தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:37 pm

முகவுரை

நறுந்தொகைஎன்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது. இவர் கொற்கை நகரத்திலிருந்து அரசு புரிந் தவரென்று, இந் நூற்பயன் கூறும் பாயிரத்தில் 'கொற்கையாளி' என வருதலால் அறியப்படுகின்றது. கொற்கை, பாண்டி மன்னர்கள் இருந்து அரசு புரியும் பதிகளிலொன்றாயிருந்த தென்பதைச் சிலப்பதிகாரத்திலே 'கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்' எனக் கூறப்பட்டிருத்தலானும், பிறவிடத்தும் 'கொற்கைச் செழியர்' என வருதலானும், அறியலாகும். இப் பதி பாண்டி நாட்டில் முத்துக் குளிக்கும் துறைமுகங்களுள் ஒன்றாயும் இருந்தது. சிறுபாணாற்றுப் படையில் 'உப்பு வாணிகரின் சகட வொழுங்கோடு கொற்கைக்கு வந்த மந்திகள் அங்குள்ள முத்துக்களைக் கிளிஞ்சலின் வயிற்றிலடக்கி உப்பு வணிகச் சிறாருடன் கிலுகிலுப்பையாடும்' என்று கொற்கை வருணிக்கப்பட்டிருக்கிறது. அதில், பாண்டியன் 'தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்' எனக் கூறப்பட்டிருத்தலும் அறியற்பாலது. அதிவீரராம பாண்டியர் தென்காசியிலிருந்து அரசு புரிந்தனரெனவும் கூறுவர். இவர் காலம் கி.பி. 11, 12, ஆம் நூற்றாண்டு எனச் சிலரும், 15 ஆம் நூற்றாண்டு எனச் சிலரும் கூறாநிற்பர்.

இவர் தமிழில் நிரம்பிய புலமை வாய்ந்தவர். வட மொழிப் புலமையும் உடையவர். தமிழில் இவரியற்றிய நூல்கள் நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிகாண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள், நறுந்தொகை முதலியனவாம். இவர் தமையனார் வரதுங்கராமபாண்டிய ரென்பவர். அவரும் சிறந்த புலவராய்த் தமிழில் பிரமோத்தர காண்டம் முதலிய நூல்கள் இயற்றியிருக்கின்றனர். அவர் மனைவியாரும் சிறந்த புலமையுடையார் எனக் கூறுகின்றனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:39 pm

இனி, இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது. திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் சிவபிரான்மீது இவர் பாடிய வெண்பா வந்தாதி, கலித்துறை யந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி என்பன பத்திச்சுவை ததும்பும் துதி நூல்களாம். நறுந்தொகை யென்பது இளைஞர் பலராலும் படிக்கப்படுகின்ற நீதிநூல்களுளொன்றாக வுளது. இந் நூற்குப் பெயர் இதுவே யென்பது 'நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்' எனப் பாயிரத்திற் கூறியிருத்தலாற் பெறப்படும். அச் சூத்திரம் 'வெற்றி வேற்கை' என்று தொடங்கியிருப்பது கொண்டு இதனை அப் பெயரானும் வழங்கி வருகின்றனர்.

நறுந்தொகை என்பது நல்லனவாகிய நீதிகளின் தொகை எனப் பொருள்படும். இதனால், பழைய நூல்களிலுள்ள நல்ல நீதிகள் பல இந்நூலுளே தொகுத்து வைக்கப்பட்டன என அறியலாகும். இதிலுள்ள நீதிகளெல்லாம் தொன்னூல்களிற் காணப்படுவனவே யெனினும், ஒரு சில புறநானூறு, நாலடியார் முதலியவற்றின் செய்யுள்களோடு சொல்லினும் பொருளினும் பெரிதும் ஒற்றுமையுற்று விளங்குகின்றன. அவை உரையில் அங்கங்கே காட்டப்பட்டுள்ளன. இந்நூல் முன் பலரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அப் பதிப்புக்கள் ஒன்று ஒன்றனோடு பெரிதும் வேறுபட்டுள்ளன. அவற்றிற் காணப்படும் பாடவேறுபாடுகள் எண்ணிறந்தன. வாக்கியங்களின் முறையும் பலவாறாகப் பிறழ்ச்சியடைந்துள்ளது. 'அதனால்' என்பது போலுஞ் சொற்கள் தனிச்சீராக வேண்டாத இடங்களிலெல்லாம் வைக்கப்பட்டுள்ளன. இப் பதிப்பில் இவை பலவற்றையும் கூடிய வரையில் திருத்தம் செய்து, இன்றியமையாத பாடவேறுபாடுகளையும் காட்டி, பதவுரை, பொழிப்புரைகளுடன் சிறப்புக்குறிப்புக்களும் திருந்த எழுதியிருப்பது காணலாகும். 'வாழிய நலனே வாழிய நலனே' என்னும் வாக்கியம் சில பதிப்புகளில் ஓரியைபுமின்றி நூலின் நடுவே வைக்கப்பட்டுள்ளது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:43 pm

நறுந்தொகை மூலமும் உரையும்

1. எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்.  
 (பதவுரை)
எழுத்து - எழுத்துக்களை, அறிவித்தவன் - கற்பித்த ஆசிரியன், இறைவன் ஆகும் - கடவுள் ஆவான். ஒருவனுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியன் அவனுக்குத் தெய்வமாவான்.

(பொ-ரை)
எழுத்து முதலாகக் கற்பிக்க வேண்டுதலின் கல்வியை எழுத்து என்றார். ஆசிரியனைத் தெய்வமாகக் கருதி வணங்க வேண்டுமென்பது கருத்து. 
------------------------------------------------------------------------------------------------------------
    
2. கல்விக் கழகு கசடற மொழிதல்.  
(பதவுரை)
கல்விக்கு - (ஒருவன் கற்ற) கல்விக்கு, அழகு - அழகாவது, கசடு அற - குற்றம் நீங்க, மொழிதல் - (தான் கற்றவற்றைச்) சொல்லுதல்.
ஒருவன் கற்ற கல்விக்கு அழகாவது தான் கற்றவற்றைக் குற்றமறச் சொல்லுதல்

(பொ-ரை) 

[color=#a52a2a]கசடு, ஐயம் திரிபு என்பன. ஒருவன் தான் கற்றவற்றை ஐயம் திரிபு இன்றியும், திருத்தமாகவும் பிறருக்குச் சொல்லவேண்டும் என்பதாம். --------------------------------------------------------------------------------------------
    
3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். 
(பதவுரை)
செல்வர்க்கு - பொருளுடையவர்க்கு, அழகு - அழகாவது, செழும் கிளை - நல்ல சுற்றத்தை, தாங்குதல் - பாதுகாத்தல். செல்வ முடையோர்க்கு அழகாவது, சுற்றத்தார் வறுமையுற்ற பொழுது அவரைப் பாதுகாத்தல்.

 (பொ-ரை) 
கிளைபோன்றிருத்தலின் சுற்றம் கிளை யெனப்படும். செழுங்கிளை யென்பது நல்ல உறவு என்றும், தமக்கு அழகைச் செய்யும் உறவு என்றும் பொருள்படும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:45 pm

4. வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும். 
(பதவுரை)
வேதியர்க்கு - மறையோர்க்கு, அழகு - அழகாவன, வேதமும் - வேதம் ஓதுதலும், ஒழுக்கமும் - நல்லொழுக்கம் குன்றா திருத்தலும் ஆம். செல்வ முடையோர்க்கு அழகாவது, சுற்றத்தார் வறுமையுற்ற பொழுது அவரைப் பாதுகாத்தல்.

(பொ-ரை)
கிளைபோன்றிருத்தலின் சுற்றம் கிளை யெனப்படும். செழுங்கிளை யென்பது நல்ல உறவு என்றும், தமக்கு அழகைச் செய்யும் உறவு என்றும் பொருள்படும். 
--------------------------------------------------------------------------------------------------------
    
5. மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை. 
(பதவுரை)
மன்னவர்க்கு - அரசருக்கு, அழகு - அழகாவது, செங்கோல் முறைமை - நீதி செலுத்தும் முறைமையாம்.
அரசருக்கு அழகாவது நீதி செலுத்தும் இயல்பாம்.

(பொ-ரை) 
நீதியானது செவ்விய கோல்போன்றிருத்தலின், அது செங்கோல் எனப்படும். தமது நாட்டை நீதியுடன் ஆளாதவர் அரசராகார் என்பதாம்.

6. வைசியர்க் கழகு வளர்பொரு ளீட்டல்.
(பதவுரை)
 வைசியர்க்கு - வணிகர்க்கு, அழகு - அழகாவது, வளர் பொருள் - வளர்கின்ற பொருளை, ஈட்டல் - தேடுதல்.

(பொ-ரை)
வணிகர்க்கு அழகாவது வளர்கின்ற பொருளைச் சேர்த்தல்.
 வளர்தலாவது மேன்மேற் கிளைத்தல்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:46 pm

7. உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல்.
(பதவுரை)
 உழவர்க்கு - வேளாளர்க்கு, அழகு - அழகாவது, இங்கு - இந்நிலத்தில், உழுது - உழுது பயிர் செய்து, ஊண் - உண்டு வாழ்தலை, விரும்பல் - இச்சித்தல்.

(பொ-ரை)
வேளாளர்க்கு அழகாவது பயிர்செய்து உண்டலை விரும்புதல்.
  ---------------------------------------------------------------------------------------------------
     
8. மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்.
(பதவுரை)
 மந்திரிக்கு - அமைச்சனுக்கு, அழகு - அழகாவது, வரும்பொருள் - (மேல்) வரும் காரியத்தை; உரைத்தல் - (முன்னறிந்து) சொல்லுதல்.

(பொ-ரை)
அமைச்சனுக்கு அழகாவது மேல் வருங்காரியத்தை முன்னறிந்து அரசனுக்குச் சொல்லுதல்.
-----------------------------------------------------------------------------------------------  

9. தந்திரிக் கழகு தறுக ணாண்மை.
(பதவுரை)
 தந்திரிக்கு - படைத்தலைவனுக்கு, அழகு - அழகாவன, தறுகண் - அஞ்சாமையும், ஆண்மை - வீரமும் ஆம்.

(பொ-ரை)
படைத்தலைவனுக்கு அழகாவன அஞ்சாமையும் ஆண்மையுமாம்.
தந்திரம் - சேனை, தந்திரி - சேனையை உடையவன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:47 pm

10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்
(பதவுரை)
 உண்டிக்கு - உணவிற்கு, அழகு - அழகாவது, விருந்தோடு - விருந்தினருடன், உண்டல் - உண்ணுதல்.

(பொ-ரை)
இந்நூலிற் கூறிய இவையெல்லாம் உலகத்தார் நடத்தற்குரிய வழிகளாம்.
இந்நூலிற் சொல்லிவந்த நீதிகளெல்லாம் 'இவை' எனத் தொகுத்துச் சுட்டப்பட்டன. காண்: முன்னிலையசை.

11. பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல்.
(பதவுரை)
 பெண்டிர்க்கு - மகளிர்க்கு, அழகு - அழகாவது, எதிர் பேசாது - (கணவன் சொல்லுக்கு) எதிர் பேசாமல், இருத்தல் - அடங்கியிருத்தல்.

(பொ-ரை)
மாதர்களுக்கு அழகாவது கணவனோடு எதிர்த்துப் பேசாது அடங்கியிருப்பது.
---------------------------------------------------------------------------------------------------------
12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்.
(பதவுரை)
 குலமகட்கு - குலப்பெண்ணுக்கு, அழகு - அழகாவது, தன் கொழுநனை - தன் கணவனை, பேணுதல் - வழிபடுதல்.

(பொ-ரை)
மாதர்களுக்கு அழகாவது கணவனோடு எதிர்த்துப் பேசாது அடங்கியிருப்பது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:48 pm

13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்.
(பதவுரை)
 விலைமகட்கு - விலைமாதுக்கு, அழகு - அழகாவது தன் மேனி - தன் உடம்பை, மினுக்குதல் - மின்னச் செய்தல். 
  
(பொ-ரை)
பொதுமகளுக்கு அழகாவது, தன் உடம்பினை மின்னச் செய்தல்.

பொருள் கொடுப்பார்க்கு உரியளாதலின் பரத்தை விலை மகள் எனப்படுவள். மினுக்குதல் - ஆடை அணிகளாலும், மஞ்சள் முதலிய பூச்சுக்களாலும் விளங்கச் செய்வது.
--------------------------------------------------------------------------------------------------

14. அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல்.
(பதவுரை)
அறிஞர்க்கு - அறிவுடையோர்க்கு, அழகு - அழகாவது, கற்று - (கற்கவேண்டிய நூல்களை யெல்லாம்) கற்று, உணர்ந்து (அவற்றின் பொருள்களை) அறிந்து, அடங்கல் - அடங்கியிருத்தல்.

(பொ-ரை)
அறிவுடையோர்க்கு அழகாவது நூல்களைக் கற்றுணர்ந்து அடங்கியிருத்தல்.

அடங்கல் - செருக்கின்றி யிருத்தல்; மனம் அடங்குதல் - நூல்களிற் கூறியபடி நடத்தல்.
--------------------------------------------------------------------------------------------------------
 
15. வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை. 
(பதவுரை)
 வறிஞர்க்கு - வறுமையுடையோர்க்கு, அழகு - அழகாவது, வறுமையில் - அவ்வறுமைக் காலத்தும், செம்மை - செம்மையுடையராதல்.

(பொ-ரை)
வறியோர்க்கு அழகாவது வறுமையுற்ற அக்காலத்தும் செம்மை குன்றாதிருத்தல்.

செம்மையாவது மானத்தை விட்டு இரவாமலும், தீயன செய்யாமலும் இருத்தல்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:49 pm

16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
   வானுற வோங்கி வளம்பெற வளரினும்
   ஒருவர்க் கிருக்க நிழலா காதே.

(பதவுரை) 
பனையின் - பனைமரத்தின், தேம்படு - மதுரம் பொருந்திய, திரள் - திரண்ட, பழத்து - கனியில் உள்ள, ஒரு விதை - வித்தானது, வான் உற - ஆகாயத்தைப் பொருந்தும்படி, ஓங்கி - உயர்ந்து, வளம் பெற- செழுமை உண்டாக, வளரினும் - வளர்ந்தாலும், ஒருவர்க்கு - ஒருவர்க்காயினும். இருக்க - இருப்பதற்கு, நிழல் ஆகாது - நிழலைத் தராது. 
  
(பொ-ரை)
சுவை பொருந்திய பெரிய பனங்கனியிலுள்ள விதையானது முளைத்து வானமளாவ வளத்துடன் வளர்ந்தாலும் ஒருவரேனும் தங்கியிருக்க நிழலைத் தராது.

உருவத்தாற் பெரியவரெல்லாம் பெருமை யுடையவராகார் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தேம்பழம் எனக் கூட்டுக. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது. என விரித்துக் கொள்க. தொல்காப்பிய இலக்கணப்படி பனை முதலிய புறவயிரம் உள்ளவற்றிற்குப் புல் என்று பெயர். ஒருவர்க்கும் - என்னும் உம்மை தொக்கது. ஏ : ஈற்றசை.
 -----------------------------------------------------------------------------------------------------  

17. தெள்ளிய ஆலின் சிறுபழத தொருவிதை
    தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
    நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
    அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
    மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

(பதவுரை)
 ஆலின் - ஆலமரத்தின், தெள்ளிய - தெளிந்த, சிறு பழத்து - சிறிய கனியிலுள்ள, ஒரு விதை - ஒரு வித்தானது, தெள் நீர் - தெளிந்த நீரையுடைய, கயத்து - குளத்திலுள்ள, சிறு மீன் - சிறிய மீனினது, சினையிலும் - முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே ஆயினும் - சிறியதே யானாலும், (அது), அண்ணல் - பெருமை பொருந்திய, யானை - யானையும், அணி அலங்கரிக்கப் பட்ட, தேர் - தேரும், புரவி - குதிரையும் ஆள் - காலாளும் (ஆகிய), பெரும் படையொடு - பெரிய சேனையோடு, மன்னர்க்கு - அரசருக்கும், இருக்க - தங்கியிருப்பதற்கு நிழல் ஆகும் - நிழலைத் தரும்.

சுவை பொருந்திய பெரிய பனங்கனியிலுள்ள விதையானது முளைத்து வானமளாவ வளத்துடன் வளர்ந்தாலும் ஒருவரேனும் தங்கியிருக்க நிழலைத் தராது.
(பொ-ரை)
உருவத்தாற் பெரியவரெல்லாம் பெருமை யுடையவராகார் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தேம்பழம் எனக் கூட்டுக. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது. என விரித்துக் கொள்க. தொல்காப்பிய இலக்கணப்படி பனை முதலிய புறவயிரம் உள்ளவற்றிற்குப் புல் என்று பெயர். ஒருவர்க்கும் - என்னும் உம்மை தொக்கது. ஏ : ஈற்றசை.

--------------------------------------------------------------------------------------------------
      
  18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.

(பதவுரை)

 பெரியோர் எல்லாம் - (உருவத்தால்) பெரியவரெல்லாரும், பெரியரும் அல்லர் - பெருமையுடையவரும் ஆகார்.

(பொ-ரை)
உருவத்தாற் பெரியவரெல்லாரும் பெருமை யுடையவராகார்.
 பெரியோர் என்பதற்கு வயதிற் பெரியவரென்றும், செல்வத்திற் பெரியவரென்றும் பொருள் கூறினாலும் பொருந்தும். அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே பெருமையுடையவ ரென்க. பெரியரும் என்பதிலுள்ள உம்மை பின்வரும் சிறியரும் என்பதைத் தழுவியிருக்கிறது. இங்கே கூறிய விசேடவுரைகளை மேல்வரும் தொடர்க்கு மாற்றியுரைத்துக் கொள்க.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:50 pm

19. 1சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.

(பதவுரை)
 சிறியோர் எல்லாம் - (உருவத்தால்) சிறியவரெல்லாரும், சிறியரும் அல்லர் - சிறுமையுடையவரும் ஆகார்.

(பொ-ரை)
உருவத்தாற் சிறியவரெல்லாரும் சிறுமையுடையவராகார்.
உருவத்தாற் பெரியவரெல்லாரும் பெருமை யுடையவராகார்.

 1 சில பதிப்பில் "சிறியோர்" என்பது முன்னும் "பெரியோர்" என்பது பின்னும் காணப்படுகின்றன.

------------------------------------------------------------------------------------------------------ 
      
20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர்.
(பதவுரை)
 பெற்றோர் எல்லாம் - பெறப்பட்டவர்க ளெல்லாரும், பிள்ளைகள் அல்லர் - (நல்ல) பிள்ளைகளாகார்.

(பொ-ரை)
ஒருவர் பெற்ற பிள்ளைகளெல்லாரும் நல்ல பிள்ளைகளாகார் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:51 pm

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:52 pm

24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது. 

(பதவுரை)
 சுடினும் - சுட்டாலும், செம்பொன் - சிவந்த பொன்னானது, தன் ஒளி - தனது ஒளி, கெடாது - அழியாது.

(பொ-ரை) 
தங்கத்தைத் தீயிலிட்டுச் சுட்டாலும் அதன் ஒளி கெடாது (மிகும்.)
 
-----------------------------------------------------------------------------------------------------
       
  25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது. 

(பதவுரை)
 அரைக்கினும் - அரைத்தாலும், சந்தனம் - சந்தனக் கட்டையானது, தன் மணம் - தனது - வாசனை, அறாது - நீங்காது. 

(பொ-ரை)
சந்தனக் கட்டையை அரைத்தாலும் அதன் மணம் நீங்காது (மிகும்.)

26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.  

(பதவுரை)
 புகைக்கினும் - புகையச் செய்தாலும், கார் அகில் - கரிய அகிற்கட்டையானது, பொல்லாங்கு கமழாது - தீ நாற்றம் வீசாது. 

(பொ-ரை)
அகிற் கட்டையை நெருப்பிலிட்டுப் புகைத்தாலும் அது தீ நாற்றம் நாறாது (நன்மணங் கமழும்). பொல்லாங்கு - தீமை; அது தீய நாற்றத்தைக் குறிக்கிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:53 pm

27. கலக்கினும் தண்கடல் சேறா காது. 

(பதவுரை) கலக்கினும் - கலக்கினாலும், தண் கடல் - குளிர்ந்த கடலானது, சேறு ஆகாது - சேறாகமாட்டாது. 

(பொ-ரை)
கடலைக் கலக்கினாலும் அது சேறாகாது (தெளிவாகவே யிருக்கும்).
----------------------------------------------------------------------------------------
28. 1அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய் . 

(பதவுரை)
 பால் பெய்து - பால் வார்த்து, அடினும் - சமைத்தாலும், பேய்ச்சுரைக்காய் - பேய்ச் சுரைக்காயானது; கைப்பு அறாது - கசப்பு நீங்காது. 

(பொ-ரை)
பேய்ச் சுரைக்காயைப் பால்விட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது.

இதுவும், அடுத்துவரும் வாக்கியமும் சிறியோர்க்கு எவ்வளவு நன்மை செய்தாலும் அவர்கொண்டிருக்கின்றன. இக்கருத்து, ''உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும், கைப்பறாபேய்ச் சுரையின் காய்'' என நாலடியாரில் வந்துளது. பேய்ச்சுரைக்காய் சுரைக்காயில் ஒரு வகை.கள் தம் சிறுமைக் குணத்தைக் கைவிடார் என்னும் கருத்தை அடக்கிக் 

 1. 'அடினும்' என்னும் இவ்வாக்கியமும், 'ஊட்டினும்' என மேல்வரும் வாக்கியமும் சில பதிப்புக்களிலேயே உள்ளன.
 
-----------------------------------------------------------------------------------------
29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே. 

(பதவுரை)
 பல் விரை - பல வாசனைகளை, ஊட்டினும் - ஊட்டினாலும், உள்ளி - உள்ளிப் பூண்டானது, கமழாது - நன் மணம் வீசாது. 

(பொ-ரை)
உள்ளிப் பூண்டுக்குப் பல வாசனைகளை ஊட்டினாலும் அது நறுமணம் கமழாது (தீநாற்றமே வீசும்). ஏ: அசை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:55 pm

30. பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே. 

(பதவுரை)
 பெருமையும் - மேன்மையும், சிறுமையும் - கீழ்மையும், தான்தர - தான்செய்து கொள்ளுதலால், வரும் - உண்டாகும். 

(பொ-ரை)
மேன்மையும் கீழ்மையும் தான் செய்யுஞ் செய்கையாலேயே உண்டாகும் (பிறரால் உண்டாவதில்லை). ஏ: அசை. 

31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்
       பெரியோ ராயிற் பொறுப்பது கடனே

(பதவுரை)
சிறியோர் செய்த - சிற்றறிவுடையோர் செய்த. சிறுபிழை எல்லாம் - சிறிய குற்றங்க ளெல்லாவற்றையும், பெரியோர் ஆயின் - மேலோராயிருப்பின், பொறுப்பது - பொறுத்துக் கொள்வது, கடன் - முறைமையாம்

(பொ-ரை)
சிற்றறிவுடையோர் செய்த சிறிய பிழைகளைப் பெரியோர் பொறுத்துக் கொள்வது கடமை. பொறுமையினாலேயே பெருமை அறியப்படும் என்க
----------------------------------------------------------------------------------------

32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற்
      பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே.  

(பதவுரை)
சிறியோர் - கீழோர், பெரும் பிழை - பெரிய குற்றங்களை, செய்தனர் ஆயின் - செய்தாரானால், பெரியோர் - மேலோர், அப்பிழை - அக்குற்றங்களை, பொறுத்தலும் - பொறுத்துக் கொள்ளுதலும், அரிது - அருமையாம்.

(பொ-ரை)
சிறியோர்கள் பெரும் பிழைகளைச் செய்தால் பெரியோர் அவற்றைப் பொறுத்தலும் அருமையாம். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:56 pm

33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
      நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.  

(பதவுரை)
நூறு ஆண்டு - நூறு வருடம், பழகினும் - பழகினாலும், மூர்க்கர் - கீழ் மக்களுடைய, கேண்மை - நட்பானது, நீர்க்குள் - நீரிலுள்ள, பாசிபோல் - பாசியைப்போல, வேர்க்கொள்ளாது - வேரூன்றாது. 

(பொ-ரை)
எத்தனை காலம் பழகினாலும் கீழ்மக்களுடைய நட்பு நீர்ப்பாசி வேரூன்றாமைபோல வேரூன்றாது. 
----------------------------------------------------------------------------------------

34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
      இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.  

(பதவுரை)
ஒருநாள் - ஒருதினம், பழகினும் - பழகினாலும் பெரியோர் - மேன்மக்களுடைய, கேண்மை - நட்பானது, இரு நிலம் பிளக்க - பெரிய பூமி பிளக்கும்படி, வேர் வீழ்க்கும் - வேரூன்றப் பெறும். 
(பொ-ரை)

ஒருநாட் பழகினும் மேலோருடைய நட்பானது பூமி பிளக்கும்படி, வேரூன்றி நிற்கும். 
----------------------------------------------------------------------------------------

35. கற்கை நன்றே கற்கை நன்றே
      பிச்சை புகினும் கற்கை நன்றே.  

(பதவுரை)
கற்கை நன்று கற்கை நன்று - (நூல்களைக்) கற்றல் நல்லது, கற்றல் நல்லது. பிச்சை புகினும் - பிச்சைக்குப் போனாலும், கற்கை நன்று - கற்றல் நல்லது 

(பொ-ரை)
பிச்சை யெடுத்தாலும் கல்வி கற்பது நல்லது.. 
----------------------------------------------------------------------------------------
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:57 pm

36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
    நெல்லினுட் பிறந்த பதரா கும்மே.  

(பதவுரை)
கல்லா ஒருவன் - கல்வி கல்லாத ஒருவன், குல நலம் - தனது குலத்தின் மேன்மையை, பேசுதல் - சொல்லுதல், நெல்லினுள் பிறந்த - நெற்பயிரில் உண்டாகிய, பதர் ஆகும் – பதடியாகும்

(பொ-ரை)
கல்லாதவன் தன் குலத்தின் மேன்மையைப் பாராட்டும் வார்த்தை பதர்போலப் பயனற்றதாகும்.
----------------------------------------------------------------------------------------

37. நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன்
   கற்றில னாயிற் கீழிருப் பவனே.  

(பதவுரை)
நாற்பால் - நான்கு வகையான, குலத்தில் - குலங்களில், மேற்பால் ஒருவன் - உயர்குலத்திற் பிறந்த ஒருவன், கற்றிலன் ஆயின் - கல்லாதவனானால், கீழ் இருப்பவனே - தாழ்ந்த இடத்தில் இருப்பவனே

(பொ-ரை)
உயர் குலத்திற் பிறந்தவன் கல்லாதவனாயின் தாழ்ந்த இடத்தில் இருக்கத்தக்கவனே. 
----------------------------------------------------------------------------------------

38. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
     அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்.  

(பதவுரை)
க்குடி - எந்தக் குலத்தில், பிறப்பினும் - பிறந்திருந்தாலும், யாவரே ஆயினும் - யாராயிருந்தாலும், அக்குடியில் - அந்தக் குலத்தில், கற்றோரை - கல்வி கற்றவரை, மேல் வருக என்பர் - மேலிடத்து வருக என்று அழைப்பார்.

(பொ-ரை)
எக்குலத்திற் பிறந்திருந்தாலும் யாராயிருந்தாலும் கற்றோரை மேல் வருக என்று உபசரித்து அழைப்பார். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:58 pm

40. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.  

(பதவுரை)
அறிவுடை ஒருவனை - கல்வியறிவுடைய ஒருவனை. அரசனும் விரும்பும் - வேந்தனும் விரும்புவான். 

(பொ-ரை)
கல்வியறிவுடையவனை அரசனும் விரும்புவான். 

41. யானைக் கில்லை தானமுந் தருமமும். 

(பதவுரை)
யானைக்கு - யானைக்குக் (கைந்நீண்டிருந்தாலும்), தானமும் - தானஞ் செய்தலும், தருமமும் - அறஞ்செய்தலும், இல்லை – இல்லையாம்

(பொ-ரை)
பிரணவ மந்திரத்தின் பொருளாகிய விநாயகக் கடவுளின்திருவடிகளை வணங்குவோம் என்றவாறு. பிரணவம் எல்லா மந்திரங்களுக்கும், வேதத்திற்கும் முதலாக வுள்ளது 
----------------------------------------------------------------------------------------

42. பூனைக் கில்லை தவமுந் தயையும். 

(பதவுரை)
பூனைக்கு - பூனைக்கு (அது கண்மூடி ஒடுங்கியிருந்தாலும்) தவமும் - தவஞ்செய்தலும், தயையும் - (உயிர்களிடத்து) இரக்கம் வைத்தலும், இல்லை - இல்லையாம்.

(பொ-ரை)
பூனை (கண்ணை மூடிக்கொண்டு அமைதியாயிருந்தாலும்) அது தவஞ்செய்தலும் அருளுடைத்தாதலுமில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 3:59 pm

43. ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமும். 

(பதவுரை)
ஞானிக்கு - ஞானமுடையவனுக்கு, இன்பமும் - சுகமும், துன்பமும் - துக்கமும், இல்லை – இல்லையாம்

(பொ-ரை)
மெய்ஞ்ஞானிக்குச் சுகமும் இல்லை; துக்கமும் இல்லை 
----------------------------------------------------------------------------------------

44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும். 

(பதவுரை)
சிதலைக்கு - செல்லுக்கு, செல்வமும் - செல்வமுடைய ரென்பதும், செருக்கும் - செருக்குடைய ரென்பதும் இல்லை - இல்லையாம்.

(பொ-ரை)
செல்வ முடையரென்றும் செருக்குடைய ரென்றும் பாராமல் கரையான் யாவருடையையும் அரித்துவிடும். 
----------------------------------------------------------------------------------------

45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும். 

(பதவுரை)
முதலைக்கு - முதலைக்கு, நீத்தும் - நீந்தும் நீர் (என்பதும்), நிலையும் - நிலைகொள்ளும் நீர் (என்பதும்), இல்லை - இல்லையாம்.

(பொ-ரை)
நீச்சென்றும் நிலையென்றும் பாராமல் முதலை எவ்வளவு ஆழமாகிய நீரிலும் செல்லும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 4:00 pm

46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை.. 

(பதவுரை)
அச்சமும் - (தீய தொழிலுக்கு) அஞ்சுதலும். நாணமும் - (பழிக்கு) நாணுதலும், அறிவு இலோர்க்கு - அறிவில்லாதவருக்கு இல்லை - இல்லையாம்.

(பொ-ரை)
அஞ்சத்தக்க தீய தொழிலுக்கு அஞ்சுதலும், பழிக்கு நாணுதலும் அறிவில்லாதவரிடத்தில் இல்லை.color]
----------------------------------------------------------------------------------------

47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.. 

(பதவுரை)
நாளும் - நட்சத்திரமும், கிழமையும் - வாரமும், நலிந்தோர்க்கு - பிணியால் மெலிந்தவர்க்கு, இல்லை - இல்லையாம்.

(பொ-ரை)
நோயால் வருந்தினவர்க்கு நட்சத்திரமும் கிழமையும் இல்லை..
----------------------------------------------------------------------------------------

48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை. 

(பதவுரை)
கேளும் - நட்பும், கிளையும் - உறவும், கெட்டோர்க்கு. - வறுமையுற்றோர்க்கு, இல்லை - இல்லையாம்.

(பொ-ரை)
வறுமையுற்றோர்க்கு நண்பரும் உறவினரும் இல்லை. 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 4:03 pm

49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா. 

(பதவுரை)
உடைமையும் - செல்வமும், வறுமையும் - தரித்திரமும், ஒருவழி - ஓரிடத்திலே, நில்லா - நிலைத்திரா.

(பொ-ரை)
செல்வமும் வறுமையும் ஓரிடத்திலே நிலைத்திராமல் மாறிமாறி வரும். பின்வருஞ் சில தொடர்கள் இவ்வியல்பை விளக்குவனவாம். 
----------------------------------------------------------------------------------------

50. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
        நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர். 

(பதவுரை)
குடைநிழல் இருந்து - வெண்கொற்றக் குடையின் நிழலில் இருந்து, குஞ்சரம் ஊர்ந்தோர் - யானையை நடாத்திச்சென்ற அரசரும், நடைமெலிந்து - நடத்தலால் தளர்ச்சியுற்று, ஓர் ஊர் - மற்றோர் ஊரை, நண்ணினும் நண்ணுவர் - அடைந்தாலும் அடைவர்.

(பொ-ரை)
யானையின் பிடர்மேல் வெண்கொற்றக் குடை நிழல் செய்ய வீற்றிருந்து அதனைச் செலுத்திச் சென்ற அரசரும் வறுமையெய்திக் காலால் நடந்து மற்றோர் ஊருக்குச் செல்லினும் செல்வர்.. 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 4:04 pm

   51. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர்
     அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர். 

(பதவுரை)
சிறப்பும் - (பிறரை யேவிக்கொள்ளும்) முதன்மையும், செல்வமும் - பொருளும், பெருமையும் - மேன்மையும், உடையோர் - உடையவரும், அறக்கூழ்ச்சாலை - அறத்திற்குக் கஞ்சிவார்க்கும் சத்திரத்தை, அடையினும் அடைவர் - அடைந்தாலும் அடைவர்.

(பொ-ரை)
பிறரை யேவிக்கொள்ளும் முதன்மையும் செல்வமும் மேன்மையும் உடையவரும் வறியராய் உணவின்றி அறத்திற்குக் கூழ்வார்க்கும் சத்திரத்தை அடைந்தாலுமடைவர்..color]
----------------------------------------------------------------------------------------

    52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்
      அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர். 

(பதவுரை)
அறத்து இடு பிச்சை - அறத்திற்கு இடுகின்ற பிச்சையை, கூவி - (கடைத் தலையில் நின்று) கூவியழைத்து, இரப்போர் - இரக்கும் வறுமையுடையோரும், அரசோடு இருந்து - அரச அங்கங்களோடு கூடியிருந்து, அரசு ஆளினும் ஆளுவர் - அரசாட்சி செய்தாலும் செய்வர்.

(பொ-ரை)
வீடுகள்தோறும் கடைத்தலையில் நின்று கூவியழைத்துப் பிச்சை ஏற்போரும் செல்வராகி அரசு அங்கங்களுடன் கூடி அரசாண்டாலும் ஆளுவர்.
----------------------------------------------------------------------------------------

53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர்
       அன்றைப் பகலே யழியினும் அழிவர். 

(பதவுரை)
குன்று அத்தனை - மலையவ்வளவு, இரு நிதியை - பெரிய செல்வத்தை, படைத்தோர் - படைத்தவரும், அன்றைப் பகலே (படைத்த) அன்றைக்கே, அழியினும் அழிவர் - வறுமையுற்றாலும் உறுவர்.

(பொ-ரை)
மலையளவு பெரும்பொருள் பெற்றவரும் பெற்ற அப்பொழுதே அதனை யிழப்பினும் இழப்பர்.. 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 4:05 pm

54. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக்
      கழுதை மேய்பா ழாயினு மாகும். 

(பதவுரை)
எழுநிலை - ஏழு நிலைகளுடைய, மாடம் - மாளிகையும், கால்சாய்ந்து - அடியுடன் சாய்ந்து, உக்கு - சிதறுண்டு, கழுதை மேய் - கழுதைகள் மேய்கின்ற, பாழ் ஆயினும் ஆகும் - பாழ்நில மானாலும் ஆகும்.4

(பொ-ரை)
மலையளவு பெரும்பொருள் பெற்றவரும் பெற்ற அப்பொழுதே அதனை யிழப்பினும் இழப்பர்.
----------------------------------------------------------------------------------------

55. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
  பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி
  நெற்பொலி நெடுநக ராயினு மாகும். 

(பதவுரை)
பெற்றமும் - எருதுகளும், கழுதையும், கழுதைகளும், மேய்ந்த அப் பாழ் - மேய்ந்த அப் பாழ் நிலமானது, பொன் தொடி - பொன்னாலாகிய வளையலை (அணிந்த), மகளிரும் - மாதர்களையும், மைந்தரும் - ஆடவர்களையும், கூடி - பொருந்தி, நெல் பொலி - நெற் குவியல்களையுடைய, நெடுநகர் - பெரிய நகரம், ஆயினும் ஆகும் - ஆனாலும் ஆகும்.

(பொ-ரை)
எருதும் கழுதையும் மேய்ந்த அப் பாழ் நிலம் பொன்வளை யணிந்த மாதரையும் மைந்தரையும் உடையதாய் நெற்பொலி மிக்க பெருநகர மாயினும் ஆகும். 
----------------------------------------------------------------------------------------
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 4:06 pm

56. மணவணி யணிந்த மகளி ராங்கே
   பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ
   உடுத்த ஆடை கோடி யாக
   முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர். 

(பதவுரை)
மண அணி அணிந்த - மணக்கோலம் பூண்ட, மகளிர் - பெண்கள், ஆங்கே - அப்பொழுதே (அவ்விடத்திலேயே), பிண அணி அணிந்து (கணவர் இறத்தலால்) பிணத்திற்குரிய கோலத்தைப்பூண்டு, தம் கொழுநரைத் தழீஇ - தம் கணவருடம்பைத் தழுவி, உடுத்த ஆடை - முன்பு உடுத்த கூறையே, கோடி ஆக - கோடிக் கூறையாக, முடித்த கூந்தல் - பின்னிய கூந்தலை, விரிப்பினும் விரிப்பர் - விரித்தாலும் விரிப்பர்.

(பொ-ரை)
பிறரை யேவிக்கொள்ளும் முதன்மையும் செல்வமும் மேன்மையும் உடையவரும் வறியராய் உணவின்றி அறத்திற்குக் கூழ்வார்க்கும் சத்திரத்தை அடைந்தாலுமடைவர் பிறரை யேவிக்கொள்ளும் முதன்மையும் செல்வமும் மேன்மையும் உடையவரும் வறியராய் உணவின்றி அறத்திற்குக் கூழ்வார்க்கும் சத்திரத்தை அடைந்தாலுமடைவர்.
----------------------------------------------------------------------------------------

57. இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே. 

(பதவுரை)
இல்லோர் - பொருளில்லாதவர், இரப்பதும் யாசிப்பதும், இயல்பே இயல்பே - இயற்கையே இயற்கையே.

(பொ-ரை)
வறியவர் இரப்பது இயற்கையே யன்றிப் புதுமையன்று.color]
----------------------------------------------------------------------------------------

58. இரந்தோர்க் கீவது முடையோர் கடனே. 

(பதவுரை)
இரந்தோர்க்கு - யாசித்தவர்க்கு, ஈவதும் - கொடுப்பதும், உடையோர் கடனே - பொருளுடையவர் கடமையே.

(பொ-ரை)
வறியராய் இரப்பவர்க்கு ஈவது பொருளுடையவர் கடமையே. 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 4:07 pm

 59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
       எல்லா மில்லை யில்லில் லோர்க்கே. 

(பதவுரை)
நல்ல ஞாலமும் - நல்ல பூவுலகையும், வானமும் - வானுலகையும், பெறினும் - பெற்றாலும், எல்லாம் - அவை யாவும், இல் - (மாண்புள்ள) மனைவியரை, இல்லோர்க்கு - இல்லாதவர்க்கு, இல்லை – இல்லையாம்

(பொ-ரை)
பூவுலகத்தையும் தேவருலகத்தையும் பெற்றாலும், மாண்புள்ள மனைவி யில்லாதவர்க்கு அவற்றால் யாதும் பயனில்லை.
----------------------------------------------------------------------------------------

60. தறுகண் யானை தான்பெரி தாயினும்
    சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே. 

(பதவுரை)
தறுகண் - அஞ்சாமையையுடைய, யானை - யானை யானது, தான் பெரிது ஆயினும் - தான் பெரிய உருவத்தை உடையதாயினும், சிறுகண் - சிறிய கணுக்களையுடைய, மூங்கில் கோற்கு - மூங்கில் கோலுக்கு, அஞ்சும் - அஞ்சாநிற்கும்.

(பொ-ரை)
அஞ்சாமையுடைய யானை உருவத்தாற் பெரியதாயினும் சிறிய கணுக்களையுடைய மூங்கிற்கோலுக்கு அஞ்சும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 4:08 pm

61. குன்றுடை நெடுங்கா டூடே வாழினும்
              புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே.  

(பதவுரை)
குன்று உடை - மலைகளையுடைய, நெடுங் காடு ஊடே - நீண்ட காட்டினுள்ளே, வாழினும் - வாழ்ந்தாலும், புல்தலை - சிறிய தலையுடைய, புல்வாய் - மானானது, புலிக்கு அஞ்சும் - புலிக்கு அஞ்சா நிற்கும்

(பொ-ரை)
கல்வியறிவுடையவனை அரசனும் விரும்புவான்.
----------------------------------------------------------------------------------------

  62. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே. . 

(பதவுரை)
ஆரை ஆம் - ஆரைப் பூண்டு படர்ந்த, பள்ளத்து ஊடே - ஆழத்தினுள்ளே, வாழினும் - வாழ்ந்தாலும், தேரை - தேரையானது, பாம்பிற்கு - பாம்பினுக்கு, மிக அஞ்சும் - மிகவும் அஞ்சாநிற்கும்.

(பொ-ரை)
தேரையானது ஆரைப் பூண்டு நிறைந்த பள்ளத்தில் வாழ்ந்தாலும் பாம்பிற்கு மிக அஞ்சும்..color]
----------------------------------------------------------------------------------------

63. கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற்
 கடும்புலி வாழுங் காடு நன்றே.  

(பதவுரை)
கொடுங்கோல் மன்னர் - நீதியில்லாத அரசர். வாழும் நாட்டில் - வாழுகின்ற நாட்டைப் பார்க்கிலும், கடும்புலி வாழும் - கொடிய புலி வாழுகின்ற, காடுநன்று - காடு நல்லது.

(பொ-ரை)
கொடுங்கோ லரசர் ஆட்சிபுரியும் நாட்டிலிருப்பதைப் பார்க்கிலும், கொடிய புலி வாழும் காட்டிலிருப்பது நல்லது. 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 4:09 pm

64. சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின்
தேன்றேர் குறவர் தேயம் நன்றே.  

(பதவுரை)
சான்றோர் இல்லா - பெரியோர் இல்லாத, தொல்பதி - பழைமையாகிய நகரத்தில், இருத்தலின் - குடியிருப்பதைப் பார்க்கிலும், தேன் தேர் - தேனை ஆராய்ந்து திரியும், குறவர் - குறவருடைய, தேயம் - மலைநாட்டில் இருப்பது, நன்று – நல்லது

(பொ-ரை)
அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் இல்லாத பழைமையான நகரத்தில் இருப்பதைப் பார்க்கிலும் குறவர் வசிக்கும் மலைப்பக்கத்தில் இருப்பது நல்லது..
----------------------------------------------------------------------------------------

65. காலையு மாலையும் நான்மறை யோதா
     அந்தண ரென்போ ரனைவரும் பதரே.  

(பதவுரை)
காலையும் மாலையும் - காலைப் பொழுதிலும் மாலைப்பொழுதிலும், நான்மறை - நான்கு வேதங்களையும், ஓதா - ஓதாத, அந்தணர் என்போர் அனைவரும் - மறையோர் என்று சொல்லப்படுவோர் எல்லாரும், பதரே – பதரேயாவர்

(பொ-ரை)
காலையிலும் மாலையிலும் வேதம் ஓதாத அந்தணரென்று சொல்லப்படுவோர் அனைவரும் பதர்போலப் பயனில்லாதவரே யாவர். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை Empty Re: அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum