தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத்

View previous topic View next topic Go down

4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத் Empty 4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத்

Post by rammalar Sat May 28, 2016 8:27 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது தகுதிச்சுற்றில்
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்
வித்தியாசத்தில் குஜராத் லயன்சை தோற்கடித்து இறுதிச்
சுற்றுக்கு முன்னேறியது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி
ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன்
மோதுகிறது ஹைதராபாத்.

டேவிட் வார்னர் 58 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன்
ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் குவித்து ஹைதராபாதுக்கு வெற்றி
தேடித்தந்தார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில்
ஹைதராபாத் அணியில் முஸ்தாபிஜுர் ரஹ்மான் காயம்
காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக
டிரென்ட் போல்ட் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பீல்டிங்கை
தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த குஜராத் அணியில்
மெக்கல்லத்துடன் புதிய தொடக்க வீரராக ஏகலைவ துவிவேதி
களமிறங்கினார்.

துவிவேதி 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில்,
புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கேப்டன் ரெய்னா 1 ரன் எடுத்த நிலையில் போல்ட்
பந்துவீச்சில் வீழ்ந்தார்.

இதையடுத்து மெக்கல்லத்துடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக்.
இந்த ஜோடி 44 ரன்கள் சேர்த்தது. ஒரு புறம் மெக்கல்லம் தடுமாற,
மறுமுனையில் வேகமாக ரன் சேர்த்த கார்த்திக், போல்ட்டின்
துல்லியமான “த்ரோ’வில் ரன் அவுட்டானார். அவர் 19 பந்துகளில்
1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து ஆரோன் ஃபிஞ்ச் களமிறங்க, மெக்கல்லம்
29 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்
பார்க்கப்பட்ட டுவைன் ஸ்மித் ஒரு ரன்னில் நடையைக் கட்ட,
ஜடேஜா களம்புகுந்தார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் அசத்தலாக ஆடிய
ஃபிஞ்ச், ஹென்ரிக்ஸ் வீசிய 14-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு
பவுண்டரிகளை விரட்டினார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர்,
பென் கட்டிங் ஓவரில் பவுண்டரியை விளாசி 31 பந்துகளில் அரை
சதம் கண்டார்.

எனினும் அடுத்த பந்திலேயே அவர் போல்டானார்.
அவர் 32 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள்
எடுத்தார்.

கடைசிக் கட்டத்தில் பிராவோ 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து
ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள்
குவித்தது குஜராத். ஜடேஜா 15 பந்துகளில் 19, தவல் குல்கர்னி
3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில்
27 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், பென் கட்டிங்
3 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும்
சாய்த்தனர்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத் Empty Re: 4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத்

Post by rammalar Sat May 28, 2016 8:29 am

4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத் BwdiqcSeSOKwI11wRWk8+22
-
வார்னர் 93*: பின்னர் ஆடிய ஹைதராபாத் அணியில்
ஷிகர் தவன் 0, மோசஸ் ஹென்ரிக்ஸ் 11, யுவராஜ் சிங் 8,
தீபக் ஹூடா 4, பென் கட்டிங் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் மறுமுனையில் தனிநபராக வெளுத்து வாங்கிய
கேப்டன் டேவிட் வார்னர் 35 பந்துகளில் அரை சதம் கண்டார்.

இதன்பிறகு நமன் ஓஜா 10 ரன்களில் நடையைக் கட்ட,
பிபுல் சர்மா களம்புகுந்தார். அவர் வந்த வேகத்தில்
3 சிக்ஸர்களை விளாசினார். மறுமுனையில் அசத்தலாக
ஆடிய வார்னர், பிரவீண் குமார் வீசிய கடைசி ஓவரின் முதல்
பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் ஒரு ரன்னும் எடுக்க,
19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்து
வெற்றி கண்டது ஹைதராபாத்.

டேவிட் வார்னர் 58 பந்துகளில் 93, பிபுல் சர்மா 11 பந்துகளில்
3 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல்
இருந்தனர்.

குஜராத் தரப்பில் டுவைன் பிராவோ, கெளஷிக் ஆகியோர்
தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டேவிட் வார்னர் ஆட்ட
நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத் Empty Re: 4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத்

Post by rammalar Sat May 28, 2016 8:30 am

டேவிட் வார்னர்-779

இந்த சீசனில் இதுவரை 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள
டேவிட் வார்னர் 8 அரை சதங்களுடன் 779 ரன்கள்
குவித்துள்ளார். இதன்மூலம் இந்த சீசனில் அதிக ரன்
குவித்தவர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ள
வார்னர், ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 700 அல்லது அதற்கு
மேற்பட்ட ரன்களைக் குவித்த 4-ஆவது வீரர் என்ற பெருமையைப்
பெற்றுள்ளார்.

கோலி, கெயில், மைக் ஹசி ஆகியோர் மற்ற மூவர். இதில்
கெயில் இரு முறை 700 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இதுதவிர ஐபிஎல் வரலாற்றில் இலக்கை துரத்துகிறபோது
(ஒரு தொடரில்) அதிக ரன் குவித்தவர்கள் வரிசையிலும்
முதலிடத்தைப் பிடித்துள்ளார் வார்னர்.
இந்த சீசனில் இலக்கை துரத்தியபோது அவர் 468 ரன்கள்
குவித்துள்ளார்.

முன்னதாக 2014 சீசனில் ராபின் உத்தப்பா 457 ரன்கள்
குவித்ததே சாதனையாக இருந்தது.

——————————

சுருக்கமான ஸ்கோர்

குஜராத்-162/7

ஆரோன் ஃபிஞ்ச் 50 (32)
மெக்கல்லம் 32 (29)
புவனேஸ்வர் குமார் 2வி/27
ஹைதராபாத்-163/6
வார்னர் 93* (58)
பிபுல் சர்மா 27* (11)
கெளஷிக் 2வி/22
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத் Empty Re: 4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum