தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருமுறையில் உமைஅம்மை

View previous topic View next topic Go down

திருமுறையில் உமைஅம்மை Empty திருமுறையில் உமைஅம்மை

Post by முழுமுதலோன் Fri Apr 12, 2013 6:40 pm


திருமுறையில் உமைஅம்மை

திருமுறையின் தொடக்கப் பாடல் “ தோடுடைய செவியன்” எனத் தொ டங்கும் திருஞான சம்பந்தர் தேவாரம் ஆகும். இப்ப¡டல் எழுந்த சூழ்நிலையைப் பார்ப்போம். சீகாழிய¢ல் தந்தையாருடன் நீராடச்சென்ற ஞானசம்பந்தக் குழந்தை தன் தந்தை நீராடும்போது அவரைக் காணாது கலங்கிக் கோயிலைப் பார்த்து”அம்மே அப்பா” என்று அழுதது, இதனைக் கேட்ட சிவபருமான் உமை அம்மையோடு அங்கு எழுந்தருளி உமை அம்மயைப் பார்த்து “துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன் கிண்ணத்து ஊட்டு” எனப் பணித்தருளினார். அதற்கேற்ப உமை அம்மை“ எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி “உண் அடிசில்” எனச் சம்பந்தர்க்கு ஊட்டினார். அந்நிலையில் சம்பந்தர் சிவஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் முதலியன உணர்ந்து ஞான சம்பந்தர் ஆனார். நீராடிவிட்டுக் கரயேறிய ஞானசம்பந்தரின் தந்தையார்’ யார் அளித்த பாலடிசில் உண்டது நீ” என அரட்டிக் கேட்க அதற்குப் பதில் கூறும் வகையில் எழுந்ததுதான்“ தோடுடைய செவியன்” எனத் தொ டங்கும் பாடல். எனவே திருமுறையின் தொடக்கத்திற்கே உமை அம்மையார்தான் காரணம் என்பதனை இதன் வழி உணரலாம்.

“ தோடுடைய செவியன்” என்னும் தொடரில் தோடு என்பது பெண்கள் காதில் அணியும்
ஓர் அணிகலன். செவியன் என்பது ஆண்பாலை உணர்த்துவது. எனவே “ தோடுடைய செவியன்” என்பது உமாதேவியாரைத் த ன் உடம்பில் ஒரு பாதியாகக் கொண்ட உமையொரு பாகனை உணர்த்தும். உமை அம்மை அருளால் உருவான திருமுறை வாக்கை நினைத்துத்தான் உமையம்மையாரைக் குறிக்கத் தோடு எனத் தொடங்கிப் பாடினார் ஞானசம்பந்தர். எனவே சிவபருமானையே பாடும் திருமுறையின் தொடக்கம்
அவனருட்சக்தியாகிய அம்மையே நோக்கியே அமைந்துள்ளது என்லாம்.

உமையம்மையாரைத் தப_லவியாகக் கொண்டு பாடும் தனி நூல்களோ தனிப் பாடல்களோ
திருமுறைத் தொகுப்பில் இல்லை. எனினும் சிவபெருமானுடன் சார்த்தியே பல இடங்களில் உமை அம்மை பற்றிய செய்திகள் வந்துள்ளன. உமை அம்மையார¢ன் சிறப்பு தேவாரப் பாடல்களில் இலைமறை காயென ஆங்காங்கே ஓதப்பெறுகின்றது.
“ தோடுடைய செவியன்” என உமையெ¡ரு பாகனை ஞானசம்பந்தர்.கூறியது போலவே “நின்கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய்” “உமையோடு உடனாகி இருந்தான் தன்னை” என்று நாவுக்கரசரும் கூறுவார். இறைவனின் திருவடி திருவருள் தொழிற்படும் இடம் என்பதையும், அத்திருவடியே அடியவர்க்கு அருள்புரியும் என்பதையும், திருவடியே சக்தியாக உருவகிக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வடிகள் உணர்த்தும். மேலும் சுந்தரர் தம் தேவாரத்திலும் “ ஒரு பாகம் பெண்ணாவார்” என்றும்,
“வண்டாடும் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே” என்றும் பாடுகிறார்.சிவபெருமான் பல்வேறு நிலையில் கோயில்கொண்டு விளங்கினாலும் உமைஅம்மையோடு
எழுந்தருளியிருக்கும்பாதே இன்புறுவான் என்னும் கருத்தை ஞானசம்பந்தர் ‘சுத்தமார் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தாற்போல், அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாயாவதும் இதுவே” “ அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாயாவது இதுவே” என்னும் பாடல் அடிகளால் குறிப்பிடுவர். இதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் உமையம்மையார்க்குத் தனிக் கோயில்கள் எழுப்பபட்டன.
தேவி வழிபாடு தோற்றம் கண்டது.

சிவபெருமான் பெண்ணின் நல்லாளாகிய உமை அம்மையுடன் பெருந்தகையாக வீற்றிருப்பது ந¡ம் அனைவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவிலை என்பதை உணர்த்தத்தான் என உரைக்கிறார் ஞானசம்பந்தர். இல்லற வாழ்வின் ஏற்றத்தையும், வையத்து வாழ்வாங்கு வாழவேண்டியதன் தேவையையும் வலியுறுத்தவே இப்பாடல் எழுந்தது என்பதை நாம் உணர வேண்டும். இறைவன் இறைவியுடன் கூடியிருப்பது ஆண் பெண் இணைந்த இல்லற வாழ்வின் பெருமையை உலகத்தார்க்கு உணர்த்தவே ஆகும். இல்லற வாழ்வில் ஈடுபடுவது வீடு பேற்றுக்கு வழிவகுக்காது என்னும் கருத்தை மறுக்கவே இப்பாடல் எழுந்தது என்பதையும் நாம் நோக்க வேண்டும். ஐயாறு அடைந்த நாவுக்கரசர் மாதர்பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும் பாடிக் கண்டறியாதன காணும் காட்சியில் இறைவனும் இறைவியுமாகத் தோன்றும் தோற்றமும் இதனை வலியுறுத்தும். திருவாசகத்த¢ல் மாணிக்கவாசகர் "குவளைக்கண்ணிக் கூறன் காண்க, அவளும் தானே உடனே காண்க" என்று கூறுவதையும் நோக்கவேண்டும்.

திருவாசகத்தில் வரும் திருவெம்பாவையின் உட்கருத்து " சக்தியை வியந்தது" என்பர். கன்னிப் பெண்கள் நாடு செழிக்க மழை பெய்யவும், வீடு செழிக்க நல்ல கணவனைப் பெறவுமே திருவெம்பாவ எழுந்தது. உமாதேவியின் அருளையே மழையாக
உருவகித்துப் போற்றும் திருவெம்பாவைப் பாடல் இதோ:

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

மேகம் உமையம்மையின் நீலநிறம்போல நிறம் பெற்றுத் திகழ்கிறது; உமையம்மையின் இடை போல மின்னுகிறது; அவள் திருவடியில் இருக்கும் சிலம்பொலி போல் இடிமுழக்கம் செய்கிறது; அவளுடைய அழகிய புருவம் போல வான வில்லுடன் திகழ்கிறது. அவளைப் பிரிந்திராத இறைவன் அன்பர்க்கு அருள்பாலிப்பதற்கு முன்னரே அவள் அருள் சுரக்கின்றாள். அந்த அருளைப் போல மழை பொழியவேண்டும்
என்பது இந்தப் பாடலின் கருத்து. உமை அம்மையின் அருளே மழை என்பது இங்கு தெளிவாக விளக்கப்படுகின்றது. உமை அம்மையை "உடையாள்" என இப்பாடல் குறிப்பதன் பொருள் எல்லாவற்றிற்கும் உடையவள்- உரிமையானவள் சக்தி என்பதையும் காட்டுகிறது. திருவெம்பாவை சக்தியை வியக்கும் வண்ணத்தை இப்பாடல் நன்கு படம் பிடிக்கிறது.

இறைவன் திருவடியே சத்தி எனச் சாத்திரங்கள் கூறும். அத்திருவடியின் ஐந்தொழில் ஆற்றலைப் போற்றித் துதிப்பதுதான் திருவெம்பாவையின் இறுதிப்பாடல். படைப்பைத் "தோற்றமாம் பொற்பாதம்" என்றும், காப்பைப் "போகமாம் பூங்கழல்கள்" என்றும், அழிப்பை "ஈறாம் இணையடிகள்" என்றும், மறைப்பை "மால் நான்முகனும் காணாத புண்டரிகம்" என்றும், அருளலை "அருளும் பொன்மலர்கள்" என்றும் இப்பாடலில் மாணிக்கவாசகர் கூறிப் போற்றுகிறார். இத்திருவடிகளே அப_னத்தின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமாக இருப்பவை என்றும் கூறுகிறார். ஐந்தொழில் இல்லையென்றால் உயிர்கள் பாசம் நீங்கி வீடு பெறுமாறு இல்லை அல்லவா?

அம்மை அப்பரின் திருக்கோலத்தைத்

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி

எனவும் திருவாசகம் விவரிக்கிறது.

"உடையாள் உன்றன் நடுவிருக்கும், உடையாள் நடுவுள் நீ இருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்" என்னும் திருவாசகப்பாடல் அம்மை அனைத்தும் உடையவள்
என்பதையும், அவள் இறைவனுடன் கலந்திருப்பாள் என்பதையும்,அந்நிலையில் அவர்கள் இருவரும் மணிவாசகர் அகத்தில் இருப்பர் என்பதையும் சுட்டுகிறது.

ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா ஒன்று 'அரிவையே¡ர் கூறுகந்தான்' என்று அம்மையப்பரைப் போற்றுகிறது. திருப்பல்லாண்டில் ' அன்ன நடைமடவாள் உமைகோன்'
என்னும் தொடர் அம்மையின் நடை அழகைச் சுட்டுகிறது.

பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறுமிடத்துச்

" சேர்ந்திருந்தேன் சிவமங்கைதன் பங்கனை" என்றும்,
"நேரிழையாள் நிரதிசயானந்தப்
பேருடையாள் என் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடையாள் சிவன் ஆவடுதண்துறை
சீருடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே"

என்றும் அம்மை தம்மை ஆண்டருள¢ய செய்தியைக் குறிப்பிடுகிறார். மேலும் திருமூலர்
திருமந்திரத்தில் சக்திபேதம், சக்தியின் பல்வேறு வடிவங்கள், சக்தி எந்திரம், சக்தியை
வழிபடும் எந்திர வழிபாட்டு முறை இவை பற்றி எல்லாம் விரிவாகக் கூறுகிறார். திருமூலர் கூறும் சக்த¢ சிவ சக்தியே ஆகும்."தான் எங்குளன் அங்குளள் தையல் மாதேவி" (1031)
" மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்
புணர்ந்துடனே நிற்கும்" (1019)
"நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி "(1042)
"இருளது சத்தி, ஒளியதுஎம் அண்ணல்" (1095)

என்னும் திருமந்திரத்தொடர்கள் இதனை வலியுறுத்தும்

திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்திலுள்ள சத்திபேதம்- திரிபுரை சக்கரம்
என்னும் பகுதியிலுள்ள முப்பது திருமந்திரப் பாடல்களும் அம்மன் பெருமையை
விரித்துரைக்கின்றன. கலைமகள் சிவசக்தி என்பதை

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரமே (1068)

என்னும் பாடல் வாயிலாகக் கூறுகிறார் திருமூலர். மேலும் சத்தியின் வடிவம் சிவவடிவமே என்பதைச் " சூடும் இளம்பிறை, சூலி, கபாலினி" என்றும், சக்தியின் மந்திரம் சிவமந்திரமே என்பதை "நாம நமசிவ "(1189) என்றும் கூறுவர். மேலும்

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறு அறியேனே (1029)

என்றும் அம்மையின் பெருமையை அவர் கூறுகிறார்.

சத்தி என்பாள் ஒருசாதகப் பெண்ப¢ள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்.

என்னும் அடிகள் முத்தி அளிக்கும் தன்மை சக்திக்கு உண்டு என்பதைக் கூறும்.
திருமுறைகளீல் திருமந்திரத்தில் தான் சிவசக்தியின் சிறப்பு பலவாறாகக் கூறப்பட்டுள்ளது.

பதினோராம் திருமுறையில் திருமுருகாற்றுப்படையில் முருகன் உமையவள் மைந்தனாகக்
குறிப்பிடப்படுகிறான். சேரமான் பெருமாள் நாயனார் பான்வண்ணத்தந்தாதியில்
அம்மையப்பர் திருவுருவம் பேசப்படுகின்றது. இவரைப் பின்பற்றிப் பட்டினத்தார் திருக்கழுமல மும்மணிக்கோவையில் அம்மையப்பர் வடிவை 61 அடிகளில் விரிவாக விளக்குகிறார். இவரே கோயில் நான்மணிமாலையில் அம்மையப்பர் திருவுருவம் பற்றி

"ஒருபால் தோடும் ஒருபால் குழயும்
இருபாற்பட்ட மேனி எந்தை"

என்னும் அடிகளீல் சுருக்கமாகவும் குறிப்ப¢டுகிறார். திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில்(16)
'வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி
வையம் ஏழும் பன்முறை ஈன்ற
ஐய திருவயிற்றம்மைப் பிராட்டி
மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி
எமையாளுடைய உமையாள் நங்கை
கடவுட் கற்பின் மடவரல் கொழுந'

என்று ஏழு உலகும் ஈன்ற தாயாகவும், அறம் வளர்த்த நாயகியாகவும் உமை
அம்மையைப் பட்டினத்தார் குறிப்பிடுகிறார். மேலும் காஞ்சியில் உமையம்மையார் இறைவனைப் பூசித்தபோது, ஆற்றில் வெள்ளம் மிகுந்து வர, உமைஅம்மையார் துடித்துச் சிவலிங்கத் திருமேனியைத் தழுவ, அதில் நகில் சுவடும், வளைச் சுவடும்
பதிந்தன என்று திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் அவர் கூறுகிறார்.
காஞ்சியில் அம்மை 32 அறங்களை வளர்த்தது பற்றியும் பேசுகிறார்.
சக்தி வேலத் தடக்கையில் உடையவன் முருகன் என்னும் குறிப்பு
ந்ம்பியாண்டார் நம்பியின் பாடல் ஒன்றில் வருகிறது. காரைக்கால்
அம்மையாரும் அம்மையப்பர் திருக்கோலம் பற்றிப் பேசுகிறார்.

பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின் பெரிய புராண்த்தில்
உமை அம்மையாரின் சிறப்பு பல இடங்களில் குறிக்கபடுகின்றது.
நாயன்மார்களாகிய அடியார்களுக்குக் காட்சி கொடுக்கும்போது
உமை அம்மையுடன் சிவபெருமான் தோன்றி அருளியதாகச் சேக்கிழார்
பல இடங்களில் சுட்டுகிறார். சிறுத்தொண்ட நாயனார்க்கு இறைவன், இறைவி, முருகனுடன் காட்சி கொடுத்ததைச் ச¡ன்றாகக் கூறலாம். தென்னாட்டின்
சிறப்பைக் கூறும் சேக்கிழார்

எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்
தம்பிரானைத் தனித்தவத்தால் எய்திக்
கம்பையாற்றில் வழிபடு காஞ்சி என்று
உம்பர் போற்றும் பதியும் உடையது

என்று காஞ்சி காமாட்சி அம்மையைச் சிற்ப்பித்துப் போற்றுகிறார். இறைவனை
வழிபட்டுக் கம்பையாற்றில் வெள்ளம் வரத் தழுவிடக் குழைந்த இறைவன்
வரலாற்றைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் சேக்கிழார் விரித்துப்பாடும் திறமும் போற்றுதற்குரியது.


"எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார்தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக்கொழுந்து"

என்று இறைவி சிவனைப் பூசை செய்த சிறப்பை அவர் பாடுகிறார். மேலும்


கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பன் மேவிய உம்பர்பால்
நிரந்த காதல் செய் உள்ளத்தளாகி நீடு நன்மகள் யாவையும் பெருக
வரந்தரும் பொருளாம் மலைவல்லி மாறிலாவகை மலர்ந்த பேரன்பால்
சிரம்பணிந்து எழுபூசை நாள்தோறும் திருவுளம் கொளப்பெருகியதன்றே.

என்றும் அவர் விவரிக்கிறார். உமைஅம்மைதான் இறைவனுக்கு முதலில் பூசை
செய்தவர் என்பதை இங்கு உணர முடிகிறது.

காவிரி யாற்றின் பெருமையைக் கூறும் சேக்கிழார்

வண்ண நீள்வரை தரவந்த மேன்மையால்
எண்ணில் பேரறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உண்ணெகிழ்க் கருணையின் ஒழுக்கம் போன்றது

என்கிறார். காவிரியும் குடகு மலை தந்த ஆறு, உமை அம்மையும் இமவான் மலை தந்த சல்வி; காவிரியும் உமை அம்மையும் உலகில் பல அறங்கள் தழைக்க உதவும் பான்மையும் ஒப்புவமையாக வருகின்றது. அம்மை அருள் சக்தி என்பதை இறுதி அடி எடுத்து இயம்புகிறது.

சிதம்பரத்தில் நடராசப்பெருமான் சிவகாமி அம்மையை நோக்கிக் கூத்தாடும் திறத்தினை
"மாதொரு பாகம் நோக்க¢ மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புதக் கூத்தாடும்
நாதனார்"
என்று திருநீலகண்ட நாயனார் புராணத்தில் சேக்கிழார் கூறுகிறார்.
எனவே தான் அது ஆனந்தக்கூத்தாக அமைந்தது போலும்.

திருநாவுக்கரசர் திருவையாற்றில் கண்ட கயிலைக் காட்ச¢யைச் சக்கிழார்

வெள்ளி வெற்பின்மேல் மரகதக்கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப்பவளவெற்பென இடப்பாகம்
கொள்ளும் மலையாளுடன் கூட வீற்றிருந்த
வள்ளலாரை முன்கண்டனர் வாக்கின் மன்னனார்

என்று மரகதவல்லியாக உமைஅம்மையார் சிவனுடன் கயிலை மலைமேல்
இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

இதுகாறும் கூறிய செய்திகளால் அறக்கருணை வடிவாகிய உமைஅம்மையார்
திருமுறையின் தொடக்கப் பாடல் தோன்றுவதற்குத் துணையாக இருந்ததையும்,
திருமுறைப்பாடல்களில் சிவபெருமானுடன் சார்த்தியே உமையொருபாகன் என்ற நிலையில் பல இடங்களில் கூறப்பட்டிருப்பதையும், நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழப் பெண்ணின் நல்லாராகச் சிவனுடன்கூடி இருப்பது பற்றிய குறிப்பினையும்,
திருவாசகத்தில் திருவெம்பாவை வாயிலாகச் சக்தியாய் நின்று வியக்கப்படுவது பற்றியும்,
திருமந்திரத்தில் சக்தி பேதம், சக்தியின் பல்வேறு வடிவங்கள், சக்தி எந்திரம், சக்தியை வழிபடும் எந்திர வழிபாட்டுமுறை இவை விரிவாக விளக்கம் பெற்றிருப்பதையும்,
பதினோராம், பன்னிரண்டாம் திருமுறைகளில் காஞ்சியில் சிவபூசை செய்து அறம்
வளர்த்த நாயகியாக அமைந்த வரலாறு விரிவாகக் கூறப்பட்டிருப்பதையும்
தெரிந்துகொண்டோம்.


சுப.திண்ணப்பன்
திருமுறையில் உமைஅம்மை 293805_10151488951413835_2134263480_n

தமிழ்மறை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum