Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செங்கோட்டையை தத்தெடுத்தது டால்மியா
Page 1 of 1 • Share
செங்கோட்டையை தத்தெடுத்தது டால்மியா
-
புதுடில்லி:
இந்தியாவில் உள்ள, புராதன வரலாற்று நினைவுச் சின்னங்களை,
தனியார் நிறுவனங்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டத்தை,
கடந்தாண்டு, மத்திய அரசு அறிவித்தது.இத்திட்டத்தின்படி,
நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச்
சின்னங்கள், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம், ஐந்து
ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்படும்.
இதற்கு, அந்நிறுவனங்களிடம் இருந்து, பெரும் தொகை
வசூலிக்கப்படும். நினைவுச் சின்னத்தை தத்தெடுக்கும் நிறுவனம்,
சுற்றுலா பயணியரை கவரும் வகையில், பல நவீன வசதி களை
உருவாக்கி, ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.
இதற்கு, மத்திய சுற்றுலாதுறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று,
அங்கு சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாபயணியரிடம் கட்டணம்
வசூலித்துக் கொள்ளலாம். ஆனால், அதில் கிடைக்கும்
வருமானத்தை, அந்த புராதன கட்டடத்தின் பராமரிப்பு செலவுக்கு
பயன்படுத்த வேண்டும் என அரசு விதிமுறைகள் விதித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், டில்லியில், ஐந்தாம் முகலாய மன்னன்
ஷாஜகான் கட்டிய, 17ம் நுாற்றாண்டை சேர்ந்த செங்கோட்டை
கட்டடத்தை தத்தெடுக்க, இண்டிகோ, ஜி.எம்.ஆர்., மற்றும்
டால்மியா பாரத் குரூப் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள்
விண்ணப்பித்து இருந்தன.
இந்நிலையில், 25 கோடி ரூபாய்க்கு, ஐந்தாண்டுகளுக்கு
தத்தெடுக்க விருப்பம் தெரிவித்த, டால்மியா பாரத் குரூப்பிற்கு,
செங்கோட்டை தத்து கொடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி
உள்ளது.
செங்கோட்டை வளாகத்தின் உள்ளே, குடிநீர், மின் விளக்குகள்,
கழிப்பறைகள், பேட்டரி கார்கள், வைபை, உணவகங்கள் உட்பட
பல வசதிகளை, ஓராண்டிற்குள், டால்மியா நிறுவனம் செய்து
முடிக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியின் குதுப்மினார், ஜன்தர் மந்தர், சப்தர்ஜங் கல்லறை,
ஒடிசாவின் சூரியக் கோயில், ரத்னகிரி, மஹாராஷ்டிராவில்
உள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் உட்பட பல
வரலாற்று நினைவுச் சின்னங்கள், தனியார் கார்ப்பரேட்
நிறுவனங்களால், விரைவில் தத்தெடுக்கப்பட உள்ளன.
-
--------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum