தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோபத்தை தவிர்ப்பது எப்படி?

View previous topic View next topic Go down

கோபத்தை தவிர்ப்பது எப்படி? Empty கோபத்தை தவிர்ப்பது எப்படி?

Post by முழுமுதலோன் Thu Sep 12, 2013 12:28 pm

கோபத்தை தவிர்ப்பது எப்படி?

வள்ளுவர்வெகுளாமைஎன்ற தனி அதிகாரத்தையே
இதற்காக அர்ப்பணித்துள்ளார்.

பெரும் பாவங்களில் சினமும் ஒன்றாக கருதப்படுகிறது
கோபம் தீயினும் தீயதாக அஞ்சப்படுகிறது.

ருத்ரம்,கோபம்,வெகுளி சினம் ஆத்திரம் என்று ஆயிரம் நாமங்கள் கொண்ட கொடிய குணம் இல்லாத மனிதரை பார்ப்பதரிது.சொல்லப்போனால் இது மனிதகுல வளர்ச்சியில் மகத்தான பங்கு உள்ளது
ஆனால் அதைவிட அவர் வீழ்ச்சிக்கு காரணமான வரலாறுகள் ஏராளம்.

பாரதிருத்ரம் பழகு என்றார் புரட்சியாளர்களும் ரெளத்ரத்தை போற்றி பாடுகிறார்

சிவனோ ருத்ர மூர்த்தியாக அவதரித்தான்.பெரும்பாலான தெய்வங்கள் ரெளத்திரத்தின்அம்சங்களாகவேபடைக்கப்பட்டன                                                          

எனவே பரிணாம வளரச்சியில் சமூகத்தில் கோபம் எனபது ருத்ரம் என்ற பெயரால் சிறப்பாக போற்றப்பாடு புகழ் பெறறு கொள்ள வேண்டிய குணமாக சொல்லப்பட்டது.

ஆனால் அது தீமை கண்டு தீயேன பொங்கியெழும் நேர்மை
தீயவர்களை பொறுக்காது அழிக்கும் ஆண்மை,
தற்காப்புக்கான வீரம்,துணிவு போன்ற பண்பு நலன்களை உள்ளடக்கியது.

ஆனால் காலபோக்கில் சமூகபரிணாமவளர்ச்சியில்
இல்ல துணை,குழந்தைகள்,சகோதரர்,பெற்றோர் என தொழில் கூடம், சமூகம் விரிவடைய மக்களாட்சி தத்துவம் பலமடைந்து, மெல்லமெல்ல அரசன், தெய்வம்,சூரர் போன்றவருக்கு சொல்லபட்ட ருத்ரம் சாதாரண மக்களுக்கு விதி விலக்காகவைக்கபட்டது.

பின் யேசு ,புத்தர்,மகாத்மா போன்ற ஞானிகளும்,தலைவர்களும் சாந்தத்தை போதிக்க துவங்கினார்கள் பிறகு அவர்களும் சாந்த சொரூரமாகவே வாழ்ந்தார்கள்.

எனவே சமூக மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ருத்ரம் பின்னுக்கு தள்ளபட்டு சாந்தம் முன்னுக்கு வந்தது. மனிதர்களிடம் கோபம் என்பது ஒதுக்கபட வேண்டிய ஒரு தீய பண்பாக வழியுறுத்த பட்டது.

ஆனால் நடைமுறையில் பல ஆயிரம் ஆண்டுகளாக மிருகமாக வாழ்ந்ததில் அணிச்சை செயலாக கோபம் ஆகிவிட்டது.

எனவே சமூக மிருகமான மனிதன்  பெரும்பாலோனவர் விருப்பத்திற்காக தனது கோபத்தை கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்.

நடைமுறையில் பலர் இந்த திறமையில் வெற்றியடைய முடியாமல் தவிக்கிறார்கள். சிலர் இன்னும் போராடி கொண்டிருக்கிறார்கள் .
இன்று மனோதத்துவத்தில் கோபம் என்பது தனியொரு நோயாக நோயின் அறிகுறியாகவே ஆகிவிட்டது.

பெரும்பான்மையானவர் இது தவறு,கோபம் ஆபத்து என்பதை முழு மனதுடன் ஏற்று கொள்கிறார்.

ஆனால் தள்ள முடியாமல்,விட இயலாமல்,தவிர்க்க போராடி வருகிறார்.
பலவிதமான பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அடிப்படையான தத்துவம்,பிறப்பிடம்,வெளிப்பாடு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
எனவே கோபம் என்றால் என்ன,ஏன் வருகிறது,எப்படி வருகிறது என்பதை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கோபத்தை தவிர்ப்பது எப்படி? Empty Re: கோபத்தை தவிர்ப்பது எப்படி?

Post by முழுமுதலோன் Thu Sep 12, 2013 12:29 pm

கோபம் என்றால் என்ன?  

உணர்ச்சி,பயம்,பதட்டம்,அச்சம்,விரக்தி,சோகம்,போன்ற பல வகை உணர்ச்சிகளின் கூட்டு என்று சொல்லலாம்.மொத்தத்தில் அது ஒரு வகை எதிர்மறையான உணர்ச்சி என வகைப்படுத்தலாம்.

ஆனால் இப்படி கோபம் என்பது ஒரு எதிர்மறையான உணர்ச்சி என்று சொன்னால் கோபம் உள்ளவர்களுக்கு  நிறைய கோபம் வந்து கேட்கிறார்கள்,எப்படி நீங்கள் அதை எதிர்மறையானது என சொல்லலாம் என்று.

அவர்கள் கிடையாது அது வீரம் என்ற பாசிடிவ் அல்லது நேர்மறையான நன்மை தரும் உணர்ச்சியே

கோபம்,ருத்ரம் என்று மறுப்பார்கள் சண்டைக்கு வருவார்கள்.
எனவே சமாதானமாக இரண்டும் கலந்ததொரு இடைப்பட்ட உணர்ச்சி என வைத்து கொள்வோம்.

இன்னும் சொல்லபோனால் கோபத்தை இரு வகைபடுத்தலாம்.
நியாயமானது   அநியாயமானது
ஆனால் இதில்தான் சிக்கல் ஒருவருக்கு நியாயமாகபடுவது மற்றவருக்கு,அநியாயமல்லவா என்று தோன்றுகிறது.
அதுவும் கோபத்திற்கு மிகவும் இது பொருந்தும்.

ஆனால் நடைமுறையில் கோபத்தை தூண்டும் இரு மிக அடிப்படை ஆதாரங்கள் உண்டு
ஒன்று விரக்தி மற்றொன்று அடக்குமுறை அநியாயம்.

இயல்பாகவே எந்த ஒரு உயிரும் மனிதனும் தனது தேவைக்கு எண்ணத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு,நிகழும் போது சலிப்பும்,விரக்தியும் ஏற்படுவது இயல்பு

அதே போல தனது விருப்பம் மற்றும் அகத்துக்கு மாறாக செயல்பட நிர்பந்திக்க படும் போது ஏற்படும்

வேதனையும் அச்சமும் நிச்சயமாக எதிர்க்கும் விளைவை ஏற்படுத்தும் .
மற்றவர்களால் அல்லது நிகழ்வுகளால் விரக்தியின் உச்சத்தில் அநியாய அடக்கு முறையின் சிகரத்தில் மனிதனின் கொதி நிலை எல்லை தொடுகிறது எரிமலையாக வெடிக்கிறது.
கோபமென வெளிபடுகிறது.
கட்டுபடுத்தி கொள்ளபட்ட அல்லது வைக்கபட்ட செயல்கள் எல்லை மீறி பேச்சாக,அல்லது நடத்தையாக வெளிப்படும்.
அதீத நிலைகளில் வன்முறை,பொருள்சேதம்,தற்கொலை,கொலை என்ற நிலைகளே அடையாளம்.

எனவே நிச்சயமாக கோபம் என்பது நடைமுறையில் பல விரும்பதகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஆனால் நேர்மாறாக உணர்ச்சிகள் குறிப்பாக அடக்குமுறையால்,அநீதியால் வஞ்சிக்கபடும் போது ஏற்படும் விரக்தி மற்றும் வேதனைகள்,வலிகள் வெளிபடுத்தபடாமல் இருந்தாலும் நல்லதல்ல.
இந்த அடக்கி வைக்கப்பட்ட ஒடுக்கிவைக்கப்பட்ட விரக்திகள்,வேதனைகள் காற்று நிரம்பிய பந்து நீருக்குள் இருந்து வெளிப்பட அழுத்ததுடன் துடிப்பது போல மனஅழுத்தை ஏற்படுத்தும்.

சாதாரணமானவர்களுக்கு கோபம் என்பதே இயல்பான சுலபமான வெளிப்பாடு என்பது நடைமுறை உண்மை.ஆனால் நன்றாக சிந்தித்து பார்ப்போம்.உணர்ச்சிகளை எண்ணங்களை வெளிப்படுத்தாவிட்டால் அச்சம்,அழுகை,மன அழுத்தமும்,மனசோர்வு அதிகமாகிறது.
கோபம் என்ற கதவின் வழி வெளிப்பட்டால் பகை,இழிவு,அவமானம்,தோல்விஏற்படுகிறது.
மனிதர்கள் பாவம் அவர் மனம் அதை விட பரிதாபம்

பிறகு அவர்கள் எப்படித்தான் நிம்மதியாக அமைதியாக மகிழ்வாக வாழ்வது?
நாற்புறமும் தீயால் சூழப்பட்டவனின் நிலைமை இரு தலைக் கொள்ளி எறும்பு போல என மக்கள் வர்ணிப்பார்கள்.
ஒரு வீட்டின் கீழ்புறத்தில் நெருப்பு எரிகிறது.
எல்லாம் பற்றி எரிய உயிரை கையில் பிடித்து கொண்டு மொட்டை மாடிக்கு ஓடுகிறோம்.
அங்கிருந்து கீழே குதிப்பதை தவிர வேறு வழியில்லை.குதித்தாலும் தலை உடையும் உயிர் போகுமென அஞ்சி தவித்து குழப்பத்தின் உச்ச நிலையில் நிற்கிறோம்.

இதுவே கோபம் கொண்டவரின் பரிதாப நிலை?


இதிலிருந்து மீள வழியில்லையா இதுவே கேள்வி?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கோபத்தை தவிர்ப்பது எப்படி? Empty Re: கோபத்தை தவிர்ப்பது எப்படி?

Post by முழுமுதலோன் Thu Sep 12, 2013 12:31 pm

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியவர்கள் முதலில் கோபத்தினால் கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட சம்பவங்களை,முதலில் பட்டியலிட வேண்டும்.

போஸ்ட் மார்ட்ட ம் செய்வது போல நாம் அதை ஆய்வு செய்ய வேண்டும்.

நமக்கு ஏற்பட்ட பண இழப்புகள்,பதவி இழப்புகள்,நட்பு மாற்றங்கள் உறவு பகைகள்,வாய்ப்பு நழுவல்கள் போன்ற இறந்த கால தீமைகளை தெளிவாக நினைவுகூர்ந்து நல்லது

அதை ஒரு பட்டியலாக தயாரித்து எழுதுவது மிக அவசியம்

அதை மீண்டும் படிப்பது கோபத்தை தவிர்க்க வேண்டியதின் அவசியத்தை நம் மன ஆழத்தில் பதியவைக்கும்.

கோபத்தின் தீய விளைவுகளை பற்றிய தெளிவான உணர்வே கோபத்துக்கு அணை போடும் மிகச்சிறந்த சுவராகும்.

அது நமக்குள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

வரும் முன் காப்பதற்கான எச்சரிக்கை உணர்வை வலுப்படுத்தும்.

அதெல்லாம் நன்றாக புரிகிறது.ஆனால் குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு.
இனி கோபமே படக்கூடாது என்று குடிகாரரை போல சபதம் எடுத்தால் மறுநாள் அதை கட்டுபடுத்த இயலவில்லைஎன பலர் புலம்புவார்கள்.

உண்மைதான்.தும்மல்,விக்கல் போல கோபமும் பலருக்கு சுயக்கட்டுபாட்டை மீறிய அணிச்சை செயலாகி விட்டது உரசியதும் மற்றும் தீக்குச்சி போல தொட்டதும் பட்டென்று வெடிக்கும் பட்டாசு போல பலருக்கு கோபம்மிக இலகுவாக வருகிறது.

சிலருக்கு கோபம் வரவழைக்க கூடிய தூண்டுதல்கள் மிக சிறியதாக இருந்தாலே போதும்

அவர்களுடைய விரக்தியை தாங்கும் திறன் மிகவும் பலகீனமானதக அமைகிறது. நிறம் போல குணத்திலும் பல வண்ணமயமான படைப்புகள் இயற்கையாகவே அமைந்துள்ளன இது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.

என்னதான் இயற்கையான நிறமாயிருந்தாலும் மெருகேற்ற முடியும்
அது போல குணத்தையும் படிப்பு,பக்குவம்,பயிற்சியினால் பண்பேற்ற முடியும்.கோபம் என்ற கரடுமுரடான தளங்களை தேய்த்து குறைத்து பளபளப்பாக்க முடியுமே.

ஆனாலும் பலர் கோபம் அது எங்கள் கூடப்பிறந்தது.மாறாதது மாற்ற முடியாதது என விரும்பியோ விரும்பாமலோ ஏற்று கொள்கிறார்கள்.

இது தவறானது எல்லாவற்றையும் விட மிக மோசமானது கோபத்தை நியாயப்படுத்தி கொள்வதுதான்.

வேறு வழியில்லை மற்றவர் செய்யும் அநியாயங்களுக்கு எனது கோபம் நியாயமானதே என வாதிட துவங்குவது ஆபத்து

பழிக்கு பழி,கொலைக்கு கொலை,தவறுக்கு தவறு என்பது போல கோபத்துக்கு நியாயம் கற்பித்து கொள்வது தீய விளைவுகளில் போய் முடியும்.



நடைமுறையில் நமது உடலும்,மனமும்,வாழ்வும் பல வித இடையூறுகளை சந்திக்க நேரிடுகிறது.
உதாரணமாக நமது உடலின் அமைதிக்கு யாராவது பங்கம் விளைவித்தால் கோபம் வருவது இயற்கை

ஒலி,ஒளி,மனம்,வ்லி மற்றும் உறக்கம் போன்ற பல விசயங்களில் உறவினர் மற்றும் அயலார்களால் தடையும் துன்பமும் வருவது இயல்பு.

மேலும் நடத்தை,செயல்,பேச்சு,பார்வையால்  மனதிற்கு அறுவெறுப்பும்,அவமானமும் வர வாய்ப்புகள் உள்ளது.

அதல்லாது பொருளாதார சுகாதார மற்றும் பல அடிப்படை உரிமைகளில் மற்றவரால் ஏமாற்ற அல்லது நியாயம் கிடைக்காது அநீதி இழைக்கபடும்போது,என தினமும் ஒவ்வொரு நொடியும் சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் கோபத்தை வரவழைக்க கூடிய பல ஆயிரம் நிகழ்வுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் நன்றாக சிந்தித்து பார்க்கும் போது நட்பு,உறவு,சமூக செயல்பாடுகளில் திட்டமிடப்பட்ட அநீதிகளும்,அநியாயங்களும் குறைவு என்றே தோன்றுகிறது.
மிக நுட்பமான சமூக நட்புறவு பின்னல் வலையில் ஒருவருக்கு நியாமானது மற்றவருக்கு அநீதியாகிறது.

தனதுபாதையென்றுஒருவர்ஓடஅதுஅடுத்தவர்பாதையைகுறுக்கிடுகிறது,
என்பது கூட அவருக்கு புலப்படுவதில்லை.
தனக்கு நன்மையானது அடுத்தவருக்கு தீமையானது என்பதை கூட அவர் அறிவதில்லை.

இதன் விளைவாக நடைமுறையில் சமூகம் வளர வளர இயல்பாக அனைவரும் அமைதியிழந்து கொண்டே வர நேருகிறது.
நித்தம் நித்தம் ஒவ்வொரு மனிதரும் சிறியதாகவோ பெரிதாகவோ கோபப்பட நேரிடும்.
கோபம் என்பது குப்பைபோல நமக்கு அதிகமாகி வேலிதாண்டிகொட்டுகிறோம்

அது அடுத்தவரின் மனதை காயப்படுத்த அவர் அடுத்தவரை பற்றவைக்கிறார்.
இது அனு உலையில் ஏற்ப்படும் அணுவெடிப்பை போல‌ தொடர் நிகழ்வாக ஊரெங்கும் தொடரும்.

நாய் பூனையை துரத்த அது எலியை விரட்டுகிறது.
மனைவி கணவனை கடிக்க அவர் மேலாளரை திட்ட அவர் தொழிலாளரை மிரட்ட அவர் மனைவியை அடிக்கிறார்.
பெண்ணிடம் புறப்பட்ட கோபம் உலகம் சுற்றிவந்து பெண்ணையே தாக்குகிறது.

இதனால் வெகுளியை வெகுவான தீயென்று சொல்லிவைத்தார் பலரும் கோபத்தை அடக்க அது பதட்டமாகும்.

அதை தணிக்க பலர் புகை,கஞ்சா,பான்பராக் என பலவாறு தீய போதை பழக்கங்களுக்கு அடிமையாகி சிக்கி தவிக்கின்றனர்.

சிலர் அதீத கோபத்தில் மன சோர்வடைந்து தன்னைத்தானே காயப்படுத்தி கொள்வது தற்கொலை முயற்சிகளில் இறங்கி விடுகின்றனர்.

அதீத கோபம் வன்முறையாக வெடித்து உடைத்தல் தீ வைத்தல்,அழித்தல் என்றும் தொடரும் எல்லையில் பலர் கொலை,மற்றும் கூட்டு கொலை தொடர் கொலையென மதம் கொண்ட யானையென சினம் அடங்காது நடப்பதும் உண்டு.

மொத்தத்தில் தீராத கோபம் ஆறாத தீயாய் அனைவருக்கும் தீமை தருமென்பதில் சந்தேகமில்லை.

நன்றி Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கோபத்தை தவிர்ப்பது எப்படி? Empty Re: கோபத்தை தவிர்ப்பது எப்படி?

Post by sawmya Thu Sep 12, 2013 1:09 pm

நன்றி! நல்ல பகிர்வு!புன்முறுவல் 

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” புன்முறுவல் 

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்.

உண்மை.
யாராக இருப்பினும் யோசித்து பதில் அளித்தல் நன்று.

ம்ம்ம்...
நன்றாக யோசித்து பதில் அளித்தல் நன்று...கோபம் தவிர்ப்போம்!

வெறுப்பு,கோபம் என்பது விஷமாகும்! அதை விட்டொழித்தால் வாழ்க்கை வசந்தமாகும்.

கோபத்தை குறைக்க சில வழிகள்:

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுவோம். மற்றவர்களையும் அன்போடு பார்ப்போம். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்திப்போம்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்ப்போம். உடனே மனதை வேறு விசயத்தில் திருப்புவோம்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருப்போம்.

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிப்போம்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்வோம்.

6. நம்மை பற்றி அவதூறாக யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதிருப்போம். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவோம். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

7. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதிருப்போம்.

(ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதிருப்போம்.)

8. எதிரிகளை அலட்சியம் செய்வோம். எதிரியை நண்பனாக்கிக்கொள்வோம்.

(நமக்கு தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.)

9. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுவோம்.

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுவோம்.


10. எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கோபத்தை தவிர்ப்பது எப்படி? Empty Re: கோபத்தை தவிர்ப்பது எப்படி?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 1:11 pm

யேசு ,புத்தர்,மகாத்மா போன்ற ஞானிகளும்,தலைவர்களும் சாந்தத்தை போதிக்க துவங்கினார்கள் பிறகு அவர்களும் சாந்த சொரூரமாகவே வாழ்ந்தார்கள்.
கோபம்,ருத்ரம் என்று மறுப்பார்கள் சண்டைக்கு வருவார்கள்.
எனவே சமாதானமாக இரண்டும் கலந்ததொரு இடைப்பட்ட உணர்ச்சி என வைத்து கொள்வோம்.
நம்மை பற்றி அவதூறாக யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதிருப்போம். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவோம். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.
கடைபிடிக்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கோபத்தை தவிர்ப்பது எப்படி? Empty Re: கோபத்தை தவிர்ப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum