தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அச்சம் என்பது மடமையடா...

View previous topic View next topic Go down

அச்சம் என்பது மடமையடா... Empty அச்சம் என்பது மடமையடா...

Post by முழுமுதலோன் Thu Jul 04, 2013 9:35 am

அச்சம் என்பது மடமையடா...


பாலிலும் மோரிலும் வெண்ணெய் மிதப்பது போல மனவெளியின் அலைமீது அலைபாயும் எண்ணங்களாக பலருக்கு அச்சம் என்பது மிதக்கிறது.இதை generlised anxietydisorder என வகைபடுத்துகிறார்கள்.

அச்சம் பயம் என பலநூறு வார்த்தைகளில் சொல்லப்படும் இந்த உணர்வை கொஞ்சம் மைக்ரோஸ் கோப்பில் வைத்து ஆராய்ந்து பார்ப்போம் இதன் பிறப்பிடம் எங்கே?

இதைப் புரிய வேண்டுமானால் பயம் என்றால் என்ன என்ற கேள்வி கேட்போம்.பயம் என்றால் இரண்டு வகை ஒன்று நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்காது போனால்?நாம் எதிர்பார்த்து ஒன்று ந்டந்து விட்டால்?இந்த இரண்டு கேள்விகளை கேட்டு மனம் எனும் குழந்தை மருன்டு போனதன் விளைவும் பயனுமே அச்சமென்ற உணர்வு?

புரிந்து கொள்ள வேண்டுமானால் நமது உயிர் பரிணாம வளர்ச்சி வரலாறைப் பார்க்க வேண்டும் சூடு,மின்சாரம் வலி போன்ற உடல் உயிர் அணுக்களுக்கும் சிசுக்களுக்கும் உபாதை தரும் வெளிப்புற தூண்டல்கள் யாவும் விஅத்துக்கள் எனப்படும்.இவை அய்ம்புலன்கள் எதில் ஒன்றில் நுழைந்தாலும் எதிர்பட்டாலும் உடனே அதிலிருந்து தப்பித்து ஓட மூளை கட்டளையிட்டாக வேண்டியிருக்கிறது.

இது தானியங்கி அனிச்சை செயல் மண்டல வழியாக செயல்படுகிறது.இது மாவட்ட மாநில உயர்நீதி மன்றம் என உத்தரவுகளுக்காக காத்திருக்க நேரமில்லை,முடியாது கூடாது.எனவே அரை நொடிக்குள் எந்த உயர் அதிகாரி உத்தரவுக்கும் காத்திராது உடன் ஓடி தப்பிக்க வில்லையென்றால் உத்தரவிட அந்த உயிரின் மூளைக்கே உயிர் இருக்க வாய்ப்பில்லை.எனவே நமது பரிணாம வளர்ச்சியில் பயம் அச்சம் என்பது நமது உடலியியங்கியலில் ஆழமாக பதித்துவிட்ட பாதுகாப்பு கவச உணர்வு.

உடலுக்குள்ளே நடைபெறும் இந்த மின்சார காந்த இரசாயன மாற்றங்களை அச்சத்துடன் வேடிக்கை பார்க்கிறது நம் மனம் தன்னைக் கொல்ல வரும் எதிரிகளுடன் தனது பாதுகாவலர்கள் தனது உத்தரவே யில்லாது போராடும் காட்சியை கண்ட பிரதமரை கற்பனை செய்து பார்ப்போம்.அவர் கை,கால் உதறி நாக்குகுழறி கண்களும் இதயமும் படபடக்க அஞ்சி நிற்பார் அது போலவே இந்த அனிச்சை செயலை வேடிக்கை பார்க்கும் மனம் என்ற அதிகாரியும் அச்சம் என்ற உணர்வு பற்றி நிறக்கும்.எதிர்பாராத இந்த விபத்தும் அதைப்பற்றிய ஆபத்துணர்வும் அதற்க்கு உடலில் ஏற்படும் அவசர கால எச்சரிக்கை சைரனும் மனதில் ஏற்படும் அச்ச உணர்வும் எல்லாம் ஒருங்கிணைந்த தொகுப்பே பதட்டம் என்று பெயரிடப்படுகிறது.

காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியில் இது பாரம்பர்ய அனுக்களில்
பதிந்து விட்டது ஒரு பாதுகாப்பு உணர்வாக.மனித மனத்தில் ஆபத்து என்ற சிந்தனையோ அல்லது ஆபத்து பற்றிய தூண்டலில் ஒரு துளி கூட அச்சம் என்ற பட்டனை தட்டி விட மனித உடல் முழுதும் இந்த உணர்வு மின்சாரமாக பாய்ந்து எச்சரிக்கை ஒலியும் ஒளியும் உண்டாக்குகிறது.

பல்லி வாலைப் பார்த்து கூட பாம்பென மிரள்கிறது கயிறைப்பார்த்து கூட கட்டுவிரியன் மருள்கிறது திரைப்படத்தில் அனகொன்டாவைப் பார்த்து கூட அரண்டு போகிறது.

மனித மன வளர்ச்சியில் இடி மின்னல் நெருப்பு வள்ளம் சுனாமி பிரளயம் பூகம்பம் புயல் பாம்பு புலி சிங்கங்கள் தாண்டி பல நூறு புதுப்புது அச்சங்களின் பட்டியல் நீள்கிறது

தானாக கற்பனை செய்து கொண்ட பேய் பிசாசு பில்லி சூன்யங்களுக்கு மனிதன் பயப்பட்டான்

அதையும் தாண்டி கல்வி,கலவிபணம்,பட்டம்,புகழ்,பதவி,என பல்லாயிரம் இலக்குகளை அவனே நிர்ணயித்து கொண்டு ஆசையெனும் வலையை தன்னை சுற்றி பிணைத்து கொண்டு அச்சத்தின் ஆழத்தை அகலத்தை பெரிதாக்கி கொண்டான்.
விளைவாக நடக்காது அஞ்சி அஞ்சியழுதான் அஞ்சி அஞ்சி சாவார் அவர் அஞ்சாத பொருளில்லை என்றார்.

இன்னொரு பக்கம் அது நடக்க கூடாது இது நடக்க கூடாது என நொடிக்கு நொடி இறைவனை வேண்டி வேண்டி தொழுகின்றன.

நடக்க வேண்டும் என ஆயிரம் பிரார்த்தனைகள் நடந்து விடக்கூடாது என ஆயிரம் வேண்டுதல்கள் அப்படியும் ஆண்டவன் மீது நம்பிகையிழந்து பயந்து நசிகிறான் சிதைகிறான்

இந்த மன அழுத்தம் தாளாது தங்காது அலைபாயும் மனதில் அச்சம் பயம் பதட்டம் பீதி என்ற நுரைகள் பொங்கி மிதக்கின்றன இந்த எதிர்மறை உணர்வுகளை மறக்க நினைத்து எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என புலம்பி தீர்த்தான்.

ஆசையே துயரத்திற்க்கு காரணம் என அங்கலாய்ந்தான் ஆசையும் தீரவில்லை அச்சமும் தீர்ந்த பாடில்லை அவன் மீதும் நம்பிக்கையில்லை ஆண்டவன் மீதும் நம்பிகையில்லை அச்சமும் பயமும் மனிதன்
வளர வளர அவனோடு கூடவே தலையில் முடிபோலவளர்கிறது.

வெட்ட வெட்ட மீண்டும் மீண்டும் நீள்கிறது.
உண்மையிலேயே வாழ்வியல் துயரவியல் சம்பவங்களால் ஆசைகள் எல்லாம் நிறைவேறாத நிராசைகளாகிறது கற்பனையிலும் எதிர்பாராத இன்னல்கள் வந்து இடையூறுகளாகிறது

அது மேலும் அவனது மன உறுதியை உடைக்கிறது கால்கள் உடைந்த நாற்காலிகள் போல நம்பிக்கைகள் உடைந்த உள்ளங்கள்
சஞ்சலத்திலோடுகின்றன.

பாரம்பர்யமாகவே பல மனங்கள் கண்ணாடி போல படைக்கப்பட்டுள்ளன.

அதில் குழந்தைமுதல் தொடர்ந்து வளர வளர சந்தித்த ஏமாற்றங்கள் நிரந்தர கீறல்கள் உருவாக்குகின்றன.இன்று சமீபத்தில் வாங்கிய் அடிகள் வாழ்வியல் துயர சம்பவக்கள் கீறல் விழுந்த கண்ணாடியை சுக்கு நூறாக்கி தூள் தூளாக்குகின்றன.

இறுதியில் உடைந்த உள்ளங்களின் அச்சமும் பயமுமனை மீறி கட்டுக்கடங்காது பொங்கி வழிகின்றன
இதனால் பயந்த சுவாபமுள்ளவர்கள் நெருக்கடி நிலை தாளாது பதட்டத்தில் குழம்பி தவிக்கிறார்.அச்சம் என்ற உணர்வை ஒரு அரவு கற்பனை செய்தால் மனம் என்பதை நிலவு என்று வைக்கலாம் அரவு கவ்விய நிலவு போல கிரகணம் பிடித்தால் மனிதன் ஒளி மறைகிறது.

ஆறாவது அறிவு மங்கி அடங்காத ஆழ்மனம் சஞ்சலத்திலாடுகிறது.
பலகீனமான பிரதமரின் அமைச்சரவை போல ஆளாளுக்கு பேசத் தொடங்குகிறார்கள் பதட்டம் என்பதை மின்காந்த இரசாயணப்புயல் என்பார்கள் இதில் இரண்டு வகை ஒன்று உள்ளங்கைப்புண் போல எப்போது தொடங்கியது எப்படி தொடர்கிறது எவ்வாறு முடிவடையும் என்று எல்லாம் விடை காண முடியாத அறிஞர்களுடன் வரும் இது உள்நாட்டு போர் போல தீராத தொல்லை தரும்

மற்ற ஒரு வகையிலே தீடீரென தாக்கும் எதிரி போல தலை முதல் கால் வரைஅத்தனை அங்கங்களிலும் புயல் பூகம்பம் சுனாமியென சலசலக்கும் இந்த இரண்டாவது வகை மனபீதி என்று சொல்லப்படும்.

ஆறாத மாறாத முதல் வகை மனபதட்டம் என்பது
பெரும்பான்மையிரிடம் காணப்படுகிறது

விவரம் தெரிந்த நாள் முதல் அவர் அச்ச சுபாவமுடையவர்தான் என்று அனைவராலும் பாராட்டு பெற்றவர்

பல பெற்றோர்கள் பிறவிக் குணமே அவருக்கு அச்ச மென்பார் சிலர் வாலிப பயதில் பயந்த சுபாவமுடையவராக மாறுகிறார்.அபூர்வமாக இயல்பான சிலர் மதிய வயதிலும் பதட்ட சுபாவமாக மாற வாய்ப்புண்டு பல நேரங்களில் எதிர்பாராத அல்லது எதிர்பார்த்த அதிர வைக்கும் துயர வாழ்வியல் சம்பவங்கள் கலங்காதவரையும் கலங்க வைப்பதுண்டு.

எது எப்படியோ அச்சம் என்ற இந்த நச்சு எண்ணம் முதலில் மனதில் பரவுகிறது அது மெல்ல மெல்ல அவரது ஆழ் மன நரம்பியல் மண்டலக்களில் பரவிசர்வதிகார ஆட்சியை நிலை நாட்டுகிறது

மனதுக்கும் உடலுக்கும் என்ன அய்யா தொடர்பு என் பலவும் கற்ற அறிஞரும் கூட ஏற்க மறுப்பது துயரம் ஏதோ மனம் என்பது வடதுருவம் உடல் என்பது தென் துருவம் என்றும் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர் என்றும் உடல் உபாதைகளின் ஏற்றுக் கொள்வதில்லை

ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை
உடல் நல மருத்துவர்கள் கூட உடன்படுவதில்லை
உடலை ஆராய்ச்சி செய்வதில் ஒரு அரை நொடி அவகாசம் மனதை ஆராய்வதில் செலுத்தினால் பல உடல் உபாதைகள் உற்பத்தியான இடம் தெரிந்து விடும்

உடனடியாக புரியும் சுற்றுப்புற சூழல் காரணங்களாலோ மறைமுகமாக ஆழமாக புதைந்து கிடந்த காரணங்களாலோ கண்டறிய முடியாத மர்மமான இரகசிய காரணங்களாலோ ஆழ்மனதில் ஏற்படும் உள்மன போராட்டங்களினால் தானியங்கி நரம்பியல் மண்டலங்களின்
செயல்பாடுகள் தடுமாறுகின்றன.

இந்த அச்சமெனும் தாயும் பதட்டமெனும் தகப்பெனும் பல உடல்
உபாதைகளை பெற்றெடுக்கின்றன
இந்த பதட்டத்தின் அறிகுறிகள் பட்டியல் மிகமிக நீளம் காணும் மனிதருக்குள் எத்தனை ச‌லனம் என்பார் கவிஞர் இன்னும் நாம் காணாத மனங்களுள்ளே எத்தனையோ சப்தம்

பொதுவாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உபாதையில்லாத இடமேயில்லை என பரவினிற்க்கும்
ஒரு விரல் தொட்டு உபாதை இல்லாத ஒரு சதுர சென்டி மீட்டர் பரப்பை உடலில் எந்த இடத்தினும் காண்பிக்க முடியாத அளவிற்கு உடலின் உபாதைகள் நிரம்பி வழியும்
அவரின் இன்னல்களின் பட்டியலை எழுதி வைக்க ஒரு புத்தகமே பற்றாது.
இன்னும் சொல்லப்போனால் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இவை உபாதைகள் கூட இல்லை என்கிறது அறிவியல்.

Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அச்சம் என்பது மடமையடா... Empty Re: அச்சம் என்பது மடமையடா...

Post by P Ramachandran Thu Jul 04, 2013 2:33 pm

migavum azagana katturai
azhangal viyakkavaithana.
P Ramachandran
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum