தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆட்படும் தன்மை (Susceptibility)

View previous topic View next topic Go down

ஆட்படும் தன்மை (Susceptibility) Empty ஆட்படும் தன்மை (Susceptibility)

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:59 pm

ஹோமியோபதி மருத்துவத்தில் ஆட்படும் தன்மை, எளிதில் பாதிக்கப்படும் இயல்பு மற்றும் தூண்டிவிடும் இயல்பிற்குப் பிரதிபலிக்கும் பண்பு, என்றெல்லாம் பொருட்படும் வகையில் பயன்படுத்தப்படும் சொல்லான Susceptibility என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இம்மருத்துவ தத்துவம் என்ன விளக்கம் கொடுக்கிறது என்று அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு இக்கட்டுரை வரையப்பட்டிருக்கிறது. இவ்வியக்கத்தை ஆதாரமாகக் கொண்டே ஒரு நோயாளிக்கு கொடுக்கப்படும் வீரியம் நிர்ணயிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது. ஆகவே ஆட்படும் தன்மை என்றால் என்னவென்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நோயாளிக்கு நாம் கொடுக்கும் மருந்தின் தேவையை அளவிட கீழ்க்கண்டவைகளின் செயற்விளைவுகளைக் கருத்திற்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவையாவன : 1) ஆட்படும் தன்மை 2) நோயின் அமைப்பிடம் 3) நோயின் கடுமை மற்றும் இயல்பு 4) நோயின் தொடர்ச்சியின் காரணமான நிலை 5) நோய்க்கு முன்னால் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள். ஆக முதலில் கூறிய ஆட்படும் தன்மை, உயிர் தத்துவத்தின் அடிப்படை இயற் பண்புகளில் முதலாவதாகக் கருதப்படுகிறது. இதன் அமைப்பைப் பொறுத்தே எல்லா செய்விளைவுகளும் ஒன்று மற்றொன்றாக அமையும் இயல்பானதாக காணப்படுகிறது எனலாம்.

உடற்செயற்பாடு மற்றும் நோய்க்கூறு, சீரணம், உணவின் காற்றை ஏற்றுக்கொள்ளும் பண்பு, உடற்சத்து, பழுது பார்த்தல், சுரப்பிகள் கழிவு வெளியேற்றங்கள் உணவு ஊட்டச் சத்தாக மாறும் பண்பு, ஊட்டச்சத்தின் கட்டழிவு முதலியவை எல்லாமே ஒரு மனிதனின் ஆட்படும் தன்மை அல்லது எளிதில் பாதிக்கப்படும் இயல்பிற்குத் தக்கவாறு திகழ்கின்றன.

இவ்வியல்பு தூண்டி விடும் இயல்பிற்குப் பிரதிபலிக்கும் இயல்பு பொதுவாக மிகத் தேவையான இயக்கம் என்பதை மேலே கண்டோம். இதுவே நோயைச் சரியாக கணக்கு ஓரளவு குறைந்த பட்ச உத்தேச மதிப்பீடு செய்ய உதவுகிறது என்று கூறுகிறது ஹோமியோபதித் தத்துவம்.இவ்வியக்கம் நாம் கொடுக்கும் மருந்தின் செய்விளைவிற்கு உடல் இயக்கத்திற்கு உண்டுபண்ணும் ஆற்றலுக்குப் பொருந்தியதாகும். நம் அனுபவத்தோடு இதை ஒப்பிட்டுப் பார்த்தால், ஆட்படுந்தன்மையான இது ஒரு முக்கிய காரணமாக விளங்குவதை உணர்த்தும் என்பதில் ஐயமில்லை. இது வயது, சுபாவம், உடல் அமைப்பு, பழக்க வழக்கம், நோயின் இயல்பு, சூழ்நிலை முதலியவற்றினால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக மாறுபட்ட தன்மையில் விளங்குவதை காணலாம்.

ஒரு தனி நபருக்கும் இது பல காலங்களில் பல விதமான மாறுபட்ட இயல்பு கொண்டதாய் விளங்குவதை ஹோமியோபதி முறை தனிச்சிறப்பு வாய்ந்ததாக ஏற்றுக்கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல மருத்துவன் நோயாளிக்கு பல விதமான வீரியங்களில் மருந்தைப் பயன் படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆகவேதான் இவ்வியக்கத்தை ஒரு முக்கிய அம்சமாக ஹோமியோபதி மருத்துவத் தத்துவம் கருதி செயல்படுகிறது. இப்பண்பு, உடலில் மிகுந்து காணப்படும் இயல்பை எப்படி அறிவது? ஒரு நோயாளிக்குத் தனி இயல்பான மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த நோய்க்குறிகள் குறிப்பிட்ட ஒரு மருந்திற்குச் சுட்டிக் காட்டும் இயல்பாகத் துல்லியமான குறிகளைக் காட்டுமானால், அவன் இடம் ஆட்படும்தன்மை எளிதிற் பாதிக்கப்படும் இயல்பு மிகுந்து காணப்படுகிறது என்று அறிய வேண்டும். இங்கு தாம் தைரியமாக உயர்ந்த மிக உயர்ந்த வீரியமாகப் பயன்படுத்தலாம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆட்படும் தன்மை (Susceptibility) Empty Re: ஆட்படும் தன்மை (Susceptibility)

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 7:00 pm

டாக்டர் ஜார் என்ன கூறுகிறார் என்பதையும் பார்க்கலாம். உயர்ந்த மற்றும் குறைவான வீரியமான மருந்தில் காணப்படும் மாறுபாடுகள், ஒரு மருந்தை நன்றாய் வீரியப்படுத்தும் நிலையிலும் குறைவாக வீரியப்படுத்திய அளவிலும், அவைகளின் செயல்விளைவுகள் வலிமை அல்லது வலிவின்மை உடையதாயிருக்கிறது. ஆனால் அவைகளை வீரியப்படுத்தும் தன்மையினாலேயே அதிகப் படுத்தப்படுகிறது.

இக்கொள்கைக்கு ஆதார அடிப்படை என்ன? எப்படி அறிவது? நிரூபணங்களில் குறைந்த வீரியமாகப் பயன் படுத்தும்போது அதிக மாக பொதுத்தன்மையான, தெளிவற்றதுமான, மருந்தின் நோய்க்குறிகளே கிடைக்கப் பெறு கின்றன. அம்மருந்தைச் சார்ந்த இவ்வகை யான மற்ற மருந்துகளில் கிடைக்கும் நோய்க் குறிகளில் இருந்துப் பிரித்துப் பாகுப்படுத்தி உணர முடியாத கூர்மையற்ற நோய்க்குறிகளே கிடைக்கின்றன. ஆனால் நடுத்தரமான மற்றும் உயர்ந்த வகையில் பயன்படுத்திய நிரூபணங்களில் தனிப்பண்பு கூரான மற்றும் தனிச் சிறப்புள்ள நோய்க்குறிகள் வெளிப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மிகக்குறைந்த வீரியமான ஆர்ஸ், ரஸ், பிரை மற்றும் சல்ப் ஆகியவைகளில் பல நோய்க்குறிகள் பொதுவான நோய்க்குறி களாகவே காணப்படு வதைக் காணலாம். உயர்ந்த வீரியத்தின் போதே அதன் செயற்பரப்பெல்லை விரிந்து காணப்படுவதோடு, தனிச்சிறப்பியல்பான நோய்க்குறிகள் காணப்படுவதையும் காணலாம். எனவே குறைந்த வீரியம் நோய்க்கு ஆட்படும் இயல்பு குறைவாயும், உயர்ந்த வீரியம் ஆழ்ந்து பரவலாகவும் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டாக அதிக அளவாகக் கொடுக்கப்படும் பெல், ஸ்ட்ராமோ, ஓபியம் போன்ற மருந்துகள் மயக்கநிலை மற்றும் பாரிச வாயுத் தன்மையைக் கொடுத்து ஆளைக் கொல்லும் இயல்பு மற்றும் வாந்தி, கழிச்சல் முதலியவைகளை உண்டு பண்ணக்கூடியவை யாவும், அவையே நன்கு வீரியப்படுத்தியபோது வேறு வேறு தனி சிறப்பியல்பு உடையதாக ஒவ்வொரு மருந்துகளும் விளங்குவதையும் காண்கிறோம்.

அதே போன்று, குறைவான ஆட்படும் இயல்பின்போது துல்லியமாக ஒரு மருந்தை குறிப்பிட்டு காட்டும் தன்மை தனிச்சிறப்பியல் பானதாகக் காட்டாமல் (நோய்க் குறிகள்) பல மருந்துகளின் நோய்க்குறிகளும் சமமான அல்லது கலந்து ஒன்றை மற்றொன்றிலிருந்து பாகுபடுத்தி அறியும்படியான தனி இயல்பானதாகக் காணமாட்டா. இங்கு எதிர் விளைவுத் தன்மை குறைவாக இருப்பதால், நாம் காணும் நோய்க் குறிகள் பல மருந்துகளின் கலந்த கும்பலான குறிகளாக இருப்பதால் எந்த மருந்தின் குணவி யல்பு அதிகமாக காணப்படுகிறதோ அவைகளை அடிப்படையாகக் கொண்டே மருந்து கொடுக்க இயலுகிறது. ஆக எந்த மருந்தின் தனிச்சிறப்பான நோய்க்குறியும் காணக்கிடைக்க வில்லையாதலால், நாம் கொடுக்கும் மருந்தை குறைவான வீரியத்தில் தான் பயன்படுத்த முடிகிறது.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆட்படும் தன்மை (Susceptibility) Empty Re: ஆட்படும் தன்மை (Susceptibility)

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 7:00 pm

மாறுபாடாக துல்லியமாக ஒரு குறிப்பிட்ட மருந்திற்கு ஏற்ப நோய்க்குறி அறியப்படுமானால் மிக உயர்ந்த வீரியமாகப் பயன்படுத்தலாம். ஆக கூர்மையான, தனியியல்பான மற்றும் அதிக தனிச்சிறப்பு பண்பு காணும்படியான இடத்தில் அதிகமான ஆட்படும் இயல்பு இருந்தால் உயர்ந்த, மிக உயர்ந்த வீரியம் பயன்படும். குறைவான வீரியமாகத் தேவைப்படும் நோய்களில் கூர்மையான மற்றும் தனிச்சிறப்பு பண்பாக நோய்க் குறிகள் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை - உயர்ந்த வீரியம் தேவைப்படும் நோய்களில் காணப்படுவது போன்று.

எனவே ஆட்படும் இயல்பை (நோயாளியின்) நாம் நோய்களின் பண்பு மற்றும் நோய்க்குறிகளின் முனைமையைக் கொண்டுப் பத்திரமாக மதிப்பிடலாம். ஆனால் இவையெல்லாம் பரிசோதனை செய்யும் மருத்துவனின் ஆற்றலை யும் கூர்மையான உணர்வு, துல்லியமே அக்கறை எடுத்துக் கொள்ளும் அவனுடைய ஆற்றல், தேர்ச்சி மற்றும் சிறப்பியல்பு ஆகியவை களைப் பொறுத்ததாகும். ஒரு சாதாரண மனிதன் மற்றும் ஒரு மருத்துவன் இருவராலும் உணரத்தக்கவை களையும், யூகிக்கத்தக்கவைகளையும் செய்யும் ஆற்றல் உள்ளவர்கள்தான். ஆனால் ஒரு சாதாரண மனிதன் காணாதவைகளை யூகித்து செயல்படுபவனே மருத்துவனின் தனிச்சிறப்பு ஆகும்.

இப்பொழுது எளிதில் பாதிக்கப்படும் தன்மையானவர்கள் யார் என்று பார்க்கலாம். குழந்தைகள், இளைஞர்கள், துடிதுடிப் பானவர்கள், சுறுசுறுப்பானவர்கள், வளர்ச்சி காணும் இயல்பான உறுப்புகள், மிகக் கூர்மையாய் விளங்குபவர்கள், ஆகியோராவர், இவர்களுக்கு நடுத்தரமான அல்லது உயர்தர வீரியமாகப் பயன்படுத்தலாம். மற்றும் கூர்மையானவர்கள், தசைக்கட்டு நிரம்பியவர்கள், குருதி சிவப்பானவர்கள், பித்த வாதமான இயல்புடைய வர்கள், மூளை ஆற்றலுள்ளவர்கள், துரிதமாக வேலை செய்யும் ஆற்றல் உள்ளவர்கள், உடனடியாக சிந்தித்துப் பதில் சொல்லக்கூடிய, நடவடிக்கை எடுக்கக் கூடிய ஆற்றலுள்ளவர்கள், திடீர் உணர்ச்சி வசப்படுபவர்கள் நீண்ட தூக்கத்திற்குப் பிறகு எழுந்திருப்பவர்கள், சதா உட்கார்ந்து காலம் தள்ளுபவர்கள், கற்பனை வளம் உள்ளவர்கள், ஆகியோர் மேற் குறிப்பிட்ட தன்மை வாய்ந்தோராவர்.

பாதிக்கும் இயல்பு குறைந்தவர்கள் யாவர்? உணர்ச்சியற்றவர்கள், எழுற்சியற்றவர்கள், புரிந்து கொள்ளும் திறன் மந்தமானவர், சூடிக்கையின்மையானவர், வெட்ட வெளியில் நீண்ட நேரம் உடலுழைப்பை நல்கியவர்கள் ஏராளமாக உண்பவர்கள், குறைந்த தூக்கம் தூங்கியவர்கள், ஊமை, செவிடு, பிறப்பால் மூளை வளர்ச்சி குன்றியவர்கள், கரடு முரடான சிம்பு நாருரி உள்ளவர்கள், மந்தமானவர்களை கீழ்தர மான பழக்க வழக்கங்கள் உள்ளவர்கள், அதிக நரம்பு முறுக்கு ஆனால் தங்களைக் கிளர்த்தெழச் செய்வதற்கு தூண்டுதல் தேவையானவர்கள், குடிக்கு ஆட்படும் தன்மைக்கு ஏராளமாக குடிக்கும் இயல்பானவர்கள், பலவிதமான மருந்துகளை உட்கொண்டவர்கள் ஆகியோராவர். இவர்களுக்குத் தேவைப்படும் வீரியம் குறைந்த மற்றும் (இதமஈஉ) மூலப் பொருளானதாகும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆட்படும் தன்மை (Susceptibility) Empty Re: ஆட்படும் தன்மை (Susceptibility)

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 7:00 pm

எடுத்துக்காட்டாக சில மோசமான தன்மையை அடைந்த இருதய வால்வுகள் தொடர்பான நோய்க்கு, டிஜிடாலிஸ் தேவைப்படுமானால் இவர்களுக்கு வீரியமான மருந்துகள் எந்தவிதமான தன்மையையும் விளைவிக்க முடிவதில்லை. தாய் வீரியமாகவோ அல்லது மிக குறைவான வீரியமாகவோ தான் தேவை. காரணம் நோயின் நாட்பட்ட பின் விளைவாக பழுதடைந்த நிலையில், உள்ளுறுப்பு பழுதான நிலையில், ஆட்படும் இயல்பு மந்த நிலை அடைந்து விட்டதின் விளைவுதான் இங்கு உயர்ந்த வீரியம் வேலை செய்ய வாய்ப்பில்லாமற் போனதற்குக் காரணமாகும்.

நாம் கொடுக்கும் மருந்தின் அளவு மட்டுமே நோய் வகைத் தோற்றங்களை உருவாக்கும் இயல்பினை அடைய காரணமாயிருந்து விடுவதில்லை. ஒரு நோயாளியின் ஆட்படும் பண்பும் - எளிதில் பாதிக்கப்படும் தன்மையும் அங்கு காரணமாக அமைகிறது என்பதை மறக்கலாகாது. அப்படியே, மிக உயர்வான ஆட்படும் வாய்ப்பை உடையவர்களுக்கு அதிக அளவான குறைந்த வீரியமான மருந்து ஆபத்தானவையாக அமையுமானால், அதே குறைந்த வீரியமான மருந்து நீண்ட கால நோயின் பின் விளைவாக உறுப்பியக்கம் மாறுதலடைந்ததின் விளைவாக பிரதிபலிக்கும் இயல்பைக் குறைவானதாக அடைந்துவிட்டவர்களுக்கு எந்தவிதமான கெடுதியையும் விளைவிப்பதில்லை.

எனவே, ஹோமியோபதி சட்டப்படி ஒரு நோய்க்குத் தேவைப்படும் அளவு, வீரியம் ஆகியவற்றைக் கொடுப்பது எப்படி என்பது, மதிப்பிடுவது எப்படி என்ற கேள்வியைப் பொறுத்தாகும். நோயின் படி நிலை குறைவாக இருந்தால், மற்றும் எதிற் விளைவுத்திறன் குறைவாக இருந்தால், மருந்தின் வீரியம் குறைவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; அம்மாதிரியான நோய்களில் நாம் காணக்கூடிய நோயாளியின் நோய்க்குறிகள் வலுக்குறைந்த ஒழுங்கமைப்பில் உள்ளதாகும் (Low order). பொதுப்படையான நோயில் விளைந்த பின் விளைவுகள், முழு மொத்தமான முடிவாகக் குறிகள், அப்பட்டமான (Crude) மருந்துகளின் கணிச்சமான நச்சியல்பான அளவு தொடர்பான வைகளாய் இருக்கும். கூர்மையான தெளிவான, நிழலீடாக முனைப்பான நிலைக்குத் தொடர்பா னதாக, துடிப்பான, கூர்வுணர்ச்சியுள்ள நோயாளியிடையே காணாது. இங்கு நன்கு வீரியப்படுத்திய மருந்துகள் வேலை செய்ய வாய்ப்பில்லை. காரணம் நோய்நிலை அந்த கட்டத்தைக் கடந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டது - அதோடு அதன் தெளிவான நோய்க்குறிகளும் மறைந்து விட்டன. ஆனாலும் சில குறிகள் எஞ்சிக் காணப்படுகின்றன; ஏறக்குறைய நம்பிக்கை இழந்த நிலையில் பிரதிபலிக்கும் இயல்பானதாக; ஆனாலும் ஹோமியோபதி சட்டத்தில் வாய்ப்பெல்லை இன்னும் கொஞ்சம் எஞ்சியிருக் கிறது. இதைச் சரியாகப் புரிந்துக் கொண்டு மிகக் குறைவான மற்றும் தாய் வீரியமாகப் பயன்படுத்தி னால் நோயாளி குணமடைய வாய்ப்பு முழுதாகப் போய்விடவில்லை.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆட்படும் தன்மை (Susceptibility) Empty Re: ஆட்படும் தன்மை (Susceptibility)

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 7:00 pm

இந்நிலையில் நமக்கு மருந்தைத் தேர்ந் தெடுக்க உதவுவது குறிப்பிட்ட மருந்தின் விஷத்தன்மையால் நிகழ்ந்த விளைவுகள் அல்லது அதிக அளவாக கொடுத்ததின் விளைவாக நோயில் குணம் கண்ட அனுபவம் ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டு மட்டுமே நோயாளியைக் குணப்படுத்த முயலவேண்டும். ஒரு நோயில் கும்பலான நோய்ப்பாதிப்புகள் நிறைந்த மற்றும் உறுப்புகள் பாதித்த குறிகள் இருக்குமானால், அந்தக் கட்டத்தில் சாதாரண மாகத் தீர வாய்ப்பில்லாத நிலைதான்; வீரியப் படுத்திய மருந்துகளினால் நல்ல விளைவுகளைக் காணமுடியாத நிலைதான்; ஆனாலும் அப்பட்ட மான நஞ்சூட்டும் நிலையான மருந்துகளால் ஒருக்கால் குணமாக்கலாம். ஆனாலும் ஒவ்வொரு நோயும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைக் கடக்காத அளவில் இருக்குமானால் அந்நோய் குணப்படுத் தக்கூடியதே. நாம் பாகுபடுத்தக் கூடியதே. ஆனால், நாம் பாகுபடுத்தி அறிந்து இருக்க வேண்டியது, நோயில் குணப்படுத்தக்கூடியது எது, அந்தக் கட்டத்தைக் கடந்தது எது, என்று அறிந்து கொள்ள வேண்டியது ஆகும்.

ஆகவே மோசமான நிலையில் தேர்ந் தெடுத்த மருந்துகளால் அல்லது உடன் நிகழ்வான எதிர்விளைவுகள், வீரியப்படுத்திய மருந்தால் விளைவிக்க முடியவில்லை என்றால், அப்பட்ட மான மருந்தாக எதிர் விளைவுகளை உண்டாக் கக் கூடிய அளவாக, அளவை உயர்த்திக் கொண்டே போக வேண்டும். இவை சில சமயம் எதிர்விளைவுகளை உண்டு பண்ணலாம். பிறகு வீரியத்தை உயர்த்தலாம். எனவே, ஒரு நோய் குணமாவதும், ஆகாததும் நாம் தேர்ந்தெடுக்கும் மருந்தையும் அதற்கு அந்நோயாளியின் ஆட்படும் தன்மை யையும், ஏற்று பிரதிபலிக்கும் தன்மையாக உடலி யக்கம் மேற்கொள்ளும் இயல்பிற்கு ஏற்ப நிகழ்கிறது என்பதை நாம் புறக்கணிக்கக் கூடாது என்பதே உண்மையாகும்.



- நன்றி : ‘ஹோமியோபதி’ தமிழ் மாத இதழ் - 1976 மார்ச்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆட்படும் தன்மை (Susceptibility) Empty Re: ஆட்படும் தன்மை (Susceptibility)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum