தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்மீக கதைகள்

View previous topic View next topic Go down

 ஆன்மீக கதைகள் Empty ஆன்மீக கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 24, 2013 8:27 am

வரம் – ஆன்மீக கதை
*****************

அடர்ந்த கானகத்தின் நடுவில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர்
தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு துணை. அது ஒரு நாய்!
-
முனிவர் பக்கத்திலேயே அது இருக்கும். அவர் தவம் செய்யும்
போது அவர் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். முனிவர்
சாப்பிட்டு மிச்சம் வைக்கும் பழ, காய்களையே அதுவும் தின்றது.
அசைவத்தின் பக்கம் போகக்கூட இல்லை.
-
ஒரு நாள், பயங்கரமான சிறுத்தை ஒன்று, அந்த நாயை வேட்டையாடத்
துரத்தியது. நடுங்கிப் போன நாய், முவிவரின் கால்களில் விழுந்து
கதறியது.
-
கவலைப்படாதே. நீ என குழந்தை மாதிரி. நான் உன்னைக்
காப்பாற்றுகிறேன். இந்த விநாடியே நான் என் மந்திர சக்தியால்
உன்னையும் ஒரு சிறுத்தையாக, அந்த சிறுத்தையை விட பலம்
மிகுந்த சிறுத்தையாக மாற்றி விடுகிறேன்’ என்றபடி கண்களை மூடி
மந்திரத்தை உச்சரித்தார்.
-
அடுத்த விநாடி, அந்த நாய், சிறுத்தையாக மாறிற்று. துரத்தி வந்த
சிறுத்தை, துண்டைக் காணோம், நாயைக் காணோம் என்று ஓடிற்று.
ஒரு வாரம் ஆயிற்று. ஒரு பெரிய புலி அந்த பக்கம் வந்தது.
ஆசிரமத்தில் இருந்த சிறுத்தையைப் பார்த்துப் பசியுடன் துரத்தியது.
வழக்கம் போல் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் இப்போது
சிறுத்தையைப் புலியாக மாற்றினார். அப்புறம் என்ன? இந்தப் புலியைக்
கண்டதும், வந்த புலி ஓடிப் போயிற்று.
-
உருமாற்றம் அடைந்த புலியோ இப்போது பழம், காய்களை
சீண்டுவதில்லை. மெதுவாக முயலில் ஆரம்பித்து மான், பன்றி என்று
ரகசியமாக வேட்டையாட ஆரம்பித்தது.
அப்புறம் மதம் கொண்ட யானை ஒன்று புலியைப் பந்தாட வர,
நம் புலி, முனிவர் தயவில் யானையாக மாறி சேறு, ஆறு என்று ஜாலியாக
அலைந்து ஆசிரமம் பக்கம் கூட எப்போதாவதுதான் வந்தது.
-
கொஞ்ச நாள் கழித்து பெரிய சிங்கம் ஒன்று யானையைக் கொல்ல
விரைந்து வந்தது. இப்போதும் முனிவர் அருளால் யானை சிங்கமாக
மாறியது.
-
அத்துடன் அதற்குப் பிரச்னை ஓய்ந்ததா என்றால் அது தான் இல்லை.
அடுத்த வாரமே மிகுந்த வல்லமை கொண்டதும், எட்டுக் கால்களை
உடையதும், எல்லா மிருகங்களை வேட்டையாடக் கூடியதுமான சரபம்
என்னும் மிருகம் அந்தப் பக்கம் வந்தது. சிங்கத்தைக் காலி செய்யத் துரத்தியது.
-
இப்போதுதான் சிங்கத்துக்கு முனிவரின் நினைவு வந்தது. காப்பாற்றுங்கள்,
காப்பாற்றுங்கள் என்று ஓடிப் போய்க் கெஞ்சியது.. வழக்கம் போல் முனிவர்,
அதை சரபமாக மாற்றினார்.
-
சரபமாக மாறிய நாய், காட்டையே கலக்க கலக்க ஆரம்பித்தது. கண்ணில்
பட்ட மிருகங்களை எல்லாம் துரத்தித் துரத்திக் கொன்றது. தின்றது. காட்டு
உயிரினங்கள் எல்லாம் ஓடி ஓளிந்தன. தவித்தன. பயந்தன. மிரண்டன.
-
இப்போதும் ஆபத்து வந்தது. சரபத்துக்கு அல்ல, முனிவருக்கு.
ஆம். தனக்கு வரம் தந்த முனிவரையே கொன்று விட விரும்பியது சரபம்.
-
ஏன்?
-
காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு நடுங்குகின்றன.
பயந்து ஓடுகின்றன. என்னிடம் அஞ்சும் மிருகங்கள், அந்த முனிவரைச்
சரணடைந்தால் அவரும் பழக்க தோஷத்தில் எல்லா மிருகங்களையும்
சரபமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது? எனவே அந்த முனிவரைப்
போட்டுத் தள்ளிவிட்டால் நான் மட்டுமே சரபமாக இருப்பேன் என்று
கொக்கரித்த சரபம், முனிவரைக் கொல்ல நெருங்கியது.
-
எல்லாம் வல்ல முனிவருக்கு இந்த நாயின், சரபத்தின் எண்ண ஓட்டம்
தெரியாதா என்ன? வந்ததே கோபம் அவருக்கு. ஓடி வந்த சரபத்தைப்
பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.
-
அவ்வளவுதான், அடுத்த விநாடியே அந்த சரபம், பழையபடி நாயாக,
சோதா நாயாக மாறிற்று.

-
இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?


-
பாத்திரம் அறிந்த பிச்சை போடு!
-

===============================================
>ப்ரியா கல்யாணராமன்[/left]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

 ஆன்மீக கதைகள் Empty Re: ஆன்மீக கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 24, 2013 8:32 am

சைவக் கொக்கு
**************************
மதுரையில் நீர்வளம் குறைந்து குளம் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டபோது நாரை ஒன்று இரை தேடி காட்டுக்குச்சென்றது. அங்கு நீர் நிறைந்த குளத்தைக் கண்டு மகிழ்ந்தது. குளத்தில் முழு நீறு பூசிய அடியவர்கள் ஐந்தெழுத்து மந்திரம் ஓதி நீராடிக் கொண்டிருந்தனர்.

அறம், பொருள், இன்பம் வீடு முதலான நான்கு வேதங்களையும், பரமனின் அருள் திருக்கோலப் புகழையும் பாடி வழிபட்டனர்.

இனிய மந்திர ஒலிகளைக் கேட்ட நாரை அக்குளத்தில் அடியவர்களைச் சுற்றிலும் சிறிய மீன்களும் பெரிய மீன்களும் துள்ளி விளையாடிய விந்தையைக் கண்டு ஆச்சரியப்பட்டது. பெரிய மீன்கள் சிறிய மீன்களை உண்ணாத அற்புதக் காட்சியைக் கண்டது.

பரமனைப் போற்றும் மந்திர ஒலியை கேட்டும், மீன்களின் கொல்லா நோன்பையும் கண்ட நாரை இனி தானும் மீன்களை உண்பது இல்லை என்று முடிவு செய்தது. அதன் பின்னர் தண்ணீர் மட்டுமே பருகியது.

நீராடி மந்திரம் சொல்லி முடித்துக் கரையேறிய அடியவர்கள் தமிழ் வேள்வி வழிபாடுகளைச் செய்தனர். பரமனின் அருட் செயல்களைப் பாடி வழிபட்டனர்.

பரமன் அன்பர்களுக்குக் காட்டிய மாபெரும் கருணை, மகிமையையெல்லாம் பேசி மகிழ்ந்தனர்.

அவையாவன:

சந்திரனுக்கு வாழ்வளித்தது.

தென்முகக் கடவுளாய் அமர்ந்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வேதங்களை உரைத்தது.
ஐம்முக ஈசனாய் ஆகமம் அருளிச் செய்தது.
நாகங்களை அணிந்து கொண்டு நாகங்களுக்கு அருளி நாகேசுவரன் ஆனது.

பகீரதனுக்காக கங்கையைத் தாங்கி மண்ணுலகைக் காத்தது.

நஞ்சு உண்டு பிரம்ம லோகம், வைகுண்டம் உட்பட அனைத்து உலகங்களையும்; நான்முகன், திருமால் உட்பட அனைத்து உயிர்களையும் காத்தது.
புன்னகையால் முப்புரம் எரித்து அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அருள் புரிந்தது.

முக்கண்ணன் ஆகி உலகங்களை வாழ வைத்தது.
விளக்கைத் தூண்டிய எலியை மகாபலிச் சக்கரவர்த்தியாக்கியது.

மரத்தின் மேல் இருந்து வில்வ இலைகளை உதிர்த்த குரங்கினை முசுகுந்தச் சோழசக்கரவர்த்தியாக்கியது.

வாமனனால் குருடாக்கப்பட்ட சுக்கிராச்சாரியருக்கு கண் அளித்தது.
மார்க்கண்டேயருக்காகத் திருவடியால் காலனை மாய்த்துப்பின் கருணை காட்டி வாழ வைத்தது.
நெற்றிக்கண்ணால் காமனை எரித்துப் பின் இரதிக்காகப் பெரும் கருணையுடன் உயிர் கொடுத்தது.

சிவபூசை செய்த திருமாலுக்குச் சக்கரத்தையும் சங்கினையும் அருளிச் செய்தது.
தட்ச யாகத்தில் தலை துண்டிக்கப்பட்ட நான்முகனுக்கும் திருமாலுக்கும் மீண்டும் சிரம் அருளியது.

மற்ற தேவர்களுக்கும் அவரவர்கள் இழந்த அங்கங்களை நலமாக்கி அருளிச் செய்தது.
நான்முகன் சிரம் கொய்த பைரவருக்கும், பிள்ளையாருக்கும், முருகனுக்கும் அருள் புரிந்தது.
உபமன்யுவுக்காக பாற்கடல் அருளியது.

நான்முகன், திருமால், உருத்திரன் முதலான மும்மூர்த்திகளுக்கும், பராசத்திக்கும், கலைமகளுக்கும், திருமகளுக்கும் பல முறையும் பல தலங்களிலும் பல வகையிலும் அருளியது.
திருமால் பிறந்த பல பிறப்புகளிலும் கூர்ம சம்காரமூர்த்தியாகவும், நரசிம்ம சம்கார மூர்த்தியாகவும் தோன்றி, திருமாலுக்கு கருணை புரிந்து மீண்டும் வைகுண்ட வாழ்வை திருமாலுக்கு அருளியது.

ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டு அசுரர்களை ஏமாற்றிய மோகினியின் பாவம் போக்கியது.
தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையின் தோலை உரித்து இடையில் அணிந்து கொண்டது.
சிவபூசை செய்த வாமனனது குற்றமும் பழியும் போக்கி அருளியது.

பரசுராமருக்கு மழுவாயுதத்தை அருளியது.
சிவபூசை செய்த இராமனது பிரம்மகத்தி தோசம் போக்கியது.

காணாமல் போன மைந்தனை மீண்டும் பெறுவதற்காக ருக்குமணியுடன் சோமவார விரதம் இருந்து சிவபூசை செய்த கண்ணனுக்கு அருளியது.
பல்வேறு தலங்களிலும் சிவபூசை செய்து வழிபட்ட திருமால் உள்ளிட்ட தேவர்களுக்கும், கிரகங்களுக்கும், முனிவர்களுக்கும், அடியார்களுக்கும், அசுரர்களுக்கும், பறவைகளுக்கும், மிருகங்களுக்கும், புழுபூச்சிகளுக்கும் கருணை காட்டி அருளியது எனப் பரம்பொருளின் அருட்செயல்களை யெல்லாம் ஓதினர்.


மதுரை பொற்றாமரைக்குளப் பெருமை பாடி சொக்கநாதர் அன்பர்களுக்குக் காட்டிய மாபெரும் கருணை மகிமையெல்லாம் பேசி மகிழ்ந்தனர். பரமனின் மகிமைகளை கேட்ட நாரை சொக்கநாதர் கோயிலை நோக்கிப் பறந்தது.

பொற்றாமரைக் குளத்தில் முழுகி கோயிலை வலம் வந்தது. தண்ணீர் மட்டுமே பருகி வாழ்ந்தது. புனிதப் பொற்றாமரைக் குளத்தில் இருந்த மீன்களைப் பறவைகள் உண்பதைக் கண்டு வருந்தியது.
சைவப்பிறவியாகப் பிறந்த மனிதர்களே பிறவிப்பண்பு மாறி மற்ற உயிர்களை அடித்து உண்ணும் மாமிசப்பிராணியாக இருக்கும்போது மாமிசப்பிறவியாகப் பிறந்த பறவைகளின் மாமிசப்பிறவியாகப் பிறந்த பறவைகளின் குணத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்று கலங்கியது.

நாள்தோறும் சொக்கநாதர் கோயிலை வலம் வந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களே இல்லாமல் போகுமாறு அருள வேண்டும் என்று பரம்பொருளை வேண்டியது. நாரையின் வேண்டுதலுக்கு இரங்கிப் பொற்றாமரைக்குளத்தில் மீன்கள் இல்லாதவாறு அருள்புரிந்து நாரையின் துயர் தீர்த்தார்.

மாமிசம் உண்ணும் பறவை இனமாகப் பிறந்தாலும் பக்தியுடன் சீவகாருண்ய வாழ்க்கை வாழ்ந்து பல நாட்கள் நீரை மட்டுமே பருகி சொக்கநாதர் கோயிலை வலம் வந்த நாரைக்குப் பரமன் மீன்டும் வந்து பிறக்காத முத்தி அருளிச் சிவகணமாக்கிச் சிவலோக வாழ்வை அருளிச் செய்தார்.

நன்றி சாமி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum