Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருவள்ளூர் மாவட்டம்!!
Page 1 of 1 • Share
திருவள்ளூர் மாவட்டம்!!
சென்னை மாநகரத்தோடு சேர்ந்தாற்போல் இருப்பதாலேயே பல
சிறப்புகளையும், வளர்ச்சிகளையும் அடைந்து வரும் மாவட்டம்.
கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மத நிறுவனங்கள்,
சிறந்த கோயில்கள் என, பழம் பெருமைகளோடு, நவீன வளர்ச்சியிலும்
தமிழகத்தின் கேந்திரமாக திகழ்கிறது.
1968 ஜூலை ஆறாம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பிறகு 1996 இல் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு,
காஞ்சிபுரம் மாவட்டம் என்றும் திருவள்ளூர் மாவட்டம் என்றும் வழங்கப்பட்டது.

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: திருவள்ளூர் மாவட்டம்!!
திருவள்ளூர் மாவட்டத்தின் பிற முக்கிய இடங்கள்,
அம்பத்தூர்:
இந்தியாவின் மாபெரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தொழிற்பேட்டை தெற்காசியாவிலேயே மிகப் பெரியதாகும். இரயில் நிலையம், பேருந்து வசதிகள் அனைத்தும் கொண்டது. சென்னையிலிருந்து ஆவடி செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆவடி:
ஆவடி டாங்கி தொழிற்சாலை என்ற ராணுவ கவச வண்டி தயாரிக்கும் தொழிற்சாலை இங்குதான் உள்ளது. விமானப்படை நிலையமும் உள்ளது. சென்னை - அரக்கோணம் இரயில் தடத்தில் இருப்பதால் இரயில் நிலையமும் போக்குவரத்து வசதியும் உள்ளது. புறநகர் பேருந்துகளும் நிறைய உண்டு. சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவில் ஆவடி உள்ளது.
பட்டினத்தார் சமாதி:
தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்த ஞானி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, சென்னை அருகில் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருவொற்றியூரில் மறைந்தார். திருவொற்றியூரில் இவருடைய சமாதி உள்ளது.
பழையனூர்:
தமிழ்ப்படைப்பு ஒன்றின் சிறப்பை எடுத்துக்காட்ட 70 தமிழ் அறிஞர்கள் தங்கள் இன்னுயிரை நீத்த தியாகத் திருமண் இது. திருவாலங்காட்டிலிருந்து 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: திருவள்ளூர் மாவட்டம்!!
பூவிருந்தவல்லி (பூந்தமல்லி):
திருக்கச்சி நம்பியாழ்வார் என்ற வைணவப் பெரியார் பிறந்த ஊர். சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் இருப்பதால் புறநகர் மற்றும் தொலைதூரப் போக்குவரத்து வசதி நிறைந்த ஊர்.
எண்ணுர் :
தென்னஞ் சோலைகள் சூழ்ந்த ஊர். படகோட்டிப் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடம். இங்கு உப்பளங்கள் நிரம்ப உள்ளன. பெருஞ்தொழிற்சாலைகள் பல இயங்கி வருகின்றன. எண்ணுரில் கடல்வாழ் உயிரினங்கள் நிலையம் உள்ளது. உயிரினங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், படகோட்டுவதற்கும், மீன் பிடித்தலுக்கும், நீச்சல் பழகுவதற்கும் ஏற்ற இடமாக அந்நிலையம் விளங்குகிறது. அனல் மின்னாக்கம், உரத்தொழில் ஆகியவற்றில் இவ்வூர் சிறப்புறுகிறது.
பறங்கிமலை :
பறங்கியர்கள் இங்குத் தங்கி வாழ்ந்த காரணத்தால், இப்பகுதிக்கு பறங்கிமலை எனப் பெயர் வந்தது. இங்குள்ள மலை 200 அடி உயரம் கொண்டது. செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்று இதைக் கூறுவார்கள். இயேசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி. முதல் நூற்றாண்டில் இங்கு வந்து, தங்கி சமயபிரச்சாரம் செய்தபோது பிராமணர் ஒருவரால் முதுகில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டதால் இதற்கு இப்பெயர் வழங்குகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது கிறித்துவத் தொடர்பு கொண்ட இடமாக இருந்துள்ளது. பல கிறித்துவச் சமயப் பிரிவினரின் தேவாலயங்களும் இங்குள்ளன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இது அவர்களின் முக்கியப் படைத்தளங்களுன் ஒன்றாக இருந்தது. இப்போது சுதந்தர இந்தியாவின் படைத்தளமாக இருந்து வருகிறது. இது மத்திய அரசின், பாதுகாப்புத் துறையின் நேரடி ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் கண்டோண்மெண்ட் பகுதியாகும்.

பூண்டி:
சத்தியமுர்த்தி சாகர் என்ற பூண்டி நீர்த்தேக்கம் இங்குதான் உள்ளது. இங்கிருந்துதான் சென்னையின் குடிநீர்த் தேவைகளைத் தீர்க்கும் செங்குன்றனம் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சென்னையிலிருந்த 60 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிராமம், நீர்த்தேக்கத்துடன் சேர்ந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
பழவேற்காடு உப்பேரி பறவைகள் சரணாலயம்:
கடல் நீரும், பக்கிங்காம் கால்வாய் நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் ஏரி இது. மீன்வளமும், இறால் வளமும் உள்ள ஏரி இது என்பதால் கடல் நீரை உள்வாங்குவதும், வெளித்தள்ளுவதுமாக இருப்பதால், இதை உப்பாறு என்று அழைக்கிறார்கள். இந்த ஏரியின் நீர்மட்டம் திடீரென்று உயர்வதும், தாழ்வதுமாக இருக்கும். இதை வத்தம், வெள்ளம் என்று இப்பகுதியில் உள்ள மீனவர்கள் அழைப்பார்கள். இங்கு கிடைக்கும் கட்டுநண்டு ஏற்றுமதி செய்யுமளவுக்கு தரமானது. பழவேற்காடு ஏரி, ஒரு பறவைகள் சரணாலயமும் கூட. கி.பி. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சுக்கல்லறை ஒன்றும் இங்கு உள்ளது. சென்னை அருகே உள்ள வித்தியாசமான சுற்றுலாத்தலம்.
வடிவுடையம்மன் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில்:
தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32 இல், திருவொற்றியூரில் உள்ள இந்தக் கோயிலும் ஒன்று. இந்து சமயப் பிரிவினரான ஆதி சைவர்கள், சைவர்கள், சாக்தர்கள், உச்சவர்கள், கேரள நம்பூதிரி ஆகிய ஆறு பிரிவினரும் இங்குள்ள சிவனையும், சக்தியையும் வழிபடுகின்றனர்.

திருப்பாச்சூர்:
மாமன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பழம் பெரும் கோயில். சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருவாலங்காட்டுக்குக் கிழக்கிலும், திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோயிலுக்கு மேற்கிலும் இத்தலம் உள்ளது.
திருத்தணி:
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. ஆடிக் கிருத்திகையும், தெப்ப உலாவும் பிரபலமான திருவிழாக்கள். கந்தர் சஷ்டி, சிவராத்திரி ஆகியவையும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும். குமரன் கோபம் தணிந்து, தன் தேவியருடன் இந்தக் குன்றில் அமர்ந்ததால், திருத்தணிகை என்று பெயர் வந்ததாகக் கூறுவதுண்டு. மலையடிவாரத்தில் உள்ள குமாரதீர்த்தம் புகழ்பெற்றது. 365 திருப்படிகளைக் கொண்டது திருத்தணி மலைக்கோயில்.
வீரராகவப் பெருமாள்:
மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் இந்தக் கோயில் உள்ளது. திருவள்ளூரைத் 'திருவுள்' என்றே அழைத்தார்கள். சென்னையில் இருந்து 42 கி.மீ. தொலைவில் இருக்கும் இக்கோயில், விஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் வீரராகவப் பெருமாள் காட்சி அளிக்கிறார். அருகில் வசுமதி என்ற கனகவல்லியும் அவருடன் உறைந்துள்ளார்கள்.
நன்றி : எண்ணூர் துறைமுகம்!!

நன்றி முரளி. பிரபு அண்ணா களே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» மாவட்டங்கள் வரிசை :::::: திருவள்ளூர் மாவட்டம்
» திருச்சிராப்பள்ளி மாவட்டம்!!
» வேலூர் மாவட்டம்!!!
» அரியலூர் மாவட்டம்!!!
» நாகப்பட்டினம் மாவட்டம்!!!
» திருச்சிராப்பள்ளி மாவட்டம்!!
» வேலூர் மாவட்டம்!!!
» அரியலூர் மாவட்டம்!!!
» நாகப்பட்டினம் மாவட்டம்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum