தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:13 pm

இந்த திரி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவை ஆரம்பிக்கிறேன்................,

உங்கள் ஆதரவுடன்......................,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:20 pm

மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி...


சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை,
சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பது ஒரு பழைய பழமொழி ! இஞ்சி
காய்ந்தால் சுக்கு ஆகும்

இது பல மருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி
என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு மிகவும் நன்மை செய்பவை ஆகும்

தமிழ் பெயர் இஞ்சி
ஆங்கில பெயர் Ginger
அறிவியல் பெயர் Zinziber

100 கிராம் இஞ்சியில் உள்ல சத்துக்கள்...

சக்தி (Energy) 67 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 80.9 கிராம்
புரதம் (Protein) 2.3 கிராம்
கொழுப்பு (Fat) 0.9 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.2 கிராம்
நார்ச்சத்து (Fibre) 2.4 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 12.3 கிராம்
கால்சியம் (Calcium) 20 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 60 மி.கி
இரும்பு (Iron) 3.5 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 405 மி.கி
செம்பு (Copper) 0.74 மி.கி
மாங்கனீசு (Manganese) 5.56 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 1.93 மி.கி
குரோமியம் (Chromium) 0.057 மி.கி
கரோட்டீன் (Carotene) 40 மை.கி
தையாமின் (Thiamine) 0.06 மி.கி
ரைப்போஃப்ளேவின் (Riboflavin) 0.03 மி.கி
நியாசின் (Niacin) 0.6 மி.கி
வைட்டமின் சி (Vitamin C) 6 மி.கி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:21 pm

இது மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய
பயிராகும் .வேரில் மஞ்சள் போலவே இருக்கும் .பொங்கலின் பொது இஞ்சி கொத்தும்
மஞ்சள் கொத்தையுமே புது பொங்கல் பானையில் கட்டுவார்கள். இது பல நோய்களுக்கு
அருமருந்தாக இது உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது;
மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க
உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி
வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது
நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை
வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல்,
பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.
இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

சுக்கு+கொத்துமல்லி விதையை பொடி செய்து அதை தண்ணீரில் கொதிக்க வைத்து
அத்னுடன் வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
வயிற்றில் சேரும் கொழுப்பு கரையும்.தொப்பை குறையும். செரிமான பிரச்சினை
நீங்கும்.மலச்சிக்கல் தீரும். நன்றாக பசி எடுக்கும். இந்த பானத்தை காலை
மாலை இருவேளையும் அருந்தலாம்.

ஆக முன்று தோஷத்தையும் நீக்கும்
ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று
நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை
பெறும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும்
வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும்
பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய
நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி. பொதுவாக
நாம் அரிசியையே பிரதான உணவாக தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு
காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, “பைப்ரினோலிடிக்” செயற்
பாடுகுன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம்
ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி
தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பை உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியையும் சுக்கையும் உபயோகிக்கும் போது சுத்தி செய்தல் மிக
முக்கியமானது .இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்ப்படும்.

இஞ்சியை சுத்தம் செய்ய அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல்
தோல் நஞ்சாகும் .அதே போல் சுக்கை சுத்தம் செய்ய அதன் மேல் சுண்ணாம்பை
தடவிகாயவைது ,பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி
எடுக்கவேண்டும் .இது மிக முக்கியமானது சுத்தம் செய்யாமல்
உபயோகிக்கவேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு
சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும்
அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக
ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம்
முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும்,
அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.

அது என்ன இஞ்சி இடுப்பழகி என ஒரு குரல் கேட்கிறது. தினம் ஒரு துண்டு
இஞ்சியை அரைத்து ஒரு குவளை மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப்
பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும்
கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.”

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து
குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட
வேண்டாம்.

இஞ்சி- சுக்கு இவை உடம்பில் உள்ள அனைத்து நோய் கிருமிகளையும் போக்கும் ஆற்றல் படைத்த ஒரு சர்வ ரோக நிவாரிணி .
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by Manik Sun Sep 16, 2012 3:25 pm

சூப்பர் தம்பி இஞ்சியை பத்தி ரொம்ப விரிவா சொல்லியிருக்க அனைவருக்கும் பயன்படும்

முடி உதிர்வைத் தடுக்க எதாவது நல்ல வழி இருந்தா சொல்லு தம்பி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:27 pm

Chellam wrote:சூப்பர் தம்பி இஞ்சியை பத்தி ரொம்ப விரிவா சொல்லியிருக்க அனைவருக்கும் பயன்படும்

முடி உதிர்வைத் தடுக்க எதாவது நல்ல வழி இருந்தா சொல்லு தம்பி


சொல்லிட போச்சு {புரியிதா}
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by Manik Sun Sep 16, 2012 3:28 pm

புரியுது

இருக்குற முடியும் போயிரும்னு சொல்ற பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:30 pm

Chellam wrote:புரியுது

இருக்குற முடியும் போயிரும்னு சொல்ற இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... 919379873 இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... 919379873 இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... 919379873


புரிச்ச சரி..... இப்ப சொல்லுங்க...., சொல்லடுமா நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by Manik Sun Sep 16, 2012 3:31 pm

எதாவது நல்ல வழியை சொல்லுடான்னா ஏண்டா இப்படி பன்ற
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:32 pm

Chellam wrote:எதாவது நல்ல வழியை சொல்லுடான்னா ஏண்டா இப்படி பன்ற


கண்டிப்பாக சொல்கிறேன் விரைவில்............................................
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by ஸ்ரீராம் Sun Sep 16, 2012 3:34 pm

ஆஹா அருமையான விஷயம். நானும் பதிவிட இந்த திரியை பயன்படுத்திக்கொள்கிறேன். நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:35 pm

கௌரிசங்கர் wrote:ஆஹா அருமையான விஷயம். நானும் பதிவிட இந்த திரியை பயன்படுத்திக்கொள்கிறேன். நன்றி


கண்டிப்பாக அண்ணா நாம் தொடர்ந்து பதிவு செய்யலாம்................
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by ஸ்ரீராம் Sun Sep 16, 2012 3:58 pm

சரி தம்பி ..!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by முரளிராஜா Sun Sep 16, 2012 9:16 pm

அருமையான அனைவருக்கும் பயன் உள்ள திரி
தொடர்ந்து பதிவிடுங்கள் உயிர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 9:18 pm

சூர்யா wrote:அருமையான அனைவருக்கும் பயன் உள்ள திரி
தொடர்ந்து பதிவிடுங்கள் உயிர்


நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by மகா பிரபு Sun Sep 16, 2012 9:22 pm

மிகவும் அருமையான பகுதி.. தொடர வாழ்த்துக்கள்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 9:23 pm

ஜெயம் wrote:மிகவும் அருமையான பகுதி.. தொடர வாழ்த்துக்கள்..


உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 5:20 pm

சித்த மருத்துவத்தில் தேனின் பயன்
இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள்
பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....

* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொத
ிக்கும்
சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற
வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த
வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும்
குணமாகும்.

* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு
இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.
இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு
தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.

* வயிற்றில்
எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு
முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில
நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன
குணமாகிவிடும்.

* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க
வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து
காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும்.
இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி
நின்றுவிடும்.

* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய
துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து,
அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட
வயிற்று நோய் குணமாகும்.

* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி
ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க
வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக்
கோளாறுகளும் குணமாகும்.

* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும்.
அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து
அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.
வயிற்றிலுள்ள புண் குணமாகும்.

* குப்பைமேனிச் செடியின் வேரை
இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து
அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள்
வெளியேறும்.

* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில்
இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன்
ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள்
வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.

* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 5:23 pm

பாசிப்பயறு அல்லது பயறு அல்லது பயத்தம் பருப்பு
அல்லது பாசிப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப்
பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழர்
சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்க
ட்டை,
மோதகம் ஆகியவை இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. முளைக்க
வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்கப்படுவதுண்டு.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி
மாவட்டங்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் “பாசிப்பருப்பு
பாயசம்” மிகவும் புகழ் பெற்றது.
பயறு என்பது தமிழில் காணப்படும்
பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு
பயறுகள் உள. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு
உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும்.
லெக்யூம் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி விதைகளே பயறுகள் ஆகும்.
ஆங்கிலத்தில் கடினமான மேற்புறத் தோல் அல்லது மேல் பரப்பைக் கொண்ட விதைகளை
பல்ஸ் என குறிப்பிடுகின்றனர். இவற்றில் புரதசத்து மிகுந்துள்ளது. இவை ஊன்
உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிக புரதம் கிடைத்திடச்
செய்யும்.
தொன்றுத் தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும்
பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களை விட இவை சத்துக்கள் கூடுதலாகவும்
குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகக் காணப்படுகின்றன. எனவே, இவற்றை எளிதாக பல
நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக
மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு
வகைகளிலேயே அதிக சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய்
நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு
என்றால் அது மிகையல்ல. முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின்
மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு
வகைகளில் 20-28% புரதச்சத்தும் 60% கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும்
காணப்படுகின்றன. அதிலும் சோயா பயறில் 48% புரதமும், 30% மாவுச்சத்தும்
காணப்படுகின்றது. இது பயறு வகைகளிலேயே அதிகம்.
கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்புச்சத்து போன்ற சத்துக்களும், தியாமின், நியாசின் போன்ற
வைட்டமின்களும் இவற்றில் கூடுதலாகும். 100 கிராம் பயறில் 24.5 கிராம்
புரதம், 140 மிகி. கால்சியம், 30 மி.கி. பாஸ்பரஸ், 8.3 மி.கி.
இரும்புச்சத்து, 0.5மி.கி. தயாமின், 0.3மி.கி. ரிபோபிளேவின், 2.0மி.கி.
நியாசின் போன்றவை உள்ளது. சராசரியாக பயறு வகைகளில் 345 கிலோ எரி சக்தியும்
உள்ளன.
பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு
வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில்
காணப்படுகின்றது. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம்
பெற்றிருக்கின்றன. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்,
ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி
பற்றாக்குறையை தவிர்த்திடும். பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில்
புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. அதை அப்படியே பயன்படுத்துவதை
விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும்.
முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டுச்செய்யும்
தன்மைக்கிடையாது. எளிதில் செரிமாணமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தருவாயில்
அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய
பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளர
கூடிக் கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாகவே
சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து
பின்னர் வெல்லம்/சர்க்கரை இட்டும் சாப்பிடலாம். வெந்த பயறை கூட்டு, பொரியல்
ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்.
மருத்துவக் குணங்கள்:
புன்செய்
நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு.
சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் ஜீரணமாவதும் வயிற்றில்
வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி
ஆறுமாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக்
காட்டும்.
கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு
மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம்
குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில்
ஜீரணமாகக் கூடியது.
நீர்த்த கஞ்சி, குழைந்த கஞ்சி, பாயசம், வேகவைத்த
பருப்பு, துவையல், ஊறவைத்து வறுத்து உப்பு, காரமிட்ட பயறு, சுண்டல்,
கறிகாய்களுடன் சேர்த்து அரைகுறையாக வெந்த கோசுமலி, பொங்கல் எனப் பலவகைகளில்
உணவுப் பொருளாக இது சேர்கிறது.
பயறு பல வகைப்படும். பாசிப் பயறு,
நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு என்று.
இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும்,
காராமணியும் பயறு என்ற பெயரில் குறிப்பிடப்படுபவையாயினும் வேற்றினத்தைச்
சேர்ந்தவை. தட்டைப் பயிறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.
பச்சைப் பயறு இரண்டுவிதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சை தானியமாகப்
புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின்
ஓய்வு நாட்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சை தானியமாக விளைவது நல்ல
பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல்
நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றே குறைய ஒரே குணமுள்ளவை தான்.

பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல
ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ரத்தத்தில்
தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் மலம் அதிகமாகத்
தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது
குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது
உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.

பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின்
மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின் பயற்றங்
கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம்
ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத்
தணிக்க இது பெரிதும் உதவும்.
பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன
வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள
கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
தலையில் உள்ள
எண்ணெய்ப் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும்
குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது இது அதிகம்
உதவுகின்றது. இதன் மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி தாய்ப்பால் தரும்
மாதரின் மார்பில் பற்றிட பால்க்கட்டு குறைந்து வீக்கம் குறையும். மார்பின்
நெறிக் கட்டிகளும் குறையும்.
பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
பச்சைப் பயறின் தன்மை ஈரலின் ‌பிர‌ச்‌சினையை அ‌திகமா‌க்கு‌ம்.
எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் பச்சைப் பயறை வேக வைத்து அ‌ந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
ப‌ச்சை‌ப் பயறை அ‌திக‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உட‌ல் அ‌திக கு‌ளி‌ர்‌ந்த
த‌ன்மையை அடை‌ந்து‌விடு‌ம். எனவே ஆ‌ஸ்துமா, சைன‌ஸ் போ‌ன்ற
நோயு‌ள்ளவ‌ர்க‌ள் கவனமாக கையாள வே‌ண்டு‌ம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 3:44 pm

கராம்பின் மகிமை


கராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இது
பெரும்பாலும் ஊக்குவித்தல் , தூண்டுதலை உண்டாக்கும் பொருளாக உள்ளது . பல
வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல் , வாயுத்தொல்லை போன்றவற்றுக்கும்
மிகச் சிறந்த நிவாரணி .

உடலைப் ப
ருமனடையச்
செய்யவும் வளர்ச்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும்
இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலனளிக்கிறது.
ஜீரண உறுப்புக்களில் சுரக்கும் நொதியங்களை கராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக் கோளாறுகள் நீங்குகின்றன.
கராம்புப் பொடியை வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி
நிற்கும். கராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில
உறுப்புக்களை விறைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
நான்கு
கிராம் கராம்பை மூன்று லீற்றர் தண்ணீரில் போட்டு அரைப் பங்காக சுண்டும்
அளவிற்கு கொதிக்க வைத்து பருகினால் கொலரா குணமடையும்.
சிறிது
சமையல் உப்புடன் கராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு
நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க ,
சுட்ட கராம்பு மிகச் சிறந்தது.
கராம்பு எண்ணெய் மூன்று துளியுடன்
தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்கு போகும் முன்பு
சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கராம்புகளை போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும் .
கராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம் ,
ஈறு வீக்கம் , பல்வலி ஆகியவை குணமாகும். கராம்பு எண்ணெய் பாதிக்கப்பட்ட
ஈறுகளில் தடவி வர குணம் கிடைக்கும்.
35 துளி நல்லெண்ணெயில் ஒரு கராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயைத் வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
தசைப்பிடிப்புள்ள இடத்தில் கராம்பு எண்ணெய் தடவி வர குணம் கிடைக்கும்.
கராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை தடவினால்
தலைவலி பறந்துவிடும் . தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைப்
பாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.


நன்றி: இணையம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 3:47 pm

குணம்
வாந்தியுண்டாக்கி
வெப்பமுண்டாக்கி
தடிபுண்டாக்கி,
கொப்புளம் எழுப்பி
செரிப்புண்டாகி ,

சிருநீர்பெருக்கி ,


உடலில் உள்ள நச்சுத் தன்மையை போக்கும்,
ஜீரணசக்தியை ஏற்படுத்தும்.
வாதத்தொடர்பான நோய்களை தணி க்கும்.
குடி போதையை முறிக்க பயன்படும்



‌தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு
மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு
வெ‌ந்‌நீ‌ர்
குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌வற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.

‌விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை
சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து
‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி
உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.

தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம்.

கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம்.

கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம்.

கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை
அரை‌‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை
உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம்.

கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌‌சி‌க்கா‌ய், கடுகு,
ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி
வடிக‌ட்டி
இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம்.

கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி
வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம்
‌கி‌ட்டு‌ம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 3:48 pm

கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற
எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol
–[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic]
வயிற்றுப்புழ
ுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

== மருத்துவப் பயன்கள் [ஆதாரம் தேவை]==

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து
‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும்,
அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும்
நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக்
கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர,
பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

===உடல் உள் உறுப்புகள் சீராக இயங்க[ஆதாரம் தேவை]===

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில்
கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்
செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு
முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

===இரத்த அழுத்த நோய் குணமாகும்[ஆதாரம் தேவை]===

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால்,
ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய்
இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த
எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர்
வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம்
சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன
அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
சீரகம், சுக்கு,
மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக்
கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக
சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து
மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல்
வற்றி, நலம் பயக்கும்.
சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன்
சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர,
நல்ல பலன் கிடக்கும்.
சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

===இரத்தத்தைச் சுத்தமாக்குகிறது[ஆதாரம் தேவை]===
சீரகம்

நாட்பட்ட கழிச்சல் தீர மற்ற மருந்துகளுடன் சேர்த்து கொடுக்க நல்ல பலன்
தரும். இரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, தோல் நோய்களைக்
கட்டுப்படுத்துகிறது,
பசியின்மை, வயிற்றுப்பொருமல்,
சுவையின்மை,நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம்+கொத்தமல்லி+சிறிது இஞ்சி இவைகளை
லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது
நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.
வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.
தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும்.
விக்கலை நிறுத்தும்

சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by Manik Tue Sep 18, 2012 3:50 pm

நல்ல பதிவு தம்பி தொடரட்டும் வாழ்த்துக்கள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 3:52 pm

Chellam wrote:நல்ல பதிவு தம்பி தொடரட்டும் வாழ்த்துக்கள்


மிக்க நன்றி அண்ணா உங்க ஆதரவுக்கு..........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by முரளிராஜா Tue Sep 18, 2012 3:57 pm

நம் தளத்தில் வீட்டு வைத்தியம் என தனி தலைப்பே உள்ளது
அதில் தனிதனியாக ஒரு திரி தொடங்கி இது போன்ற வைத்தியங்களை சொல்லலாம் உயிர்
அப்பொழுதுதான் நம் தளத்துக்கு வருபவர்கள் தேடி பார்க்க எளிதாக இருக்கும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 4:00 pm

சூர்யா wrote:நம் தளத்தில் வீட்டு வைத்தியம் என தனி தலைப்பே உள்ளது
அதில் தனிதனியாக ஒரு திரி தொடங்கி இது போன்ற வைத்தியங்களை சொல்லலாம் உயிர்
அப்பொழுதுதான் நம் தளத்துக்கு வருபவர்கள் தேடி பார்க்க எளிதாக இருக்கும்


அப்படியே செய்கிறேன் அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன..... Empty Re: இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics
» தீர்வு!! உங்கள் வீட்டு சமையல் அறையில் ..{வீட்டு வைத்தியம் }
» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
» பகோடா ஆலயங்கள் எங்கு உள்ளன? (பொது அறிவு)
»  உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய ஒரு இணையம்!
» உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன! தேடிதருகிறது இந்த தளம்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum