Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஒரு பாடலில் ஒரு நாடகம்
Page 1 of 1 • Share
ஒரு பாடலில் ஒரு நாடகம்
தமிழ் இலக்கியங்களில் உள்ள அகத்திணைப் பாடல்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சுவைக்கத்
தக்கவையாய் உள்ளன. அவற்றுள் நாடகப் பாங்கில்
அமைந்த பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
–
திருவள்ளுவர் தமது இன்பத்துப்பால் “புலவி நுணுக்கம்’
அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் பத்து நாடகக்
காட்சிகளை அழகுற அமைத்துள்ளார்.
–
இதே போன்றதொரு நாடகப் போக்கினை எட்டுத்தொகை
நூலாகிய கலித்தொகையில் உள்ள கபிலரின் குறிஞ்சிக்கலிப்
பாடலில் காணமுடிகிறது.
–
தாயும் மகளும் தனித்திருந்த வேளையில் வேட்கை தணிக்க நீர்
வேண்டி, இளைஞன் ஒருவன் வாசலில் நின்று குரல் கொடுக்கிறான்.
வேலையாயிருந்த தாய், மகளிடம் தூய நீரைப் பொற்கலத்தில்
எடுத்து அவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டு வருமாறு கூறுகிறாள்.
–
மகளும் வெளியே வந்து, அவன் குறும்புக்காரன் என்பதையறியாது
நீர்க்கலத்தை அவனிடம் நீட்ட, அவனோ அவளின் முன்கையைப்
பற்றி இழுக்கிறான்.
–
திடுக்கிட்ட அவள், “”அம்மா, இங்கு வந்து இவன் செயலைப் பார்” என
அலறுகிறாள். அதைக்கேட்ட தாய் விரைந்து வெளியே வர, மகள்
அவன் செய்த செயலை மறைத்து, “இவன் நீர் குடிக்கும்போது விக்கல்
எடுத்ததால் வருந்தினான்’ எனப் பொய்யுரைக்கிறாள்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
Re: ஒரு பாடலில் ஒரு நாடகம்
[You must be registered and logged in to see this image.]
-
மகளின் பேச்சை நம்பிய தாய், விக்கல் நிற்குமாறு இளைஞனின்
முதுகைத் தன் கையால் பலமுறை தடவுகிறாள். அப்போது இளைஞன்
கடைக்கண்ணால் அப்பெண்ணைப் பார்த்து புன்முறுவல் செய்கிறான்.
அது அவளது உள்ளத்தில் புகுந்து நின்றுவிடுகிறது எனக் கபிலர் நாடக
வடிவில் அப்பாடலைத் தந்துள்ளார்.
–
… … .. மேல் ஓர்நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை
அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள், எனயானும்
–
தன்னை யறியாது சென்றேன், மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
“அன்னாய்! இவன் ஒருவன் செய்ததுகாண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்
–
“உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ,மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான் போல்நோக்கி நகைக்கூட்டம்
செய்தான்அக் கள்வன் மகன்!
–
குறிஞ்சிக் கலி 51)
–
இப்பாடலில் கபிலர் நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து வைத்துச்
செல்கின்ற பாணியும் நாடக உத்தி முறையும் வாழ்வியல்
செயல்பாடுகளும் நகைச்சுவையுணர்வும் படிப்பவரை ஈர்க்கும்
தன்மையனவாகும்.
இளைஞன் உண்ண நீர் கேட்பது முதல் கள்வன் மகனாகிய
அவன் கொல்வான்போல் கடைக்கண்ணால் இளம்பெண்ணைப்
பார்த்து புன்முறுவல் செய்வது முடிய ஏழு காட்சிகளைக் கபிலர்
ஒரே பாடலில் அமைத்திருப்பது அருமையிலும் அருமை.
புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாகிய உரிப்பொருளைக்
கொண்ட குறிஞ்சி பற்றிப் பாடுவதில் தலைசிறந்தவராகிய
கபிலரின் பாடல் புதிய வடிவத்தில் முருகியல் உணர்வை ஊட்டும்
வகையில் அமைந்துள்ளது.
–
———————————–
By -தமிழ்ப்பெரியசாமி
நன்றி- தமிழ்மணி

» அக்பர் பீர்பால் கதைகள் - 5 அரசியின் நாடகம்
» ரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடகம் அரசியலமைப்பு - அனுர
» ரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடகம் அரசியலமைப்பு - அனுர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|