தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொகுத்த முல்லாவின் கதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 1:51 pm

நாற்றம்

முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார்.
உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.
முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.''குரங்கு என்ன சாப்பிடும்?''என்று கேட்டார்.

மனைவி,''நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.''என்று பதில் கூறினார்.'
'அது எங்கே தூங்கப் போகிறது?''என்று அவர் கேட்க,மனைவி,''நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.''என்றார்.முல்லா கோபமுடன்,''நம் படுக்கையிலா?
நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?''என்று கேட்டார்.

அவர் மனைவி அமைதியாக சொன்னார்,''என்னால் அதைப் பொறுத்துக்
கொள்ள முடியும் என்றால்,குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.''

நன்றி ; அனைத்து கதைகளும்
இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 2:39 pm

கழுதை
***********
முல்லா கடை வீதிக்கு தன கழுதை மீதேறி சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே ஒரு பணக்காரன் தன குதிரையில் வந்து கொண்டிருந்தான்.முல்லாவைப் பார்த்து அவன் கிண்டலாக,''முல்லா,கழுதை எப்படியிருக்கிறது?''எனக் கேட்டான்.முல்லா அமைதியாக சொன்னார்,''கழுதை குதிரையின் மீது சென்று கொண்டிருக்கிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 5:48 pm

துயரம்
**************
முல்லா வேலையிலிருந்து வீடு திரும்பியதும்சட்டையைக் கழற்றினார்.அந்த சட்டையை வாங்கிய அவரது மனைவி அதில் ஒருநீளமான கருப்பு முடி இருந்ததைப் பார்த்ததும் அவள்மிகுந்த கோபத்துடன்,''நீ ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளாய் என்று நினைக்கிறேன்,''என்று கூறி சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.

''வழியில் ஒரு கூட்டத்தில் புகுந்து வந்தபோது யாருடைய முடியாவது ஒட்டியிருக்கும்,''என்று முல்லா கூறிய சமாதானம் எடுபடவில்லை.அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

மறுநாள் முல்லா வேலை முடிந்து வந்தவுடன்,விரைந்து வந்து அவரது மனைவி அவருடைய சட்டையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினாள்.அப்போது சட்டையில் ஒரு வெள்ளை முடி இருப்பதைக் கண்டாள்.அவ்வளவுதான்.

.பிடி பிடிஎனப் பிடித்துக் கொண்டாள் ''நேற்று ஒரு இளம் பெண்:இன்று ஒரு வயதான பெண்.நீ சரியான காமாந்தகனாக இருக்க வேண்டும்.என் வாழ்க்கையே பாழாகி விட்டது.''என்று கூவ ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் முல்லா வேலையிலிருந்து வரும்போது,பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்று எண்ணி சட்டையை கழட்டி ,நன்றாக உதறிவிட்டு மறுபடியும் உடுத்திக் கொண்டார்.வீட்டுக்கு வந்தவுடன் அவரது மனைவி வழக்கம் போல அவரது சட்டையை பரபரவென சோதனை போட்டாள்.ஒன்றும் கிடைக்கவில்லை.

முல்லா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.ஆனால் திடீரென உரத்த குரலில் அவர் மனைவி அழ ஆரம்பித்தாள்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.அவள்,''செய்வதைசெய்துவிட்டு ஒன்றும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?கேவலம்,ஒரு மொட்டைத் தலைக்காரியுடன் இன்று சுற்றிவிட்டு வந்திருக்கிறீர்கள்.

நான் என் தாயின் வீட்டுக்குப் போகிறேன்,''என்றாள்.பாவம்,முல்லாவால் என்ன சொல்ல முடியும?

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 5:49 pm

அனுபவம் புதுமை!
முல்லாவிடம் ஒருவர் வந்து,''நீங்கள் மிகுந்த அனுபவம் உடையவர்கள்.எனக்கு கண்ணில் மிகுந்த வலி.அதற்கு தகுந்த மருந்தினைக் கூறுங்களேன்.''என்று நயந்து கேட்டார்.முல்லா சொன்னார்,''முன்பொரு முறை எனக்கு பல்லில் வலிவந்தது.அப்போது நான் வலித்த பல்லைப் பிடுங்கி விட்டேன்.''வந்தவர் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 5:52 pm

கால் வலிக்கும்
*************************
அந்த ஊரில் முல்லா ஒருவரைத் தவிர யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. ஒரு ஏழை முல்லாவிடம் வந்து வெளியூரிலிருக்கும் தன தங்கைக்குக் கடிதம் எழுதித் தரச் சொன்னான்.முல்லா சொன்னார்,''முடியாது.எழுதினால் கால் வலிக்கும்.

''வந்தவன் திகைத்து,'அது எப்படி?'என்று கேட்டான்.முல்லா சொன்னார்,''என்னுடைய கையெழுத்தை என்னைத் தவிர யாராலும்படிக்க முடியாது.

உன் சகோதரிக்கு நான் கடிதம் எழுதிக் கொடுத்தால்,அதைப் படித்துக் காட்ட,நான் உன் சகோதரியின் ஊருக்கு நடந்து தானே செல்ல வேண்டும்? அவ்வளவு தூரம் நடந்தால் கால் வலிக்காதா?''

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 5:56 pm

விருந்து
****************
மாலை நேரம்.மழை சொட்டச்சொட்ட நண்பர் ஒருவர் முல்லாவைப் பார்க்க வந்தார்.அவருடன் வெகு நேரம் பேசினார்.நீண்ட நேரமாகியும் மழை நிற்கவில்லை.முல்லா சொன்னார்,''இந்த மழையில் நீங்கள் வீட்டுக்குப் போக முடியாது.இன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள்.

''நண்பரும் ஒப்புக்கொண்டார்.நண்பருக்கு சேர்த்து உணவு தயாரிக்க மனைவியிடம் சொல்ல வீட்டுக்குள் சென்றார் முல்லா.பின் திரும்பி வந்து பார்த்தபோது நண்பரைக் காணவில்லை.சிறிது நேரம் சென்றபின் நண்பர் மழையில் நனைந்து கொண்டே வந்தார்.''அடடா,மழையில் நனைந்துகொண்டு எங்கே போனீர்கள்?''என்று முல்லா அவரைக் கேட்டார்.

நண்பர் நிதானமாகச் சொன்னார்,''இன்றிரவு உங்கள் வீட்டில் விருந்து என்பதை என் மனைவியிடம் சொல்லிவிட்டு,அதனால் சமைக்க வேண்டாம் என்று வீட்டிற்குப் போய் சொல்லி வந்தேன்.''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by முரளிராஜா Thu Nov 21, 2013 12:58 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by ரானுஜா Thu Nov 21, 2013 2:35 pm

கே இனியவன் wrote:அனுபவம் புதுமை!
முல்லாவிடம் ஒருவர் வந்து,''நீங்கள் மிகுந்த அனுபவம் உடையவர்கள்.எனக்கு கண்ணில் மிகுந்த வலி.அதற்கு தகுந்த மருந்தினைக் கூறுங்களேன்.''என்று நயந்து கேட்டார்.முல்லா சொன்னார்,''முன்பொரு முறை எனக்கு பல்லில் வலிவந்தது.அப்போது நான் வலித்த பல்லைப் பிடுங்கி விட்டேன்.''வந்தவர் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்.
laugh laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 2:47 pm

நன்றி நன்றி ரொம்ப ஜாலி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 3:50 pm

போலித்தோற்றம்
**********************
முல்லா தன் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்.கழுதை மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது .அது சந்தை வழியாக சென்று கொண்டிருந்தது.''முல்லா,எங்கே வேகமாகப் போகிறீர்?''என்று வழியில் சிலர் கேட்டனர்.முல்லா சொன்னார்,''என்னைக் கேட்காதீர்கள்.என் கழுதையைக் கேளுங்கள்.

''''இது என்ன வேடிக்கையாயிருக்கிறது?''என்று அவர்கள் கேட்டனர்.முல்லா சொன்னார்,''இதில் வேடிக்கை ஒன்றுமில்லை.இது ஒரு வீம்பு பிடித்த கழுதை.நான் சொல்லும் பாதையில் இது போகாது.முரண்டு பிடிக்கும்.எனவே நான் தனியாக இருக்கும்போது இதை உதைத்து நான் விரும்பும் இடத்துக்குக் ஓட்டிச் செல்கிறேன்.ஆனால் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்.

என் கழுதையை என்னாலேயே அடக்க முடியவில்லை என்று கேலி பேசுகிறார்கள்.கூட்டத்தைக் கண்டதும் கழுதையும் அதிகப் பிடிவாதம் பிடிக்கிறது.இதிலிருந்து ஒரு பாடத்தை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.கூட்டம் உள்ள இடத்தில் கழுதை போகும் இடத்துக்கே நான் போகிறேன்.தனியாக இருக்கும்போது அதை நான் ஒரு வழி பண்ணி விடுகிறேன்.

கூட்டம் இருக்கும் இடத்தில் அதன் போக்கிற்குப் போக விடுவதால்,குறைந்த பட்சம் நான் அதன் எஜமானனாக இருக்கிறேன் என்ற போலித் தோற்றத்தை எல்லோர் முன்னிலையில் ஏற்படுத்திக் கொள்கிறேன்.''

nanri ;iruvar ullam
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 3:52 pm

பகிர்வு
************
முல்லா தன குருவிடம் சொன்னார்,'' .இதோ,இவர்களெல்லாம் உங்களது சீடர்கள்.உங்கள் உபதேசப்படி இவர்கள் நடப்பதில்லை.அது தான் எனக்கு ஒரே வருத்தம்.''குரு கேட்டார்,''என்னுடைய எந்த உபதேசத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை?''முல்லா சொன்னார்,''எதுவானாலும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு உபதேசித்தீர்கள்.

நான் பகிர்ந்து கொடுக்கத் தயாராக இருந்தாலும் இவர்கள் யாருமே என்னுடன் குடியைப் பகிர்ந்து கொள்வதில்லை.அதனால் நான் தனியே குடிக்க வேண்டியிருக்கிறது.''

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 3:54 pm

கனவு
*************
முல்லா,ஒரு நாள் இரவு,ஒரு மனிதன் தனக்கு கொஞ்சம் பணம் தர விரும்புவதைப்போலக் கனவு கண்டார்.அவன் மிகவும் தாராளமாக இருந்தான்.ஆகவே முல்லா,ஒரேயடியாக ஆயிரம் ரூபாய் கொடு என வலியுறுத்தினார்.அந்த ஆளோ ஐநூறு ரூபாய் வாங்கிக்கொள் என்றான் பின் அறுநூறு வாங்கிக்கொள் என்றான்.

ஆனால் முல்லா முழுதாக ஆயிரம் ரூபாய் வேண்டும் என்பதில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார்.அவன் பெருந்தன்மையானவனாகத் தெரிவதால் ஆயிரம் ரூபாய் தரச் சம்மதிக்கலாம்

எனக்கருதினார்.எனவே ஏன் குறைக்க வேண்டும்?கடைசியில் அந்த ஆள் 950 ரூபாய் தர சம்மதித்தான்.ஆனால் முல்லாவோ ஆயிரத்திலிருந்து இறங்கவில்லை.'ஆயிரம் ரூபாய் தான்'என்று சப்தம் போட்டுச் சொன்ன முல்லா விழித்துக்கொண்டார்.கண்களைத் திறந்தார்.

ஆளும் இல்லை பணமும் இல்லை.உடனடியாக அவர் கண்களை மூடிக்கொண்டு சொன்னார்,''கோவிச்சுக்காதே.900,......800,.......700,.....600,....''ஆனால் அங்கு யாரும் இல்லை .

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by மகா பிரபு Thu Nov 21, 2013 3:56 pm

அருமை அண்ணா...

இதை முல்லா கதைகள் பகுதிக்கு மாற்றுகிறேன்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 4:04 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 22, 2013 9:26 pm

மருந்து
*****************
முல்லா கால் நடை மருத்துவரிடம் போனார்.''என் குதிரை ரொம்பவும் சோம்பேறி ஆகிவிட்டது.ஓடவும் மாட்டேங்குது ,நடக்கவும் மாட்டேங்குது.ஒரு சக்திவாய்ந்த மருந்தைக் கொடுத்து அதை ஓடச் செய்யுங்கள்.''என்று மருத்துவரிடம் சொன்னார்.மருத்துவர் சொன்னார்
,'
'இதற்கு ஒரு கசப்பான மருந்து இருக்கிறது.ஆனால் நேரடியாகக் கொடுத்தால் குதிரை குடிக்காது.எனவே இந்த மூங்கில் குழாயை எடுத்துக்கொள்.இந்த மருந்தை குழாயில் நிரப்பு.குழாயின் ஒரு முனையை குதிரையின் வாய்க்குள் வை. மறுமுனையை உன் வாயில் வைத்துக்கொள்.

பின் மருந்து குதிரையின் தொண்டைக்குள் இறங்கும்படியாக ஊதிவிடு.''
முல்லாவும் வைத்தியர் சொன்னதுபோல செய்துகொண்டே வந்தார்.ஆனால் பாவம் முல்லா.அவர் ஊதுமுன் குதிரை ஊதிவிட்டது.மருந்து முல்லாவின் தொண்டைக்குள் இறங்கிற்று உடனே மருந்து வேலை செய்ய ஆரம்பித்தது.

என்பது வயதான முல்லா,தன தோட்டத்தின் வேலியைத் தாண்டிக் குதித்து ஓட ஆரம்பித்தார்.யாரும் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடினார்.அதைப்பார்த்த அவர் மனைவி கவலையுடன் அவர் பின்னே ஓடினார்.ஆனால் பிடிக்க முடியாதலால்,சற்று நேரம் யோசித்துவிட்டு மருத்துவரிடம் விரைந்தார்.

''உடனடியாக அவருக்குக் கொடுத்ததைப்போல இரண்டு மடங்கு மருந்து கொடுங்கள்.அப்போது தான் நான் அவரைப் பிடிக்க முடியும்.''என்றார்.

நன்றி ;இருவர் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 11:26 am

சமய மறுப்பாளன்
********************
முல்லாவின் புகழ் மீது பொறாமை கொண்ட சில பேர் முல்லா,மதத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார் என்றும்
அவர் சமய மறுப்பாளர் ஆகிவிட்டார் என்றும் சுல்தானிடம் வழக்குத் தொடுத்தனர்.சுல்தான் அதுபற்றி முல்லாவிடம் விளக்கம் கேட்டார்.

முல்லா உடனே அந்த சபையிலிருந்த முக்கியமான பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுக்குமாறு சுல்தானிடம் வேண்டிக்கொண்டார்.பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுப்பதில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.இறுதியில் பத்துபேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அந்த பத்துப்பேரிடமும் எழுதுகோலையும் தாளையும் தந்தார் முல்லா.ஒவ்வொருவரும் கடவுளைப்பற்றி அவர்கள் நினைப்பதை எழுதித்தரக் கூறினார்.பத்துப்பேரும் பத்துவிதமான பதில்களை எழுதித் தந்தனர்.

அவற்றை சுல்தானிடம் வாசித்துக் காட்டிய முல்லா,,''இறைவனைப்பற்றி எழுதுவதிலேயே இத்தனை கருத்துவேறுபாடுகள் உள்ள இவர்கள்,நான் சமய மறுப்பாளன் என்ற கருத்தில் மட்டும் ஒன்றுபட்டுள்ளனர்.முதலில் இவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனைப் பற்றிய ஒருமித்த கருத்துக்கு வரட்டும்.பிறகு அதை நான் ஆதரிப்பவனா,எதிர்ப்பவனா என்பதைப் பற்றிப் புகார் கூறட்டும்.''என்றார்.புகார் கூறியவர்கள் அடங்கிப்போயினர்.

சித்தாந்தங்களோ அவற்றிடையே உள்ள வேறுபாடுகளோ பிரச்சினை அல்ல. சித்தாந்தவாதிகள்,தம் எண்ணங்களையே கடவுளின் விருப்பமாகச் சித்தரிக்க முயல்கிறார்கள்.நீ அறியாததை,'நான் அறியாதது இது,' என்றே கூறு. அதன் மீது உன் ஊகங்களைத் திணித்துவிடாதே.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 11:29 am

நடைபோடு
******************
ஒரு நாள் மாலை.வீட்டின் முன் பகுதியில் முல்லா இங்கும் அங்கும் அமைதியின்றி நடந்து கொண்டிருந்ததை அவர் மனைவி கவனித்து என்ன விஷயம் என்று கேட்டாள்.''பக்கத்து வீட்டுக்காரரிடம் வாங்கிய நூறு தினார் கடனை நாளைக்குத் திரும்பக் கொடுக்க வேண்டியுள்ளது.கையில் ஒரு தினார்கூட இல்லை.என்ன செய்வதென்றே புரியவில்லை.

''என்றார் முல்லா.;அவரிடம் இந்த மாதம் தர முடியாது என்று சொல்லிவிட்டு வரவேண்டியதுதானே?' என்றார் அவர் மனைவி.மனைவியின் அறிவுரையைக் கேட்டு பக்கத்து வீட்டுக்கு சென்றவர் திரும்ப வரும்போது உற்சாகமாக இருந்தார் .மனைவி கேட்டார்,''நீங்கள் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டாரா?''முல்லா சொன்னார்,''பாவம்,இப்போது அவன் அமைதியின்றி வீட்டின் முன் பகுதியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறான்.''

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 11:31 am

கடவுள் அருள்
***************
மழையில் ஒரு மதப் பெரியவர் ஓடி வருவதைக் கண்ட முல்லா,''பெரியவரே,கடவுள் மக்கள் மீது கொண்ட கருணையினால் பெய்விக்கும் மழையைக் கண்டு ஓடினால் அது கடவுளை அவமதிப்பதாகும்,''என்றார்.பெரியவரும் உடனே மழையில் நனைந்து சென்று மறு நாள் காய்ச்சலால் அவதிப்பட்டார்.பிறகு ஒரு நாள் மழையில் நனைந்து முல்லா ஓடி வருவதைக் கண்ட அப்பெரியவர்,''என்ன முல்லா,எனக்கு புத்திமதி கூறிவிட்டு நீ மட்டும் மழையைக் கண்டு ஓடி வருவது கடவுளை அவமதிப்பதாகாதா?''என்று கேட்டார்.அதற்கு முல்லா,''ஐயா,கடவுளின் அருள் தான் மழை.நான் நனைவதற்கு அஞ்சிஓடவில்லை.ஆனால் கடவுள் அருள் பெற்ற மழையை மிதிக்கக் கூடாதே என்று தான் வேகமாக ஓடுகிறேன்.''என்றாரே பார்க்கலாம்!பெரியவர் வாயடைத்துப்போனார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 11:32 am

உலகம் அழியும்
****************
முல்லாவிடம் ஒரு கொழுத்த ஆடு இருந்தது.சிறுவர்கள்,அதை வெட்டி விருந்து வைக்கச் சொல்லி முல்லாவை நச்சரித்தனர்.முல்லாவிற்கு மனம் இல்லை.சிறிது நாள் போகட்டும் என்றார்.சிறுவர்களோ விடவில்லை.''முல்லா,நாளை உலக அழியப் போவது உனக்குத் தெரியாதா?அதனால் இன்றே விருந்தை வைத்துக் கொள்ளலாம்.''என்றனர். முல்லா உடனே உல்லாசப் பயணம் ஒன்று ஏற்பாடு செய்து,அங்கு சென்று ஆட்டை வெட்டினார்.முல்லா சமைக்க ஆரம்பிக்கும் முன் சிறுவர்கள் அங்கிருந்த குளத்தில் குளிக்கப் போனார்கள்.முல்லா சமைக்க ஆரம்பித்தார்.சிறுவர்கள் குளித்து வந்த பின் பார்த்தால்,அவர்களின் ஆடைகளைக் காண வில்லை.முல்லாவிடம் அது பற்றி விசாரித்தனர்.முல்லா சொன்னார்,''அடே,உலகம் நாளை அழியப் போகிறது. உங்களுக்கு ஆடைகள் எதற்கு?எனவே உங்கள் ஆடைகளை அடுப்பில் போட்டு தான் சமையல் செய்தேன்.''முல்லாவை ஏமாற்ற நினைத்த சிறுவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 11:34 am

அழுகை
**************
மன்னர் கண்ணாடியில் தன அசிங்கமான தோற்றம் கண்டு சிறிது நேரம் அழுதார்.இதைக் கண்டு பின்னால் இருந்த முல்லாவும் அழத் தொடங்கினார். அரசர் அழுகையை நிறுத்திய பின்பும் முல்லா நிறுத்தவில்லை.''எனக்காக வருத்தப்பட்டு நானே கொஞ்ச நேரம் தானே அழுதேன்?நீ ஏன் விடாமல் அழுகிறாய் முல்லா?''என்று கேட்டார்

அரசர்.'கண்ணாடியில் ஒரு நிமிடம் உங்கள் முகத்தைப் பார்த்ததற்கே அழுதீர்களே?நான் உங்களைக் காலம் பூராவும் பார்க்கிறேனே,அதற்காகத்தான் கொஞ்சம் அதிகமாக அழுகிறேன்.' என்றார் முல்லா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 11:36 am

மீன் வலை
******************
ஒரு மன்னனிடம் இருந்த அறிவாளி சாகும்தருவாயில்,''எனக்குப் பதில் அடக்கமுடைய ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.அடக்கம் தான் ஞானத்தின் அறிகுறி.''என்றார்.அரசனும்தூதர்களை அனுப்பி அடக்கமான ஒருவரை தேடிப் பிடிக்கக் கூறினான்.இதைக் கேட்ட பணக்காரரான முல்லா,தீர்க்கமாக யோசித்து முடிவு செய்து,தூதர்கள் வரும் போதுமீன் வலையை சுமந்து கொண்டு ஆற்றிலிருந்து வந்து கொண்டிருந்தார்.தூதர்கள் கேட்டார்கள்,'நீ பணக்காரனாய் இருந்தும் ஏன்இந்த மீன் வலையை சுமக்கிறாய்?'

முல்லா சொன்னார்,''மீன் பிடித்து தான் பணக்காரன் ஆனேன்.எனக்கு பல வசதிகளைக் கொடுத்த மூலத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நான் எப்போதும் இந்த வலையை தோளில் சுமந்து செல்வது வழக்கம்.''

'பொதுவாக ஏழை பணக்காரன் ஆகி விட்டால்,அவன் தன இறந்த காலத்தை சுத்தமாக துடைத்து விடுவான்.எதோ பெரிய பிரபு குலத்தில் பிறந்தது போல்
ஒரு புதிய இறந்த காலத்தை உருவாக்கி விடுவான்.ஆனால் இந்த மனிதன்,முல்லா,நிகவும் அடக்கமாக இருக்கிறான்,'என்று தூதர்கள் அரசனிடம் கூறினர்.முல்லா ஞானியாகக் கருதப் பட்டு வேலையில் அமர்த்தப்பட்டார்.

அவர் வேலையில் அமர்ந்த அன்றே வலையைத் தூக்கி எறிந்து விட்டார்.அவருக்காகப் பரிந்து பேசிய ஒருவன் கேட்டான்,'முல்லா,இப்போது உன் வலை எங்கே?'முல்லா சொன்னார்,''மீனை பிடித்தபின் வலையைத் தூக்கி எறிய வேண்டியது தானே?''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 11:37 am

என் வீடு
***********
முல்லா வீட்டில் இல்லாத பொது திருடன் ஒருவன் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் திருடிக் கொண்டு போய் விட்டான்.திருடியது யார் என பொறுமையாய்க் கண்டு பிடித்த முல்லா அத்திருடன் வீட்டுத் திண்ணையில் போய் படுத்துக் கொண்டார்.திருடன் காரணம் கேட்க,''என் பொருட்கள் எங்கிருக்கிறதோ அது தானே என் வீடு?''என்று எதிர்க் கேள்வி கேட்டார் முல்லா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 11:39 am

விளையாட்டா?
************************
மதுக் கடையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார் முல்லா.அவர் ஒரு கோழை.ஆனால் மது அவருக்கு துணிச்சலைத் தந்தது.அப்போது அங்கு கொலைகாரன் போல் தோற்றமளித்த ஒருவன் வந்தான்.சுய நினைவில் இருந்தால் முல்லா அஞ்சி ஓடியிருப்பார்.ஆனால் மதுவின் துணையால் அவருக்கு அறவே அச்சம் இல்லை.

அஞ்சாது அவர் அமர்ந்திருந்ததைக் கண்ட அந்த முரடன் அவர் காலின் மேல் ஓங்கி மிதித்தான்.முல்லாவுக்குக் கோபம் வந்தது.வெகுண்டெழுந்து கேட்டார்,''என்ன செய்து கொண்டிருக்கிறாய்?இது வேண்டுமென்றா அல்லது வேடிக்கைகாகவா?''முரடன் ஓங்கி மிதித்ததில் முல்லாவுக்கு போதை இறங்கி விட்டது.சுய நினைவுக்கு வந்து விட்டார்.

அந்த இடைவெளிக்குள் முரடனைககேள்விகேட்டுவிட்டார்.அந்தஆள்சொன்னான்,'காரியமாத்தாண்டா,'
முல்லா சொன்னார்,''அப்படிஎன்றால் உங்களுக்கு நன்றி.காரியாமாகத்தான் என்றால் சரி.ஏனெனில் எனக்கு இந்த விளையாட்டெல்லாம் பிடிக்காது.''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by ஸ்ரீராம் Sun Nov 24, 2013 6:57 pm

நல்ல தொகுப்பு. ரசித்தேன் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 7:27 pm

அப்படியா நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தொகுத்த முல்லாவின் கதைகள்  Empty Re: தொகுத்த முல்லாவின் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum