Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெறிச்சோடியது கோவை... தனியார் பேருந்தை சிறைப்பிடித்த பயணிகள்!
Page 1 of 1 • Share
வெறிச்சோடியது கோவை... தனியார் பேருந்தை சிறைப்பிடித்த பயணிகள்!
-
-
அதென்னவோ தெரியவில்லை! அரசுப் போக்குவரத்துக்
கழகங்கள் பேருந்தை வேகமாக ஓட்டுகிறார்களோ என்னவோ.?
ஏதேனும் அறிவிப்பு வந்தால் உடனடியாக செயல்படுத்தி
மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிடுகிறார்கள்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு 12 மணி முதல்
செல்லாது என்ற மோடி அறிவித்த அடுத்த பத்தாவது
நிமிடத்தில் பல அரசுப் பேருந்துகளில் 500,1000 ரூபாய்
நோட்டுகளை வாங்க மறுத்து பயணிகளை படுத்தி
எடுத்தார்கள். இப்போது,
இன்று காலை முதல் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை
நேற்று இரவே செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் ஊழியர்கள்.
வெளியூரில் இருந்தவர்களெல்லாம் விடிவதற்குள் வீடு
போய்விடலாம் என்று பதறியடித்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு
வந்தால் இரவில் ஈ ஓட்டிக்கொண்டிருந்தன பல பேருந்து
நிலையங்கள்.
இதனால் பயணிகள் கடும்கோபத்துக்குள்ளானார்கள்.
வழக்கம்போல பல தனியார் பேருந்துகள் அதிக கட்டணம்
வசூலித்து கொண்டாட்டம் போட்டார்கள்.
கோயம்புத்தூரில் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல
பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலித்தன. அப்படி அதிகக்
கட்டணம் வசூலித்த பேருந்துகளில் ஒன்றான சித்ராவிலிருந்து
மதுக்கரை வரை சென்று திரும்பக்கூடிய ஸ்ரீகுமரன் என்ற
தனியார் பேருந்தை கோவை இரயில் நிலையம் அருகில் அந்த
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறைபிடித்தனர்.
இதனால், பேருந்து நடத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையில்
பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்துக்குமேல் தாங்கிக்
கொள்ள முடியாமல் அந்த பேருந்தின் மீது அதிகக் கட்டணம்
வசூலித்ததாக போலீஸில் புகார் கொடுத்தார்கள்.
உடனடியாக அங்கு வந்த போலீஸார் அந்த பேருந்தை பறிமுதல்
செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோயம்புத்தூரிலும்
நேற்று இரவு முதலே பல பேருந்துகள் இயக்கப்படாமல் டிப்போவுக்கு
திருப்பப்பட்டன.
கோடைகால சுற்றுளாவுக்காக கோயம்புத்தூருக்கு வந்த பயணிகள்
வீடு திரும்ப வழிதெரியாமல் தவித்தார்கள். இன்று காலை வேலை
நிறுத்தப் போராட்டம் துவங்கினாலும் கூட அண்ணா தொழிற்சங்கத்தை
சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் வேலை நிறுத்ததிற்கு ஒத்துழைப்பு
கொடுக்காமல் பேருந்துகளை இயக்கினார்கள்.
கோவை கோட்டத்தில் மொத்தம் உள்ள 2571 பேருந்துகளில்
1295 பேருந்துகள் மட்டுமே இன்று இயங்கின. பாதிக்கும் மேற்பட்ட
பேருந்துகள் இயங்கவில்லை. இந்த பேருந்துகளில் தற்காலிகமாக
101 தனியார் டிரைவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 1400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில் 500க்கும் குறைவான பேருந்துகளே இன்று இயங்கின.
அதனால் போக்குவரத்து இல்லாமல் கோவை நகர மக்கள் தனியார்
பேருந்துகளுக்காக தவம் கிடக்க வேண்டியதாக இருந்தது.
இயங்கிய 500க்கும் குறைவான பேருந்துகளில் 35 தற்காலிக தனியார்
ஓட்டுனர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.
கோவை பேருந்துகள்
கோயம்புத்தூரில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களின் மூலம்
இயக்கப்பட்ட பல பேருந்துகளை மற்ற சங்கத்தினர் வெவ்வேறு
இடங்களில் மறித்து, “உங்களுக்கும் சேர்த்துதான்யா போராடுறோம்.
நாம எல்லாரும் சேர்ந்து போராடுனாதான்யா நமக்குத் தேவையானது
கிடைக்கும். நாமளே ஒத்துமையா போராடலைன்னா அரசாங்கம்
எப்படியா நம்ம கோரிக்கைகளை நிறைவேத்தும்?’’ என்று அட்வைஸ்
கொடுத்து பேருந்துகளை டிப்போவுக்கு திருப்பி அனுப்பினர்.
டிப்போ அதிகாரிகள் பேருந்துகளை உள்ளே விடாமல் இருக்க
அலெர்ட்டாக கேட்டை மூடி வைத்திருந்தனர். இதைக்கேள்விப்பட்ட
மற்ற சங்கத்தினர் டிப்போவிற்கு விரைந்து வந்து கோஷம் போட்டு
திரும்பி வந்த பேருந்துகளை டிப்போவுக்குள் அடைத்தார்கள்.!
-
---------------------------------
விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது
» சென்னை: இன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை
» புகார் பெட்டியில் பணம் போடும் பயணிகள் !
» தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், 'டெட்' தேர்ச்சி கட்டாயம்
» தனியார் செய்தி சேனல்களுக்கு இணையாக தூர்தர்ஷனை நவீனமயமாக்குகிறது மத்திய அரசு
» சென்னை: இன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை
» புகார் பெட்டியில் பணம் போடும் பயணிகள் !
» தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், 'டெட்' தேர்ச்சி கட்டாயம்
» தனியார் செய்தி சேனல்களுக்கு இணையாக தூர்தர்ஷனை நவீனமயமாக்குகிறது மத்திய அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum