தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சரப்ஜித்சிங் மரணம்

View previous topic View next topic Go down

சரப்ஜித்சிங் மரணம் Empty சரப்ஜித்சிங் மரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 7:35 pm

புதுடில்லி : பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, உயிரிழந்த இந்தியரான சரப்ஜித் சிங்கின் மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், நீதி கிடைக்க வேண்டும் எனவும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் வலியுறுத்தல் :

சரப்ஜித் சிங்கின் மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியதாவது : சரப்ஜித் சிங்கின் மரணம் வேதனை அளிக்கிறது; சரப்ஜித் சிங் வழக்கில் இந்தியாவின் கோரிக்கை மனுக்களை பாகிஸ்தான் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை; இவ்வழக்கில் சரப்ஜித் சிங் குடும்பத்தினரை மனித நேயத்துடன் அணுக வேண்டும்; இந்த கொடூரமான, மனித தன்மையற்ற தாக்குதல் செயலுக்கு காரணமாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; சரப்ஜித் சிங்கிற்கு நீதி கிடைக்க வேண்டும்; சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய அரசு செய்யும்; அவருக்கு உரிய இறுதி உரிமைகள் வழங்கப்படும்; சரப்ஜித் சிங், இந்தியாவின் வீரமகன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினர் கோரிக்கை :

பாகிஸ்தான் குண்டுவெடிப்பிற்கு காரணமானவர் என குற்றம்சாட்டப்பட்டு, பாகிஸ்தான் கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங், பாகிஸ்தான் சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வந்தார். ஏப்ரல் 26ம் தேதி, சக கைதிகள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதால் தலையில் பலமாக காயமடைந்து கோமா நிலையில், லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித் சிங், இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர் பயங்கரவாதி அல்ல எனவும், அவரை தியாகியாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். டில்லியில் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவிடமும் அவர்கள் தங்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

தேசிய கழகம் கோரிக்கை :

சரப்ஜித் சிங்கின் உடல் மாநில அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் கழக தலைவர் ராஜ்குமார் வெர்கா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் னெவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சரப்ஜித் சிங் குடும்பத்தினரின் கோரிக்கை குறித்து அரசு தரப்பு கூட்டம் இன்று நடைபெறும் எனவும், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் பலரிடமும் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

பாக்.,க்கு எதிரான நடவடிக்கை:

சரப்ஜித் சிங் மரணத்திற்கு ஏராளமான அரசியல் கட்சிகள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்துள்ளன. மேலும் இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரது உடலை குடும்பத்தினரிடமும் ஒப்படைக்க பாகிஸ்தானை வலியுறுத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. சரப்ஜித் சிங் மரணத்தால் நாடு கொதித்து போயுள்ளதாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நஹ்வி தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்கு உரிய செயல் எனவம், வெட்கப்பட வேண்டிய செயல் எனவும், கொடுமையான குற்றம் எனவும், அவர்கள் இந்திய பிரஜையை கொலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்தும் தெரிந்திருந்தும், அரசு எதுவும் செய்யாமல் உள்ளது எனவும், நாட்டு மக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு மிக குறைந்த அளவிலாவது கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் முக்தர் அப்பாஸ் நஹ்வி தெரிவித்துள்ளார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சரப்ஜித்சிங் மரணம் Empty Re: சரப்ஜித்சிங் மரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 7:37 pm

தினமலர் வாசகர் கருத்துகள்

Subramaniam S - tvm ( Posted via: Dinamalar Android App )
02-மே-201312:39:37 IST Report Abuse
கண் கெட்டபின் சூரிய வணக்கமா பிரதமர் அவர்களே, என்ன நீதி் கிடைக்க செய்வீர்கள். அந்த வீரத்தி்ருமகனின் உயிரை தி்ரும்ப கொண்டுவருவீர்களா.


Padmavathi - chennai,இந்தியா
02-மே-201312:38:14 IST Report Abuse
இப்படி சாவிக்கு ஆடும் ஒரு பொம்மை ( பிரதமர் ) எங்களுக்கு வேண்டவே வேண்டாம், தயவு செய்து எங்களை விட்ருங்க, நீங்கள் வாய் திறந்தால் உங்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் மட்டும் தெரிவிப்பீங்க, இது வரை நீங்க நாட்டுக்கு செய்த நல்லது என்ன?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சரப்ஜித்சிங் மரணம் Empty Re: சரப்ஜித்சிங் மரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 7:37 pm


Krishnamoorthy Caa - madruai,இந்தியா
02-மே-201312:35:46 IST Report Abuse
சரப்ஜித்சிங் உயரிழந்துவிட்டார். இந்த மத்திய அரசும், உளவு துறையும் அவர் யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இனிமேலும் அவர் குடி போதையில் எல்லை தாண்டி விட்டார் என்று கதை விட கூடாது. அவர் இந்திய அரசுக்காக வேலை பார்த்தார் என்றால் அவருக்கு உரிய மரியாதையை இந்திய அரசு அளிக்க வேண்டும். மானங்கெட்ட அரசியல்வாதிக்கு அரசு மரியாதை அளிக்கும் போது உண்மையான உளவாளிகளுக்கு அரசு, அரசு மரியாதையை அளிக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சரப்ஜித்சிங் மரணம் Empty Re: சரப்ஜித்சிங் மரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 7:38 pm


kavikaavya - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-மே-201312:16:46 IST Report Abuse
சரப்ஜித் சிங்கை தியாகியாக இந்தியா அறிவிக்க வேண்டுமாம். அப்படியானால் கசாப்பை பாகிஸ்தான் தியாகியாக அறிவித்தால் இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? மும்பையில் குண்டுவைத்தால் தீவிரவாதி,லாகூரில் குண்டுவைத்தால் தியாகி. பல்லாயிரம் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த இலங்கை உனக்கு நட்பு நாடு,ஒரு வடநாட்டு தீவிரவாதியை கொலைசெய்த பாகிஸ்தான் உமக்கு எதிரி நாடு? மனச்சாட்சியே இல்லாத மன்மோகன் சிங், சோனியா காங்கிரஸ் இந்த நாட்டின் சாபக்கேடு.


Pannadai Pandian - wuxi,சீனா
02-மே-201312:02:25 IST Report Abuse
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, உயிரிழந்த இந்தியரான சரப்ஜித் சிங்கின் மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். உண்மையான குற்றவாளி பாகிஸ்தான் அரசுதான். இந்த கொலை stage managed. தூக்கை அரசு நிறைவேற்ற முடியாத கட்டத்தில் சிறை கைதிகளை தூண்டி விட்டு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள். PAKISTAN IS FOR CHEAP GOVERNMENT AND CHEAP GOVERNANCE.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சரப்ஜித்சிங் மரணம் Empty Re: சரப்ஜித்சிங் மரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 7:39 pm


Murugan Mars - chennai,இந்தியா
02-மே-201311:56:11 IST Report Abuse
மன்மோகன் சிங்க் இருக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். என்னன்னா முஸ்லிம் வோட்டு போயிரும், அவங்க இந்தியாவுல இருக்குற 5 லட்சம் மக்களை கூட கொல்லுவாங்க. ஆனா ஒரு முஸ்லிம் தீவிரவாதிகூட சாக கூடாதுங்கிறது தான் இந்த காங்கிரஸ் காரங்களோட பாலிசி. வெட்கம் கெட்ட அரசியல்வாதிகள்.


tamilraj - chennai,இந்தியா
02-மே-201311:28:03 IST Report Abuse
சரப்ஜித் சிங் இறந்துவிட்டதால் அவருக்கான தண்டனையை நமது மன்மோகன் சிங் ஏற்றுகொள்வார்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சரப்ஜித்சிங் மரணம் Empty Re: சரப்ஜித்சிங் மரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 7:41 pm


கபாலி - faraway land,அன்டார்டிகா
02-மே-201311:08:58 IST Report Abuse
உங்கள மாதிரி கொழ கொழ பிரதமர் இந்தியாவுக்கு இருக்கும்வரை சரப்ஜித் சிங்கின் மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படமாட்டார்கள்... நீதியும் கிடைக்காது.. இதைபோன்ற அடுத்த செய்தி வந்ததும் நீங்களும் மறுபடி உங்கள் வருத்தத்தையும், கடும் கண்டனத்தையும் தெரிவிப்பீங்க.... உங்களுக்கு இது வழக்கமாகிப்போச்சு... எங்களுக்கு உங்கள் நடத்தை பழகிப்போச்சு


singam - coimbatore,இந்தியா
02-மே-201310:43:08 IST Report Abuse
நீதி கிடைக்க வேண்டும்ன்ன எப்படி ? வா நீதி ,வா நீதி கூப்பிட உடனே கிடைச்சிருமா ? ஆளை பாரு, தூக்குலே போட்ட பிரச்னை வரும் கரத்தாலே அவனுகே இப்படி பண்ணிடனுகே , இங்கே இருக்கிற பாகிஸ்தான் கைதிகே எல்லாரையும் அடிச்சி கொன்னதன் நீதி கிடைக்கும் ,நீங்கே அப்படி பண்ண மடிங்கே , அவனுகளுக்கு பிரியாணி போட்டு கவனிப்பிங்க,இப்படியே எல்லாத்துக்கும் பயந்துட்டே இருங்கே , கென்யா கரன் கூட வந்து நம்மளை என்னடான்னு கேப்பான், பயந்த கொல்லி பய புள்ளைகள , ,,,,,,,,,
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சரப்ஜித்சிங் மரணம் Empty Re: சரப்ஜித்சிங் மரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 7:41 pm


Nethaji - muthuvai, mukavai dist.,இந்தியா
02-மே-201310:03:45 IST Report Abuse
தமிழக மீனவர்கள் குற்றம் செய்யாமலே சுடப்படுகிறார்கள். அவர் குற்றம் செய்து தண்டனை அடைந்தவர்தானே அதில் என்ன நீதி? மன் மோகன் சிங் வேஷம் கலைகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சரப்ஜித்சிங் மரணம் Empty Re: சரப்ஜித்சிங் மரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 7:43 pm

Murali - tokyo,ஜப்பான்
02-மே-201307:43:45 IST Report Abuse
மிகவும் அதி வன்மையாக கண்டிக்க வேண்டிய செயல். இந்தியராகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்று கூடி நம் நாட்டையும் நம் மக்களையும் காக்கவேண்டிய தருணம் இது. சீனா மற்றும் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையில் அத்து மீறி நுழைந்து செய்யும் செயல்களுக்கு கட்டாயம் பதிலடி கொடுக்க வேண்டிய தருணம் இது. நாம் அமைதியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருபதற்கு நம் நாட்டின் ராணுவ வீரர்கள் தான் கரணம். அனைவரும் நம்மாலான உதவியை செய்து அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.


என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
02-மே-201304:47:49 IST Report Abuse
வேதனையான நிகழ்வுகள், எங்கே மனித உரிமை ஆர்வலர்கள்? எங்கே ரிப்புஆயி போன்றோர்கள் ? பாகிஸ்தானியர்களின் தீவிரவாத திருட்டுதன மூளை இந்தியர்களுக்கும் வந்து விட கூடாது , கேவலமான/ஈன இழிபிறவிகள் என்ற வரிசையில் பாகிஸ்தானிய அதிகாரிகளும்/அவர்களை ஆதரிப்பவர்களும் சேர்க்கப்படவேண்டும். கடவுளே அந்த நாடும் அதை ஆதரிப்பவர்களும் உலக வரைபடத்தில் இருந்து நீக்கும் நாள் எப்போ வரும் (தயவு செய்து நீக்கும் போது அங்கிருந்த ஈனர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பாதே)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சரப்ஜித்சிங் மரணம் Empty Re: சரப்ஜித்சிங் மரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 7:44 pm


rekha - singapore,சிங்கப்பூர்
02-மே-201303:34:35 IST Report Abuse
அடித்தே கொன்று இருக்கிறார்கள். தூக்கு தண்டனையைக் குறைக்க இந்திய அரசாங்கம் நிர்பந்திக்கும் என்பதே காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். எவ்வளவு வெறி இந்தியர்கள் மேல். ஆனால், நிர்பந்தம் வெறும் கண் துடிப்பு என்று அவர்களுக்கு தெரியாது போல.. சரப்ஜித் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய உடலையாவது இந்தியாவிற்கு அனுப்புவார்களா ?


Sekar Sekaran - jurong-west,சிங்கப்பூர்
02-மே-201303:22:59 IST Report Abuse
சிறை கைதியை அடித்தே கொல்ல வழிவகை செய்து தந்துவிட்டு நாடகம் ஆடுகின்றனர் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள். எல்லை தாண்டி வந்து நமது வீரரை கொன்று தலையை தனியே கொய்து செல்கின்றனர்.பயந்து போன காங்கிரஸ் அரசு என்ன செய்துகொண்டுள்ளது என்றே தெரியவில்லை.நமது நாட்டில் இது வரை இப்படிபட்ட சூழலே இருந்ததில்லை.அன்னிய சக்திகளுக்கு நமது நாட்டின் மீது என்ன அக்கறை வந்துவிடும் என்பதற்கு இவையே சான்று. உண்மையான தேசப்பற்றுள்ள நமது மண்ணில் பிறந்தவர்களுக்குத்தான் இதுபோன்ற செயல்களை தட்டிகேட்கும் உணர்வு பொங்கி வரும். சீனா ஒருபுறம் எல்லை தாண்டி வந்து டேரா போட்டு வாலாட்டுகின்றது..பாகிஸ்தானும் அதன் பங்கிற்கு ஆனாதை செய்கின்றது. காங்கிரஸ் அரசோ..மௌனம் காத்து நம்மை பொறுமை இழக்க செய்கின்றது.அரசியல் ரீதியாக..அல்லது படைபலத்தால் எதிலுமே நாம் லாயக்கில்லாமல் இருக்கின்றோம்..காரணம் அன்னிய சக்தியின் கீழுள்ள காங்கிரசே..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சரப்ஜித்சிங் மரணம் Empty Re: சரப்ஜித்சிங் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum