Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!
Page 1 of 1 • Share
தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக் கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு நசுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களின் அதிகமான தேர்ச்சி விழுக்காடே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம்: கடந்த 2009-ம் ஆண்டு முதல் மத்தியஅரசால் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்-2009 நடைமுறைபடுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் 2010 ஏப்ரல் முசல் நாளிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய அம்சமாக 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக்கல்வி முடிக்கும் வரையில் அருகாமையில் உள்ள பள்ளிகளில் இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி அளித்த வேண்டும் என்பதே ஆகும். பள்ளியில் சேர்க்கப்படாமலோ அல்லது படிப்பை இடையில் நிறுத்தியிருந்தாலோ அக்குழந்தைக்குரிய வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். உதாரணமாக பள்ளிக்கு செல்லாத ஒரு குழந்தை தனது 12 வயதில் பள்ளிக்கு வந்து தன்னை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டால் தலைமைஆசிரியர் அக்குழந்தையை 7-ம் வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும். அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றாலும், அவன் சொல்லும் பிறந்த தேதியை ஏற்றுக்கொண்டு, சேர்க்கை அளிக்க வேண்டும்.
4 ஆண்டுகளாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்: ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது அடிப்படை கல்வித்தகுதியை பெற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவராத இருக்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் அரசு பள்ளிக்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் இதுவரை 50 சதவீதம் கூட தேர்ச்சி பெறவில்லை. அவ்வாறு தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பணியில் சேருகிறார்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் காலிப் பணியிடம் முழுவதும் நிரப்பப்பட்டு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் பட்சத்தில்தான் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் 4 ஆண்டுகளாக அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமல் காலிப் பணியிடங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.
தொகுப்பூதிய ஆதசிரியர் நியமனம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது: தமிழகஅரசு தற்காலிகமாக தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை ரூ.5 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே நிரப்பிக் கொள்ளலாம் என சில நாட்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாத நிலையில், பள்ளிகளில் காலிப் பணியிடங்களாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களான (Non Teaching) இளநிலை உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட எந்த பணியிடங்களையும் கடந்த 4 ஆண்டுகளாக நிரப்புவதற்கு அரசு அனுமதி தர முன்வரவில்லை.
2 ஆண்டுகளாக சிறப்பு கட்டணம் வழங்கப்படவில்லை: அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து வேறு எந்த கட்டணமும் பெறப்படாத நிலையில் சிறப்பு கட்டணம் மட்டும் (6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு ரூ.32, 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.47, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.103) பெறப்பட்டு பள்ளியில் சில்லரை செலவினங்களை செய்து வந்தனர். இந்த கட்டணத்தையும் மாணவர்களிடம் வசூல் செய்ய வேண்டாம் என்றும், அரசே இந்த கட்டணத்தை பள்ளிக்கு வழங்கும் என முந்தையஅரசு அறிவித்து கொடுத்து வந்தது. ஆனால் இந்த கட்டணம் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாததால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான சில்லரை செலவினங்களை தங்களது பணத்தை கொண்டு செலவு செய்துவிட்டு சிறப்புக்கட்டணத்தை எதிர்பார்த்து கொண்டு உள்ளனர்.
நன்றி முக நூல் பக்கம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!
இதற்க்கு என்னதான் தீர்வு?
sri- புதியவர்
- பதிவுகள் : 2
Re: தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!
பிறகு எப்படி அரசு பள்ளிகளின் தரம் உயரும்
Similar topics
» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
» தமிழகத்தில் சரக்கு பூங்கா: மத்திய அரசு அமைக்கிறது
» வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செ
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்
» தமிழகத்தில் சரக்கு பூங்கா: மத்திய அரசு அமைக்கிறது
» வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செ
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum