Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெளுத்துகட்டு - காதலி கற்பித்த பாடம்!
Page 1 of 1 • Share
வெளுத்துகட்டு - காதலி கற்பித்த பாடம்!
Comments |
காதல் என்பது ஒரு இளைஞனை மிருகமாகவும் மாற்றும்; கடவுளாகவும் ஆக்கும் என்ற கருத்தை கருவாக கொண்ட கதை.
ஒரே கிராமத்தில் வசிக்கும் கதிரும், அருந்ததியும் சிறு வயதில் இருந்தே காதலிக்கிறார்கள். கதிர் படிப்பு ஏறாமல் இடையில் நிறுத்திவிட்டு அடிதடி என ஊதாரியாகிறார். இருந்தாலும் அருந்ததியை உயிருக்கு உயிராய் நேசிக்கிறான். அருந்ததியும் கதிரை உடல், பொருள், ஆவி என நேசிக்கிறார். "ஒரு வேளை கஞ்சி ஊத்த வக்கில்லாதவனையா கல்யாணம் பண்ணிக்கப்போற?" என்று காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் அருந்ததி பெற்றோர். உடனே ஆவேசமாகும் அருந்ததியோ, கதிரிடம் வெளியூர் போய் நிறைய பணம் சம்பாதித்து என் குடும்பத்துக்கு தகுதியான மருமகனாக வந்து என்னை கட்டிக்கொள் என்கிறார். காதலுக்காக சென்னை வரும் கதிர் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி பெரும் பணம் சம்பாதிக்கிறார். அருந்ததி ஆசைப்பட்ட மாதிரி மாறி ஊருக்கு செல்கிறார். ஆனால் அங்கு அருந்ததியின் நிலைமை வேறாக இருக்கிறது. அருந்ததி, கதிர் சேர்ந்தார்களா? என்பது இறுதிக்காட்சி.
வழக்கமான கதை, வித்தியாசமான அணுகுமுறை, திரைக்கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. பழைய படங்களின் நிழல்களில் புதிய சாயம்.
புதுமுகம் கதிர் நடிப்பில் யதார்த்தம். கொஞ்சம் பருத்திவீரனை நினைவுபடுத்தாமல் இருந்திருக்கலாம். நகரத்தில் டிபன் வியாபாரம் செய்யும் வண்டியை போலீசார் நொறுக்கி போட்டதும் அழுது புலம்பி இதயத்தை கனக்க வைக்கிறார். அருந்ததியும் நல்ல வரவு, கோடம்பாக்கத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. புதுமுகம் என்றாலும் நடிப்பில் முதிர்ச்சி. காதலி, விளையாட்டாக சொன்னதற்காக உயரமான அருவியில் இருந்து குதிப்பதும் அவரைக் காணாமல் அருந்ததி பதட்டத்துடன் தேடுவதும் அவன் வந்ததும் அவனை அடித்து, "என்னடா இப்படி பண்ணிட்ட" என்று கதறுவதுமான அழகான கிராமத்து காதல் அற்புதம். தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையிடம், "இதபாரு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உங்கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என் கதிர்கூட இருக்கிறதா நினைச்சுக்குவேன். பரவாயில்லையா?" என்று கேட்கும்போதும், "இது கதிரோட உடம்புடா. இதையா தொட்ட" என்று சொல்லி வில்லனை துரத்துவதும் சபாஷ்! அருக்காணி சரியான "அருவா"காணி தான்!
ஒரே பாட்டில் பணக்காரன் ஆகிவிடுவான் என்ற எதிர்பார்ப்பை திருப்பிப்போட்டது இயக்குனர் சேனாபதி மகனின் திறமைக்கு வெளிச்சம். பரணியின் பாடல்களில் மண்மனம். சிங்கம்பட்டி கிராமத்தை மனத்திரையில் ஒட்டவைத்த சுகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம். வழக்கமாக சட்டம், போலீஸ், நீதிபதி, வக்கீல் என்ற வட்டத்துக்குள் ஆக்ஷன் படம் தரும் எஸ்.ஏ.சந்திரசேகரன், புதியவர்களை வைத்து மண்சார்ந்த யதார்த்த படம் ஒன்றை தந்ததிருக்கிறார். நாயகன் + நாயகி + (கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்) + (வில்லன் + கற்பழிப்பு காட்சி) = எஸ்.ஏ.சி. தயாரிப்பு.
கோவில் கட்றது, சில 100 குடிசைகள் உள்ள சிங்கம்பட்டியில ஏசி உணவகம் நடத்துறது.... இதல்லாம் ஹீரோயிசத்தை காட்டுவதற்காக என்றாலும் சுத்தமா லாஜிக்கே இல்லை! சிறுவர்கள் காதல், கல்யாணம்... கத்திரி போட்டிருக்கலாம். வளரும் தலைமுறைகளின் சிந்தனைகள் சீரழியும் இந்த காலகட்டத்தில் இயக்குனர்கள் சற்று சிந்தித்து கதையமைத்தால் நலமாயிருக்கும். பள்ளிகளில் நடக்கும் பல கொடூரங்களுக்கு வித்திடுவதை தவிர்க்கலாம்! மற்றபடி அனைவரும் வெளுத்து கட்டியிருக்கிறார்கள்.
Guest- Guest
Re: வெளுத்துகட்டு - காதலி கற்பித்த பாடம்!
உண்மையில் நல்லப்படம் பாருங்கள் உஙகளுககும் பிடிக்கும் நம்ம தளத்திளே இருக்கு........
Similar topics
» என் காதலி
» நீதான் என் காதலி ...!!!
» நீ தான் என் காதலி ...!!!
» ஒருமுறையேனும் காதலி
» கள்வனின் காதலி - புதினம்
» நீதான் என் காதலி ...!!!
» நீ தான் என் காதலி ...!!!
» ஒருமுறையேனும் காதலி
» கள்வனின் காதலி - புதினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|