தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விபத்து - தவிர்க்கும் வழிகள்

View previous topic View next topic Go down

விபத்து - தவிர்க்கும் வழிகள் Empty விபத்து - தவிர்க்கும் வழிகள்

Post by மகா பிரபு Wed Oct 16, 2013 9:37 am

நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அலுவலகம் போன அப்பாவோ, கல்லூரிக்குப் போன அண்ணனோ, குறித்த நேரத்தில் வீடு திரும்பாதபோது, அவரது மொபைல் போனைத் தொடர்பு கொண்டால், 'தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்’ என்று வந்தால், மனசு எவ்வளவு பதறித் துடிக்கும்.  


டியூஷனுக்கு சைக்கிளில் சென்ற அக்கா, தங்கை, தம்பி வீடு திரும்பத் தாமதம் ஆகிறது. நடைப்பயிற்சிக்குச் சென்ற அப்பா, அம்மா வீடு திரும்ப வழக்கத்தைவிட வெகுநேரம் ஆகிறது.
இந்த மாதிரியான சூழ்நிலைகளில், நமக்குத் தோன்றும் முதல் எண்ணமே... 'எங்காவது வழியில் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்குமோ?’ என்பதுதான். பதற்றமும் படபடப்பும் நம்மைத் தொற்றிக்கொள்ளும். விடாமல் அவர்களை, தொலைபேசியில் தொடர்புகொண்டே இருப்போம். சாலைப் போக்குவரத்து நமக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்பது கசப்பான உண்மை.
விபத்து - தவிர்க்கும் வழிகள் P31''விபத்துகள் பற்றிய போதிய விழிப்பு உணர்வு நம்மிடம் இல்லை. விபத்துக்களைத் தடுப்பதற்கான முறைகளைத் தெரிந்துகொள்வதன் மூலம், நம் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் சுப.திருப்பதி.
'மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களைப் பற்றித்தான் நாம் அதிகம் கவலைப்படுகிறோம். அதைவிட முக்கியமான, நாள்தோறும் யாருக்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் ஏற்படக்கூடிய விபத்து பற்றிய கவலை, விழிப்பு உணர்வு இன்றி இருக்கிறோம்.
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கூட்டிய உலக பாதுகாப்பு மாநாட்டு (World Safety Conference) ஆய்வு அறிக்கையில், உலகில் மரணம் ஏற்படுத்தக்கூடிய நோய் மற்றும் காரணங்களில் சாலை விபத்து மரணமானது 2030 ஆண்டுவாக்கில் ஐந்தாவது இடத்தை எட்டும் எனவும், 'கொள்ளை நோய்’ (Epi-demic) என்ற நிலைப்பாட்டை அடையும் என்றும், மேலும், வளரும் நாடுகளில் 90 சதவிகிதம் பாதிப்பு இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.


விபத்து நடப்பதற்கு, சூழ்நிலை மட்டுமே காரணம் இல்லை. விபத்து - தவிர்க்கும் வழிகள் P30aமனம் மற்றும் உடல்நிலைதான் முக்கிய காரணம். பெரும்பாலான விபத்துக்கு அதிவேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாதது, கவனச்சிதறல் ஆகியவையே மிக முக்கிய காரணங்கள்.


செல்போனும் விபத்தும்


இந்தியாவில் ஆண்டுக்கு 1.42 லட்சம் பேர் விபத்தில் உயிர் இழக்கின்றனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைகின்றனர். இதில் அதிக அளவில் விபத்து ஏற்படுவதற்கு வாகனம் ஓட்டும் நேரத்தில் ஏற்படும் கவனச்சிதறலே முக்கிய காரணம். கவனச் சிதறல் ஏற்படுத்தும் காரணிகளில் முதல் இடத்தில் செல்போன் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணம் அருகே ரயில் விபத்து ஏற்பட அதன் டிரைவர் செல்போன் பயன்படுத்தியதுதான் முக்கிய காரணம்.


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotவாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது (ஹேண்ட்ஸ் ஃப்ரீ போட்டிருந்தாலும்) அல்லது எஸ்.எம்.எஸ். டைப் செய்வது போன்றவை கவனத்தைத் திசைதிருப்புகின்றன.


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot கவனச்சிதறல் ஏற்படுத்தி விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை 23 மடங்கு அதிகரிக்கிறது செல்போன்.


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot எஸ்.எம்.எஸ். வரும்போது அது என்ன என்று அறியும் ஆர்வம் ஐந்து நொடிகளுக்கு, கவனத்தை திசைதிருப்புகிறது. விபத்து ஏற்பட இந்த இடைவெளி போதுமானது.


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot  செல்போனில் இருந்து வரும் செய்திகள், நம் மனதை பல்வேறு நிலைக்கு மாற்றிவிடக்கூடியவை. சந்தோஷச் செய்தியோ, துக்கமான விஷயமோ எதுவானாலும், நம் மனதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குச் சில நொடிகள் முதல் பல மணி நேரங்கள் பிடிக்கும்.  வீடு, அலுவலகம் தவிர மற்ற பொது இடங்களில் செல்போன் பேசியபடி போவதைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் காயமோ, உயிர் இழப்போ ஏற்படுவதைத் தவிர்க்கும்.


தேவை எச்சரிக்கை உணர்வு


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotவிபத்தில் பெரும்பாலும் ஆண்கள்தான் சிக்குகிறார்கள். பெண்களுக்கு எப்போதுமே பொறுப்பு உணர்வும், எச்சரிக்கை உணர்வும் உண்டு. எதையும் நிதானமாகக் கையாளக் கூடியவர்கள். ஆண்களுக்கு, எப்போதுமே எதிலும் அவசரம். நான்தான் முன்செல்ல வேண்டும் என்ற வேக உணர்வால் ஆக்சிலேட்டரை வேகமாக முறுக்கி முன்னே சென்று விபத்தில் சிக்குகின்றனர்.


பாதுகாப்பு அவசியம்


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotஇன்று விபத்துக்கு உள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தலை காயத்துடன்தான் வருகின்றனர். இருசக்கர வாகனம் ஓட்டிகள், ஹெல்மெட் அணிவதன்மூலம் தலையில் காயம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotபயணத்தின்போது, யார் இடதுபுறம், யார் வலதுபுறம் செல்வது என்பதில் கவனம் தேவை.


விபத்து - தவிர்க்கும் வழிகள் P31a
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot நான்கு சக்கரவாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்ல, பயணிப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட்  அணிய வேண்டும். இதன்மூலம், விபத்து ஏற்படும்போது, அதன் தாக்கம் 40 சதவிகித அளவுக்குக் குறைய வாய்ப்பு உள்ளது.


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot அடிக்கடி ஆக்ஸிலேட்டரை அதிகப்படுத்தியபடியே பிரேக்கைப் பிடிக்கக்கூடாது. இதனால் வண்டி ஒரு பக்கமாக விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைத் தவிர்க்கலாம்.  


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot வளைவுகளில்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன.  எனவே, நிதானம் தேவை.  


கவனம் தேவை


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotவண்டியை எடுக்கும்போது, ஸ்டாண்ட் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறதா, பிரேக், லைட் சரியாக இருக்கிறதா என்று கவனிக்கவேண்டியது அவசியம்.  
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot உடல் நலக் குறைவு இருக்கும்போது வண்டியை ஓட்டாமல் இருப்பதே நல்லது.


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot சிலர், வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ ஏற்படும் பிரச்னைகளுடன் கோபமாக வாகனத்தை ஓட்டுவார்கள். இந்த நேரத்தில் அவர்கள் உடலில் 'அட்ரினல் ஹார்மோன்’ அதிகமாகச் சுரக்கும். இதனால் படபடப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படலாம். மனக் குழப்பத்துடன் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.


விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotவண்டியை ஓட்டும்போது, பின்னால் உட்கார்ந்து இருக்கும் நண்பர்களுடன் பேசியபடியே வண்டி ஓட்டுவதும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. சொல்லப்போனால், வாயில் பிளாஸ்திரி அணிந்து ஓட்டுவதுகூட, சேஃப்டிதான்' என்கிறார் டாக்டர் திருப்பதி.



- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: புகழ்.திலீபன், தே.திட்ஷித்,
ர.சதானந்த்



 
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

விபத்து - தவிர்க்கும் வழிகள் Empty Re: விபத்து - தவிர்க்கும் வழிகள்

Post by மகா பிரபு Wed Oct 16, 2013 9:38 am

விபத்துத் துளிகள்:

விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot உலக மோட்டார் வாகனங்களில் மொத்த எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு ஒரு சதவிகிதம்தான். ஆனால்,  உலகில் ஏற்படக்கூடிய சாலை விபத்துகளில் ஆறு சதவிகிதம் இந்தியாவில்தான் ஏற்படுகிறது.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot உலகில் நிகழும் 10 சாலை விபத்து மரணங்களில், ஒன்று இந்தியாவில் ஏற்படுகிறது. அதாவது, ஒரு மணி நேரத்துக்கு சுமார் 14 பேர் மரணம் அடைகிறார்கள்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotஒவ்வொரு 1.9 நிமிடத்துக்கும், ஒரு சாலை விபத்து மரணம் நடக்கிறது.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot15 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர்தான் விபத்துகளுக்கு உள்ளாகிறார்கள்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் P32

 விபத்தைத் தவிர்ப்போம்

விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotவாகனம் ஓட்டும்போது எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அவ்வப்போது ஸ்பீடாமீட்டரைப் பார்த்து கண்காணிக்க வேண்டும். உங்களுக்கான வேகம் எவ்வளவு என்பதில் தெளிவாக இருங்கள். இதனால், அதிவேகத்தில் செல்வதைத் தவிர்க்கலாம்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் அல்லது ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்த வேண்டாம்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotசாலை விபத்து பற்றிய விழிப்பு உணர்வு குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுத்தப்பட வேண்டும்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotமோட்டார் சைக்கிள் ரேஸ் போன்ற வீடியோ, கம்ப்யூட்டர் விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும். இது குழந்தைகள் மனதில் வேகமாக வண்டி ஓட்டும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotகுறிப்பிட்ட கால இடைவெளியில் பார்வைத் திறனைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotநன்கு ஓய்வு எடுத்தபின்பு, ஆரோக்கியமான நிலையில் வாகனம் ஓட்டுங்கள். தூக்கத்தைத் தரும் மாத்திரை மருந்துகளை உட்கொண்டுவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotநீண்ட பயணத்தின்போது, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை 15 நிமிடங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot வாகனம் ஓட்டும்போது தூக்கம் வந்தால், பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி ஓய்வெடுங்கள். அல்லது காபி போன்ற தூக்கத்தை விரட்டும் பானங்கள் அருந்தலாம்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotஅதிகாலை 2 முதல் 6 மணி வரை மிகுந்த கவனத்துடன் வாகனம் ஓட்டுங்கள்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotமதிய உணவுக்குப் பிறகு 2 முதல் 4 மணி வரையில் வாகனம் ஓட்டும்போதும் கவனம் தேவை.
 சட்டத்தின் பார்வையில்...

விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ரூ.500 அல்லது மூன்று மாதங்கள் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.  
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotவாகனக் காப்பீடு இன்றி வாகனம் ஓட்டினால், ரூ.1000 அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotசிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டினால், ரூ.500 அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dotஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ரூ.100 அபராதம்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ரூ.2,000 அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தினால், காப்பீடு பலன் எதுவும் கிடைக்காது.
விபத்து - தவிர்க்கும் வழிகள் Dot வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால், ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.

நன்றி : விகடன்
 
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum