Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பழுப்பு நிறத்தில் இருக்கும் கைக்குத்தல் அரிசி உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகள்!
Page 1 of 1 • Share
பழுப்பு நிறத்தில் இருக்கும் கைக்குத்தல் அரிசி உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகள்!
பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும். கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளது. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!
பெருங்குடல் புற்றுநோய்
கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. இந்த அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
மார்பக புற்றுநோய்
கைக்குத்தல் அரிசியில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டான லிக்னான் (Phytonutrients Lignan) மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக தற்காத்துக் கொள்ள உதவுகிறது. வயதான பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற முழு தானிய உணவுகள் சாப்பிடும் போது enterolactone அளவுகளை, அதிகரித்து, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக நிரூபணமாகியுள்ளது.
கொழுப்பை குறைக்கிறது
கைக்குத்தல் அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது. இந்த அரிசியில் எல்டிஎல் (LDL) கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது.
இதய நோய்
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கைக்குத்தல் அரிசிச்சோறு, இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. டெம்பிள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இரத்தக் குழலில் பிளேக் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குறைக்க முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் எடையை பராமரிக்க
கைக்குத்தல் அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுக்கிறது. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவை சாப்பிட்ட பெண்களின் உடல் எடை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலச்சிக்கலை தடுக்க
இந்த அரிசியின் உயர் நார்ச்சத்தினால், இது உணவை செரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, ஆரோக்கியமான குடல் இயக்கங்களை பெறலாம்.
நீரிழிவை கட்டுப்படுத்த
கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாம் வகை (Type 2) நீரிழிவு நோயை சீராக்க பயனுள்ளதாக இருக்கும்.
ஆரோக்கியமான எலும்புகள்
கைக்குத்தல் அரிசியில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க தேவையான மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச் சோற்றில் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் மெக்னீசியம் அளவில் கிட்டத்தட்ட 21% இருக்கிறது. மேலும், மெக்னீசியத்தால், எலும்புகள் கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்தினை உறிஞ்சுகிறது.
ஆஸ்துமா
மெக்னீசியம் நிறைந்த கைக்குத்தல் அரிசி, ஆஸ்துமாவைக் குறைக்கிறது. பல ஆய்வுகள், கைக்குத்தல் அரிசியில் உள்ள மெக்னீசியம், நோயாளிகளிடம் உள்ள ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்க உதவும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இந்த அரிசியில் உள்ள செலினியம், ஆஸ்துமவிற்கு எதிரான நன்மை தரும்.
பித்தக்கற்கள்
கைக்குத்தல் அரிசி போன்ற கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாதலை குறைக்க உதவுகிறது என்று இரப்பை குடலியலுக்கான அமெரிக்க இதழில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது,
ஆரோக்கியமான நரம்பு மண்டலம்
கைக்குத்தல் அரிசி, ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு தேவையான மாங்கனீசு நிறைந்தது. இதிலுள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி, பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
நன்றி:http://www.seithy.com/

Re: பழுப்பு நிறத்தில் இருக்கும் கைக்குத்தல் அரிசி உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகள்!
இப்படியெல்லாம் இருக்கா...? பகிர்வுக்கு நன்றி சிவா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பழுப்பு நிறத்தில் இருக்கும் கைக்குத்தல் அரிசி உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகள்!
இதை எப்படி குக் செய்வது என்று தான் தெரிய வில்லை
vijayscsa- புதியவர்
- பதிவுகள் : 26
Re: பழுப்பு நிறத்தில் இருக்கும் கைக்குத்தல் அரிசி உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகள்!
by vijayscsa Today at 2:53 pm
இதை எப்படி குக் செய்வது என்று தான் தெரிய வில்லை
சோறு எவ்வாறு சமைக்கப்டுகிறதோ அவ்வாறேதான் சமைக்க வேண்டும்.
Re: பழுப்பு நிறத்தில் இருக்கும் கைக்குத்தல் அரிசி உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகள்!
பகிர்வுக்கு நன்றி சிவா
Similar topics
» கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» கைக்குத்தல் அரிசி
» கைக்குத்தல் அரிசி
» பெருங்காயத்தால் ஏற்படும் நன்மைகள்
» காலிஃப்ளவரினால் ஏற்படும் நன்மைகள்!
» கைக்குத்தல் அரிசி
» கைக்குத்தல் அரிசி
» பெருங்காயத்தால் ஏற்படும் நன்மைகள்
» காலிஃப்ளவரினால் ஏற்படும் நன்மைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum