Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெட்கப்படவேண்டியவர்கள்
Page 1 of 1 • Share
வெட்கப்படவேண்டியவர்கள்
நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்...களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர். அவரது சட்டையின் பின் பகுதியில் எனக்கு காது கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார்.காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார். பெயர் கல்யாணசுந்தரம்,வயது 74.
திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை.
யார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான்.
ஒரு நாளைக்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது. அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார்.
எப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை.
இதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர்.
கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு.
பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக "ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்.
இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான் வேண்டும்...!
நன்றி : முகநூல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வெட்கப்படவேண்டியவர்கள்
கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்தவர் செய்யது அபுதாகிர் 109 வயதாகு்ம் இவர் கீழக்கரை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தப்படுத்தும் தொழில் செய்து வருகிறார்....வயது முதிர்ந்தாலு்ம் இன்று வரை இளைஞர் போல் சுறுசுறுப்பாக உழைத்துகொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார்.மீன்களை சுத்தப்படுத்தும் தொழிலில் வாடிக்கையாளர்கள் கொடுக்கின்ற கூலியை பெற்று கொள்ளு்ம் இவர் பேரம் பேசுவதில்லை.இது போன்ற கடினமான வேலையில் ஈடுபடும் போது சிறிது கவனம் சிதறினாலும் கைகளில் ரத்தகாயம் ஏற்பட்டு விடும் ஆனால் இந்த முதிய வயதிலு்ம் இவர் இவ்வளவு துல்லியமாக வெட்டுவதற்கு காரணம் செய்யும் தொழிலி்ல் உள்ள ஈடுபாடேயாகும்.இந்நிலையி்ல் இன்று கீழக்கரை சதக் கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பி்ல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சேவைகளை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் 109 வயது் இளைஞர் செய்யது அபுதாகிருக்கு சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இக்கால இளைஞர்களுக்கு முன்மாதியாக திகழும் உழைப்பின் சிகரம் செய்யது அபுதாகிர் அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற்று,நீண்ட ஆயுளை பெற உங்களுடன் இணைந்து ஈமான டைம்ஸ் வாழத்துகிறது .
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வெட்கப்படவேண்டியவர்கள்
இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் அதனால் தலைப்பயும் இவ்வாறு மாற்றலாமே
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum