தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்!

View previous topic View next topic Go down

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்! Empty கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்!

Post by சிவா Wed Apr 17, 2013 10:20 pm

கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சாப்பிடுவார்கள். ஏனெனில் சில உணவுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே. அதிலும் முதல் முறை கர்ப்பமானவர்களாக இருந்தால், எப்போதுமே அதிக கவனத்துடன் இருப்பார்கள்.

மேலும் இந்த நேரத்தில் பெரியர்வர்கள் என்ன சொன்னாலும், அதையே கேட்டு நடப்போம். குறிப்பாக கர்ப்பிணிகள் மேற்கொள்ளும் டயட்டில் நிச்சயம் அதிகப்படியான ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளில் கீரைகள், கேரட், ப்ராக்கோலி, குடைமிளகாய், பீன்ஸ், பருப்புகளும் மற்றும் தயிர், ஓட்ஸ், நட்ஸ், முட்டை போன்றவற்றையும் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

என்ன பழங்கள் சாப்பிட வேண்டும்? என்று கேட்கலாம். ஏனெனில் பழங்களில் பப்பாளி மற்றும் அன்னாசி கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், இதனை தவிர்க்க வேண்டும். எனவே இப்போது பழங்களில் எந்த பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம் என்று ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த பழங்களை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவகேடோ :- ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்திருக்கும் பழங்களில் அவகேடோவும் ஒன்று. கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

மாம்பழம் :- இது சுவையான பழம் மட்டுமின்றி, ஆரோக்கியமான பழமும் கூட. இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், செரிமானம் நன்கு நடைபெறுவதோடு, இதில் அவர்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.

திராட்சை :- நிறைய பெண்கள் திராட்சை கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள். ஆனால், திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ, மெட்டபாலிக் அளவை சீராக வைக்கும். மேலும் திராட்சையில் ஃபோலேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் சோடியம் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சை :- எலுமிச்சையை ஜூஸ் போட்டு கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கருவிற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல், காலை அசௌகரியம், செரிமான பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யும்.

பெர்ரி :- பெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், சூப்பர் உணவுகளில் ஒன்றாக உள்ளது. இத்தகைய பழத்தையும் கர்ப்பிணிகள் சாப்பிடுவது கருவிற்கு நல்லது. மேலும் குழந்தை நன்கு அழகாக பிறக்கும்.

வாழைப்பழம் :- கர்ப்பமாக இருக்கும் போது மலச்சிக்கல் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு கர்ப்பிணிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

ஆரஞ்சு :- சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழம், கர்ப்பிணிகளுக்கு சாப்பிட மிகவும் பிடிக்கும். அதிலும் ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை தினமும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தை அழகாக பிறக்கும்.

ஆப்பிள் :- வைட்டமின்கள் அதிகம் உள்ள ஆப்பிளை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களது உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சிசுவிற்கும் நல்லது.

லிச்சி :- கோடையில் கிடைக்கும் லிச்சி பழமும் கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு ஏற்றதாகும்.

பேரிக்காய் :- பேரிக்காயில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், கர்ப்பிணிகள் இந்த பழத்தையும் சாப்பிடலாம்.

பீச் :- பீச் பழத்தில், குழந்தையின் உடலை ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் பி6 சத்துக்கள் நிறைந்துள்ளதால், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்படுவது நல்லது.


நன்றி:http://tamilcloud.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்! Empty Re: கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்!

Post by ஸ்ரீராம் Thu Apr 18, 2013 9:23 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சிவா கைதட்டல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்! Empty Re: கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்!

Post by முழுமுதலோன் Thu Apr 18, 2013 10:32 am

நல்ல தகவல்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்! Empty Re: கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum