Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மன்னிப்பு கேட்ட டிரம்ப்பின் மகள்!
Page 1 of 1 • Share
மன்னிப்பு கேட்ட டிரம்ப்பின் மகள்!
[img][/img]
-
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பை நிழலாகத்
தொடர்ந்தவர் அவரது மகள் இவான்கா. முப்பத்தைந்து
வயதாகும் இவான்கா மூன்று குழந்தைகளுக்குத் தாய்.
உயரம் ஆறடிக்கு ஒரு அங்குலம் குறைவு. பல நிறுவனங்களை
நிர்வகித்து வரும் இவான்காவை அமெரிக்காவின் நிஜமான
முதல் பெண்மணி என்கின்றனர்.
அந்த அளவுக்கு டிரம்பிடம் செல்வாக்கு, உரிமை இவான்காவிற்கு
உண்டு. இவான்கா ஒரு சூப்பர் மாடலும் கூட. அம்மா
இவானாவிடமிருந்து அட்டகாசமான அழகும், அப்பா டிரம்பிடமிருந்து
கணக்கிட முடியாத சொத்தும் கிடைத்த அதிர்ஷ்டமானவர் இவான்கா.
இவான்கா படத்தை அட்டைப்படமாகப் பிரசுரிக்காத அமெரிக்க
பத்திரிகைகள் இல்லை. தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய போது,
இவான்கா நிறைமாத கர்ப்பமாக இருந்தார். என்றாலும் தேர்தல்
பணிகளில் ஓடியாடி வேலை செய்தார். தந்தையோடு தேர்தல்
பிரச்சாரங்களிலும் ஆர்வமாகக் கலந்து கொண்டார்.
டிரம்ப் அமைச்சரவையில் இவான்காவையும், இவான்காவின்
கணவரான ஜரேட் குஷ்னேரையும் சேர்த்துக் கொள்ளலாமா என்று
சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடக்கிறது. தேர்தலில்
வெற்றிக்குப் பிறகு டிரம்ப் இதர நாடுகளின் தலைவர்களுடன்
கலந்துரையாடும் போது இவான்காவும் உடன் இருக்கிறார்.
அர்ஜென்டினா நாட்டின் ஜனாதிபதி, ஜப்பானின் பிரதமரை டிரம்ப்
சந்தித்து பேசிய போது டிரம்புடன் கூட இருந்தவர் இவான்கா.
இவான்காவிற்கு அத்தனை முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்ற பிறகு
முதல் முறையாக அவருடன் இணைந்து மகள் இவான்கா
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
கண்களைக் கவரும் அதிக விலையுள்ள ஆபரணங்களை
தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இவான்கா, தொலைக்
காட்சி நிகழ்ச்சியில் அவரது சொந்த நிறுவனம் தயாரித்த
எழுபது லட்சம் மதிப்புள்ள தங்கக் காப்பு ஒன்றை அணிந்திருந்தார்..
நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, இவான்காவின் ஊழியர்
பத்திரிகைகளை தொடர்புக் கொண்டு இவான்கா டிரம்ப்
அணிந்திருந்த நகையை விளம்பரம் செய்யுமாறு கேட்டுக்
கொண்டதுடன் தங்கக் காப்பு குறித்த தகவல்களையும் தந்துள்ளார்.
ஜனாதிபதி பதவி வகிக்கப் போகிறவரும், அவருடைய
குடும்பத்தினரும் எந்த பொருளையும் லாப நோக்குடன் விளம்பர
படுத்தக் கூடாது என்பது அமெரிக்காவில் விதியாகும்.
ஆனால், ஜனாதிபதியின் மகள் இவான்கா தன்னுடைய நிறுவனத்தின்
தயாரிப்பை பிரபலப்படுத்தத் தனது தந்தையின் தொலைக்காட்சி
நிகழ்ச்சியை சுயலாபத்திற்காகப் பயன்படுத்தி கொண்டார் என
தற்போது கண்டனம் எழுந்துள்ளது. ஊழியர் செய்த தவறுக்காகக்
கண்டனம் எழுந்ததை தொடர்ந்து இவான்காவும் அவருடைய நிறுவனமும்
இதற்காக வருத்தம், மன்னிப்பு கேட்டுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.
இன்று இவான்கா மட்டுமல்ல.. அவர் மகள், மகன் இருவரும் பரபரப்பு
செய்திகளாகியுள்ளனர்.
டொனால்டு டிரம்பின் பேத்தி பாடிய சீன மொழி பாடல் ஒன்று
சீனாவிலும், அமெரிக்காவிலும் வைரலாகியுள்ளது. சென்ற பிப்ரவரி
மாதம் சிறுமி அரபெல்லா குஷ்னேர் பாடிய இந்த பாடலை டிரம்ப்
வெற்றி பெற்றதன் பின்னர் இவான்கா சமூக வலைத் தள பக்கத்தில்
பதிவேற்றியுள்ளார்.
இவான்காவின் மகள் ஐந்து வயதான அரபெல்லா குஷ்னேர்.
இந்த சுட்டிப் பெண் சீனாவின் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு
சீனப் பாடலைப் பாடி சீன, அமெரிக்க மக்களின் கவனத்தை தன்
பக்கம் திருப்பிக் கொண்டுள்ளார்.
அரபெல்லா குஷ்னேர் பாடிய அந்த பாடலில் சீன மொழியை அபாரமாக
உச்சரித்துள்ளதாக சமூகவலைத் தளங்களில் சீனர்கள் புகழ்ந்து
வருகின்றனர்.
இவான்கா – ஜரேட் குஷ்னேர் ஜோடியின் மூன்றாம் மகன் தியோடர்
பிறந்து எட்டு மாதங்களே ஆகியிருக்கும் போது இவான்கா தனது
ட்விட்டர் பக்கத்தில் தியோடர் பிறந்து எட்டு மாதங்கள் ஆனதை என்னால்
நம்ப முடியவில்லை, அவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் என்று
பதிவிட்டுள்ளார்.
அது போதாதா…
சமூக வலைத்தளங்களில் இன்னும் நான்கு மாதங்களில் தியோடர்
தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுவான் என்று
நம்புகிறேன் என நக்கலும் நையாண்டியும் அடுக்கடுக்காய் எழுந்துள்ளன.
இவான்காவும் விடவில்லை. விமர்சனங்களுக்கு விளக்கம் தரும்
வகையில் ஒரு குழந்தை பிறந்த அந்த வருடம் மட்டுமே அந்தக் குழந்தையின்
பெற்றோர் ஒவ்வொரு மாதமும் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவர்
என்று இவான்கா சமாளித்துள்ளார்.
–
———————————————
– பனிமலர்
மகளிர் மணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மன்னிப்பு கேட்ட அறநிலைய துறை ஆணையர்
» மன்னிப்பு கேளுங்கள்.
» மன்னிப்பு என்கிற மரண தண்டனை!
» என் மகள்
» தாய் கேட்ட பரிசு
» மன்னிப்பு கேளுங்கள்.
» மன்னிப்பு என்கிற மரண தண்டனை!
» என் மகள்
» தாய் கேட்ட பரிசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum