Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக
Page 1 of 1 • Share
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியைச் சேர்ந்த 43 எம்எல்ஏக்களில்
32 பேர், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜகவில்
இணைந்தனர். இதையடுத்து, அங்கு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
-
முன்னதாக, முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சோவ்னா மிய்ன்
மற்றும் 5 எம்எல்ஏ-க்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து
வியாழக்கிழமை இரவு நீக்கப்பட்டனர். இதையடுத்து, மாநில அரசியலில்
பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 4 எம்எல்ஏக்கள்
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கட்சித்
தலைவர் காஃபா பென்ஜியா தெரிவித்தார்.
பாஜகவுக்கு தாவல்: இதனிடையே, பெமா காண்டு தலைமையில்
32 எம்எல்ஏக்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து விலகி
பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனர். மொத்தம் 60 உறுப்பினர்களைக்
கொண்ட அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில் பாஜக உறுப்பினர்களின்
எண்ணிக்கை 11-ல் இருந்து 44 ஆக அதிகரித்தது.
முதல்வர் பெமா காண்டு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவைத்
தலைவர் டென்சிங் நூர்புவைச் சந்தித்தார். அவர், பெமா காண்டு
உள்பட 33 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, பாஜக அங்கு ஆட்சி அமைத்தது. பெமா காண்டு
முதல்வராகத் தொடர்கிறார்.
முன்னதாக, அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று
வந்தது. கடந்த செப்டம்பர் மாதம், காங்கிரஸில் இருந்து 44 எம்எல்ஏக்களில்
43 பேர் முதல்வர் பெமா காண்டு தலைமையில் தனியாகப் பிரிந்து
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தனர்.
இதையடுத்து, மாநிலத்தில் அக்கட்சி ஆட்சி அமைத்தது.
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்தது.
இந்நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் 33 பேர் பாஜகவுக்கு தாவி,
பாஜக தலைமையில் ஆட்சியை அமைத்துள்ளனர்.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் அருணாசலப் பிரதேசத்தில்
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு அதனால் பெரும் சர்ச்சை
எழுந்தது குறிப்பிட்டத்தக்கது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக
மக்கள் நலன் கருதி...: பாஜக தலைமையில் ஆட்சி அமைத்தபிறகு முதல்வர்
பெமா காண்டு கூறியதாவது:
-
இறுதியாக அருணாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி மலர்ந்துள்ளது.
புத்தாண்டு முதல் மாநிலத்தில் சிறப்பான வளர்ச்சியை மக்கள் காணலாம்.
தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக மக்கள் நலன் கருதி பாஜகவில்
நாங்கள் இணைந்துள்ளோம்.
-
மாநிலத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் வளர்ச்சி
ஏற்படவில்லை. இதையடுத்து நாங்கள் அருணாசலப் பிரதேச மக்கள்
கட்சியில் இணைந்தோம். ஆனால், அங்கும் கட்சித் தலைமை எம்எல்ஏக்களை
ஜனநாயகமற்ற முறையில் நடத்தியது.
-
கட்சியில் இருந்து எங்களை வேண்டுமென்றே நீக்கினர். எனவே, ஒட்டு
மொத்தமாக மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், மக்கள்
நலனை மனதில் வைத்தும் பாஜகவில் இணைந்துள்ளோம் என்றார் அவர்.
-
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அருணாசல பிரதேச மக்கள் கட்சி
எம்எல்ஏக்கள் 33 பேர் பாஜகவுக்குத் தாவியுள்ளதால், இக்கூட்டணி
தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக வடகிழக்கு
ஜனநாயக முன்னணியின் (பாஜக கூட்டணி) ஒருங்கிணைப்பாளர்
ஹேமந்த பிஸ்வாஸ் முடிவெடுப்பார் என்று பாஜக வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
பாஜக மீது குற்றச்சாட்டு:
இதனிடையே, தங்கள் கட்சி எம்எல்ஏக்களைக் கடத்திச் சென்று பாஜக ஆட்சி
அமைத்துள்ளதாக அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
-
இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் காஃபா பென்ஜியா கூறியதாவது:
-
மாநிலத்தில் மோசமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சி
எம்எல்ஏக்களை கடத்திச் சென்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
வடகிழக்கு ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஹேமந்த பிஸ்வாஸ்,
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறார்.
பாஜக கூட்டணியில் இனி மேலும் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து விரைவில்
ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார் அவர்.
-
6 மாதங்களில் 3 முறை ஆட்சி மாற்றம், ஒரே முதல்வர்
-
அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களில் காங்கிரஸ்,
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி, பாஜக ஆகிய 3 கட்சிகளிடம் ஆட்சி மாறியுள்ளது.
ஆனால், மூன்று ஆட்சியிலும் பெமா காண்டு முதல்வராகத் தொடர்கிறார்.
-
38 வயதாகும் பெமா காண்டு, அருணாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்
டோர்ஜி காண்டுவின் மகனாவார். டோர்ஜி காண்டு கடந்த 2011-ஆம் ஆண்டு
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
-
அதன் பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் நபம் துகி முதல்வரானார்.
அமைச்சராக இருந்த கலிகோ புல் காங்கிரஸ் கட்சியை உடைத்தார்.
இதனால், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர்
ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில்
இணைந்து கலிகோ புல் சுமார் 6 மாதங்கள் முதல்வராக இருந்தார்.
-
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட
தீர்ப்புப்படி அங்கு காங்கிரஸ் மீண்டும் அமல்படுத்தப்பட்டு, நபம் துகி மீண்டும்
முதல்வரானார். பெமா காண்டு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக
நியமிக்கப்பட்டார். இதனிடையே கலிகோ புல் தற்கொலை செய்து கொண்டார்.
இதன் பிறகு கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் சார்பில் நபம் துகிக்கு பதிலாக
பெமா காண்டு முதல்வராக்கப்பட்டார்.
-
ஆனால், செப்டம்பர் மாதம் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த 44 எம்எல்ஏக்களுடன்
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தார்.
அப்போது அவர்தான் முதல்வராக இருந்தார். இப்போது அங்கிருந்து பாஜகவுக்கு
தாவி மீண்டும் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
-
----------------------------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சாம்பியன்ஸ் லீக் 20-20 : மும்பை இன்டியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது
» வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்து துவைத்து ஜட்டியோடு ஓட வைத்த மக்கள்!
» உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் அறிமுகம்
» பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மோடி அதிரடி: வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்து துவைத்து ஜட்டியோடு ஓட வைத்த மக்கள்!
» உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் அறிமுகம்
» பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மோடி அதிரடி: வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum