Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
Page 1 of 1 • Share
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 12-ந்தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதியும் வெளியாயின.
கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்களை ஏற்கனவே முடிவு செய்த தேதியில் திறப்பதா? அல்லது தள்ளிவைப்பதா? என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக அரசின் சார்பில் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினருடன் (‘அய்மா’) நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்த இந்த கூட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்கள் அவரை சந்தித்து, “தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுமா?” என்று கேட்டனர்.
ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
அதற்கு செங்கோட்டையன் பதில் அளிக்கையில், “கடும் வெயிலின் காரணமாக, முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்று தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்” என்றார். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
பள்ளிகளில் கழிப்பிடம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பிடம் இல்லாத பள்ளிகள் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முதல் கட்டமாக இந்த பணிகள் அம்பத்தூரில் தொடங்கி உள்ளது. பின்னர் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 90 சதவீத பள்ளிகளில் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கல்வியில் புரட்சி
கல்வியை அழித்தால் நாட்டை அழித்து விடலாம். தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அது கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு கல்வியில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் பா.பெஞ்சமின், அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.அலெக்சாண்டர், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன், கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், ‘அய்மா’ தலைவர் வேணு மற்றும் தொழில் அதிபர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்பு
பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது பற்றி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் சி.சுந்தர்ராஜ் கூறுகையில், “சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தோம். அதன்படி, பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம்” என்றார்.
-
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!
» தட்டுங்கள் திறக்கப்படும் ..?
» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
» பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது; சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கப்படுகிறார்கள்
» கழிப்பறைகள் இல்லாத தமிழக அரசுப் பள்ளிகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum