தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)

View previous topic View next topic Go down

பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)  Empty பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)

Post by rammalar Tue Aug 23, 2016 8:20 am

https://2img.net/h/oi66.tinypic.com/j6lc1z.jpg" alt="" />[/img]
-
எஸ்.பி. முத்துராமனுடன்..
----------------------------------------

ரஜினி, கமல், இளையராஜா என பலரை உச்சிக்கு ஏற்றிய
பெருமைக்குரியவர் பஞ்சு அருணாசலம். திரைத்துறையில்
தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர், மறைந்துவிட்டார்.

ஆனாலும் அவர் பலரது நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டுதான்
இருப்பார்.

ஏ.வி.எம். சரவணன்:

எனக்கு பஞ்சு அருணாசலத்தை
‘களத்தூர் கண்ணம்மா’ படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே
தெரியும். கண்ணதாசன் உதவியாளராக அவருடன் வருவார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கண்களின் வார்த்தைகள் தெரியாதோ’
பாடலை கவிஞர் சொல்லச் சொல்ல பஞ்சுதான் எழுதுவார்.

‘நானும் ஒரு பெண்’ படத்தில் ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’
பாடலை கவிஞர் எழுதினார். அந்தப் படத்தில் அடுத்த பாடல் எழுத
அவர் வரவில்லை. பேசாமல் அடுத்த பாடலை நீங்களே எழுதுங்க.
இதனால் கவிஞர் உங்களை தவறாக நினைத்துக் கொள்வாரா?
என்று பஞ்சுவிடம் கேட்டேன்.

‘அதெல்லாம் ஒன்றும் தவறாக நினைத்தக் கொள்ளமாட்டார்’ எனறு
‘பூ போல பூபோ பிறக்கும், பால் போல பால் போல சிரிக்கும்’ என்று
அந்தப் பாடலை பஞ்சு அருணாசலமே எழுதித் தந்தார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘முரட்டுக் காளை’ படத்தை
தயாரித்தோம். அதுவரைக்கும் ரஜினி சாருக்கு ஃபார்முலா பாடல்
என்று எதுவும் இல்லை. அந்தப் படத்தில் இடம்பெற்ற பஞ்சு அருணாசலம்
எழுதிய ‘பொதுவாக எம் மனசு தங்கம்’ பாடல் ரஜினி சாருக்கு முதல்
ஃபார்முலா பாடலாக அமைந்தது.

ஃபார்முலா பாடல் எழுதுவதில் பஞ்சு அருணாசலத்திற்கு நிகராக வேறு
யாரையும் சொல்லமுடியாது.

அதேபோல கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தை பஞ்சுவிற்கு
போட்டுக் காட்டி, அவர் சொன்ன மாற்றங்களைச் செய்த பிறகுதான்,
அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

எண்பதுகளில் வெளியான பல படங்களின் வெற்றிக்கு
பஞ்சு அருணாசலத்தின் பங்களிப்பு முக்கியமானது.


Last edited by rammalar on Tue Aug 23, 2016 8:22 am; edited 1 time in total
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)  Empty Re: பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)

Post by rammalar Tue Aug 23, 2016 8:21 am

பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)  BTuJRPxOTDW9Ifwbhidf+2_2966239g
-
கங்கை அமரன்:

‘பஞ்சு அருணாசலம் பற்றி நானும் அண்ணன் இளையராஜாவும்
எத்தனையோ பேட்டிகளில் நிறைய சொல்லிவிட்டோம். அவர் இல்லை
என்றால் நாங்கள் யாரும் இல்லை.

இளையராஜாவை ஒரு மலையாகவும் என்னை ஒரு குன்றாகவும்
மாற்றியவர் பஞ்சு அருணாசலம்.

உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ‘கிருஷ்ணா காட்டேஜில்தான் அவர் தனது
பட வேலைகள் எல்லாவற்றையும் செய்வார். அங்கே வைத்துதான் ஒரே
நேரத்தில் பத்துப் படங்களுக்கு கதை, வசனம், எழுதுவார்.

மத்த படக் கம்பெனி கார்களும் வரிசையாக அவருக்காக காத்திருக்கும்.
அதில் ஒரு காரில் ஏறி ஒரு படக் கம்பெனிக்குப் போகும்போது மற்ற
கார்களும் அந்தக் காரை பின்தொடர்ந்து செல்லும்.’

அங்கே வேலை முடிந்ததும் அடுத்த காரில் ஏறிச் செல்வார். இப்படித்தான்
அவர் பரபரப்பாக இயங்கினார் ரஜினி, கமல் என்று எல்லாருக்கும்
பிடித்தவர் அவர்.

மாலையில் நான், பாரதிராஜா, கமல், ஜெய்சங்கர், இயக்குநர் ராஜசேகர்
ஆகியோர் கிருஷ்ணா காட்டேஜில் அவரைச் சந்தித்து பேசிக்
கொண்டிருப்போம். அவருக்கு எல்லாரோடவும் சந்தோஷமா இருக்கணும்.
மறைமுகமா இருப்பவங்க மனம் திறந்து பேசுவதற்கு அது ஒரு களமாக
இருந்தது.

அவர் தனது துக்கங்களை மறைத்து மறைத்து வாழ்ந்தவர்.
அந்த மாதிரி ஒரு சினிமா குடும்பத்தை பார்க்க முடியாது. அவரை
நன்றியோடு நினைப்பதற்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.

கஷ்டப்படாமல் எங்களை வாழ வைத்தவர், யாரையும் கஷ்டப்படுத்தாமல்
போய்விட்டார்.’
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)  Empty Re: பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)

Post by rammalar Tue Aug 23, 2016 8:22 am

எஸ்.பி. முத்துராமன்:
-பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)  NqISgHKDRsumxZZf2hpg+1_2966238g
நானும் பஞ்சு அருணாசலம் அவர்களும் காரைக்குடியைச் சேர்ந்தவர்கள்.
உறவினர்கள். கவியரசு கண்ணதாசன் அவர்களின் அண்ணன் கண்ணப்பன்
அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம்.

நானும் அவரும் ஒரே கால கட்டத்தில் சென்னைக்கு வந்தோம்.
கவியரசரின் ‘தென்றல்’ இதழில் நான் பணியாற்ற, கவியரசரின் நம்பிக்கைக்கு
உகந்த உதவியாளராக பஞ்சு அருணாசலம் பணியாற்றினார்கள்.
எங்கள் இருவரையும் கவியரசர் தம்பி… தம்பி என்று அழைப்பார்கள்.
தம்பிகள் இருவரும் சினிமாவில் இணைந்தோம்.

இணை பிரியா கலைஞர்களானோம். நான் இயக்கியதில் 15 படங்களுக்கு
மேல் பஞ்சு அவர்கள்தான் திரைக்கதை, வசனம் எழுதினார்.

‘மயங்குகிறாள் ஒரு மாது’ ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘துணிவே துணை’,
‘முரட்டுக்காளை’, ‘சகலகலாவல்லவன்’ போன்ற படங்கள் எல்லாம் அதற்கு
உதாரணம். அதைப் போல அவர் தயாரித்த ‘பிரியா’, ‘ஆறிலிருந்து அறுபது
வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘குரு சிஷ்யன்’ போன்ற படங்களை நான்
இயக்கினேன்.

இருவரின் கருத்துக்களும் ஒருமித்து இருந்ததால் எங்களுக்குள் தகராறு
என்ற பேச்சுக்கே இடமில்லை.
அவருடைய மனைவி மீனா அவர்களின் சமையலையும் விருந்தோம்பல்
பண்பையும் சொல்லி முடியாது. அவருடைய மகன்கள் சண்முகம்,
பஞ்சு சுப்பு, மகள்கள் சித்ரா, கீதா அவ்வளவு பேரும் எல்லோரிடத்தும்
பாசம் காட்டுபவர்கள். அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோம்
என்று தெரியவில்லை.

——————————–

– தெக்கூர் அனிதா
குமுதம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)  Empty Re: பொதுவாக எம்மனசு தங்கம்!-(பஞ்சு அருணாசலம் - நினைவுகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum