Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உணவே விஷம் ஆகலாமா?
Page 1 of 1 • Share
உணவே விஷம் ஆகலாமா?
உணவே விஷம் ஆகலாமா?
அவசரம் நம் வயிற்றை இறுக்கத் தொடங்கிவிட்டது. ஆம், ஓட்டமும் வேகமுமான நம் வாழ்க்கை கண்டதையும் அள்ளிப்போடும் குப்பையைப்போல் நம் வயிற்றை மாற்றிவிட்டது. சமைக்கவோ, சாப்பிடவோ நேரமின்றி, கடைகளில் விற்கும் பேக்டு உணவுகளை சாப்பிடுவது இப்போது சகஜமாகிவிட்டது. பேக்டு உணவுகளால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.
'ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் இவை பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் இவற்றைச் சுற்றிவைக்கப் பயன்படும் பாலிதீன் தாள்களால் ஏற்படும் தீய விளைவுகளைத் தெரிந்துகொள்வது அவசியம். முன்பு எல்லாம் வாழை இலைகளையும், செய்தித்தாள் பேப்பர்களையும் மட்டுமே உணவுகளைக் கட்டிக்கொடுப்பதற்குப் பயன்படுத்தினார்கள். பிறகு அலுமினியம் ஃபாயில் வந்தது. தற்போது கடினமான பிளாஸ்டிக் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. பாலிதீன், பாலிப்ரோபைலீன் (polypropylene)போன்றவை கொண்டு பிளாஸ்டிக் உருவாகிறது. இவை புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆற்றல் பெற்றவை என ஆய்வு குறிப்பிடுகிறது.
பிளாஸ்டிக்கில் 'பிஸ்பெனால்-ஏ’ (BISPHENOL-A) என்ற ஒரு வேதிப்பொருள் இருக்கிறது. ரெடிமேட் உணவுகளைச் சுற்றும் தாள்களில் இந்த நச்சு ஊடுருவி இருக்கும். இந்த நச்சுப்பொருட்கள் நமது உடலின் செல் அமைப்பையே மாற்றக்கூடிய ஆற்றல்கொண்டவை. ஹார்மோன்களின் சமநிலையையும் இவை பாதிக்கக்கூடும்'' என்று எச்சரிக்கையுடன் சொல்லும் கிருஷ்ணமூர்த்தி, பேக்டு உணவுப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கினார்.
''பொதுவாகவே, ரெடிமேட் உணவுகளில் ருசியைக் கூட்டுவதற்காக, மோனோ சோடியமும், உணவின் நிறத்துக்காக சில வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மிகச் சிறிய அளவில் நமது உடலுக்குள் நுழைந்தாலும் கெடுதல்தான். உணவுகளைப் பேக் செய்திருக்கும் அட்டையில் குறிப்பிட்டு இருப்பதைப்போல ஊட்டச் சத்துக்களும் அந்த உணவுகளில் இருக்குமா என்பதும் சந்தேகம். மேலும், இந்த உணவுகளைச் சூடாக சாப்பிட வேண்டும் என்பதற்காக, இவற்றை வீட்டில் திரும்பவும் சூடாக்குகின்றனர். இப்படிச் செய்வதால் மட்டும் அதில் இருக்கும் நஞ்சுப் பொருள் போய்விடாது.
இதேபோல உணவகங்களில் இருந்து காபி, சாம்பார், ரசம் போன்றவற்றையும் பிளாஸ்டிக் உறைகளில் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். உள்ளே இருக்கும் பண்டங்களின் சூட்டினால் பாலிதீன் உறைகளில் இருக்கும் வேதிப் பொருட்கள் கரைந்து, அவற்றைச் சாப்பிடும்போது நமது உடலுக்குள் நேரடியாகக் கலக்கின்றன.
இந்த கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளும்போது நம் உடலில் இருக்கும் செல்கள், ஹார்மோன்கள் பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்களது மூளையின் செயல்பாடு மந்தமாகும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை, பிறக்கும் குழந்தைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கும். மேலும், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
மேலும், இந்த உணவுகளால் தோலில் அலர்ஜி, உடல் சோர்வு, உடல் வலி, ஒபிசிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் வரவும் வாய்ப்பு உண்டு. இதயத்தில் இருந்து உடலுக்கு ரத்தம் கொண்டுசெல்லும் ஆர்ட்டரிக் குழாயில் இந்த உணவில் இருக்கும் கழிவுகள் சென்று அடைத்துக்கொள்ளும். இதனால் நெஞ்சு வலி வர வாய்ப்பு உண்டு. சிறுநீரகக் கோளாறு மற்றும் உணவுக் குழாய்களிலும் பாதிப்பு வரும்.'' எனப் பட்டியலிடும் கிருஷ்ணமூர்த்தி இறுதியாக இப்படிச் சொல்கிறார்.
''இவ்வளவையும் சொல்வது பயமுறுத்த அல்ல. மாறாக உண்மை அதுதான் எனும்போது, அதைப்பற்றி எச்சரிக்கை செய்யவேண்டியது மருத்துவரின் கடமை. வேகமான இன்றைய காலகட்டத்தில் ரெடிமேட் உணவுகள் தவிர்க்க முடியாதவை. பதப்படுத்தி பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கி வந்தவுடன் பயன்படுத்துவது ஓரளவுக்கு நம்மைப் பாதுகாக்கும். பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதுகூட நமக்கான பாதுகாப்புதானே!''
தகவல் - டாக்டர் விகடன்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உணவே விஷம் ஆகலாமா?
» பற்பசையில் விஷம்.
» வெள்ளை விஷம்
» விஷம் குடித்தவர்களுக்கான முதலுதவி
» பாம்பு விஷம்
» பற்பசையில் விஷம்.
» வெள்ளை விஷம்
» விஷம் குடித்தவர்களுக்கான முதலுதவி
» பாம்பு விஷம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum