தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜனாதிபதி, முதல்வர் பார்வையிட்ட இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு

View previous topic View next topic Go down

ஜனாதிபதி, முதல்வர் பார்வையிட்ட இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு  Empty ஜனாதிபதி, முதல்வர் பார்வையிட்ட இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு

Post by Guest Thu Jun 24, 2010 11:52 am

ஜனாதிபதி, முதல்வர் பார்வையிட்ட இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு
ஜூன் 23,2010,20:30
கருத்துகள் (24) ஜனாதிபதி, முதல்வர் பார்வையிட்ட இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு  Comment







Share



(function() {
var s = document.createElement('script'), s1 = document.getElementsByTagName('script')[0];
s.type = 'text/javascript';
s.async = true;
s.src = 'http://widgets.digg.com/buttons.js';
s1.parentNode.insertBefore(s, s1);
})();

1diggdigg


ஜனாதிபதி, முதல்வர் பார்வையிட்ட இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு  Large_25024


கோவை : தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் வீரத்தை விளக்கும்" இனியவை நாற்பது' அலங்கார வாகன அணிவகுப்பை ஜனாதிபதி, முதல்வர் ஆகியோர் கண்டு ரசித்தனர்.
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு இன்று காலை துவங்கியது. மாலையில், தமிழர்களின் பழங்கால வாழ்க்கை முறை, கலை,பண்பாட்டை நினைவூட்டும் "இனியவை நாற்பது' அலங்கார வாகன அணிவகுப்பு அவினாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பில் மாலை 3.50 மணிக்கு துவங்கியது. வாகன ஊர்வலத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார். போலீஸ் டி.ஜி.பி.,லத்திகாசரண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,ராதாகிருஷ்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, ஐ.ஜி.,சிவனாண்டி ஆகியோர் தலைமையில் போலீஸ் அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட போலீசார் முன் செல்ல, மங்கள இசையுடன் 40 அலங்கார வாகன அணிவகுப்பு புறப்பட்டது.அலங்கார வாகனங்களுக்கு இடையே கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் தமிழர்களில் வீர விளையாட்டான சிலம்பாட்டம், வாள் வீச்சுடன் ஊர்வலம் நகர்ந்தது.
அணிவகுப்பை, அவினாசி ரோட்டின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று ஆர்வமாக கண்டு வியந்தனர். லட்சுமி மில் சந்திப்பில் 3.50க்கு துவங்கிய ஊர்வலம் பிளமேடு சென்றடைந்தது. இடையிடையே நெருக்கியடித்த கூட்டத்தை போலீஸ் அதிகாரிகள் சரி செய்தனர். மாலை 5.45 மணிக்கு பீளமேடு, வரதராஜாமில் பகுதிக்கு வாகன அணிவகுப்பு வந்தடைந்தது. அங்கு அமைக்கப்பட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூர மேடையில் இருந்து, அலங்கார வாகன அணிவகுப்பையும், கலைஞர்களின் நடன நிகழ்ச்சியையும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய,மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். ஊர்வலப் பாதை பாதுகாப்பு பணியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 ஆயிரம் போலீசாரில் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கட்டுக்கோப்பான போலீஸ் பாதுகாப்பு இருந்ததும், அவினாசி ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், ஊர்வலப் பாதைக்குள் பொதுமக்களின் ஊடுருவல் ஏதும் நிகழவில்லை ஊர்வலம் இனிதாக நிறைவடைந்தது.
அணிவகுத்த அலங்கார வாகனங்கள்;
1. மங்கள இசை ஊர்தி: இசைக்கலைஞர்கள் மங்கள இசை முழங்கி வரு வருகின்றனர்.
2. மலைக்கு எல்லோரும் எல்லாமும் சமம்: குறிஞ்சி நில காட்சி.
3 . காதல் உணர்வு பறவைக்கும் உண்டு: முல்லை நில காதல் காட்சி.
4. ஜாதி வேற்றுமையில் குடும்பம் காக்கும் ஒற்றுமை: மருதம் நிலக்காட்சி.
5. வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்: நெய்தல் நில காட்சி.
6. வேட்டுவர் பாணர்க்கு விருந்தோம்பல்: பாலை நில காட்சி.
7. சண்டைக் கலைஞர்கள்: பண்டை கால தமிழர்களின் வீரத்தை எடுத்துரைக்கும் சண்டைக் காட்சி.
8. புறநானூற்றுத்தாய்: போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் மகனின் நெஞ்சில் அம்பு பாய்ந்திருப்பதை கண்டு ஆனந்த கண்ணீர் விடும் தாய்.
9. மறக்குடியே தமிழ்க்குடி: "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி' என்ற புறப்பொருள் வெண்பா காட்சி.
10. தமிழகக் கலை வளர்ச்சி: தமிழக கட்டட, சிற்பக்கலைகளை பறைசாற்றும் காட்சி.
11. புதியதோர் உலகம் செய்வோம்: நவீன விஞ்ஞான வளர்ச்சியை காட்டும் தமிழ் அறிவியல் காட்சி.
12. கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார்: இவர்களின் நட்பை விளக்கும் காட்சி.
13. மனுநீதி சோழன்: கன்று குட்டிக்காக நீதி கேட்கும் பசு, கன்றின் உயிருக்கு ஈடாக தன் மகனை தேர் சக்கரத்துக்கு பலியிட்ட மனுநீதி சோழனின் நீதி தவறாத காட்சி.
14. மயிலுக்கு போர்வை வழங்கி பேகன்: குளிரில் நடுங்கும் மயிலுக்கு பட்டு அங்கவஸ்திரம் கொடுத்த மன்னன் பேகனின் வள்ளல் காட்சி.
15. கவரி வீசிய காவலன்: புலவர் மோசி கீரணாருக்கு மன்னன் கவரி வீசும் வரலாற்றுக் காட்சி.
16. முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி: முல்லைக்கொடிக்கு படர தேர் கொடுத்த வள்ளல் பாரியின் கொடை சிறப்பை விளக்கும் காட்சி.
17. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான்: நீண்ட ஆயுள் தரும் கருநெல்லிக்கனியை, அவ்வைக்கு கொடுத்து தமிழ் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை செய்த அதியமானின் அற்புத காட்சி.
18. பொற்கை பாண்டியன்: தவறுதலாக, பெண்ணின் மானத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, தன் கையையே வெட்டி தண்டனை கொடுத்த பாண்டிய மன்னனின் காட்சி.
19. மிருகங்கள் நடை: குதிரை, சிங்கம், புலி, யானை, சிறுத்தை சிற்பங்கள் அடங்கிய காட்சி.
20. சிலம்பு வஞ்சினமாலை: தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மதுரையை எரித்த கண்ணகியின் ஆவேசக்காட்சி.
21. உணவளித்தலின் உயர்வு: அட்சய பாத்திரம் மூலம், பசியென்று வந்தோருக்கெல்லாம், மணிமேகலை உணவளித்த காட்சி.
22. போர்க்கோலத்தில் வேலுநாச்சியார்: வெள்ளையரை எதிர்த்து, வீரமங்கை வேலுநாச்சியார், வாளேந்தி போருக்கு செல்லும் காட்சி.
23. போரில் பெண்களின் பங்களிப்பு: போரில் காயம்பட்ட வீரர்களுக்கு பெண்கள் பணிவிடை செய்யும் காட்சி.
24. மரம் உடன்பிறந்தவளாகிறது: மரத்துக்கும் உயிர் உள்ளதை விளக்கும் பசுமை நிறந்த இலக்கிய காட்சி.
25. ஜாதி, மத பேதமற்ற காதல் காட்சி: காதலுக்கு ஜாதி, மத பேதமில்லை என்பதை விளக்கும் காட்சி.
26. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்: உலகம் உழவனின் விவசாயத்தை சார்ந்தே உள்ளது என்பதை உணர்த்தும் காட்சி.
27. திருக்குற்றால குறவஞ்சி: குற்றால மலையின் பெருமை, சிறப்புகளை விளக்கும் காட்சி.
28. ஜாதி, மத வேறுபாடற்ற தமிழ் மன்னனின் புரட்சி: இந்திய சுதந்திரத்துக்காக போராடிய மன்னர்களின் சிற்பங்கள்.
29. கூத்தர், பாணர், சான்றோருடன் இருக்கும் மன்னன்: தமிழ் மன்னர்களின் ஆட்சியில் கூத்தர்கள், பாணர்கள் மற்றும் சான்றோர்களின் பங்களிப்பை விளக்கும் காட்சி.
30. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: சிற்ப தொழிலாளி தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் காட்சி.
31. வண்ணங்கள் வேறுபட்டாலும், மானுடர் ஒன்றுதான்: நிறத்தால் வேறுபட்டாலும், மனிதர்கள் வேறுபடுவதில்லை என்பதை விளக்கும் காட்சி.
32. கிராமிய நடனம்: இந்த ஊர்தியில் நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வலம் வருகின்றனர்.
33. கிராமிய மனம்: காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் குடிசையும், உழவனும் உள்ள கிராமியக்காட்சி.
34. சங்கே முழங்கு: தமிழ் பெருமையை பறைசாற்றும் காட்சி அமைப்புகள்.
35. நடனக் கலைஞர்கள்: இதில், சினிமா நடனக்கலைஞர்கள் நடனமாடி வருகின்றனர்.
36. காக்கை குருவி எங்கள் ஜாதி: மகாகவி பாரதியை காக்கை, குருவிகள் சுற்றி நிற்கும் காட்சி.
37. பகிர்ந்து உண்: பகிர்ந்து உண்டு வாழும் தத்துவம் அடங்கிய காட்சி.
38. காலத்தை வென்று நிற்கும் வரலாற்று சின்னம்: இதில், தஞ்சை பெரியகோவிலும், திருவள்ளுவர் கோட்ட தேர்வடிவமும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் இறுதியாக வந்த இரு ஊர்திகளில் இருந்து செலுத்தப்பட்ட லேசர் ஒளிக்கற்றைகள் வானத்தில் அழகிய காட்சிகளை வடிவமைத்தபடி வந்தன.
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum