Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சராசரி இந்தியனின் வருமானத்தில்
Page 1 of 1 • Share
சராசரி இந்தியனின் வருமானத்தில்
சராசரி இந்தியனின் வருமானத்தில் மாதந்தோறும் இதரச் செலவு என்று 5 விழுக்காடு கணக்கிடப்படுகிறது. நகர்ப்புற மக்களைப் பொறுத்தவரை, இந்த இதரச் செலவின் பெரும்பகுதி மருந்து மற்றும் மருத்துவச் செலவினங்களுக்குச் செல்வதாக கணக்கிடப்படுகிறது. கிராமப்புறங்களில் மருத்துவச் செலவு இதைவிட அதிகம்.
இதுவரை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும்தான் மருந்துகளின் விலை உயர்வு பற்றி மிக அதிகமாகக் கவலைப்பட்டு வந்தன. அதற்குக் காரணம், பெரிய பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்தில் அந்த நாடுகளின் மருந்துவத் துறை இருக்கிறது. அமெரிக்காவில், காப்பீட்டு நிறுவனங்கள் வலியுறுத்துவதால் மட்டுமே பொதுமருந்துகளை நோயாளிக்குத் தருகிறார்கள். இல்லையென்றால், பெயரிடப்பட்ட மருந்துகள் மட்டுமே விற்கிறார்கள்.
அது என்ன பொதுமருந்துகள், பெயரிடப்பட்ட மருந்துகள்? "பாரசிட்டமால்' என்பது பொது மருந்து. இந்தப் "பாரசிட்டமால்' என்கிற மருந்தை பன்னாட்டு நிறுவனம் தனது வியாபார இலச்சினையுடன், குறிப்பிட்ட வணிகப் பெயரில் (உதாரணம்-க்ரோசின்) விற்பனை செய்தால் அது பெயரிடப்பட்ட மருந்து. இந்தியாவில் பல சிறிய நிறுவனங்கள், முறையான அரசுக் கண்காணிப்புக்கும் சோதனைக்கும் உள்பட்டு, அடிப்படை மருந்துகளை வியாபாரப் பெயர் இல்லாமல் குறைந்த விலைக்கு விநியோகம் செய்கின்றன. வணிகப் பெயருடனும் இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரண்டின் விலையுமே, பன்னாட்டு நிறுவன தயாரிப்புகளுடன் ஒப்பிட்டால் மிகவும் மலிவானவை.
ஃபைசர் என்கிற பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனம் விற்பனை செய்யும் கொலஸ்ட்ரால் எதிர்ப்பு மருந்து "லிப்பிடர்'. அமெரிக்காவில் இதன் விலை
ஒரு கேப்சூல் மூன்று டாலர் (சுமார் 140 ரூபாய்). அதே மருந்தின் அடிப்படை மூலகங்களுடன், எந்தவித வியாபாரப் பெயரும் இல்லாமல் இந்தியாவில் பொதுமருந்தாக விற்கப்படும் அடோர்வாஸ்டாடின் கேல்சியம் விலை சுமார் ரூ.50. அதாவது அமெரிக்க மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு.
இப்படி குறைந்த விலைக்கு மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்கள், ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் பெயரிடப்படாத மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் மிக முக்கியமான நிறுவனங்கள் பலவும் 50 முதல் 70 விழுக்காடு வரை வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன என்றால், இதனை எப்படி பன்னாட்டு மருந்து நிறுவனங்களால் சகித்துக்கொள்ள முடியும்? "உலகமயம்' என்கிற கோஷத்தை அவர்கள் முன்வைப்பதே, தங்களது பொருளுக்கு உலகம் முழுதும் சந்தையைஏற்படுத்தத்தானே!
கடந்த இரண்டாண்டுகளாக, இந்தியாவில் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நல்ல நிறுவனங்களை விலைக்கு வாங்கி வருகின்றன பன்னாட்டு மருந்து நிறுவனங்கள். ரான்பாக்சி ஒரு மிகப்பெரிய இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம். கடந்த 2008-ல் இந்த நிறுவனத்தை டைட்சி சாங்க்யோ என்கிற ஜப்பானிய பன்னாட்டு மருந்து நிறுவனம், 460 கோடி டாலருக்கு (அதாவது ரூ. 20,700 கோடி) விலைக்கு வாங்கியது. இதேபோல, சாந்தா பயோடெக் நிறுவனத்தை சனோஃபி அவென்டிஸ் நிறுவனம் வாங்கியது. டாபர் ஃபார்மா நிறுவனம், ஃப்ரசினுஸ்கபி நிறுவனத்தால் வாங்கப்பட்டு விட்டது. அமெரிக்காவின் ஆபட் லாபரட்டரீஸ் நிறுவனத்தால், பிரமல் ஹெல்த் கேர் நிறுவனம் அண்மையில் 370 கோடி டாலருக்கு விலை பேசப்பட்டிருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் நமது இந்திய நிறுவனங்களை விலைபேசுவதை சட்டப்படி தடுக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், இதன் விளைவுகள் சராசரி இந்தியனைப் பாதிப்பது உறுதி என்கின்றபோது, அரசு தலையிடாமல் இருக்கலாமா? இதன் விளைவாக, மருந்து விலை வானுயரப் பறக்குமே, அப்போது ஏழைகள் மருந்து கிடைக்காமல் சாக வேண்டியதுதானா?
இந்த நிறுவனங்கள் அதிக விலைக்கு மருந்து மாத்திரைகளை வெளிச்சந்தையில் விற்றால் பாதிக்கப்போவது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்ல; மத்திய, மாநில அரசுகளும்தான்! ஏனென்றால், இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் மிகப்பெரிய அளவில் மருந்து, மாத்திரைகளை விநியோகிக்கும் திறனுள்ள நிறுவனங்களாக பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே உருவெடுக்கும். மருத்துவத்துறை அதிகாரிகளைக் கையில்போட்டுக்கொண்டு, நம் அரசு மருத்துவமனைகளுக்கே அதிக விலைக்குத்தான் இவர்கள் விற்பார்கள். இந்த வகையிலும் மக்கள் பணத்தை பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மறைமுகமாகச் சுரண்டியெடுத்துவிடும்.
அதுமட்டுமல்ல, தற்போது வளரும் நாடுகளுக்கு நம் இந்திய மருந்து நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துவரும் மருந்து, மாத்திரைகள், பேண்டேஜ் துணி போன்ற மருத்துவத் துணைப்பொருள்கள் யாவும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்தின் பிடிக்குப் போய்விடும். இந்திய மருந்து உற்பத்தித்தொழில் நசியும்.
இதற்கு மாற்று உண்டா? நிச்சயமாக இருக்கிறது. நமது மருந்து விலைக் கட்டுப்பாடுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து மருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தற்போது நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள, அதிகமாக உட்கொள்ளப்படும் 500-க்கும் மேற்பட்ட மருந்துகளில் 74 மட்டுமே விலைக் கட்டுப்பாட்டு சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியல் மாத்திரைகளைக்கூட தற்போது முழுமையான அளவு உற்பத்தி செய்து, இந்தியச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்களா என்றுகூட அரசு கண்காணிப்பதில்லை.
பிரதமரால் நியமிக்கப்பட்ட டாக்டர் பிரணாப் சென் குழுவின் பரிந்துரைப்படி, 354 மருந்துகளை தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் இணைத்து, அவற்றின் விலையை அரசே நிர்ணயித்து கட்டுப்படுத்தப்பட வேண்டும். 2006-ம் ஆண்டிலேயே ,தேசிய மருந்துக் கொள்கை ஒன்று முன்வைக்கப்பட்டு, 300 மருந்து, மாத்திரைகளை விலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தகைய கொள்கை முடிவு எடுக்கப்பட்டால், அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தியையே நிறுத்தி விடுவோம் என்று பன்னாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் அச்சுறுத்தியதால், அரசு அந்தக் கொள்கை முடிவை இன்றும் வெளியிடாமலும் செயல்படுத்தாமலும் இருக்கிறது.
இனியும் அரசு தாமதம் செய்தால் முதலுக்கே ஆபத்தாகி விடும். பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவை ஆட்டிப் படைக்கும் அபாயத்தில் அகப்பட்டுவிடக் கூடாது. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், ஏதாவது ஓர் இந்திய மருந்து நிறுவனம் கபளீகரம் செய்யப்படுகிறது, நினைவிருக்கட்டும்!

Guest- Guest
Similar topics
» திரு. ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் ஒரு இந்தியனின் கனவு மின் நூல்
» சராசரி இந்திய மனைவி
» மனிதர்களின் சராசரி தூக்கம்
» சராசரி இருப்புத் தொகை: எஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum