தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

View previous topic View next topic Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 12:53 am

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களை நாதமுனி என்பவர் நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார்.

நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ‘திவ்வியம்’ என்பது அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது என்ற பொருளில் இனிமை என்னும் பொருளைத் தரும். ‘பிரபந்தம்’ என்பது ‘தொகுப்பு’ என்றும் ‘தனி நூல்’ என்றும் பொருள் தரும் என்பர். எனவே, திவ்விய பிரபந்தம் என்பது, தெய்வத்தின் திவ்விய குணங்களைப் போற்றும் பிரபந்தங்களின் தொகுப்பு என்று பொருள் தரும் . இதைத் திராவிட வேதம் என்பர்.

ஸ்ரீ ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு (1-12)
ஸ்ரீ ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி (13-473)

முதல் பத்து
இரண்டாம் பத்து
மூன்றாம் பத்து
நான்காம் பத்து
ஐந்தாம் பத்து

ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை (474-503)
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி (504-646)
ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி (647-751)
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் (752-871)
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை (872-916)
ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி (917-926)
திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான் (927-936)
ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு (937-947)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி (948-2031)

முதல் பத்து
இரண்டாம் பத்து
மூன்றாம் பத்து
நான்காம் பத்து
ஐந்தாம் பத்து
ஆறாம் பத்து
ஏழாம் பத்து
எட்டாம் பத்து
ஒன்பதாம் பத்து
பத்தாம் பத்து
பதினோராம் பத்து

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குருந்தாண்டகம் (2032-2051)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் (2052-2081)
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி (2082-2181)
ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி (2182-2281)
ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி (2282-2381)
திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி (2382-2477)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம் (2478-2577)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம் (2578-2584)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி (2585-2671)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை (2672)
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல் (2673-2712)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல் (2713-2790)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி (2791-3892)

முதல் பத்து
இரண்டாம் பத்து
மூன்றாம் பத்து
நான்காம் பத்து
ஐந்தாம் பத்து
ஆறாம் பத்து
ஏழாம் பத்து
எட்டாம் பத்து
ஒன்பதாம் பத்து
பத்தாம் பத்து

திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி (3893-4000)


தொடரும்...,

இதன் பாடல்களும், விளக்கங்களும்


நன்றி - கேஆர்.சக்தி வேல்


Last edited by என் உயிர் நீயே on Tue Jan 01, 2013 1:34 am; edited 1 time in total
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:24 am

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு


ஸ்ரீ ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்

நாதமுனிகள் அருளிச் செய்தது

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக|
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி||

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
(இருவிகற்ப நேரிசை வெண்பா)

மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று.

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

---------

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு

காப்பு
குறள்வெண்செந்துறை

1 பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு 1

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

2 அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. 2

3 வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. 3

4 ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. 4

5 அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. 5

6 எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6

7 தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 7

8 நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. 8

9 உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9

10 எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 10

11 அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே.நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே.உன்னைப்பல்லாண்டுகூறுவனே. 11

12 பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. 12


ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:25 am

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி


பெரிய திருமொழி முதல் பத்து

948 வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
1.1

949 ஆவியே. அமுதே. எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.
1.2

950 சேமமேவேண்டித் தீவினைபெருக்கித்
தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்
ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள்
தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.
1.3

951 வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.
1.4

952 கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
கண்டவாதிரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம்.
1.5

953 எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்,
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்,
வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி,
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.
1.6
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:25 am

954 இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்
இன்னதோர்த்தன்மையென்றுணரீர்,
கற்பகம்புலவர்களைகணென்றூலகில்
கண்டவாதொண்டரைப்பாடும்,
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்
சூழ்புனற்குடந்தையேதொழுமின்,
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்
நாராயணாவென்னும்நாமம்.
1.7

955 கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
நாராயணாவென்னும்நாமம்.
1.8

956 குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.
1.9

957 மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார்வாள் கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை
இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம்.
1.10

958 வாலிமாவலத்தொருவனதுடல்கெட
வரிசிலைவளைவித்து,அன்று
ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற
இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகிலதிர்தர அருவரை
அகடுறமுகடேறி,
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.1

959 கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய
அருவரையணைகட்டி,
இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்
இருந்தநல்லிமயத்து,
விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன
வேழங்கள்துயர்க்கூர,
பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரி தரு
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.2

960 துடிகொள்_ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற்
றிளங்கொடிதிறத்து, ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
இருந்தநல்லிமயத்து,
கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின்
மணியறைமிசைவேழம்,
பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.3

961 மறங்கொளாளரியுருவெனவெருவர
ஒருவனதகல்மார்வம்
திறந்து,வானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திடக்
கிடந்தருகெரிவீசும்,
பிறங்குமாமணியருவியொடிழிதரு
பிரிதிசென்றடைனெஞ்சே.
2.4

962 கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்
அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய்மேகலையலர்மகளவளொடும்
அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை
அளைமிகுதேன்தோய்த்து,
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.5

963 பணங்களாயிரமுடையநல்லவரவணைப்
பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கிவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்து,
மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற
நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.6
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:26 am

964 கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய
கறிவளர்க்கொடிதுன்னி,
போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய
பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந் தினமலர்
எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.7

965 இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை
இரும்பசியதுகூர,
அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய
அருவரையிமயத்து,
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று
எண்ணிநின்றிமையோர்கள்,
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.8

966 ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு
உறுதுயரடையாமல்,
ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை
இருந்தநல்லிமயத்து,
தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற
தழல்புரையெழில்நோக்கி,
பேதைவண்டுகளெரியெனவெருவரு
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.9

967 கரியமாமுகிற்படலங்கள்கிடந்து
அவைமுழங்கிட,களிறென்று
பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு
பிரிதியெம்பெருமானை,
வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர்
கலியனதொலிமாலை,
அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு
அருவினையடயாவே.
2.10

968 முற்றமூத்துக்கோல்துணையா
முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி
மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த
பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட
வாயான் வதரிவணங்குதுமே.
3.1

969 முதுகுபற்றிக்கைத்த
லத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக்கண்
சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவா
றென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே.
3.2

970 உறிகள்போல்மெய்ந்நரம்
பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண்
சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம்
அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே.
3.3

971 பீளைசோரக்கண்ணி
டுங்கிப் பித்தெழமூத்திருமி,
தாள்கள் நோவத்தம்மில்
முட்டித் தள்ளிநடவாமுன்,
காளையாகிக்கன்று
மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,
வாளைபாயும்தண்ட
டஞ்சூழ் வதரிவணங்குதுமே.
3.4

972 பண்டுகாமரான
வாறும் பாவையர்வாயமுதம்
உண்டவாறும், வாழ்ந்த
வாறும் ஒக்கவுரைத்திருமி,
தண்டுகாலாவூன்றி
யூன்றித்
தள்ளிநடவாமுன், வண்டுபாடும்தண்டு
ழாயான் வதரிவணங்குதுமே.
3.5

973 எய்த்தசொல்லோடீளை
யேங்கி இயிருமியிளைத்துடலம்,
பித்தர்ப்போலச்சித்தம்
வேறாய்ப் பேசியயராமுன்,
அத்தனெந்தையாதி
மூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த,
மைத்தசோதியெம்பெ
ருமான் வதரிவணங்குதுமே.
3.6
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:26 am

974 பப்பவப்பர்மூத்த
வாறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப, ஐக்கள்போத
வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர்மென்கொங்கை
நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும்நங்கள்வாழ்வு
மானான் வதரிவணங்குதுமே.
3.7

975 ஈசிபோமினீங்கி
ரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம்
கூசியிட்டீரென்று
பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,
நாசமானபாசம்
விட்டு நன்னெறிநோக்கலுறில்,
வாசம்மல்குதண்டு
ழாயான் வதரிவணங்குதுமே.
3.8

976 புலன்கள்நையமெய்யில்
மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்கவைக்கள்போத
வுந்திக் கண்டபிதற்றாமுன்,
அலங்கலாயதண்டு
ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி,
வலங்கொள்தொண்டர்ப்பாடி
யாடும் வதரிவணங்குதுமே.
3.9

977 வண்டுதண்டேனுண்டுவாழும்
வதரிநெடுமாலை,
கண்டல்வேலிமங்கை
வேந்தன் கலியனொலிமாலை,
கொண்டுதொண்டர்ப்பாடி
யாடக் கூடிடில்நீள்விசும்பில்,
அண்டமல்லால்மற்ற
வர்க்கு ஓராட்சியறியோமே.
3.10

978 ஏனமுனாகியிருநிலமிடந்து
அன்றிணையடியிமையவர்வணங்க,
தானவனாகம்தரணியில்புரளத்
தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன்,
தேனமர்சோலைக்கற்பகம்பயந்த
தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து,
வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
4.1

979 கானிடையுருவைச்சுடுசரம்துரந்து
கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன்,
ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப
உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்,
தேனுடைக்கமலத்தயனொடுதேவர்
சென்றுசென்றிறைஞ்சிட, பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
4.2

980 இலங்கையும்கடலுமடலருந்துப்பின்
இருநிதிக்கிறைவனும், அரக்கர்
குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த
கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற,
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில்
வெண்துகிற்கொடியெனவிரிந்து,
வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
4.3

981 துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே.
தொழுதெழுதொண்டர்கள்தமக்கு,
பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும்
பேரருளாளனெம்பெருமான்,
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும்
ஆரமும்வாரிவந்து, அணிநீர்
மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
4.4

982 பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன்
பெருமுலைசுவைத்திட, பெற்ற
தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று
தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்,
சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த
செம்பொன்செய்விலங்கலிலிலங்கு,
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
4.5

983 தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி
திறத்து ஒருமறத்தொழில்புரிந்து,
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த
பனிமுகில்வண்ணனெம்பெருமான்,
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த
கருவரைபிளவெழக்குத்தி,
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
4.6
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:26 am

984 வெந்திறல்களிறும்வேலைவாயமுதும்
விண்ணொடுவிண்ணவர்க்கரசும்,
இந்திரற்கருளியெமக்குமீந்தருளும்
எந்தையெம்மடிகளெம்பெருமான்,
அந்தரத்தமரரடியிணைவணங்க
ஆயிரமுகத்தினாலருளி,
மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
4.7

985 மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த
மன்னவன்பொன்னிறத்துரவோன்,
ஊன்முனிந்தவனதுடலிருபிளவா
உகிர்நுதிமடுத்து, அயனரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம்
தவிர்த்தவன், தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
4.8

986 கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர்க்
குரைகடலுலகுடனனைத்தும்,
உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த
உம்பருமூழியுமானான்,
அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து
அங்கவனியாளலமர, பெருகு
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
4.9

987 வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை,
கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணிக்
கலியன்வாயொலிசெய்தபனுவல்,
வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள்
வானவருலகுடன் மருவி,
இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ்
இமையவராகுவர்தாமே.
4.10

988 கலையும்கரியும்பரிமாவும்
திரியும்கானம்கடந்துபோய்,
சிலையும்கணையும்துணையாகச்
சென்றான்வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலைநீரணைகட்டி
மதிள்நீரிலங்கைவாளரக்கர்
தலைவன், தலைபத்தறுத்துகந்தான்
சாளக்கிராமமடைநெஞ்சே.
5.1

989 கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்,
இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்,
தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 5.2

990 உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்,
நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
வலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்
சலவன், சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 5.3

991 ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,
தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ்
பேரான், பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற
தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. 5.4

992 அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்
விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான், நண்ணார்முன்,
கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்
தடுத்தான், தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 5.5

993 தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட
வாயான், தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை
ஏயானிரப்ப, மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும்
தாயான், காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே. 5.6
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:27 am

994 ஏனோரஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை,
ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன்தானேயிருசுடராய்,
வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாயலைநீருலகனைத்தும்
தானாய், தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே. 5.7

995 வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து, ஓர்
சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று, என்
எந்தாய். சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில்
தந்தான், சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. 5.8

996 தொண்டாமினமுமிமையோரும் துணைநுaல்மார்பினந்தணரும்,
அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்,
வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய,
தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே. 5.9

997 தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை,
காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை,
ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள,
பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே. 5.10

998 வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.1

999 சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,
புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,
அலம்புரிதடக்கையாயனேமாயா. வானவர்க்கரசனே., வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.2

1000 சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்,
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த,
நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.3

1001 வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை,
நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்றி எற்றிவைத்து, எரியெழுகின்ற
செம்பினாலியன்றபாவையைப் பாவீ. தழுவெனமொழிவதர்க்கஞ்சி,
நம்பனே. வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.4

1002 இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று,
நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை,
கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி,
நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.5

1003 கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு,
ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால், நமனார்
பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே.
பாற்கடல்கிடந்தாய்.,
நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.6
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:27 am

1004 நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்,
துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்.,
வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா. தானவர்க்கென்றும்
நஞ்சனே., வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.7

1005 ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு?, ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா.,
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து, என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.8

1006 ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்,
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்,
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே. திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்.,
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.9

1007 ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று, இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்தெந்தையைச்சிந்தையுள்வைத்து,
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்,
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே. 6.10

1008 அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. 7.1

1009 அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்,
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப,
சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே. 7.2

1010 ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,
தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே. 7.3

1011 எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி, ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 7.4

1012 மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. 7.5

1013 எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,
நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே. 7.6
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:27 am

1014 முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 7.7

1015 நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த, அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்,
காய்த்தவாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய்,
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. 7.8

1016 நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்,
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்,
நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து, அதர்வாய்ச்
சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே. 7.9

1017 செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய,
எங்களீசனெம்பிரானை இருந்தமிழ்_ற்புலவன்,
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்,
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே. 7.10

1018 கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்,
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்,
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம், பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே. 8.1

1019 பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை,
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம்,
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி, நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. 8.2

1020 நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான்,
என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான்,
கன்றிமாரிபொழிந்திடக் கடிதானிரைக்கிடர் நீக்குவான்,
சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 8.3

1021 பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர்,
கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்,
ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே. 8.4

1022 வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய்,
மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான்,
எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான்,
திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 8.5

1023 எண்டிசைகளுமேழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து,
பண்டோராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன்,
ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு
திண்டிறலரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 8.6
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:27 am

1024 பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான்,
பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம்,
காரும்வார்ப்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில்தோய்தர,
சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே. 8.7

1025 அம்பரமனல்கால்நிலம்
சலமாகிநின்றவமரர்க்கோன், வம்புலாமலர்மேல்
மலிமட மங்கை தன்கொழுநனவன்,
கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும்,
செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே. 8.8

1026 பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,
பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும்
பிரானிடம், வாசமாமலர்நாறுவார்
பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,
தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. 8.9

1027 செங்கயல்திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறைசெல்வனை,
மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள்,
சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே,
வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே. 8.10

1028 தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்,
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்,
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா.,
நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே. 9.1

1029 மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,
நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.2

1030 கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,
என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,
குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.,
அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.3

1031 குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்,
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன்,
நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா.,
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.4

1032 எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்,
துப்பா. நின்னடியே
தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்,
செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை, என்
அப்பா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.5

1033 மன்னாய்நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்,
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்,
விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா.,
அண்ணா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.6
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:27 am


1034 தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,
பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,
கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.,
அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.7

1035 நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால்,
ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான்.,
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா.,
ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.8

1036 பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்,
மற்றேலொன்றறியேன் மாயனே. எங்கள்மாதவனே.,
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா.,
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.9

1037 கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை,
விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை,
திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன்,
பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே. 9.10

1038 கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன்,
திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்.,
விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய,
அண்ணா. அடியேன் இடரைக்களையாயே. 10.1

1039 இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர்
குலம்கெட்டவர்மாளக்
கொடிப்புள்திரித்தாய்., விலங்கல்குடுமித்
திருவேங்கடம்மேய,
அலங்கல்துளபமுடியாய். அருளாயே. 10.2

1040 நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு,
ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்.,
சீரார் திருவேங்கடமாமலைமேய,
ஆராவமுதே. அடியேற்கருளாயே. 10.3

1041 உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக,
கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே,
விண்தோய்சிகரத்
திருவேங்கடம்மேய,
அண்டா. அடியேனுக்கு அருள்புரியாயே. 10.4

1042 தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி,
பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்.,
சேணார் திருவேங்கடமாமலைமேய,
கோணாகணையாய். குறிக்கொள்ளெனைநீயே. 10.5

1043 மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி,
தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன்,
மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய,
என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே. 10.6

1044 மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த,
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா.,
தேனே. திருவேங்கடமாமலைமேய,
கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே. 10.7

1045 சேயனணியன் எனசிந்தையுள்நின்ற
மாயன், மணிவாளொளி வெண்டரளங்கள்,
வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய,
ஆயனடியல்லது மற்றறையேனே. 10.8

1046 வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்,
நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ.,
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய்., இனியானுன்னை யென்றும் விடேனே. 10.9

1047 வில்லார்மலி வேங்கடமாமலைமேய,
மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை,
கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை,
வல்லாரவர் வானவராகுவர்த்தாமே. 10.10
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:30 am

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி


இரண்டாம் பத்து

முதல்திருமொழி - மெச்சூது

(பூச்சிகாட்டி விளையாடுதல்.

கலித்தாழிசை

118 மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 1

119 மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 2

120 காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 3

121 இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்
புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 4

122 சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 5

123 செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 6

124 தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 7

125 கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத்
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 8

126 பதகமுதலைவாய்ப் பட்டகளிறு
கதறிக்கைகூப்பி என்கண்ணா. கண்ணா. என்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 9

தரவு கொச்சகக்கலிப்பா

127 வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. 10

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:32 am


இரண்டாம் திருமொழி - அரவணையாய்

(கண்ணனை முலையுண்ண அழைத்தல்)

கலிவிருத்தம்

128 அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ
வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய
திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. 1

129 வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்
இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை
எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே
முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே. 2

130 தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்
வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா.
உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
நந்தகோபனணிசிறுவா. நான்சுரந்தமுலையுணாயே. 3

131 கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. 4

132 தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து
மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா.
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே. அமர்ந்துவந்துஎன்முலையுணாயே. 5

133 மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா. முலையுணாயே. 6

134 பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலே
கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி
வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி
கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா. நீமுலையுணாயே. 7

135 இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே. 8

136 அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
செங்கமலமுகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம்முற்றத்தூடே
அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம. விம்ம
அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே. முலையுணாயே. 9

137 ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே
பாடிப்பாடிவருகின்றாயைப் பற்பநாபனென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி
ஓடியோடிப்போய்விடாதே உத்தமா. நீமுலையுணாயே. 10

138 வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம்
நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர்
பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார்
சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே. 11
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:36 am

மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு

(பன்னிருநாமம்: காதுகுத்துதல்)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

139 போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன்
காப்பாருமில்லைகடல்வண்ணா. உன்னைத்
தனியேபோய்எங்கும்திரிதி
பேய்ப்பால்முலையுண்டபித்தனே.
கேசவநம்பீ. உன்னைக்காதுகுத்த
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன்.
1

140 வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி
மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
நாராயணா. இங்கேவாராய்
எண்ணற்கரியபிரானே. திரியை
எரியாமேகாதுக்கிடுவன்
கண்ணுக்குநன்றுமழகுடைய
கனகக்கடிப்பும்இவையா.
2

141 வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்
மகரக்குழைகொண்டுவைத்தேன்
வெய்யவேகாதில்திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம்தருவன்
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
ஒண்சுடராயர்கொழுந்தே.
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
மாதவனே. இங்கேவாராய்.
3

142 வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா. நீசொல்லுக்கொள்ளாய்
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான். இங்கேவாராய்.
4

143 சோத்தம்பிரான். என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய்
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ? நம்பீ.
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே. திரியிடவொட்டில்
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே. நீஇங்கேவாராய்.
5

144 விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன்
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ.
கண்ணா. என்கார்முகிலே.
கடல்வண்ணா. காவலனே. முலையுணாயே.
6

145 முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப்
பசுநிரைமேய்த்தாய்.
சிலையொன்றுஇறுத்தாய். திரிவிக்கிரமா.
திருவாயர்பாடிப்பிரானே.
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே.
7

146 என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ.
உன்காதுகள்தூரும்
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே.
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே.
8

147 மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித்
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக்
காணவேகட்டிற்றிலையே?
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா. உன்காதுதூரும்
கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற
காரிகையார்சிரியாமே.
9

148 காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்?
காதுகள்வீங்கியெறியில்
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித்திரியவும்காண்டி
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா. என்தன்கண்ணே.
10

149 கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்
கடிகமழ்பூங்குழலார்கள்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே. எங்களமுதே.
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன்
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா. இங்கேவாராய்.
11

150 வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்?
காதுகள்நொந்திடும்கில்லேன்
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவைகாணாய்நம்பீ. முன்வஞ்சமகளைச்
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா. இங்கேவாராய்.
12

151 வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே.
13
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:36 am

நாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த

(கண்ணனை நீராட அழைத்தல். )

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

152 வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு
திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
நண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். 1

153 கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய். நீபிறந்ததிருவோணம்
இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான். ஓடாதேவாராய். 2

154 பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா. மஞ்சனமாடநீவாராய். 3

155 கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே.
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே. நீராடவாராய். 4

156 அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ.
செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான். இங்கேவாராய். 5

157 எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே.
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
வண்ணம்அழகியநம்பீ. மஞ்சனமாடநீவாராய். 6

158 கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்
பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேன்எம்பிரானே.
சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே
மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய். 7

159 கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
நின்திறத்தேனல்லன்நம்பீ. நீபிறந்ததிருநல்நாள்
நன்றுநீநீராடவேண்டும் நாரணா. ஓடாதேவாராய். 8

160 பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி
காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும்
மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய். 9

161 கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல்
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. 10
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:36 am

ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை

(கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்)

கலித்தாழிசை

162 பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை
முன்னையமரர் முதல்தனிவித்தினை
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். 1

163 பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்
மாயச்சகடும் மருதும்இறுத்தவன்
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல்
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 2

164 திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 3

165 பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய். 4

166 கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை
பற்றியெறிந்த பரமன்திருமுடி
உற்றனபேசி நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய்.
ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய். 5

167 கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே வேரறுத்தானை
குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய்.
கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய். 6

168 பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர்
வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய்.
மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய். 7

169 உந்தியெழுந்த உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன்
கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி
தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய்.
தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய். 8

170 மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன்
பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து
பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய்.
பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய். 9

தரவு கொச்சகக்கலிப்பா

171 கண்டார்பழியாமே அக்காக்காய். கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல்
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. 10
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:36 am

ஆறாம் திருமொழி - வேலிக்கோல்

(காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்)

கலித்தாழிசை

172 வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி
தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு
பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. 1

173 கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன்
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா. 2

174 கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான்
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான்
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 3

175 ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன்
துன்றுமுடியான் துரியோதனன்பக்கல்
சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா. 4

176 சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல்
ஊரொன்றுவேண்டிப் பெறாதஉரோடத்தால்
பாரொன்றிப் பாரதம்கைசெய்து பார்த்தற்குத்
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 5

177 ஆலத்திலையான் அரவினணைமேலான்
நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான்
பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா. 6

178 பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில்
உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட அக்
கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா. 7

179 மின்னிடைச் சீதைபொருட்டா இலங்கையர்
மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ
தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வளைத்திட்ட
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா. 8

180 தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து
மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு
என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா. 9

தரவு கொச்சகக்கலிப்பா

181 அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன்
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர்
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே. 10
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:36 am

ஏழாம் திருமொழி - ஆனிரை

(கண்ணனைப் பூச்சூட அழைத்தல்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

182 ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். 1

183 கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்.
திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய்.
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய். 2

184 மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய். நீள்திருவேங்கடத்துஎந்தாய்.
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய். 3

185 தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ. உகந்திவைசூட்டநீவாராய். 4

186 புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய்.
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்.
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய். 5

187 எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி.
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்.
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே. புன்னைப்பூச்சூட்டவாராய். 6

188 குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே.
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா.
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்.
குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய். 7

189 சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்.
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்.
ஆமாறறியும்பிரானே. அணியரங்கத்தேகிடந்தாய்.
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய். இருவாட்சிப்பூச்சூட்டவாராய். 8

190 அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்.
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள்மணவாளா.
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்.
கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய். 9

191 செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. 10
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:37 am

எட்டாம் திருமொழி - இந்திரனோடு

(கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

192 இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய்.
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். 1

193 கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்.
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்.
நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய். 2

194 செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்.
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்.
இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான். காப்பிடவாராய். 3

195 கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார்
கண்ணனே. வெள்ளறைநின்றாய். கண்டாரோடேதீமைசெய்வாய்.
வண்ணமேவேலையதொப்பாய். வள்ளலே. காப்பிடவாராய். 4

196 பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்
எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான். நீஇங்கேவாராய்
நல்லார்கள்வெள்ளறைநின்றாய். ஞானச்சுடரே. உன்மேனி
சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய். 5

197 கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்.
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே. காப்பிடவாராய். 6

198 கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த
பிள்ளையரசே. நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்.
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய். 7

199 இன்பமதனைஉயர்த்தாய். இமையவர்க்குஎன்றும்அரியாய்.
கும்பக்களிறட்டகோவே. கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே.
செம்பொன்மதிள்வெள்ளறையாய். செல்வத்தினால்வளர்பிள்ளாய்.
கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய். 8

200 இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்
தருக்கேல்நம்பி. சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய்.
உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய். 9

201 போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே. 10
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:37 am

ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி

(வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

202 வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய்.
1

203 வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ. வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்துக்
காகுத்தநம்பீ. வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்.
அஞ்சனவண்ணா. அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே.
2

204 திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன்
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான் வழக்கோ? அசோதாய்.
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே.
3

205 கொண்டல்வண்ணா. இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய். இங்கேபோதராயே
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா. இங்கேபோதராயே
உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான்கற்றகல்விதானே.
4

206 பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய்.
5

207 போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயா.
குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா.
வேதப்பொருளே. என்வேங்கடவா.
வித்தகனே. இங்கேபோதராயே.
6

208 செந்நெலரிசிசிறுபருப்புச்
செய்த அக்காரம்நறுநெய்பாலால்
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்.
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே.
7

209 கேசவனே. இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா. இங்கேபோதராயே.
8

210 கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப்
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்.
கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே.
9

211 சொல்லிலரசிப்படுதிநங்காய்.
சுழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே.
10

212 வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன்
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே.
11
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:37 am

பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து

(ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்)

கலித்தாழிசை

213 ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். 1

214 குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும். 2

215 தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். 3

216 தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும். 4

217 ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும். 5

218 தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். 6

219 மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும். 7

220 தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும். 8

221 வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும். 9

தரவு கொச்சகக்கலிப்பா

222 அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட
அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல்
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. 10
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:41 am

வணக்கம் வழிநடத்துனர்களே இந்த திரியை பற்றிய உங்கள் கருத்தை தாருங்கள்...,

இன்னும் நிறைய பாடல்கள் இருப்பதால் இதை தொடர்வதா இல்லை ஏதும் கருத்து சொல்ல விருப்புரிங்களா சொல்லுங்க நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் Empty Re: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum