தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்

View previous topic View next topic Go down

சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் Empty சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 6:45 pm

மனிதனை அச்சுறுத்தும் நோய்களில் மிகப் பழமையானவைகளில் ஒன்று சிறுநீரகக்கல், கி.மு. 600 லேயே இந்நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கல்லுக்கு இந்திய மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு கண்ட நாடுகளில் சிறுநீரக கல் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஏராளம், மக்கள் தொகை எண்ணிக்கையில் 12 % பேர்களுக்கு சிறுநீரகக்கல் பெரும் பிரச்சனையாக உள்ளது. பொதுவாக ஆண்டுக்கு 30 லட்சம் நபர்கள் பாதிப்புக்குள்ளாவதில் 5 லட்சம் பேர்களுக்கு கல் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள் முதல் சின்னக் குழந்தைகளையும் சிறுநீரகக்கல் விட்டு வைப்பதில்லை. பெண்களை விட ஆண்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதால் சிறுநீரகம் செயலிழந்து போகும் என்றும், தங்கள் வாழ்க்கையை முடிந்து விட்டதாகவும் மன முடைந்து விடுகின்றனர்.

சிறுநீரகக்கல் (Calculus)

போக்குவரத்து வாகனம் சாலை வசதி இல்லாத காலத்தில் தூரப் பயணம் மேற்கொள்பவர்கள். பை நிறைய கற்களை கொண்டு சென்று குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக போட்டுக் கொண்டே செல்வார்கள். திரும்பி வரும்போது கற்களை எடுத்துக் கொண்டு வருவார்கள். எத்தனை கல் செலவானது என்பதை பொறுத்து பயண தூரத்தை கணக்கிட்டுக் கொள்வார்கள். இம்முறைக்கு Calculus என்று பெயர். சிறுநீரகத்தில் கல்லுக்கும் Calculus என்று பெயர் வைத்து விட்டார்கள்.

காரணம் இயந்திரமயமாகிப் போன வாழ்க்கை முறையில் தவறான உணவுப்பழக்கமும், பிறவியிலேயே மரபணுக்களில் காணப்படும் சில குறைபாடுகளாலும், உடலுக்கு சத்து தேவை என்று தாமாகவே சத்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதாலும், எல்லா வகையான மதுபானங்களையும், அருந்துவதாலும், இறைச்சி மற்றும் முட்டைக்கோசு, தக்காளி, காலிஃப்ளவர், வெள்ளரி, சப்போட்டா, போன்ற காய்கறி பழங்களை அதிகளவு உண்பதாலும் தாகத்தின் போதும் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்பும் நீர் அருந்தாமையாலும், சிறுநீரகப் பையில் அடிக்கடி தொற்று ஏற்படுவதாலும் சிறுநீரிலும், இரத்தத்திலும், சுண்ணாம்புச்சத்து அதிகமிருக்க கூடிய நிலையிலும், சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டவுடன் சிறுநீரை அடக்கி வைப்பதாலும் கற்கள் தோன்றுகின்றன.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் Empty Re: சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 6:45 pm

மீண்டும் மீண்டும் கல் உருவாவதற்கான காரணங்கள்

வளர்சிதை மாற்றக் கோளாறுகள் காரணமாகவும், தைராய்டு சுரப்பிக்கு அருகில் உள்ள அனியச் சுரப்பிகள், பாரார்த்தார் மோன் என்ற சுரப்பினை அதிகமாக சுரப்பதால் இரத்தத்தில் சுண்ணாம்புச்சத்து அதிகரிப்பதாலும் சிறுநீரகத்தில் கல் மீண்டும் மீண்டும் உருவாகின்றது.

சிறுநீரகங்களின் அமைவிடம்

முதுகுப்புறம் விலா எலும்புக்கு சற்று கீழே பக்கத்திற்கு ஒன்றாக அவரை விதை வடிவில் வலது, இடது, என இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். ஒரு சிறுநீரகத்தின் சராசரி அளவு 4 1/2 அங்குலம் நீளமும் 2 1/4 அங்குலம் சுற்றளவும் இருக்கும். (தோராயமாக ஒரு மனிதனின் மூடிய கையளவு) கிட்டத்தட்ட இருதயமும் இதே அளவில் தான் இருக்கும்) இரண்டு சிறுநீரகங்களும் நேர்கோட்டில் அமைந்திருப்பதில்லை. இடது புறத்தை விட வலதுபுறம் சற்று கீழிறங்கி இருக்கும். இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் பக்கத்திற்கு ஒன்றாக சிறுநீர் இறங்கும் குழாய் (Ureter) சிறுநீர் பையோடு (Urinary Bladder) இணைகிறது சிறுநீர்பையில் வந்து சேரும் சிறுநீர் புறவழிப்பாதை (Urethra) மூலம் வெளியேறுகிறது.

சிறுநீரகக்கற்களின் உற்பத்தி

நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள கற்களே சிறுநீரகத்தில் தங்கி விடுகிறது என்று பலர் தவறாக கருதிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்ன வென்றால் நாம் உணவு மூலம் உட்கொள்ளுகிற கற்கள் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், ஆகியபகுதிகளை கடந்து மலத்துடன் சேர்ந்து வெளியேறுகிறது. பின் எவ்வாறு சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுகிறது என்றால் நமது உடலிலுள்ள இரத்தத்தை நாள் தோறும் ஒவ்வொரு நிமிடமும் சுத்தம் செய்து வடிகட்டி உடலுக்கு வேண்டாத பொருட்களை கழிவாக, சிறுநீராக பிரிக்கும் போது சிறுநீரில் கரைந்திருக்கும் தாதுப் பொருட்கள் படிந்து படிகங்களாக வளர்ந்து கற்களாக உருமாறுகின்றன.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் Empty Re: சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 6:45 pm

கற்களின் வகைகள்

கால்சியம் ஆக்சாலேட் 75 % பேர்களுக்கு ஏற்படுகிறது. கால்சியம் பாஸ்பேட் 15 % பேர்களுக்கு ஏற்படுகிறது. யூர்க் அசிட் 8 % பேர்களுக்கு ஏற்படுகிறது

கால்சியம் வகை கல்

இரத்தத்தில் கால்சியம் வகை அதிகரிப்பதாலும் ஹைபர் பாரா தைராய்டு அதிக செயல்பாடு காரணமாகவும், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் கோளாறுகள் காரணமாகவும், சிறுகுடலில் அதிகப்படியான கோளாறுகள் அடிக்கடி ஏற்பட்டால் அல்லது சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டாலும் சிறுநீரில் கால்சியம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இவைகளினால் தான் கால்சியம் வகை கற்கள் உருவாகிறது. இவ்வகை கற்கள் சொரசொரப்பாக, கரடு முரடாக கடினத் தன்மையுடையதாக கருநிறத்தில் இருக்கும். உணவில் விலங்கு புரதம், பால் பொருள்கள், பாலிலிருந்து தயாரித்த பொருட்கள் உணவில் தவிர்க்க வேண்டும். இயற்கையான உணவு, பழங்கள், காய்கறிகள் மூலம் கிடைக்கும் புரதம் தேவை. அவற்றை ஒதுக்க வேண்டியதில்லை

கால்சியம் பாஸ்பேட் வகை கற்கள்

இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்களிடம் உருவாகும், அடிக்கடி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுகிறவர்களுக்கு இக்கல் உருவாகும், பெரிய வடிவத்தில் கல் வளரும் வாய்ப்பு உள்ளது. எனவே இக்கல் மொத்த சிறுநீர் பாதையையும் அடைக்கும் வாய்ப்பு உள்ளது. சாம்பல் கலரில் அழுக்கு படிந்த வெள்ளைநிறம் கொண்ட இக்கல்லை அழுத்தினால் மென்மையாக இருக்கும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் Empty Re: சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 6:46 pm

யூரிக் ஆசிட் வகை கற்கள்

சிறுநீரில் அதிகளவு யூரிக் ஆசிட் வெளியேறுவதால் மூட்டுவாத வலிகள், கால் பெருவிரல் வாதம் வலி ஏற்படும். இந்நோயாளிக்கு கல் மஞ்சள் நிறமாக இருக்கும். கல்லை அழுத்தினால் ஓரளவு கடினத் தன்மையுடன் கூடிய மென்மையுடன் காணப்படும். கடுமையான நோய்வாய்ப்பட்ட காலத்தில், கடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு நீர் தேவையான அளவு அருந்தாததால் இவ்வகையான கல் உருவாகும். இவர்களுக்கு சிறுநீர் அடர்த்தியாக மாறும். பலகற்கள் ஒரேநேரத்தில் உருவாகும். இவர்கள் உணவில் இறைச்சி, தக்காளி, ஆப்பிள், காலிஃ ப்ளவர், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, எலுமிச்சை தவிர்க்க வேண்டும். கால்சியம் வகைகற்கள் உள்ளவர்கள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கல் தோன்றும் இடமும் அறிகுறியும்

சிறுநீரகம் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் இறங்கி வரும் குழாய்கள் சிறுநீர்ப்பை இந்த மூன்று இடங்களில் எங்கு வேண்டுமானாலும் கல் உருவாகலாம். சிறுநீரகத்தின் அடிபாகத்தில் கல் இருந்தால் பொதுவாக வலி தோன்றாது. சிறுநீர் இறங்கும் குழாய் நுழைவாயிலில் கல் வந்து நிற்கும் போது கடும் வலியையும் ஆழமான முதுகு வலியையும் ஏற்படுத்தும், கல் நகரத்துவங்கும்போது கல் வடிவத்தை பொறுத்தும் நகரும் வேகத்தை பொறுத்தும் வலி அதிகரிக்கும். சிறுநீர் இறங்கும் குழாயின் மேல் பாகத்தில்கல் சிக்கிக் கொண்டு மீண்டும் நகர்ந்து கல் கீழிறங்கி வர முடியாத நிலையில் இருக்கும்போது வலி முதுகிலிருந்து முன்பக்கமும் சேர்ந்து வரும் அப்போது வயிற்றுப்புண்ணோ, (அல்சரோ) என்று தவறுதலாக நோயை அனுமானிக்க நேரிடும்.

வலதுபுற சிறுநீர் இறங்கு குழாயின் நடுபாகத்தில் கல் மாட்டிக் கொண்டு கீழிறங்கி வரமுடியாத, நிலையில் வயிறுவலி, பிறப்புறுப்பின் மேட்டுப்பாகம் வரை பரவும். இப்போது குடல் வால் அழற்சியாக இருக்குமோ என நோயை தவறாக கருத நேரிடும். இத்தகைய சந்தேகங்களுக்கு X-Ray, Scan பரிசோதனைகள் மூலம் விடை காண முடியும். சிறுநீர் இறங்கும் குழாயின் கீழ்பாகத்தில் கல் சிக்கிக் கொண்டால் அப்போது வலி தொடையிடுக்கு, விதைப்பகுதி, பெண்களுக்கு பிறப்புறுப்பில் கூட வலி ஏற்படும்.

சிறுநீர் இறங்கும் குழாயில் கல் சிக்கிக் கொள்ளும் நேரங்களில் கடுமையான கிருமித் தொற்று ஏற்படும். இதனால் நீர்கடுப்பு நீர் சொட்டு சொட்டாக போதல் எரிச்சல் போன்றவை ஏற்படும். கல் சிறுநீர் பையில் வந்து விழுந்து விட்டால் கல் இங்குமங்கும் உருண்டு வட்ட வடிவமாக அல்லது முட்டை உருவில் மாறும். இங்கிருந்து சிறுநீர் புறவழியாக கல் அதிகாலை வெளியேறும் போது வலிக்கும் இந்நிலையில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் Empty Re: சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 6:46 pm

ஹோமியோபதி சிகிச்சை

கல் வடிவம் கல் உருவாகியுள்ள இடம் ஆகிய நிலைகளுக்கு தகுந்தாற்போல சிகிச்சை அமைகிறது. ஹோமியோபதி மருந்து தேர்வு நபருக்கு நபர் மாறுபடும் கல் உருவாகியுள்ள இடத்தை பொறுத்தும், வலியின் தன்மையை பொறுத்தும் நோயுள்ள போது நோயாளியின் மனநிலையை பொருத்தும் மருந்து தேர்வு செய்து சிகிச்சையளிக்கப்படுவதால் கல் கரைந்து வெளியேறுகிறது. குறிப்பாக ஹோமியோபதி மருத்துவ முறையில் கல் மீண்டும் மீண்டும் உருவாகாமல் தடுக்க பெருமளவு வாய்ப்புள்ளது.

சிறுநீரகக் கல்லை கரைக்கவும், வெளியேற்றவும் உதவும் சில முக்கிய ஹோமியோபதி மருந்துகள்

பெர்பெரிஸ் வல்காரிஸ் Q : சிறுநீரகம், சிறுநீர் இறங்கும் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் உள்ள கல்லை கரைக்கும், வலியை குறைக்கும், குத்தும் வலி, சிறுநீரகப் பகுதியில் தோன்றும் வலி உடலில் பல பாகங்களுக்கு பரவும், குறிப்பாக கால் கெண்டை சதை வரை பரவும். முதுகுப்புறம் தோன்றும் வலி அழுத்தினால், குனிந்தால், நிமிர்ந்தால் அதிகரிக்கும் (இம்மருந்து பித்தப்பையில் உள்ள கல்லையும் கரைக்கும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது)

ஹைட்ரேன்ஜியா Q : இருசிறு நீரகங்களில் தோன்றும் கற்களை கரைக்கவும் வெளியேற்றவும் பயன்படும்.

சரசபரில்லா Q : கல்கரைய உதவும் மருந்துகளில் முக்கியமானது. சிறுநீர் இறங்கி வரும் குழாயில் கல் சிக்கிக் கொண்ட நிலையில் உதவும்

ஓசிமம் கானம் Q : வலது புற சிறுநீரக கற்களுக்கு நல்ல மருந்து சிறுநீர் இறங்கும் குழாயில் கல் சிக்கிக் கொண்ட நிலையில் வலி, பிறப்புறப்பு வரை, விதைப்பகுதி வரை பரவி நோயாளி வலி தாங்க முடியாமல் புரளுவார். புலம்புவார். (இதே குறிக்கு பாகம் 6, 30 என்ற மருந்தும் பயன்படும்)

கோக்கஸ் காக்டி Q : இது ஒரு நல்ல வலி நிவாரணி, இடது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்பை வரை வலி பரவுதல், சிறுநீரில் ரத்தம், யூரிக் அசிட் செங்கல் தூசி போன்ற படிகம், சிறுநீரக பகுதியிலும், அடி முதுகு, தொடையிடுக்குகளில் வலி, அதனால் சிறுநீர் கழிக்க சிரமம்.

கல்கேரியா கார் 30 : சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இருக்கும் கல்லை எளிதாக வெளியேற்ற உதவும்.

டயஸ்கோரியா Q : சிறுநீர்ப்பையில் உள்ள கல்லை கரைக்கும், வலிகள், கை, கால், விரல்கள் வரை பரவும்.

காந்தாரீஸ் 30 : சிறுநீர் கழிக்கும் முன்பு, கழிக்கும் போதும், கழித்தபிறகும் கடுமையான எரிச்சல்.

மெக்பாஸ் 30 , 200 : அஜீரணத்திற்காக அடிக்கடி உட்கொள்ளும் ஆங்கில மாத்திரைகளால் தோன்றும் சிறுநீரககல், சிகிச்சையின் போது தாய்த்திரவம்) தந்து வலி குறைந்தவுடன் அதே மருந்தின் வீரியப்படுத்திய மருந்து கொடுத்தால் விரைவில் குணப்படுத்தலாம்.

த்லாப்சி Q : பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகளுடன் தோன்றும் யூரிக் அசிட் வகைக்கல்லை கரைக்க பயன்படும்.

கல்கேரியா ரெனாலிஸ் 200 : மீண்டும், மீண்டும் கல் உருவாதைத் தவிர்ப்பதற்கு இம் மருந்து பயன்படும்.

தைராய்டினம் 1 M : மீண்டும், மீண்டும், கல் உருவாவதற்கு (வாரம் 1 டோஸ்வீதம் தைராய்டு பிரச்சனைதான் காரணம் என்று பரிசோதனையில் தெரிந்தால். இரண்டு மாதங்கள்)

லைகோபோடியம் Q, 6 : முதுகுவலி, சிறுநீரில் சிவந்த மணல்கள், வலதுபுறம் வலி, சிறுநீர் கழிக்கும் முன்பு முதுகுவலி அதிகமிருக்கும். கழித்தால் வலி குறையும். 6 வது வீரியத்தில் ஒரு மணிக்கொரு டோஸ் வீதம் ஆறு டோஸ் நிவாரணமில்லை என்றால் 200 வது வீரியத்தில் 2 மணி நேரத்திற்கு ஒரு டோஸ் வீதம் 3 டோஸ் இடையில் பெர்பெரீஸ் வல்காரிஸ் தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் நல்ல பலன் காணலாம்.

சிறுநீரகக் கல் 7 M.M. க்கு கீழ் இருந்தால் லைகோபோடியம் 1 M. (அ) 10 M கொடுத்தால் சில மணி நேரங்களில் கல் வெளியேறி அதிசயம் நிகழ்த்தும், இம்மருந்தே அம்மனிதருக்கு 100 % பொருந்தும் மருந்து (உடல்வாகு மருந்து) என்றால் லைகோபோடியம், இங வீரியம் கல் மீண்டும் உருவாகுவதை தடுக்கும். சிறுநீரக கல் 10 M.M. இருந்தால் லைகோபோடியம் Q,30 ஆகிய வீரியம் பயன்படும்.


(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் Empty Re: சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum