனிதா ராதாகிருஷ்ணன்
பலமான முயற்சிகள் மேற்கொண்டார். சிறையில் இருந்து
விடுதலையான அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட ஏதுவாக நான்
(அனிதா) எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்
என்று அனிதா ராதாகிருஷ்ணன் மீடியாக்களுக்கு
வெளிப்படையாகப் பேட்டி அளித்தார்.
இதனால் தி.மு.க. தலைமை அனிதாவை கட்சியில் இருந்து
சஸ்பென்ட் செய்தது. இந்நிலையில் வேறு வழியில்லாமல்
மீண்டும் அனிதா தி.மு.க.வில் இணைந்து தற்போது
தொகுதியின் வேட்பாளராகவும் களம் இறக்கப் பட்டுள்ளார்.
இது தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கு பிடிக்கவில்லை.
அது நன்றாகவே தொகுதியில் வெளிப்படுகிறது.
இருந்தபோதும் தொகுதி மக்களின் சுக, துக்க நிகழ்வுகளில்
தம்மை அழைக்காதபோதும் தாமாகவே சென்று பங்கேற்பது
அனிதாவின் குணமாகும்.
இதுபோக தொகுதியிலுள்ள கிராமங்களில் நடக்கும்
திருவிழாக்கள், விளையாட்டு விழாக்கள் போன்ற
நிகழ்வுகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கி
ஊக்குவிப்பதும் அனிதாவின் தாராள குணமாகும்.
இதுபோன்ற காரணங்கள் அனிதாவுக்கு மிகப்பெரும் ப்ளஸ்
பாயிண்ட்.
இருந்தாலும் நடுநிலையாளர்களின் மத்தியில் அனிதாவின்
நம்பகத்தன்மை இல்லாத செயல்பாடுகள் அவரது வெற்றிக்கு
வேட்டு வைப்பதாகவே இருக்கிறது. கடந்த தேர்தலின்போது
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் சரிவர நிறைவேற்றப்பட
வில்லை.
இந்தக் காரணத்தால் அனிதா சற்று பின்தங்கியே இருக்கிறார்.
இருந்தபோதும் அவரது தனிப்பட்ட செல்வாக்கும்,
தொகுதியிலுள்ள சிறுபான்மையின மக்களின் பலமான
வாக்குவங்கியும் மிகப் பெரும் பலமாக இருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக தொகுதியிலுள்ள மக்கள் நலக்
கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் குமார்,
பா.ஜ.க. வேட்பாளர் ஜெயராமன், பா.ம.க., வேட்பாளர்
குமரகுருபர ஆதித்தன் ஆகியோர் குறிப்பிட்ட சதவிகித
வாக்குகளை பிரிக்கும் சூழலில் அது அ.தி.மு.க.வின்
வெற்றிக்கு வாய்ப்பாக மாற தற்போதுள்ள சூழலில்
திருச்செந்தூர் தொகுதியில் நாட்டாமைக்கு நல்லகாலம்
நிலவுகிறது.
இனிவரும் நாட்களில் இதில் மாற்றங்கள் வந்தாலும்
வரலாம்.
–
——————————
– எம். பார்த்தீபன் சங்கர்
கல்கி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» நல்ல மனிதன் நல்ல சேவை
» வீட்டிலேயே இருக்கு எளிய வைத்தியம்
» பெண்கள் கால்சட்டை அணிவதைத் தடுக்கும் சட்டம்
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» நல்ல மனிதன் நல்ல சேவை
» வீட்டிலேயே இருக்கு எளிய வைத்தியம்
» பெண்கள் கால்சட்டை அணிவதைத் தடுக்கும் சட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum