Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?
Page 1 of 1 • Share
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?
மெட்ரோ ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை
திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன் என்பது
தொடர்பான முதல்வரின் கேள்விக்குப் பதில் அளிக்க
முடியாமல் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா திணறி
நின்றார்.
முதல்வரும், பேரவைத் தலைவரும் தொடர்ந்து அந்தக்
கேள்வியையே எழுப்பினாலும், அதற்கு டி.ஆர்.பி.ராஜா
நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.
சட்டப் பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை
மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா
பேசும்போது, தமிழகத்தில் இருந்து தொழில் முதலீட்டாளர்கள்
ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் சம்பத்,
ராஜேந்திரபாலாஜி ஆகியோருடன் டி.ஆர்.பி.ராஜா வாதத்தில்
ஈடுபட்டு வந்தார்.
அதன் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக
முதல்வர் ஜெயலலிதா எழுப்பிய கேள்வியும் அது தொடர்பாக
நடந்த விவாத விவரம்:
-
------------------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?
முதல்வர் ஜெயலலிதா:
தமிழகத்தில் இருந்து வேறு எங்கும் செல்லாத தொழிற்சாலைகள்
பற்றி, திமுக உறுப்பினர் சென்றதாகச் சொல்லப்படுகிறதே என்று
கேள்வி எழுப்புகிறார். ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான
ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை திமுக ஆட்சியில் இங்கு
நடத்தப்படாமல், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்குச் சென்றுவிட்டது.
அது ஏன் என்பதை விளக்கிக் கூறத் தயாரா?
-
டி.ஆர்.பி.ராஜா: அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை.
-
பேரவைத் தலைவர் தனபால்:
முதல்வர் கேட்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
-
முதல்வர்:
பதில் சொல்லத் தெரியாத விஷயங்களுக்கெல்லாம் நான் அதற்குள்
போக விரும்பவில்லை என்று உறுப்பினர் சொல்கிறார். இந்தப்
பிரச்னையை ஆரம்பித்ததே திமுக உறுப்பினர்தான். இங்கிருந்து
செல்லாத தொழிற்சாலைகள் ஆந்திரத்துக்கும், கர்நாடகத்துக்கும்
சென்றதாகப் பேசப்படுகிறது, கூறப்படுகிறது என்றார்.
மெட்ரோ ரயில் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்க, மெட்ரோ ரயில்
பெட்டித் தொழிற்சாலை திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்கு சென்று
விட்டது.
அது ஏன் என்ற கேள்விக்குத் திமுக உறுப்பினர் பதில் சொல்லித்தான்
ஆக வேண்டும். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை என்று கூறி
தப்பித்துக் கொள்ள முடியாது என்றார்.
அப்போது திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் எழுந்து பதில் அளிக்க
அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். பேரவைத் தலைவர் தனபால்
அனுமதிக்கவில்லை.
பேரவைத் தலைவர்:
முதல்வரின் கேள்விக்கு டி.ஆர்.பி.ராஜா பதில் அளிக்கிறீர்களா
இல்லையா? பதில் அளிப்பதாக இருந்தால் பேசலாம்.
டி.ஆர்.பி.ராஜா:
மெட்ரோ ரயில் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம்.
மெட்ரோ ரயில் பெட்டி ஆந்திரத்துக்குச் சென்றதற்கு திமுக எப்படிப்
பொறுப்பேற்க முடியும்?
-
---------------------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?
முதல்வர்:
மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து
ஒப்பந்தம் செய்துகொண்டு நடத்தும் திட்டமாகும். இதற்கு ஆரம்பத்தில்
பிள்ளையார் சுழி போட்டது அதிமுக அரசுதான்.
அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் பெட்டிகளைச் தயாரிக்கும் தொழிற்
சாலையைத் தமிழகத்தில் தொடங்குவதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் இங்கே தொடங்கப்படாமல், அது
ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டது.
எனவே, தமிழகத்தில் ஏன் தொடங்கப்படவில்லை என்று கேட்டதற்கு,
இது மத்திய அரசின் திட்டம் என்றால், இது முழுக்க முழுக்க மத்திய அரசின்
திட்டம் இல்லை. மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து நடத்தும் ஒரு
திட்டம்தான் இது என்றார்.
அதைத் தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா மெட்ரோ ரயில் பெட்டி தொடர்பான
கேள்விக்குப் பதில் அளிக்காமல், புள்ளிவிவரம் ஒன்றை ஆங்கிலத்தில்
குறிப்பிட்டார். அதனை அவைக்குறிப்பிலிருந்து பேரவைத் தலைவர்
நீக்கினார்.
முதல்வர்: மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பெட்டிகள் தயாரிக்கும்
தொழிற்சாலை திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்
என்றுதான் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் சொல்லாமல்,
உறுப்பினர் வேறு புள்ளிவிவரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கும், மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
பேரவைத் தலைவர்:
முதல்வர் கேள்விக்கு பதில் இருக்கிறதா, இல்லையா?
டி.ஆர்.பி.ராஜா:
மெட்ரோ ரயில் திட்டமே வேண்டாம் என்று கூறிய முதல்வர் இப்போது,
ரயில்பெட்டித் தொழிற்சாலை ஏன் ஆந்திரத்துக்குச் சென்றது எனக்
கேட்கிறார்.
-
----------------------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?
முதல்வர் ஜெயலலிதா:
நான் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல், வேறு ஏதேதோ
பேசி, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கேள்வியை உறுப்பினர்
கேட்கிறார். இது அவருடைய முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது
என்றார்.
திமுக உறுப்பினர்கள் எழுந்து முதிர்ச்சியின்மை என்ற வார்த்தையை
நீக்குமாறு கூறினர். அதை பேரவைத் தலைவர் தனபால் ஏற்காமல்,
டி.ஆர்.பி.ராஜா ஓரிரு நிமிஷத்தில் பதில் அளிக்குமாறு கூறினார்.
டி.ஆர்.பி.ராஜா: நான் சாதாரண சட்டப்பேரவை உறுப்பினர். முதல்வர்
விவரங்களோடு பதில் அளிக்கலாம்.
முதல்வர்:
திமுக உறுப்பினருக்கு முதிர்ச்சி போதவில்லை என்பதை அவரே
அதை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை தெளிவுபடுத்துகிறார்
என்றார்.
மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தம் மூலம் தமிழகம் வஞ்சிப்பு
மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக திமுக ஆட்சியில் போடப்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக சட்டப்
பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இது தொடர்பாக முதல்வர் கூறியது:
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசும், திமுக அரசும் போட்டுள்ள
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டது என்பதை
தொழில்துறை அமைச்சர் சம்பத் விளக்கினார்.
அதை எளிதாகப் பாமர மக்களுக்குப் புரியும் விதத்தில் இங்கே விளக்கிக்
கூற விரும்புகிறேன்.
இரு அரசுகளும் போட்ட ஒப்பந்தத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான
ஒப்பந்தத்தில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு. மாநிலத்துக்கும் பங்கு
உண்டு.
ஆனால், நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டம் முழுவதையும் மாநில அரசே
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் பரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்
பட்டுள்ளது. அந்த விவரம் திமுக உறுப்பினருக்கு (டி.ஆர்.பி.ராஜா) தெரியுமா
தெரியாதா?
மெட்ரோ திட்டம் ஜிகா என்ற ஜப்பான் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட
கடனுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜிகா கடனைத் திருப்பிச் செலுத்த
முடியவில்லை என்றால், அதில் மத்திய அரசுக்கு எந்தப் பொறுப்பும்
கிடையாது. தமிழக அரசுதான், அதாவது மாநில அரசுதான் திருப்பிச்
செலுத்த வேண்டும் என்று அதில் ஷரத்து இருக்கிறது.
இப்படி தமிழகத்தை வஞ்சிக்கும், தமிழகத்துக்குத் துரோகம் செய்யும்
ஷரத்துகள் எல்லாம் அந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதியபோதுகூட
அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், தமிழகத்துக்கு
எதிராக உள்ள ஷரத்துகளை மாற்றியமைக்க வேண்டும் என்று
கேட்டுள்ளேன். தமிழகத்தை வஞ்சிக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
திமுக கையெழுத்திட்டது ஏன் என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி
எழுப்பினார்.
-
------------------------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மெட்ரோ ரயில்...!!
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையங்களில் பயங்கர குண்டு வெடிப்பு : 10 பேர் பலி
» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
» மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையங்களில் பயங்கர குண்டு வெடிப்பு : 10 பேர் பலி
» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
» மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum