தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது

View previous topic View next topic Go down

தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது Empty தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது

Post by முழுமுதலோன் Thu Jun 20, 2013 9:57 am

தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது

மாணவர் பருவத்தினருக்கு இன்று அவதானம் அவசியம்!

உலகை ஆட்டிப்படைக்கும் சமூகப் பிரச்சினைகளில் போதைவஸ்துப் பாவனை முக்கிய இடம் பெறுவதை சகல ரும் அறிவோம். இப்பிரச்சினை இன்று எல்லா நாடுகளுக்கும், சகல சமூகங்களுக்கும் பொதுவான பிரச்சினையென்ற நிலையேற்பட் டுள்ளது.

மதம், மொழி, கலாசாரம் என்னும் வாழ்வியல் வட்டங்களையெல்லாம் கடந்து சமூகங்களின் அழிவின் உச்சியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக் கும் அசிங்கம் இது. போதாக் குறைக்கிது, மாணவர் சமூகத் தையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் வேதனை. இங்கும் தான் எங்கும் தான்!

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய கண்ணாகக் கருதப்படும் மாணவர் சமூகம், போதைக்கு அடிமையாவது அப்படியொன்று சாதாரண விடயமல்ல. பாரிய சமூகப் பிரச்சினை.

எல்லோரும் ஆழமாக சிந்திக்க வேண்டிய கருப்பொருள். ‘எப்படி, எதனால்’ என்கிற தேடல்கள் எல்லாத் தரப்புக்களிலும் கையிலெடுக்கப்பட வேண்டிய காலகட்டம் இது. ஆனாலும் ஒரு நெருடல், பிரச்சினையின் மூலங்கள் தெரியாமல் அதற்கான முடிவுகள் எப்படி சாத்தியப்படும் என்பதே அது. எனக்கும் தான் உங்களுக்கும் தான்!

‘பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட எனக்கு, அடுத்த யுத்தம் போதைவஸ்துப் பாவனையோடுதான்’ என்று ஜனாதிபதி அறிக்கை விடும் அளவிற்கு இலங்கையில் முற்றிப்போன விவகாரம் இது. இந்த முற்றிய விவகாரத்தில் மாணவர் சமுதாயமும் அள்ளுண்டுபோனது என்பதுதான் கசப்பான உண்மை.

நகர்புற பிரபல பாடசாலைகளுக்கு அருகில் போதைவஸ்து வியாபாரம் கொடிகட்டிப் பறக்கின்றதாம், அண்மையில் அப்படியொரு பாடசாலைக்கு அருகில் ‘சிகரட்’ உருவத்தில் போதை கலந்த இனிப்புப் பண்டங்கள் பட்டப் பகலில் விற்பனையானதாம். வயிற்றைக் கலக்கும் பத்திரிகை செய்திகள் இவை பெற்றோருக்கும் தான் மற்றோருக்கும் தான்!

இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் அனுராதபுர மாவட்ட பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பில் பயிலும் மாணவி யொருவரின் புத்தகப் பையில் ‘சாராய’ போத்தல் காணப்பட்ட மையும். கழிவறையில் மூன்று மாணவிகள் அதை அருந்தி அவதிப்பட்டதையும் பத்திரிகைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. இவற்றைவிட வேறென்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது Empty Re: தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது

Post by முழுமுதலோன் Thu Jun 20, 2013 9:59 am

எந்த இனத்தின் சமூகக் கட்ட மைப்பிலும் ஒத்த வயதுடைய மாணவர் குழுக்கள் (Peer Groups) காணப்படுகின்றன. இந்தக் குழுக்களில் மாணவியர் குழுக்களும், ஆண் மாணவர் குழுக்களும் இடம்பெறுகின்றன. இந்தக் குழுக்கள் ஒரே விதமான சமூக சூழலில் (Social Environment) வாழுதலும், அவர்களது ஒரே தன்மை கொண்டுள்ள சமவயது சமூக அழுத்தங்களும் (Peer Pressure) இவர்கள் தொடர்பான பிரதான அம்சங்க ளாக கணிக்கப்படுகின்றன.

பொதுவாக மாணவர்கள் சமூக அழுத்தங்களுடனேயே வாழ்கின்றனர். இதில் நேரான எதிரான அழுத்தங்களென இரு வகைப்படும். இதில் எதிரான அழுத்தங்கள் (Negative Peer Pressure) மாணவர்களை பாதிக்கக் கூடியவை. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அவர்களது புலமைப் பரீட்சை தொடர்பாக அனுபவிக்கும் அழுத்தங்கள் இதைப் போன்றதே தமது பெற்றோர், ஆசிரியர்கள், உவினர்கள் போன்ற வர்களிடமிருந்து அவர்கள் அடை கின்ற அழுத்தங்கள் எப்படிப்பட் டவை என்பது உங்களுக்கும் புதிதல்ல. புரியாததல்ல!

இதுபோன்ற எதிரான அழுத்தங்கள், மாணவர்களின் உடல் வளர்ச்சி, மணமுதிர்ச்சி, விருத்தி போன்ற அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது எல்லா பெற்றோருக்கும் தெரிந்திருக்கும் என்பது பெரும்பாலும் சந்தேகமே.

இவர்களைப் போன்றே உயர்தர வகுப்பில் பயிலும் 15 – 20 வயதுக்கிடைப்பட்ட குமரப்பருவ (Teen Age) மாணவர்களுக்கும் சில அழுத்தங்கள் இருக்கவே செய்யும். பாடங்கள், ஆசிரியர்கள், பாடசாலை சூழல் குடும்ப சூழல், நண்பர்கள், மதவாதிகள் போன்ற பல்வேறு பக்கங்களிலிருந்து சொல்லக்கூடிய சொல்ல முடியாத செய்யக்கூடிய செய்ய முடியாத நெருக்கடிகள் இருக்கவே செய்யும்.

இந்த நிலை மிகவும் ஆபத்தானது. இவை மாணவர்கள் திசைமாறும் தருணங்கள், நெருக்கடிகளிலிருந்து இவர்கள் விடுபட விரும்பும் சூழல் இங்கேயே ஆரம்பிக்கின்றது. தற்காலிகமாக அந்த நெருக்கடிகளை மறக்க இவர்கள் நாடுவது போதைகளையே!

இலங்கை போன்ற ஜனநாயக நாடொன்றில் போதைவஸ்துப் பாவனையை ஒழிப்பது அப்படியொன்றும் இலகுவான காரியமல்ல. ‘வேலியே பயிரை மேய்கின்ற’ சூழல்களும், அரசியல்வாதிகளின் பின்னணிகளும் இருக்கும் வரையில் இதெல்லாம் ‘இழுபடும் சமாச்சாரங்கள்’, சிறைச் சாலையில் அதுவும் பெண்கள் பிரிவில் கஞ்சா சுருட்டுக்கள் என்ற பத்திரிகை செய்திகள் எல்லாத் தரப்பினரையும் அண்¨யில் அதிர்ச்சியூட்டின. இவற்றோடு ஒப்பிட்டால் மாணவர்கள் எந்த மூலைக்கு, மாணவர்கள் அனுதாபத்துடன் அணுகப்பட வேண்டியவர்கள்!

மாணவர்களை போதைவஸ்துப் பாவனையிலிருந்து அன்னியப்படுத்த திட்டமிடுபவர்கள், முதலில் அவர்களது சூழலில் காணப்படும் சமூக விரோதங்களையும், அவற்றுக்கான காரண காரியங்களையும் இனங்காண வேண்டும். அத்துடன் மாணவர்களின் உயிரியல் உளவியல், சமூகவியல் தொடர்பான விடயங்களும் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். மாணவர்களின் போதைவஸ்து ரீதியிலான முரண்பாட்டுக்கு பின்வரும் காரணங்கள் வலுவூட்டகின்றன.

01. அளவுக்கு மீறிய பணப்புழக்கம்.

02. பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமை

03. பரம்பரை ரீதியான போதை நுகருணர்வு

04. சுய அடைவு (Self-esteem) குறைவடைதல்

05. புதிய விடயங்களில் ஆர்வம் காட்டும் இயற்கை உயர்வு

06. சமூக புலக்காட்சிகள் (Social Perceptions) முதிர்ச்சியடையாமை.

07. சமவயது குழுவில் Peer Group) தீவிர உறுப்புரிமை

08. சமவயது அழுத்தத்தில் (Peer Pressure), பாடசாலை சூழலை வெறுத்தல்.

09. ஆத்மீக (Spiritual) விழுமி யங்களில் அலட்சியம்.

10. நெருக்கடிகளிலிருந்து தற்காலிகமாக விடுபட ஆர்வம்

11. சூழலில் போதைப் பொருட்களின் இருப்பு (Availability)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது Empty Re: தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது

Post by முழுமுதலோன் Thu Jun 20, 2013 10:00 am

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மாணவர்களின் போதைவஸ்து நுகர்வுக்கான முக்கிய காரணங்களாகும். சூழலில் இருந்து போதையூட்டும் பொருட்களை இல்லாமல் செய்வது மாத்திரம் இந்த மாணவர் பிரச்சினைக்கு தீர்வல்ல. மாணவர் மனோநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த முயற்சியில் பெற்றோரும், ஆசிரியர்களும் சமபங்கு வகிக்க வேண்டும். பிள்ளைகள் மீது எல்லைமீறிய எதிரான அழுத்தங்கள் கொடுப்பதை இந்த இரு தரப்பினரும் தவிர்ப்பது நல்லது.

மற்ற மாணவர்கள் முன்னிலையில் ஒரு குறித்த மாணவனுக்கு ‘அடித்தல்’, ‘ஏசுதல்’, போன்ற தண்டனைகள் வழங்கப்படும் வேளைகளில், அவனுக்கு மனநெருக்கடிகள் ஏற்படுகின்றன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது புரிவது நல்லது.

அந்த குறித்த மாணவன் அவனுக்கேற்பட்ட நெருக்கடியை தற்காலிகமாக மறக்க நினைப்பதும் முயல்வதும் அவனை பொறுத்தளவில் நியாயமே. ஆனால் அவன் அந்த நெருக்கடியை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கின்றான் என்பதே பிரச்சினை.

எதிரான முறைகளில் எதிர்கொள்வதில் போதைவஸ்துப் பாவனை முக்கிய இடம் வகிக்கின்றது என்பதே யதார்த்தம், இது விரும்பத்தகாத நிகழ்வாகும்.

நேரான முறைகளில் மனநெருக்கடிகளை எதிர்கொண்டு அவற்றில் இருந்து விடுபடுவதற்கு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அந்த செயற்திட்டங்களில் ‘நேரான சமூக புலக் காட்சிகள்’, ‘சுய அடைவு’, ‘சமய விழுமியங்கள்’ போன்ற அம்சங்களை மேம்படுத்தும் செயற்பாடுகள் உள்ளடக்கப்படல் வேண்டும். இப்படியான நாடு தழுவிய செயற்திட்டங்களின் மூலமே மாணவர்களின் மனோநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற நிலைப்பாடே இங்கும் வலியுறுத்தப்படுகின்றது.

‘மாஸ்லோ’வின் தேவைக் கோட்பாட்டின்படி உடலியல் (Physical), பாதுகாப்பு(Security),, அன்பு (Love), சுய அடைவு (Self esteem) சுயதன்திறன் அடைவு (Self actualization) போன்ற தேவைகளில், மாணவர்கள் தமது பெற்றோரில் 2ம் 3ம் தேவைகளுக்காகத் தங்கியுள்ளனர்.

சுய அடைவு (Self-esteem) குறைவடைதல்மனிதன் பூரணத்துவமாக வாழ்வதற்குத் தேவையான அம்சங்களில் ‘சுய அடைவு’ நான்காம் இடத்தை வகிக்கின்றது. இந்த இயல்புக்கும் தன்னம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. வாழ்வில் மகிழ்ச்சி கிட்டும் சந்தர்ப்பங்களில் இந்த இயல்பு அதிகரிப்பதாகவும், சோகங்கள் ஏற்படும் போது இவ்வியல்பு குறைவடைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புக்கும் (Expectation) திருப்திக்குமான (Satisfaction) ஒரு சமநிலை இந்த ‘சுய அடைவு’ காரணமாக உருவாகுவதாகவும், அதன் காரணமாக தன்னம்பிக்கை அதிகரித்து உள முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்படுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கை குறையும் சந்தர்ப்பங்களில் சரியான முடிவுகளை எடுப்பதில் எவரும் தடுமாற்றமடைவர். இந்த விதத்தில் மாணவர்களும் விதிவிலக்கானவர்களல்ல. ஒரு முரண்பாடான விடயத்தில் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு தனது சமவயது நண்பர்களினால் நிர்ப்பந்திக்கப்படும் சந்தர்ப்பங்களில் ‘சுய அடைவு’ குறைந்த மாணவர்கள் தடுமாறுவார்கள் தவறு செய்யத் தயங்கமாட்டார்கள்.

பின்விளைவுகளை எண்ணிப் பார்க்கும் பக்குவம் அவர்களிடம் இருக்காது. காரணம் தங்கள் நண்பர்களை எதிர்த்து மறுத்து அவர்களிடம் இருந்து விலகிக் கொள்ளும் தன்னம்பிக்கை இவர்களுக்கு இல்லாமையே இதன் காரணமாக இவர்களும் தவறுகளில் தடம்பதிப்பார்கள்.

சமூக புலக் காட்சிகள் (Social Perceptions) முதிர்ச்சியடையாமை.

மாணவப் பருவம் சமூக புலக் காட்சிகள் விருத்தியடையும் ஒரு முக்கிய கால கட்டமாகும். இந்த புலக்காசிகள் நேராக அல்லது எதிராக அமைவது அந்தந்த மாணவனின் ஆளுமையில் (personality) தங்கியுள்ளது. தான் செய்கின்ற தவறு மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்ற பகுத்தறிவு இல்லாதவர்கள் இலகுவில் குற்றச் செயல்களில் ஈடுபாடுவார்கள். காரணம் இவர் களிடம் சமூச அச்சம் இல்லை.

சமூகம் ஒருவிதமான வலைப் பின்னல், தனிநபர் செய்கின்ற தவறுகள் அவனின் குடும்பத்திற்கு கெட்ட பெயரை உருவாக்கி அதை அடையாளப்படுத்தும் அந்த குடும்பம் அப்படிப்பட்டது என்ற ரீதியில சமூகம் முத்திரை குத்தி ஒதுக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது Empty Re: தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது

Post by முழுமுதலோன் Thu Jun 20, 2013 10:02 am

அந்தக் குடும்பத் திலுள்ள இளம் பெண்களின் திருமணங்கள்கூட பாதிக்கப்படும். இதுபோன்ற கெட்ட பெயர்கள் தனது குடும்பத்திற்கு ஏற்படுவதி லுள்ள பாதிப்பு எத்தனை ஆபத் தானது என்பதை முன்கூட்டியே உணர்தல் சமூக புலக்காட்சியின் விளைவாகும் என்பது பொருத்த மானது. அவ்வாறு உணர்ந்து கொண்டால் தவறு செய்வதற்கு எவருக்கும் தயக்கமுண்டாகும்.

இந்த மனோநிலை மாணவர் களிடத்தில் ஏற்படுத்தப்படுமானால் அவர்கள் குற்றச் செயல்களிலி ருந்து தவிர்ந்துகொள்ளும் சூழல்களை பரவலாக ஏற்படுத்த முடியும். மற்றவர்கள் தங்களை ‘எடுபிடி’களாகக் கையாளும் சந்தர்ப்பங்களை புரிந்துகொள்ளு தல், அவர்களது ‘சுய அடைவு’, ‘புலக் காட்சி’ என்பவற்றில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதை புலப்படுத்தும். இது மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் உளவியல், ஆத்மீக கலாசாரம் தொடர்பான ‘விழிப்புணர்வு’ நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் ஏற்படுத்த முடியும்.

தற்போது நாட்டின் சகல பகுதிகளிலும் போதைவஸ்து பாவனையை நசுக்கும் கைங்கரியங்களில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். ஊடகங்களும் இச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. இந்த விடயங்கள் பொலிசார் மீது மக்களுக்கு நம்பிக்கையூட்டு கின்றன. எது எப்படியிருப்பினும் மாணவர் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தை வலியுறுத்துவது பொருத்தமானதாகும்.

போதைவஸ்து விடயங்களில் சிக்கிக்கொள்ளும் மாணவர்கள் திடீரெனத் தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் உளவளத் துணை சேவைக்குட்படுத்தப்படல் வேண்டும். அப்போது மாணவர் மத்தியில் மனோநிலை மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம் அவர்களை நாளைய நற்பிரஜைகளாக உருவாக்கும் என்பது திண்ணம்.

ஏ.ஆர். அப்துல் ஹமீட் -தினகரன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது Empty Re: தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது

Post by mohaideen Thu Jun 20, 2013 1:47 pm

இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தகவல்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது Empty Re: தற்காலிக நிம்மதிக்காக போதையை நாடுவதால் வாழ்வே சூனியமாகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum