Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
Page 1 of 1 • Share
கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
தோஹா:சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கத்தாரில் வசிக்கும், 6 லட்சம் இந்தியர்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இந்தியாவில் இருந்து கத்தாருக்கு, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
'ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரானுடன் நெருக்கமாக இருப்பதால், மேற்காசிய நாடான கத்தாருடன் துாதரக உறவை துண்டித்துக் கொள்கிறோம்' என, சவுதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நான்கு நாடுகள், நேற்று முன்தினம் அறிவித்தன.
ஏமன், லிபியா, மாலத்தீவு ஆகிய நாடுகளும், இதற்கு ஆதரவு அளித்துள்ளன. யு.ஏ.இ.,யின் விமான நிறுவனமான எதியாட் ஏர்வேஸ், எமிரேட்ஸ், பிளை துபாய் ஆகியவை, கத்தார் தலைநகர் தோஹாவுக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளன.
கத்தாரின் விமான நிறுவனமான, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள், தங்கள் வான் பகுதியில் பறக்கவும், இந்த நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால், கத்தாருடன், மற்ற நாடுகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது; அங்கு வசிக்கும் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு
உள்ளனர்.
கத்தார் மக்கள் தொகை, 26 லட்சம்; அதில், 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள். இவர்களில், 3 லட்சம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:
கத்தாருடன் மற்ற நாடுகள் உறவை துண்டித்து இருப்பதால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து, உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.எந்த நேரமும் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து, கத்தாருக்கு விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து விமான போக்குவரத்து நிறுவனங்கள் கூறியதாவது:
மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் உட்பட பல நகரங்களில் இருந்து, கத்தாருக்கு விமானங்களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. கத்தார் செல்லும் விமானங்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் வான் எல்லை வழியாக செல்ல முடியாது. எனவே, வேறு பாதை வழியாக செல்ல வேண்டும்; நேரடி விமானங்களை இயக்குவதற்கு கூடுதல் செலவு பிடிக்கும். எனவே, விமான கட்டணங்கள் கூடுதலாகும்.
அதேசமயம் ஈரான் வழியாக விமானங்களை இயக்க தடை இல்லை; எனவே, அந்த பாதையில் விமானங்களை இயக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
உணவு தட்டுப்பாடு அபாயம்
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கத்தாரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சர்க்கரை, கோதுமை உட்பட, பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவை அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கத்தார் வரும் உணவு பொருட்களும், அண்டை நாடுகளின் வழியாகவே வருகின்றன.
ஆயிரக்கணக்கான டன்கள் உணவு பொருட்களுடன், கத்தாருக்குள் செல்லாமல், சவுதி அரேபியாவின் எல்லையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு பொருட்கள் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதேசமயம், உணவு பொருட்கள் தேவைக்காக, ஈரான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை, கத்தார் அணுகியுள்ளது.
குவைத் மத்தியஸ்தம்
கத்தாருடன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க, குவைத் மத்தியஸ்தம் செய்கிறது.குவைத் மன்னர் ஷபா அல் ஷபா, கத்தார் மன்னர் அல் தானியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.மேலும், கத்தாருடன் உறவை துண்டித்த, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் பேசி, பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நன்றி தினமலர்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு
» ஹாங்காங் செல்லும் இந்தியர்களுக்கு இலவச விசா ரத்து : சீனா நடவடிக்கையால் 5 லட்சம் பேர் பாதிப்பு
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்
» நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் நுரையீரல் கடுமையாக பாதிப்படைகிறது: ஆய்வில் தகவல்
» ஹாங்காங் செல்லும் இந்தியர்களுக்கு இலவச விசா ரத்து : சீனா நடவடிக்கையால் 5 லட்சம் பேர் பாதிப்பு
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்
» நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் நுரையீரல் கடுமையாக பாதிப்படைகிறது: ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum