தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..!

View previous topic View next topic Go down

கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..! Empty கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..!

Post by பூ.சசிகுமார் Sun Jan 06, 2013 8:52 pm

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறந்த அரியதொரு பரிசு கணினி. பெரும்பாலான வேலைகள் தற்பொழுது கணினியைப் பயன்படுத்தி செய்து முடிக்கிறோம். எப்படியெனில் ஒரு வாகனத்தை இயக்குவது முதல்... சாதாரணமான தட்டச்சு வேலைகள் வரை இன்று அனைத்தையுமே கணினியின் மூலமே செய்து முடித்துவிடுகிறோம்.

குறிப்பாக செயற்கை கோள்களை உருவாக்குவது முதல் அவற்றை செலுத்தி, வானில் நிலைநிறுத்தி இயக்குவதை வரை அனைத்துமே கணினியின் மூலம்தான் செய்யப்படுகிறது. மிகப் பெரிய நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களையும், கணக்குகளையும் கூட இது அநாயசமாக தீர்த்துவிடுகிறது. இத்தகைய பயன்மிக்க கணினியானது சில வேளைகளில் சிற்சில பிரச்னைகளையும் கொண்டுவரும். அவற்றை நாமே சரிசெய்து மீண்டும் கணினியை பழைய நிலைக்கு மீட்க முடியும். அதுபற்றியதொரு தொகுப்புதான் இந்த கட்டுரை. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் குறிப்புகளைக் கொண்டு சிறிய சிறிய பிரச்னைகளை நீங்களே தீர்த்துவிடலாம்.

கணினி தொடக்கம் அடங்கவில்லையா?

உங்கள் கணினியை தொடக்க முடியவில்லை எனில் அதற்கு முக்கியமான காரணம் மின் தொடர்பு அற்று இருப்பதுதான். முதலில் கணினிக்கு வரும் மின்சார வயர்களின் தொடர்ச்சி சரியான இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்யுங்கள். கணினியோடு இணைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்குகளையும் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு, ஏதேனும் பிளக்குகள்(plugs) சரியாக பொருந்தாமல் இருப்பின் அவற்றை நன்றாக அழுத்தி விடவும். உங்களுடைய UPS -ல் ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சோதிக்கவும். பிறகு UPS- சார்ஜ் ஆகியிருக்கிறதா என்பதை சோதித்துவிடுங்கள்.

கணனி தொடங்கிவிட்டது. ஆனால் வெற்றுத் திரை மட்டுமே தெரிகிறதென்றால்..

இதுவும் மற்றொரு வகையான மின்சாரப் பிரச்னையால் உருவாவதுதான். அதாவது கணினி திரைகள் சரியான போதுமான மின்சாரம் கிடைத்தால் மட்டுமே இயங்ககூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அச்சூழலில் உங்கள் கணினித் திரைக்கும் மின்சாரம் கிடைக்கவில்லை என்றாலும் கணினி திரையானது செயற்படாமல் போகும். எனவே கணினித் திரைக்கு செல்லும் மின்சாரத்தை சோதனை செய்யுங்கள்.

விண்டோஸ் தொடங்கவில்லை எனில்..

உங்களுடைய விண்டோஸ் இயங்குதளம் துவங்குவதில் பிரச்னை எனில் safe mode-ல் இயக்கிப் பார்க்கவும். safe mode - ல் இயங்குகிதெனில் System restore செய்து பின்பு இயக்கலாம். சேப் மோட் செல்ல உங்கள் கணினியை தொடக்கும்போது F8 அழுத்தி Safe Mode-ஐத் தேர்ந்தெடுக்கலாம்.
உங்களுடைய கணினி துவங்கவில்லை எனில் windows recovery disk மூலம் உங்கள் கணினியை மீண்டும் சரிசெய்து பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..! Empty Re: கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..!

Post by பூ.சசிகுமார் Sun Jan 06, 2013 8:52 pm

விண்டோஸ் தொடங்கிவிட்டது. ஆனால் மிக மெதுவாக இயங்குகிறது..

இந்த பிரச்னைகள் ஏற்பட பல காரணங்கள் உண்டு. பெரும்பாலும் கணினி வேகம் குறைவதற்கு வைரஸ், த்ரோஜன் போன்ற தீங்கிழைக்கும் நச்சு நிரல்வரிகளால் ஏற்படும். உங்கள் கணினியை Anti Virus கொண்டு Scan செய்து இவற்றை நீக்கிவிட்டலாம்.

பல Sart-up Program களும் கணினி மெதுவாக இயங்க காரணமாக அமையும். இதற்கு நீங்கள் Run விண்டோவில் msconfig கொடுத்து நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத புரோகிராம்களை (checking off)டிக் எடுத்துவிடலாம். OS பதியப்பட்ட டிரைவில் அதிகளவு இடம் இல்லாமையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். உங்கள் disk drive-ல் Properties சென்று நீங்கள் டிஸ்க் கிளீனப் செய்யலாம். தேவையில்லாத புரோகிராம் இருக்குமெனில் அதை நீக்கவிடலாம். இதன் மூலம் கணினி விரைவாக செயல்பட வாய்ப்பு ஏற்படும்.

மென்பொருள் இயங்கவில்லையா?

உங்களுடைய மென்பொருள் காலாவதி ஆகியிருக்கலாம். ஒருவேளை அப்படி ஆகவில்லையெனில் மென்பொருளில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்க கூடும். அம்மென்பொருளை ஒரு முறை நீக்கிவிட்டு(Uninstall), பிறகு புதியதாக அந்த மென்பொருளை பதிந்து(Reinstall) பயன்படுத்தலாம்.



புறசாதனங்கள் (External device) செயல்படவில்லையா?

சில நேரங்களில் கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும் அச்சு இயந்திரம் (Printer), வருடி (Scanner) புறச்சாதனங்கள் (External device) செயல்படாமல் போகும். இவ்வாறான சூழ்நிலையில் முதலில் அந்த சாதனங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் வயர்களை ஒருமுறை எடுத்துவிட்டும் மீண்டும் பொருத்தி செயல்பட வைக்கலாம். மின்னிணைப்பை அளிக்கும் கம்பிகளை (Electrical wire)ஒரு முறை சோதிப்பது அவசியம்.


Last edited by பூ.சசிகுமார் on Sun Jan 06, 2013 8:55 pm; edited 1 time in total
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..! Empty Re: கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..!

Post by பூ.சசிகுமார் Sun Jan 06, 2013 8:52 pm

நெட்வொர்க் பிரச்னையா?

நீங்கள் நெட்வொர்க் பிரச்னையை சந்தித்தீர்களென்றால் முதலில் உங்களுடைய ஹப்(HUB)ன் மின் இணைப்பையும், இணைத்திருக்கும் Adapter -ஐயும் சோதித்துப் பார்க்கவும். அவைகள் சரியாக இயங்கினால் உங்கள் ஐ.பி. அட்ரசை நீங்கள் உள்ளிட்டுப் பாருங்கள்.. இந்த இரண்டும் சரியாக இருந்தால் நிச்சயம் உங்கள் PCI ETHERNET card-ல் பிரச்னை இருக்கும். அவ்வாறான சூழலில் புதிய ஈதர்நெட் கார்ட் பயன்படுத்துவது அவசியம்.

இணைய இணைப்பில் பிரச்னையா?

முதலில் உங்களுடைய கணினியுடன் உங்களுடைய இணைய இணைப்பு வழங்கும் மோடம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கவும். சரியாக இருந்ததெனில் அடுத்து அதற்கு சரியான மின்னிணைப்பு உள்ளதா என்பதை சோதிக்கவும். சில நேரங்களில் இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் ஏற்படும் பிரச்னையும் காரணமாக இருக்கலாம். அதனால் அவர்களைத் தொடர்புகொண்டு, ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணலாம். சில நேரங்களில் பல்வேறு கணினிகள் ஒரே இணைய இணைப்பில் இணைந்திருக்கும்பொழுது IP conflict ஏற்பட்டு இணைய இணைப்பு தொடர்பு அறுந்து போகலாம். இந்த சூழல் ஏற்படும்பொழுது கணினியிலேயே ஒரு குறுஞ்செய்தி தோன்றும். அப்பொழுது கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை அகற்றி விட்டும் மீண்டும் இணைப்பதன் மூலம் இணைய இணைப்பை பெற முடியும்.

நன்றி - தங்கம்பழனி.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..! Empty Re: கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..!

Post by mohaideen Mon Jan 07, 2013 9:13 am

அவசியமான தகவல்கள்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..! Empty Re: கணினியில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum