தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திறமைதான் நமது செல்வம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

திறமைதான் நமது செல்வம்  ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ  ,முனைவர்  இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty திறமைதான் நமது செல்வம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Jun 22, 2013 4:21 pm

திறமைதான் நமது செல்வம்  !
நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ  ,முனைவர்  இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வானதி பதிப்பகம் 23,தீனதயாளு தெரு ,தி .நகர் ,சென்னை .17 விலை ரூபாய் 70.தொலைபேசி 044 24342810 ,24310769.
மின்னஞ்சல்  vanthaipathippakam@gmail.com
இணையம் www.vanathi.inநூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ  ,முனைவர்  இரா .மோகன்அவர்கள் எப்போது ? சிந்திக்கிறார் .எப்போது ?எழுதுகிறார்  வியப்பாகவே உள்ளது .பட்டிமன்றங்களில் நடுவராக முத்திரைப்  பதிக்கின்றார்.நன்றாக எழுதத் தெரிந்த பலருக்கு நன்றாக பேச வராது .  நன்றாகப் பேசத் தெரிந்த பலருக்கு நன்றாக எழுத வராது .முனைவர்  இரா .மோகன்அவர்கள் நன்றாகப் பேசுகிறார் . நன்றாக எழுதுகிறார் .மிக நன்றாகப் படிக்கின்றார் .இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய மிகச் சிறந்த ஆளுமையாகத் திகழ்கின்றார்கள் .பாராட்டுக்கள் .


.ராய்ச்சி , பதிப்பு ,தொகுப்பு ,புதுக்கவிதை ,தன்  முன்னேற்றம் ,உரை ,ஆளுமைக் கல்வி ,அணிந்துரைத் தொகுப்பு ,கடித இலக்கியம் இப்படி பல்வேறு பரிமாணங்களில் 95 நூல்கள் எழுதி முடித்து ,சகலகலா வல்லவராகத் திகழ்கின்றார்கள் விரைவில் சச்சின் போல சதம் அடிக்க உள்ளார்கள் .வாழ்த்துக்கள் .


இலக்கிய இமயம் மு .வரதராசனார் பொன் மொழியுடன் " இல்லறம் நல்லறம் ஆவது எப்போது ?" என்ற முதல் கட்டுரை தொடங்குகின்றது .ஓவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் முத்தாய்ப்பான வரிகளை எழுதி ,எழுதிய  ஆசிரியரின் பெயருடன் தொடங்கி இருப்பது நல்ல உத்தி .ஒரு  கட்டுரை எப்படித் தொடங்க வேண்டும் ? எப்படி தொடுக்க வேண்டும் ? எப்படி முடிக்க வேண்டும் ?என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக 40 கட்டுரைகள் உள்ளன  .பல் சுவை விருந்தாக உள்ளன .40 நூல்கள் படித்த பயன் கிடைக்கும் விதமாக உள்ளன .
.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை உலகிற்கு பறை சாற்றியது .நமது தமிழகம் .குடும்ப அமைப்பு முறையில்  உலகிற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த  நமது தமிழகத்தில் , இன்று எங்கும் பார்த்தாலும் கணவன் மனைவி சண்டை ,குடும்ப நல நீதி மன்றங்களில் குவியும் மணமுறிவு வழக்குகள் .இந்நிலைக்கு காரணம் என்ன ? கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது .விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது .இந்நூல் குடும்ப உறவைப் பேணுவது எப்படி ? என்பதை வகுப்பு எடுக்கும் விதமாக ,வாழ்வியல் கருத்துக்களை இனிமையாகவும் , எளிமையாகவும் நகைச்சுவை உணர்வுடன்  ,கற்பிக்கும் விதமாக உள்ளது .தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சொன்ன கணவன் மனைவி அன்பை விளக்கும் 12 இட்டலிகள் கதை மிக நன்று .முதல் கட்டுரையில் வருகின்றது .

மனைவி கணவனுக்கு சமையல் செய்வதற்காகவே பிறவி எடுத்தவள் .அவள் செய்த சமையலுக்கு அவளைப் பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை .சமைப்பது அவள் கடமை .இப்படி எண்ணும் ஆணாதிக்க சிந்தனை 
முற்போக்குவாதிகளுக்கும் உள்ளது .என்பதை யாரும் மறுக்க முடியாது .உளவியல் ரீதியாக மனைவியுடன் சண்டை இன்றி வாழ்வது எப்படி ?என்பதை இந்நூல சொல்லித் தருகின்றது .,நூலில் இருந்து சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு .

" மனைவி ரசம் ஊற்றும்போது ரசமா இது ?அதிரசம் .உன் கை பட்டதும் ரசத்திலே ஒரு தனி மணம் வந்து விடுகிறதே எப்படி ?என்று கேட்டுப் பாருங்கள் .மனைவின் முகத்தில் இப்போது புன்னகை மொட்டாக விரியும் .

நிறைவாக மோர்  ஊற்றும் போது ,'ஒன்ஸ் மோர் "என்று சொல்லிக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்துப் பாருங்கள் .உங்கள் அன்பு மனைவியின் முகம் அன்றலர்ந்த மலர் போல மலரும். "

" நீங்கள் வாங்கி வந்த காய்கறியை 'மகா  மட்டம் ' என்று மனைவி சொன்னால் ,எந்த நாய் சொன்னது ?என்று கேட்கக் கூடாது .தப்பாகத்தான் வாங்கி வந்து விட்டேன் 'என்று ஒப்புக் கொண்டு விட வேண்டும் .பிரச்சனை அதோடு முடிந்து விடும் .

.இனிய சொற்களை திருவள்ளுவர் சொல்லியது போல பயன் படுத்தினால் .மனைவியைப் பாராட்டினால் ,அன்பு செலுத்தினால் வாழ்க்கை இனிக்கும் .சொற்களால் பாராட்டுவதால் நமக்கு பணச் செலவு ஒன்றும் இல்லை .மனம் திறந்து மனைவியைப் பாராட்டுங்கள் .என்ற மத்திரத்தை நூல் கற்றுத் தருகின்றது 


" .WIFE IS A KNIFE TO CUT OUR LIFE  "என்று சொன்ன முன்னாள் மாணவனுக்கு நூல் ஆசிரியர் "  WHAT LIFE WITH OUT WIFE "என்று சொல்லி மனைவியைப் பற்றிய நேர்மறை சிந்தனையை விதைத்து உள்ளார்கள் .

. ஒரு நூலில் இவ்வளவு பேரின் கருதுக்களா ? என்று அசந்து போனேன் .திருவள்ளுவர் ,புத்தர் ,பாரதியார் , தனி நாயக அடிகள் ,பகவான் ராம கிருஷ்ணர் ,அன்னை சாரதா தேவி ,ஸ்ரீ அரவிந்தர் ,பகவான் ரமணர் ,அண்ணா ,கண்ணதாசன் ,பெர்னாட்ஷா ,எக்கிலஸ் ,பட்டினத்தார் ,அ .கி .பரந்தாமனார் ,வா .சு .ப .மாணிக்கம் ,  மு .வரதராசனார் ,சி .இலகுவனார் ,அகிலன் , குன்றக்குடி அடிகளார் ,இரா .இளங்குமரனார் தமிழருவி மணியன் ,ச. தமிழ்ச் செல்வன் ,திரு .வி .கலியாண சுந்தரனார் ,பிரபஞ்சன் ,டாக்டர் மாத்ரு பூதம் ,சுகி சிவம் ,திரு லோக சீதாராம் ,வாலி ,பா .விஜய் ,வி .ஆர் .பி .மாணிக்கம் ,பெரியார் தாசன் ,க .ப .அறவாணன் ,சின்மயானந்தா ,வி .செல்வா நாயகம் ,சு .வித்தியானந்தன் ,ஜி .சுப்ரமணிய பிள்ளை ,தி .சு .பாலசுந்தரம் பிள்ளை ( இளவழகனார் ), சு .ந .சொக்கலிங்கம் .மனோன்மணி சண்முகதாஸ் ,க .தா .திருநாவுக்கரசு ,பொன் செல்வகணபதி ,ஏர்வாடி ராதா கிருஷ்ணன் ,சிவசங்கரி  ,அப்துல் காதர் இப்படி ஒரே ஒரு நூலில் எல்லோரும் அறிந்த திருவள்ளுவர் புத்தர் மட்டுமன்றி வெளியில் தெரியாத பலரின் கருத்துக்களை வெளிச்சம் போட்டு காடும் விதமாக பாரபட்சமன்றி  எழுதியது யாராக இருந்தாலும் நல்ல கருத்தாக இருந்தால் உடன் மேற்கோள் காட்டி கட்டுரை வடித்த பாங்கு மிக அருமை .


சங்க இலக்கியப் பாடல்கள் விளக்க உரை ,பாரதியார் பாடல்கள் பல்சுவை விருந்தாக நூல் உள்ளது .
நூல் இருந்து பதச் சோறாக சில வரிகள் உங்கள் ரசனைக்கு .

" உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள தொடர்பு  போன்றது காதல் .உயிர் உடம்பில் வாழ்தல் போன்றதாம் காதல் .உயிர் உடம்பை விட்டுப்  பிரியும் சாதல் போன்றதாம் பிரிவு .காதலியைப் பிரிவது என்பது அவ்வளவு துன்பம் தருவதாம் ."


சிவசங்கரியின் மேற்கோள் நூலில் உள்ளது .இதனை கடை  பிடித்தால் போதும் வாழ்வில் வளம் பெறலாம் ,நலம் பெறலாம் .வாழ்கை அர்த்தமுள்ளதாக அமையும் .

" பூரணமான மனிதராக எவரும் மாறுவது வளர்வது அசாத்தியமான சமாச்சாரமே .என்றாலும்   நம்முடைய  குறைகளைக் குறைத்து ,நிறைகளை வளர்த்து ,துளித் துளியாக மனசால் உயர்ந்து கொண்டே போவது எவருக்கும் சாத்தியமே ."

நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ  ,முனைவர்  இரா .மோகன் அவர்களின் ஒவ்வொரு நூலும் அவரது முந்தைய நூலை மிஞ்சும் விதமாகவே சிறப்பாக வருகின்றது .இனியவை நாற்பது நூல் சிறப்பு என்று நினைத்தால் ,திறமைதான் நமது செல்வம்  என்ற இந்த நூல் மிகச் சிறப்பான நூலாக வந்துள்ளது .இந்நூல படிப்பதற்கு முன் உள்ள மன  நிலையும் ,படித்து முடித்தபின் உள்ள மன  நிலையின்  முன்னேற்றமே நூலின் வெற்றி பாராட்டுக்கள் 
..இந்நூலை மிகத் தரமாகவும் ,நேர்த்தியாகவும்  , கண்ணைக் கவரும் வண்ண அட்டை படத்துடன் அச்சிட்டு வெளியிட்டுள்ள பதிப்பு உலகில் தனி முத்திரை பதித்து வரும் வானதி பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .

eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ , முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» இலக்கிய மாலை ! ( அணிந்துரைகளின் தொகுப்பு ) நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum