தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!''

View previous topic View next topic Go down

''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!'' Empty ''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!''

Post by தமிழ்ச்செல்வி Wed Sep 05, 2012 10:37 am

''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!'' 390387_178470935576874_628015237_n

கார்த்திகா மினுமினு ரகசியம்

'என்னமோ ஏதோ’வெல்லாம் இல்லை அசரடிக்கும் உயரம். அட்டகாசமான புருவம்!

கார்த்திகா... ராதாவின் க்ளோனிங் குழந்தை. 'கோ’ நாயகிக்கு, ஒரு படத்தில் நடித்த களைப்புக்கே கொச்சின் ஓய்வு தேவைப்படுகிறது. ''நாலு நாள் வேலை இல்லைன்னாக்கூட, 'விட்டாச்சு லீவு’ன்னு மலைப் பிரதேசங்களுக்குப் போயிடுவேன். இயற்கையான காற்றும் இதமான சூழலும் உடம்பை செமத்தியா ரீ- சார்ஜ் பண்ணும். 'தினமும் ஜிம்’கிற பழக்கம் எனக்குக் கிடையாது. ஆனா, ஷூட்டிங் நேரத்தில் உடம்பை ஃபிட்டா வெச்சிருப்பேன். மத்த நேரங்களில் ரெஸ்ட் மட்டும்தான். தவறியும் உடலை வருத்தக் கூடாதுங்கிறது என் பாலிசி. மரம், செடி, கொடி மாதிரிதான் இந்த உடம்பும். இயற்கையான முறையில் பராமரித்தாலே, பாதிப் பிரச்னைகள் இருக்காது!''- மெனு லிஸ்ட் போல் படபடக்கிறார் கார்த்திகா.

''பயிற்சிகள் ஏதும் இல்லாமலேயே உடம்பை ஃபிட்டா வெச்சுக்கிறது சாத்தியமா?''

''ஜிம்மிலேயே பழியாக்கிடந்து வியர்வையில் நனைவது, ஹோம் வொர்க் மாதிரி தவறாமல் பயிற்சி செய்வது, வயிற்றைச் சுருக்கி உடலை வருத்தித் தலைகீழாகத் தொங்குவது மாதிரியான வேலைகளை நான் செய்யவே மாட்டேன். ஏரோபிக்ஸ் மாதிரி சிம்பிள் பயிற்சிகள்தான் என் சாய்ஸ். அதுக்காகவே ஒரு கோச் இருக்கார். விரல்கள் தொடங்கி கை, கால் தசைகளுக்கான சின்னச் சின்ன பயிற்சிகள், கொஞ்ச நேரம் தியானம்... அவ்வளவுதான். சாயங்காலம் சும்மா ஜாலியா டான்ஸ் ஆடுவேன்.

என் ரூம் எனக்கே எனக்கேயான உலகம். நானே பாடி... நானே ஆடி மகிழ்ச்சியா இருக்கும் லோன்லி பிளானெட். ஷூட்டிங் இல்லாத நாட்களில் என் உலகம் இசையால் நிரம்பி வழியும். கிறங்கவைக்கும் இசைக்கு மென்மையான அசைவுகளோடு டான்ஸ் ஆடுவேன். இப்போ வெளிநாடுகளில் தாய்ச்சி டான்ஸ் ஒரு பெரிய பயிற்சியாகவே கொண்டாடப்படுது. காலை நேரத்தில் சாலை ஓரத்திலோ, பூங்காவிலோ நின்னுட்டு, குரூப் குரூப்பா ஸ்லோ டான்ஸ் ஆடிட்டு இருப்பாங்க. ஒரு மணி நேரம் தியானத்தில் உட்கார்ந்தால் கூடக் கிடைக்காத புத்துணர்வு, உலகை மறந்து டான்ஸ் ஆடும்போது கிடைக்கும்!''

''ரொம்ப உயரமா இருப்பதை நினைச்சு எப்போதாவது வருத்தப்பட்டு இருக்கீங்களா?''

''என் பெரியம்மா அம்பிகா மாதிரி உயரமா இருப்பதுதான் என் ப்ளஸ்! தீபிகா படுகோன் எவ்வளவு உயரமா இருக்காங்க பார்த்தீங்களா? நடையும் டான்ஸும் நல்லா இருக்கணும்னா, பெண்களின் உயரம் அதிகமா இருக்கணும். அது கச்சிதமா அமைஞ்சு இருப்பது என் வரம். இயல்பிலேயே நல்ல உயரமா இருப்பதால், ஹை ஹீல்ஸ் போட்டு உடம்பை வருத்திக்க வேண்டிய அவசியமும் இல்லை!''

''உணவு முறை எப்படி?''

''ஸ்வீட்ஸ் நிறையப் பிடிக்கும். இன்னமும் சாக்லேட்டுக்கு ஆசைப்படும் குழந்தை நான். இப்போ ஸ்வீட்ஸ் ஆசையைக் கொஞ்சம் தியாகம் பண்ணிட்டு இருக்கேன். கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே தவிர்த்திடுவேன். ஆயில் அயிட்டங்களைத் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டேன். காலையில் வெறும் வயிற்றில் வெஜிடபிள் ஜூஸ் குடிப்பேன். நொறுக்குத் தீனிகளுக்குத் தடா. காய்கறி உணவு சாப்பிடச் சொல்லி அம்மா அதட்டுவாங்க. விரும்பியதை எல்லாம் சாப்பிட்டாலும், 'அமிர்தமே ஆனாலும் அளவோடுதான்’ பாலிசி எனக்கு. ஷூட்டிங்குக்காக வெளியூர் போனால் ஜூஸ் நிறையக் குடிப்பேன். வித்தியாசமான உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றோடு வம்பு பண்ணாமல் இருக்க, இதுதான் நல்ல வழி. தென் இந்திய உணவுகளைத் தவிர்த்து, புதுசா எதுவும் ரிஸ்க் எடுத்துச் சாப்பிட மாட்டேன்!''

''பளீர் சிரிப்பு, பல்லாங்குழி கன்னம்... ரகசியம் ப்ளீஸ்...''

''நாலு வார்த்தை பேசினால், ஏழு தடவை சிரிக்கிற ஆள் நான். அம்மா, பாட்டி, பெரியம்மான்னு எல்லா விதத்திலும் என்னைக் கொண் டாட ஆள் இருக்காங்க. அதனால், எதை நினைச்சும் கவலைப்பட மாட்டேன். அம்பிகா பெரியம்மாவோடு படம் பார்க்க தியேட்டருக்குப் போனா, அவ்வளவு ஜாலியா இருக்கும்.

என்னைப் பக்குவமாப் பாதுகாப்பதில் என் பாட்டிக்குத்தான் பெரும் பங்கு. முகத்துக்கு ஃபேஷியல் பண்ணவோ, கண்ட கண்ட க்ரீம்களைத் தடவவோ அனுமதிக்க மாட்டாங்க. இன்னிக்கு வரைக்கும் நான் ஃபேஷியல் பண்ணியதே இல்லைன்னு சொன்னா... நம்ப முடியுமா? மறைக்காமல் சொல்றேன்... முகத்தில் மாசு மரு இல்லாம இருக்கக் காரணம்... மஞ்சள் தூள்தான். இந்த விஷயத்தில் நான் அக்மார்க் தமிழச்சி. வீட்ல இருந்தா, நிறைய மஞ்சள் பூசிக் கல்யாணப் பொண்ணு மாதிரி மின்னிட்டே இருப்பேன். கடலை மாவு பூசிக் குளிப்பேன். முகத்துக்கு மட்டும் இல்லாம, உடல் வனப்புக்கும் கடலை மாவு ரொம்ப நல்லது. கூந்தலுக்குத் தேங்காய் எண்ணெய்தான். செயற்கை ஷாம்புகளைப் பயன்படுத்தி இந்தக் கூந்தலை நிச்சயம் பராமரிக்க முடியாது. பழம் பாசி மாதிரி இயற்கையான செடிகள் கிடைச்சா கூந்தலுக்குப் பயன்படுத்தலாம். ஏ.சி-யையோ ஃபேனையோ நம்பாமல், காத்து வாங்கக்கூட இயற்கையை நோக்கி ஓடும் அளவுக்கு என்னை மாற்றியது என் பாட்டிதான். மார்க்கெட் முழுக்க அழகு சாதனப் பொருட்கள் நிறைஞ்சு வழியும் இந்தக் காலத்திலும், மஞ்சள் தூளை நேசிக்கிற பொண்ணா என்னை வளர்த்தது பாட்டிதான். அழகுங்கிற விஷயத்தில் நான் பாட்டி சொல்லைத் தட்டாத பார்ட்டி!''
avatar
தமிழ்ச்செல்வி
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!'' Empty Re: ''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!''

Post by முரளிராஜா Thu Sep 06, 2012 2:45 pm

பகிர்வுக்கு நன்றி செல்வி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!'' Empty Re: ''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!''

Post by Manik Thu Sep 06, 2012 2:51 pm

கருப்பா இருந்தா மஞ்சள்தான் பூசனும்.......... ஏனா பிறவிகருப்பாச்சே என்னதான் க்ரீம் பூசுனாலும் வெள்ளையாக முடியாது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!'' Empty Re: ''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!''

Post by முரளிராஜா Thu Sep 06, 2012 2:54 pm

chellam wrote:கருப்பா இருந்தா மஞ்சள்தான் பூசனும்.......... ஏனா பிறவிகருப்பாச்சே என்னதான் க்ரீம் பூசுனாலும் வெள்ளையாக முடியாது
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்
உங்க அனுபவமாச்சே :011:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!'' Empty Re: ''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!''

Post by Manik Thu Sep 06, 2012 2:58 pm

அனுபவம்தான் ஏனா எங்க பாட்டி கருப்பு அவங்க க்ரீம்லாம் பூச மாட்டாங்க......... ''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!'' 378104
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!'' Empty Re: ''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!''

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum