Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
Page 1 of 1 • Share
என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
கம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள். அதையும் விடுத்து இன்றைக்கு எந்தவித சத்துமே இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டு சத்துக்களற்ற மனிதர்களாக மாறிவருகின்றன.
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு காய்கறியும், முட்டையும் சமைத்து கொடுத்த காலம் போய், நூடுல்ஸ், பாஸ்தா, ப்ரட் டோஸ்ட் ஜாம் என டப்பாக்களில் அடைத்து அனுப்புகின்றனர் அன்னையர்.
இந்த உணவுகள் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடுகிறது என்னவோ உண்மைதான். ஆனால் அதனை சாப்பிடக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்கிவிடுகிறோம் என்பதே நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை.
குப்பையில் போடுங்கள்
ஒரு பாக்கெட் 10 ரூபாயில் தொடங்கி பாக்கெட் பாக்கெட்டாக வீட்டில் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் நூடுல்ஸை குப்பையில் போடும் உணவு என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.
ஆதாரத்தோடு நிரூபணம்
விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. இவர் ‘இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.
என்ன சத்துக்கள் இருக்கு?
இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது.
உடலுக்கு கெடுதல்தான் வரும்
குழந்தைகளை நூடுல்ஸ் சாப்பிட வைக்க கோடி கோடியாய் கொட்டி விளம்பரம் செய்கின்றன நிறுவனங்கள். ஆனால் எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல சத்துக்கள் அடங்கியதாக இல்லை. மாறாக குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் கெடுதல் ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது.
குறைவான சத்துக்கள்
குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம், புரதம், நார்ச்சத்து ஆகியவை நூடுல்ஸ்சில் மிக மிக குறைந்த அளவிற்கே உள்ளன.
அதிக உப்பு இருக்கு
ஆனால் எல்லா பிராண்ட் நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.
நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவுதான் இருக்கவேண்டும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறது.
அதிக கொழுப்பு இருக்கு
இந்த நூடுல்ஸ் உணவில் கொழுப்பும் மிகுதியாக உள்ளது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.
அலட்சியம் காட்டும் நிறுவனங்கள்
இந்த நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனவே தவிர வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளைந்த மண் விலை நிலமாக மாறிய காரணத்தால் குப்பைகளை கூட உணவுகளாக பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கின்றன நிறுவனங்கள் என்று ஆதங்கப்படுகின்றனர் ஆய்வாளர்கள்.
கடிதம் அனுப்பிய ஆய்வாளர்கள்
இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பியும் அதை அலட்சியம் செய்துவிட்டன அந்த நிறுவனங்கள். இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை.
விஷத்தை உணவாகக் கொடுக்கிறோம்
எந்தவித சத்துமே இல்லை என்று ஆய்வாளர்கள் கத்தி கதறினாலும் விளம்பரங்கள் மூலம் அவற்றை இருட்டடிப்பு செய்து விடுகின்றன நிறுவனங்கள். இதனால் குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர் வருங்கால இந்திய சமுதாயத்தினர்.
நிரந்தர நோயாளிகளாக...
மசாலா கலந்த இந்த நூடுல்ஸ் வெறும் குப்பைதான் என்பதை ஒவ்வொரு இந்தியத் தாயும் உணரவேண்டும். இல்லை எனில் நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக மாற நாமே காரணம் ஆகிவிடுவோம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதனால்தான் என்னோட குழந்தைகளுக்கு நான் நூடுல்ஸ் தர்றதில்லை. அதோட ருசியையும் பழக்கினதில்லை. உங்க வீட்ல எப்படி?
http://tamil.oneindia.in/art-culture/essays/2013/beware-instant-noodles-aren-t-healthy-170556.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
அதனால தான் நான் இந்த மாசம் இத வாங்கல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
இனி நானும் சாப்பிடமாட்டேன் ,யாருக்கும் வாங்கி தர மாட்டேன்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
நான் சொன்னது நூடுல்ச மட்டும்தான்!மகா பிரபு wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
மகா பிரபு wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்..
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
மகா பிரபு wrote:இனிமேல் நானும் சாப்ட மாட்டேன்..
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
நூடுல்ஸை குப்பையில் போடும் உணவு
நூடுல்ஸை குப்பையில் போடும் உணவு என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.
கம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள். அதையும் விடுத்து இன்றைக்கு எந்தவித சத்துமே இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டு சத்துக்களற்ற மனிதர்களாக மாறிவருகின்றன.
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு காய்கறியும், முட்டையும் சமைத்து கொடுத்த காலம் போய், நூடுல்ஸ், பாஸ்தா, ப்ரட் டோஸ்ட் ஜாம் என டப்பாக்களில் அடைத்து அனுப்புகின்றனர் அன்னையர்.
இந்த உணவுகள் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடுகிறது என்னவோ உண்மைதான். ஆனால் அதனை சாப்பிடக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்கிவிடுகிறோம் என்பதே நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை.
ஆதாரத்தோடு நிரூபணம்
விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. இவர் ‘இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.
என்ன சத்துக்கள் இருக்கு?
இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது.
உடலுக்கு கெடுதல்தான் வரும்
குழந்தைகளை நூடுல்ஸ் சாப்பிட வைக்க கோடி கோடியாய் கொட்டி விளம்பரம் செய்கின்றன நிறுவனங்கள். ஆனால் எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல சத்துக்கள் அடங்கியதாக இல்லை. மாறாக குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் கெடுதல் ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது.
குறைவான சத்துக்கள்
குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம், புரதம், நார்ச்சத்து ஆகியவை நூடுல்ஸ்சில் மிக மிக குறைந்த அளவிற்கே உள்ளன.
அதிக உப்பு இருக்கு
ஆனால் எல்லா பிராண்ட் நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவுதான் இருக்கவேண்டும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறது.
அதிக கொழுப்பு இருக்கு
இந்த நூடுல்ஸ் உணவில் கொழுப்பும் மிகுதியாக உள்ளது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.
அலட்சியம் காட்டும் நிறுவனங்கள்
இந்த நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனவே தவிர வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளைந்த மண் விலை நிலமாக மாறிய காரணத்தால் குப்பைகளை கூட உணவுகளாக பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கின்றன நிறுவனங்கள் என்று ஆதங்கப்படுகின்றனர் ஆய்வாளர்கள்.
கடிதம் அனுப்பிய ஆய்வாளர்கள்
இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பியும் அதை அலட்சியம் செய்துவிட்டன அந்த நிறுவனங்கள். இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை.
விஷத்தை உணவாகக் கொடுக்கிறோம்
எந்தவித சத்துமே இல்லை என்று ஆய்வாளர்கள் கத்தி கதறினாலும் விளம்பரங்கள் மூலம் அவற்றை இருட்டடிப்பு செய்து விடுகின்றன நிறுவனங்கள். இதனால் குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர் வருங்கால இந்திய சமுதாயத்தினர்.
நிரந்தர நோயாளிகளாக...
மசாலா கலந்த இந்த நூடுல்ஸ் வெறும் குப்பைதான் என்பதை ஒவ்வொரு இந்தியத் தாயும் உணரவேண்டும். இல்லை எனில் நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக மாற நாமே காரணம் ஆகிவிடுவோம் என்கின்றனர் நிபுணர்கள்.
நன்றி facebook
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
இந்தப் பதிவு இருக்கு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
சரி செய்ய பட்டதுரானுஜா wrote:இந்தப் பதிவு இருக்கு
தெரியபடுத்தியமைக்கு நன்றி
Re: என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
இதில் எதோ உள் குத்து இருப்பது போல் தெரிகிறதேமகா பிரபு wrote:நன்றி அட்மின்..
Re: என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?
தாய்மார்கள் அனைவர்க்கும் இதை தெரியபடுதணும்,
திருநாவுக்கரசர்- பண்பாளர்
- பதிவுகள் : 56
Similar topics
» நூடுல்ஸ்.. நூடுல்ஸ்.. குழந்தைகளுக்கு நல்லதல்லவாம் - ஆய்வு சொல்கிறது!
» நான் யார் தெரியுமா?
» நான் தவித்தேன் தெரியுமா ..???
» என்னோட பசு! - சிறுவர் கதை
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நான் யார் தெரியுமா?
» நான் தவித்தேன் தெரியுமா ..???
» என்னோட பசு! - சிறுவர் கதை
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum