தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீ பெரியவனா...நான் பெரியவனா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #1

View previous topic View next topic Go down

நீ பெரியவனா...நான் பெரியவனா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #1 Empty நீ பெரியவனா...நான் பெரியவனா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #1

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 9:58 am

வரலாற்றில் புதைந்த மர்மங்கள்

உலகையே ஆளும் அளவுக்கு செல்வாக்கும், பலமும் கொண்ட பல சாம்ராஜ்யங்கள்திடீரென தடம் தெரியாமல் அழிந்து போயிருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.அந்நியர்களால் நெருங்கக்கூட முடியாத பல சாம்ராஜ்யங்களை வேறோடு பிடுங்கிஎறியப்பட்டதன் மர்மம் என்ன? அப்போது என்ன நடந்திருக்கும்? பதில் கூறப்படாதஇந்தக் கேள்விகளுக்கு விடை தேடித் தருகிறது இப்பகுதி. உலகை திரும்பிப்பார்க்கச் செய்த பல சாம்ராஜ்யங்களின் அழிவுக்கு மூலக் காரணத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறோம் உங்களுக்காக...



சாம்ராஜ்யங்களை வேறோடு சாய்த்த ஆணவப் போட்டி


'நீ பெரியவனா...நான் பெரியவனா' என்ற ஆணவப் போட்டியால், ஸ்லாவெனிக் மற்றும் பிரெமிசிலிட் என்ற இரு பெரும் சாம்ராஜ்யங்கள் அழிந்த வரலாறு இது. இந்த வரலாற்றின் கருப்பு பக்கங்கள் மறைக்கப்பட்டாலும், அழிக்கப்படாமல் பல பேரரசுகளுக்கு பாடம் புகட்டியுள்ளன.

10ம் நூற்றாண்டில் உலகின் பசுமை மிகுந்த நாடு பொஹிமியா (செக் குடியரசு). அந்நாட்டின் ஜைகேன் பகுதியை ஆண்ட மன்னர் ஸ்லாவெனிக். இவர் தான் ஸ்லாவெனிக் பேரரசின் முதல் மன்னர். தனது ஆட்சி எல்லைகளை பொஹிமியா முழுவதும் விரிவுபடுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரது சாம்ராஜ்யத்தின் எல்லைக்கு உட்பட்ட வளங்கள் மிக்க லிபிஸ் நகரமும், அதன் வழியாக வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் சிட்லினா மற்றும் லேப் நதிகளும் அவரது அரசுக்கு வருவாயை அதிகளவு ஈட்டித் தந்தது.

இது பொஹிமியாவின் மற்ற பகுதிகளை ஆண்ட பலம் பொருந்திய பிரெமிசிலிட் சாம்ராஜ்ய ஆட்சியாளர்களுக்கு உறுத்தியது. தங்களை விட பலம் குறைந்த ஸ்லாவெனிக் ஆட்சியில் அதிக வளங்களா? என பொறாமை கொண்ட பிரெமிசிலிட் பேரரசின் வாரிசுகள், அவ்வப்போது எல்லை தாண்டுதல், லிபிஸ் நகரத்தில் வர்த்தகத்தை மேற்கொண்டு வரி செலுத்தாமல் ஏய்த்தல், நிலப் பகுதிகளை ஆக்கிரமித்தல் என குட்டி கலாட்டாக்களில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தனர்.

தங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்பதால் போர் தொடுக்காமல் அமைதி காத்த ஸ்லாவெனிக் பேரரசர், மற்ற சாம்ராஜ்ய மன்னர்கள் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தி பூசல்களை சமாளித்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தனது மனைவி ஸ்ட்ரெசிஸ்லாவா மற்றும் 7 மகன்மளுடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார் ஸ்லாவெனிக் மன்னர்.

ஆதரவாக இருப்பார்கள் என்று நம்பிய தனது முதல் இரண்டு மகன்கள் துறவறம் பூண்டதால் மனம் வருந்திய மன்னர், வேறு வழியில்லாமல் அடுத்த மகன் சோபேபரை தனது ஆட்சிக்கான வாரிசாக அறிவித்தார். இதே கால கட்டத்தில் பிரெமிசிலிட் சாம்ராஜ்யத்திலும் ஆட்சி மாற்றம் வந்தது. பிரெமிசிலிட்டின் ஆட்சிப் பொறுப்பு போலெஸ்லாவ் 2 வசம் வந்தது. ஆணவமும், முன் கோபமும் அதிகம் கொண்ட போலெஸ்லாவ் 2, பொஹிமியா முழுவதையும் தனதாக்கிக் கொள்ளத் துடித்தார். அதற்கான வேலைகளிலும் இறங்கினான்.

என்னதான் அத்துமீறல்களை அரங்கேற்றினாலும், ஸ்லாவெனிக் தரப்பில் போருக்கு புறப்படாமல் வழக்கம் போல வெள்ளைக் கொடியை ஏந்தி சமாதானம் பேசுவார்கள் என்ற ஆணவத்தோடு காய் நகர்த்திய போலெஸ்லாவ் 2, எல்லைகளைத் தாண்டி லிபிஸ் நகரில் தனது ரகசியப் படைகளை அனுப்பி கலகம் விளைவிக்க முயற்சித்தான்.
ஆனால் போலெஸ்லாவ் உள்பட பிரெமிசிலிட் சாம்ராஜ்யத்தில் உள்ளவர்கள் நினைத்ததற்கு எதிர்மாறாக, சீறும் புலியாக இருந்தார் சோபேபர். தன் தந்தையைப் போல அமைதி காத்து பேச்சுவார்த்தை நடத்தாமல், தன் படைகளைத் தயார்ப்படுத்தி எதிரிக்கு சவால்விட்டார். போலந்து உள்பட நட்பு நாடுகளின் படைகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, விஸ்வரூபம் எடுத்து பிரெமிசெலிட் சாம்ராஜ்யத்தை நடுங்க வைத்தார். இதை எதிர்பாராத போலெஸ்லாவ் 2, வேறு வழியின்றி எல்லையில் அத்துமீறல் செய்வதற்காக நிறுத்திய படைகளை திரும்ப அழைத்துக் கொண்டான். தங்களது படைபலத்தைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் படைகளைத் திரட்டி பயமுறுத்திய சோபேபரை எப்படியேனும் அழித்து விட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தான். அதற்காக பல திட்டங்கள் தீட்டினான்,

ஆனால் புத்திசாலியான சோபேபர், எதிரிகளின் அடுத்தகட்ட காய் நகர்த்தல் என்னவாக இருக்கும் என்பதை கணித்து, தடாலடியாக பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். முதல் கட்டமாக லிபிஸ் நகரத்தில் புதிய ஸ்லாவெனிக் நாணயங்களை புழக்கத்தில் விட்டார். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த நாணயம் மட்டுமே செல்லும் எனவும் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் தனது ஆட்சிப் பகுதிகள் மூலம் பிரெமிசிட்ஸ் அரசுக்கு மறைமுகமாக கிடைத்து வந்த மிகப் பெரிய வருவாய்க்கும் முட்டுக்கட்டை போட்டார். இந்த நடவடிக்கைகளால் ஏற்கனவே வஞ்சம் கொண்டிருந்த போலெஸ்லாவ் 2 மேலும் கடும் கோபம் கொண்டான்.

இனி சோபேபரை விட்டு வைத்தால் தங்கள் சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து கைப்பற்றி விடுவார் என்று அச்சம் கொண்ட போலெஸ்லாவ் 2, தந்திரமாக சோபேபர் உள்பட அந்த வம்சத்தையே பூண்டோடு ஒழித்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினான்.

முதல்கட்டமாக, தம் தந்தைகள் வழியில் மீண்டும் சமாதானமாக விரும்புவதாக சோபேபருக்கு தகவல் அனுப்பினான். இதை நம்பிய சோபேபர், எல்லைகளில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த படைகளை திரும்ப வருமாறு உத்தரவிட்டர். மேலும் லிபிஸ் நகருக்குள் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு வளையங்களையும் தளர்த்தினார். இதை சாதகமாக்கிக் கொண்ட போலெஸ்லாவ் 2, சில மாதங்கள் அமைதியாக இருந்து விட்டு, பயங்கர திட்டம் ஒன்றைத் தீட்டினான்.

பொஹிமியாவில் வசிக்கும் விர்சோவ்கி என்ற பழங்குடி இனத்தவர்கள் எல்லைகளைத் தாண்டி எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற சலுகைகளை அனைத்து சாம்ராஜ்யங்களும் அளித்திருந்தன. இதை சாதகமாக்கிக் கொண்ட போலேஸ்லாவ், அந்த இனத்தவர்களில் பலம் வாய்ந்த இளைஞர்களை அழைத்து, வசதியான வாழ்க்கை தருவதாக மூளைச் சலவை செய்து, அவர்களை கொலையாளிகளாக மாற்றினான்.

995ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி லிபிஸ் நகருக்குள் விர்சோவ்கி படைகள் புகுந்தனர். யாரும் சந்தேகிக்காததால், அன்று இரவே அரண்மனைக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த ஸ்லாவெனிக் அரச குடும்பத்தினர் அனைவரையும் அழித்தனர். ஆனால் இந்தத் தாக்குதலில் நடந்த நேரத்தில் துறவறம் பூண்ட தனது சகோதரர்களைக் காண சேபேபர் சென்று விட்டதால், அவரும் இரண்டு சகோதரர்களும் தப்பித்தனர்.

எதிரியின் வம்சத்தை பூண்டோடு ஒழித்து விட்ட மகிழ்ச்சியில், தனது வாரிசான ஸ்ட்ராக்வாஸை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தான் போலேஸ்லாவ். ஆனால், தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ட்ராக்வாஸ் பங்கேற்கும் போது மர்மமான முறையில் இறந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று அப்போது கூறப்பட்டது. இதற்கு காரணம், ஸ்லாவெனிக் வம்சத்தில் உயிர் தப்பிய மூன்று பேர் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின் பிரெமிசிலிட் குடும்பத்தில் பல மர்ம மரணங்கள் தொடர்ந்தன. அந்த சாம்ராஜ்யமும் வாரிசுகளின் இழப்பால் சரிந்தது.

நன்றி அம்புலிமாமா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீ பெரியவனா...நான் பெரியவனா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #1 Empty Re: நீ பெரியவனா...நான் பெரியவனா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #1

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 1:57 pm

படிக்க விறுவிறுப்பாக உள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum