தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சொன்னது யார்?விடை

View previous topic View next topic Go down

சொன்னது யார்?விடை Empty சொன்னது யார்?விடை

Post by Guest Thu Jun 24, 2010 3:23 pm

  • எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திடமுடியும், உண்மையைத்தவிர.
    விடை:குஷ்வந்த் சிங்.

  • படிப்பில் பிரியமில்லா அரசனாக இருப்பதைவிட ஏராள நூல்களைக் கற்ற ஏழையாக இருப்பது நல்லது.
    விடை:மெக்காலே.

  • நமக்கு தெரிந்தது எது? தெரியாதது எது? -என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.
    விடை:கன்பூசியஸ்

  • ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள்.
    விடை:ராபர்ட் கோலியர்.

  • வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்விப்பதில்தான் உள்ளது.
    விடை:மெஹர்பாபா.

  • உங்கள் எதிரிகளை கவனியுங்கள்,அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்.
    விடை:பெனிலின்.

  • மனம் ஒரு நல்ல வேலைக்காரன்,ஆனால் மோசமான எஜமான்.
    விடை:சாக்ரட்டீஸ்.

  • ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் கௌரவிக்கப்படும்.
    விடை:யாரோ.

  • ஒருமுறை அறிவாளியுடன் பேசுவது,ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தரும்.
    விடை:யாரோ.

  • உங்களுக்கு அவசியமில்லாததை நீங்கள் வாங்கினால் சீக்கிரமே உங்களுக்கு அவசியமானவற்றை விற்க நேரிடும்.
    விடை:ரிச்சர்ட் சாண்டர்ஸ்.

  • துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறொன்றும் போதிக்கமுடியாது.
    விடை:விவேகானந்தர்.

  • இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.
    விடை:கிருபானந்த வாரியார்.

  • ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்று போய்விடுகிறது.
    விடை:நெப்போலியன்

  • மௌனமாக இருப்பது கோழைத்தனம் என்று நினைத்துவிடக் கூடாது.
    விடை:மொரார்ஜி தேசாய்

  • எதற்கும் பிறரை சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள் கூட விரும்புவதில்லை.
    விடை:சுகி செல்வம்

  • மாற்றம் என்பது மானிடத் தத்துவம்,மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்
    விடை:கண்ணதாசன்

  • ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.
    விடை:லியோ டால்ஸ்டாய்

  • கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்.
    விடை:ராபர்ட் பிராஸ்ட்

  • வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்.
    விடை:மாரியோ போஜியோ

  • துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான்.
    விடை:ஹென்றி லீவ்ஸ்

  • கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்.
    விடை:ராபர்ட் பிராஸ்ட்

  • ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.
    விடை:லியோ டால்ஸ்டாய்

  • நாளை உலகை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு; உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு.
    விடை:கவிஞர் கண்ணதாசன்

  • மனிதன், கோபம் வரும்போது தன்னிலை மறந்துவிடுகிறான். அந்த நேரத்தில் "நான் இப்போது கோபமாக இருக்கின்றேன்" என்று மனதில் ஒரு முறை சொன்னாலே அதன் வேகம் பாதியாக குறைந்து விடும்
    விடை:ஞானிகள்

  • உணவும் உடையும், உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.
    விடை:இயேசுநாதர்

  • ஓர் இலட்சியம் உங்களை ஆட்கொள்ளும்போது ஒரு மகத்தான திட்டத்தில் நீங்கள் ஈடுபடும்போது உங்கள் எண்ணங்களின் குறுகிய எல்லைகள் உடைகின்றன
    விடை:பதஞ்சலி முனிவர்

  • மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
    விடை:ஹெலன் கெல்லர்

  • பொறுமைக்கு என்றும் அழிவில்லை. பொறாமை குணத்தை விட்டொழி
    விடை:அன்னைதெரசா

  • மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது
    விடை:அரிஸ்டாட்டில்

  • நான் என்ற அகந்தையை விடு. நான் எல்லாம் தெரிந்தவன் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பிடாதே. அந்த மமதை உன்னை அளித்து விடும்.
    விடை:அன்னைதெரசா

  • செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை
    விடை:பெஞ்சமின் டிஸ்ரேலி

  • நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன் வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை, இருப்பினும் ஒன்றே.
    விடை:அணி பிரான்க்

  • மகிழ்ச்சி: இதை நாம் அபூர்வமாக உணர்கிறோம். நான் அதை விலைக்கு வங்குவேன், யாசிப்பேன், திருடுவேன்,இரத்தம் சொட்டும் நாணயங்களால் விலை கொடுப்பேன் இந்த எல்லையற்ற நன்மைக்காக
    விடை:அமி லோவெல்

  • நமது மனோபலத்தின் பரிபூரண உபயோகிப்பும் நாம் வாழும் உலகைப் பரிபூரணமாய் உணர்வதும்உண்மையிலேயே திருப்திதரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன.
    விடை:பெர்ற்றேந்து ரஸ்ஸல்

  • செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத் தேவைகள்
    விடை:அல்லன் கே .சள்மேர்ஸ்

  • மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ வெற்றியடைவாய்
    விடை:ஆல்பர்ட் ச்வெஇத்ழெர்

  • விழித்தெழுங்கள். உன்னிப்பாகப் பாடுபடுங்கள். நேர்மையான பாதையில் செல்பவனுக்கு இந்த உலகத்திலும் அதற்கு அப்பாலும் மகிழ்ச்சி ஏற்படும்.
    விடை:புத்தர்

  • தெய்வ நம்பிக்கை என்பது ஒருபுறம் இருந்தால்கூட உங்களிடத்தே உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு எதிலும் வெற்றி கிடைப்பது அரிது
    விடை:விவேகானந்தர்

  • நிரந்தரமான நன்மையைக் கைவிட்டுத் தற்காலிக நன்மைகளை நாடுவது தலை சிறந்த முட்டாள்தனம்.
    விடை:போவீ.

  • எதிர்காலம் குறித்த கனவு, அதை அடைவதற்கான உழைப்பு இரண்டும் சேர்ந்தால் அதுதான் வெற்றிக் கூட்டணி
    விடை:வில்லியம் லாங்க் குட்.

  • முன்னேற்றத்தை நோக்கி அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு அடி எடுத்து வையுங்கள்.
    விடை:நெப்போலியன் ஹில்.

  • நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம். நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்.
    விடை:அன்னை தெரசா

  • பின்னோக்கிப் பார்க்காதே.எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ, அதையே பார். நீ முன்னேறுவது உறுதி
    விடை: விவேகானந்தர்

  • எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக் கொள். தன்மானத்தை என்றும் விடாதே
    விடை:அன்னைதெரசா

  • நம்மை வெல்ல யாரும் இங்கு பிறக்கவில்லை என்பது பொய். மற்றவரை வெல்ல நாம் இங்கு பிறந்திருக்கிறோம் என்பதே உண்மை!
    விடை:ஃபாயிஷாகாதர்

  • புத்தகத்தில் உலகத்தைப் படிப்பது அறிவை வளர்க்கும். உலகத்தையே புத்தகமாகப் படிப்பது அனுபவத்தை வளர்க்கும்.
    விடை:கலைஞர். மு.கருணாநிதி

  • தோட்டத்து பூக்களைபோல் புன்னகை வீசிடுங்கள், வாட்டத்தை போக்குகின்ற வார்த்தையை பேசிடுங்கள்
    விடை:கவிஞர் வைரமுத்து

  • உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது.
    விடை:புத்தர்

  • குரு மொழி கேளார் நற்கதி பெறார்
    விடை:கீதை

  • தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!
    விடை:ஃபிடல் காஸ்ட்ரோ

  • உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!
    விடை:அப்துல்கலாம்

  • தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட, சரியான பாதையில் மெதுவாகச் செல்.
    விடை:புத்தர்

  • நண்பன் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணாதே. அவன் சிறந்தவனாக இருக்க நீ உதவிகரமாக இரு!
    விடை:தெரசா

  • கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார்; காணாமல் போய்விடும்!
    விடை:அப்துல்கலாம்

  • உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
    விடை:சுவாமி விவேகானந்தர்

  • இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
    விடை:ஆலன் ஸ்டிரைக்

  • மற்றவர்களின் குறைகளைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காதே. அவர்களின் நல்ல குணங்கள் உனக்கு தெரியாமலே போய் விடும்.
    விடை:அன்னைதெரசா

  • நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. என்வே, உலகம் உங்களை மதிக்கும் விதமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள்...
    விடை:ஃபாயிஷாகாதர்

  • சோர்ந்து விடாதீர்கள்.வெற்றிக் காலத்திற்கு இன்னும் சில மைல்களே உள்ளன.நம்பிக்கையுடன் முன்னேறி செல்லுங்கள்.வெற்றி நிச்சயம்.
    விடை:ரூதர்போர்ட்.

  • தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.
    விடை:சாக்ரடீஸ்.

  • உறுதியான மனம் படைத்தவனே உன்னதமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அமைத்துக் கொள்கிறார்.
    விடை:நார்மன் வின்சென்ட் பீல்.

  • மிகப்பெரிய சந்தர்ப்பம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கிடைக்கும்;அதைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி காண வேண்டும்.
    விடை:மெகல்லன்.

  • நாம் அறிவை விலை கொடுத்து வாங்கி விடலாம்.ஆனால் உணர்ச்சி,அன்பு இவை என்றும் விற்பனைக்கு வருவதில்லை.
    விடை:லவல்.

  • உண்மை ஊடுருவும் சூரிய ஒளி போன்றது.அதை யாராலும் மூடி மறைக்க முடியாது.
    விடை:மில்டன்.

  • கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்;ஆனால் அவர் கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள்.
    விடை:நார்மன் வின்சென்ட் பீல்.

  • உண்மைக்கு பகை, உள்ளத்தில் தோன்றும் பயம்.
    விடை:ராஜாஜி.

  • நம்பிக்கை எனும் கண்கொண்டு பார்க்க வேண்டுமானால், பகுத்தறிவுக் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்.
    விடை:ப்ராங்க்ளின்.

  • பொய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சம்;வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மை.
    விடை:நேரு.

  • செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்;செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
    விடை:பெர்னாட்ஷா.

  • ஒரு மனிதனுடைய லட்சியம் என்னவென்று அறிந்து கொண்டால் போதும்.அதைக்கொண்டே அவனை அறிந்து கொள்ளலாம்.
    விடை:ஹோம்ஸ்.

  • எவ்வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனோ,அவனே அறிவாளி.
    விடை:விவேகானந்தர்.

  • எதிலும் நன்றோ, தீதோ என்பது கிடையாது.நம் எண்ணமே அவை அவ்விதம் தோற்றமளிக்கச் செய்கிறது.
    விடை:ஷேக்ஸ்பியர்.

  • உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள்:அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.
    விடை:கவி.தாம்சன்.

  • பல நன்மைகள் வாய்ந்த நண்பர்களின் தொடர்பை விட,தேர்ந்தெடுத்த சில புத்தகங்களின் உறவு நமக்கு அதிக நன்மையளிக்கும்.
    விடை:சர்.கோல்டன்

  • நாம் விரும்பும் பொருள் நம்மிடம் இல்லாத போது,நம்மிடம் இருக்கும் பொருளை நாம் விரும்ப வேண்டும்.
    விடை:புஸ்ஸீரபுடின்.

  • வாழ்க்கையின் கடந்த காலம் சென்றுவிட்டது.வருங்காலம் சந்தேகம் நிறைந்தது.எனவே,இருக்கும் காலத்திலேயே செயலாற்றிக்கோள்.
    விடை:ஹஸ்ரத் அலி.

  • ஒரு போதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன்.
    விடை:டால்ஸ்டாய்.

  • பிறரது குற்றங்களைப் பற்றி ஒரு போதும் பேசாதே;அதனால்,உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை.
    விடை:சுவாமி விவேகானந்தர்.

  • சாகசச் செயல்களின் நறுமணம் தான் புகழ்.
    விடை:சாக்ரடீஸ்.

  • நல்ல செயல் எப்போதும் உலகில் தனக்கு ஓர் இடம் உண்டாக்கிக் கொள்ளும்.
    விடை:எமர்சன்.

  • பய உணர்ச்சி ஒன்றுதான் மற்ற எல்லா விபத்துக்களையும் விட அதிகமான தொல்லைப்படுத்துகிறது.
    விடை:மாண்டெயின்.

  • பேராசை கொண்டவனிடத்தில் திடமான நம்பிக்கை இருப்பதில்லை.
    விடை:சாணக்கியன்.

  • அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவரவர் கையிலேயே உள்ளது.
    விடை:பேக்கன்.

  • கல்லாமையே எல்லா துன்பங்களுக்கும் ஆணிவேர்.
    விடை:கார்லைல்.

  • மனிதனை எது அடிமையக்குகிறதோ,அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது.
    விடை:போப்.

  • அன்பு அதர்மத்தைக் கூட அடிபணிய வைத்துவிடும்.
    விடை:நெப்போலியன்.

  • நன்றாகவும் , கவனமாகவும் செய்யப்பெற்ற காரியங்களைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை.
    விடை:ஷேக்ஸ்பியர்.

  • கல்மனம் படைத்த நண்பர்களை விட கொலைகாரன் ஒன்றும் கொடியவனல்ல.
    விடை:விவேகானந்தர்

  • பெற்றவளைக் காட்டிலும் சிறந்தவள் இல்லை.
    விடை:இன்கர்சால்.

  • சத்தியம் எப்போதும் தனியாகச் சென்று விடும்.பொய்க்குத்தான் துணை வேண்டும்.
    விடை:காந்திஜி.

  • தன்மானம்,தன்னிறைவு,தன்னடக்கம் ஆகியவை வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலைத் தரும்.
    விடை:டென்னிசன்.

  • கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார் ,காணாமல் போய் விடும்.
    விடை:A.P.J.அப்துல் கலாம்.

  • இறைவனின் அன்புக்கு இணையானது தாயன்பு.
    விடை:சிரில் கெனானோல்.

  • மரியாதையை விதைப்பவன் நட்பை அறுவடை செய்கிறான்.
    விடை:ஏசு கிறிஸ்து.

  • தாயை வணங்குபவனுக்கு தெய்வம் வழிகாட்டும்.
    விடை:ராமலிங்க பிள்ளை.

  • வீரனாய் இருப்பதை விட மனிதனாய் இருக்க முயற்சி செய்.
    விடை:கதே

  • உண்மையை நேசி , ஆனால் பிழையை மன்னித்துவிடு.
    விடை:வால்டேர்.

  • உண்மை ஒரு கசப்பான மருந்து ; ஆனால் அதன் விளைவு இனிமையானது.
    விடை:அலெக்சாண்டர்

  • சிறு துன்பங்கள் வாய் திறந்து பேசும் , ஆனால் பெருந்துன்பங்கள் ஊமையாக இருக்கும்.
    விடை:சி.சிப்பர்

  • தலைசிறந்த வாழ்க்கை , உயர்ந்த லட்சியங்களை கொண்டதாய் அமையும்.
    விடை:பைரன்

  • இன்பமும் , துன்பமும் வரும் போகும்.ஆனால் வந்தால் போகாதது புகழும் பழியும்.
    விடை:காளிதாசர்.

  • உண்மையான பெருந்தன்மையுள்ள பெண்ணிடம் அச்சம் என்பதில்லை.
    விடை:எடில்லி

  • எல்லா மனிதனின் இதயமும் ஒரே மாதிரி ;ஆனால் , எண்ணங்கள் பல மாதிரி.
    விடை:டால்ஸ்டாய்

  • பிறர் உன்னை நேசிக்க விரும்பினால், முதலில் நீ உன்னை நேசிக்கப் பழகிக் கொள்.
    விடை:சாக்ரடீஸ்

  • தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை.
    விடை:அவ்வையார்

  • உலகில் புனிதத்திலும் புனிதமானவள் தாய்.
    விடை:கோல்ரிட்ஜ்

  • உற்சாகமான உழைப்பு இல்லாது உயர் வெற்றி எதையும் சாதிக்க முடியாது.
    விடை:எமர்சன்

  • செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு ;எல்லா விஷயங்களையும் இயக்குவதும் அதுவே.
    விடை:டேனியல் வெப்ஸ்டர்

  • கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை.
    விடை:இ.டர்னர்

  • உழைப்பில்லாமல் எதுவும் செழிப்பது இல்லை.
    விடை:ஷோபாகிளிஸ்

  • உன்னை அதிகமாக சந்தோஷப்பதுத்தும் இதயத்திற்கு உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு.
    விடை:வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்

  • உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்காது.
    விடை:ஜேம்ஸ் ஆலன்

  • செயல்களை கடினமாக்குவது சோம்பல் ,அதை எளிதாக்குவது உழைப்பு.
    விடை:பிராங்க்ளின்

  • ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் , அவனுடைய பத்து விரல்கள்.
    விடை:ராபர்ட் கோலியர்

  • தேவைகளை குறைத்து, உழைத்து வாழ்வதே உயரிய நாகரிகம்.
    விடை:காந்திஜி.

  • அளவற்ற உழைப்பைதான் மேன்மை என்கிறோம்.
    விடை:லாங்பெல்லோ

  • கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்கு சமம்.
    விடை:லால் பகதூர் சாஸ்திரி

  • கற்பனை என்பது அறிவை விட சிறந்தது.
    விடை:ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

  • "நான் மழையில் நனைவதை விரும்புகிறேன் . நான் அழுவதை யாருக்கும் தெரியாது என்பதால்"
    விடை:சார்லி சாப்ளின்

  • "நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்"
    விடை:A.P.J.அப்துல் கலாம்

  • Anonymous
    Guest
    Guest


    Back to top Go down

    சொன்னது யார்?விடை Empty Re: சொன்னது யார்?விடை

    Post by Rikaz (Amarkkalam) Fri Jun 25, 2010 6:31 pm

    அடேங்கப்பா இத படிச்சு முடிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்கிருச்சு நண்பா நல்ல விசயம் சொல்லிருக்கீங்க
    Rikaz (Amarkkalam)
    Rikaz (Amarkkalam)
    தள நிர்வாகி
    தள நிர்வாகி

    பதிவுகள் : 108

    Back to top Go down

    சொன்னது யார்?விடை Empty Re: சொன்னது யார்?விடை

    Post by aarul Fri Jun 25, 2010 8:44 pm

    [You must be registered and logged in to see this image.]
    chellam wrote:அடேங்கப்பா இத படிச்சு முடிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்கிருச்சு நண்பா நல்ல விசயம் சொல்லிருக்கீங்க
    aarul
    aarul
    புதியவர்
    புதியவர்

    பதிவுகள் : 43

    http://usetamil.com

    Back to top Go down

    சொன்னது யார்?விடை Empty Re: சொன்னது யார்?விடை

    Post by Guest Sat Jun 26, 2010 9:22 am

    chellam wrote:அடேங்கப்பா இத படிச்சு முடிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்கிருச்சு நண்பா நல்ல விசயம் சொல்லிருக்கீங்க

    ரெம்ப நன்றி நண்பரே
    Anonymous
    Guest
    Guest


    Back to top Go down

    சொன்னது யார்?விடை Empty Re: சொன்னது யார்?விடை

    Post by Admin Sat Jun 26, 2010 6:51 pm

    ஷபா!!!
    Admin
    Admin
    வலை நடத்துனர்
    வலை நடத்துனர்

    பதிவுகள் : 1125

    https://amarkkalam.forumta.net

    Back to top Go down

    சொன்னது யார்?விடை Empty Re: சொன்னது யார்?விடை

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    View previous topic View next topic Back to top

    - Similar topics

    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum