தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ந.க.துறைவன் புதுக்கவிதை

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Sat Feb 22, 2014 12:35 pm


நிலா
எவருக்காகவும்.
அழகு படுத்திக்
கொள்வதில்லை.

மலரும் பூக்கள்
யாரையும் மயக்க
அழகு படுத்திக்
கொள்வதில்லை.

பெண்கள் மட்டும்
எப்பொழுதும்
அழகாக இருக்கவே
அழகு படுத்திக்
கொள்கிறார்கள்.

தினம் தினம்
புதிய பொலிவுடன்
காட்சி தரும்
பனித் துளியின்
அழகைப் பார்த்துப்
பொறாமைப் படுகிறான்
காலைக் கதிரவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by kanmani singh Sat Feb 22, 2014 12:39 pm

கைதட்டல் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Fri Feb 28, 2014 4:53 pm

ஃ யாருமென் பரந்த மனசைப்
புரிந்திடவில்லை யெனப்
பலரிடம் சொல்லிப் புலம்பியவன்
பூரணமாய் மற்றவர் மனசை
உணர்ந்து நடப்பதாய்
என்னவொரு
அதீதநினைப்பு.

ஃ எதையோ பறிகொடுத்தவனாய்
எதற்காக இங்கே நிற்கிறாய் என
எனக்காகப் பரிவு காட்டியவர்க்குத்
தெரியவில்லை, பறிகொடுப்பதற்கு
என்னிடம் இன்னுமென்ன
மிச்சமிருக்கிறதென்று?

ஃ கூடிக்கூடி நிறைய
எதைப் பற்றியோ பேசினார்கள்
ஏதோ ஒன்று அப்பேச்சினால்
முடிவானதாய்ப் பாவித்து
அனைவரும் கலைந்தனர்
அதிர்ச்சியோ மகிழ்ச்சியோ
துயரமோ வெளிக்காட்டாமல்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ஜேக் Fri Feb 28, 2014 6:06 pm

அருமை
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by முரளிராஜா Fri Feb 28, 2014 9:11 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 01, 2014 7:11 am

ந.க.துறைவன் wrote:

பெண்கள் மட்டும்
எப்பொழுதும்
அழகாக இருக்கவே
அழகு படுத்திக்
கொள்கிறார்கள்.

அழகே அழகு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Wed Mar 05, 2014 10:52 am

சிதறு தேங்காய்
*
செய்த தவறுக்கோ
செய்யாத தவறுக்கோ
தலையில் குட்டிக்
கொண்டுத் தோப்புக்
கரணம் போடுகிறார்கள்
வினாயகர் எதிரில்,
அப் பக்தர்களை
வேடிக்கைப் பார்க்கின்றன
சிதறு தேங்காய்ப்
பொறுக்க வந்தக்
காக்கைகள்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by sreemuky Wed Mar 05, 2014 2:33 pm

இல்லேனா மொக்க, சப்பனு சொல்லிடுவன்களோன்னு பயம் தான்.

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Sat Mar 08, 2014 8:35 am

நண்பர்கள்…
*
தாயுமாகி உதவிச் செய்தத் தியாக முகம்
ஓயாது என்றும் துணையிருந்தத் துறைமுகம்
நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்த திருமுகம்
அன்பு முகமானக் கீதா ஆறுமுகம்.
*
சாமியை வணங்காத நாத்திகச் சாமி
ஓமக்குச்சி உடல் தேகச் சாமி்
இசைப் பாடல் பாடும் அய்யா சாமி.
மீசைத் தடவிப் பேசிடும் முனுசாமி.
*
தீயப் பழக்க மில்லாதத் திகம்பரச் சாமி
மெல்ல உதட்டில் சிரிக்கும் மௌனச் சாமி.
கரும்பாய் பேசிப்பேசி இனிக்கும் நல்லச் சாமி.
குறும்புத் தம்பிச் சுறுசுறுப்புக் குப்புச் சாமி.
*
ஊரில் நடக்கும் குசும்பு சம்பவங்களை
உணர்ச்சித் தூண்டும் பாவளையில்
புணர்ச்சிக் கதைகள் சொல்லிச் சொல்லி
உறங்காமல் செய்வார் சுப்பைய்யா வாத்தியயார்.
*
,இன்னும் பலப்பல இனிய நண்பர்கள்
இவ்வணியில் உண்டு நிறையச் சொல்லிடவே
இன்று எங்கெங்கோ இருக்கிறார்கள்-நினைவில்
இனிதே வாழ்ந்து வருகிறார்கள் எனது நண்பர்கள்.

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Mon Mar 10, 2014 9:07 am

கழிகிறது நேரம்
*
பேச்சுக்குப் பேச்சுப்
புரிகிறதா, புரிகிறதா? என்று
பேசிக் கொள்கிறார்கள்.
எது புரிந்தது எது பரியாதது?
என்பதெல்லாம்
சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும்
மட்டு்ம் தானே தெரியும்?
அவர்களது பேச்சுத் திறன்
உங்களுக்குப் புரிகிறதா?
இன்னும் பலருக்கும்
புரியாமலேயே இருக்கிறது
அந்தப் பூடகமானப்
பேச்சின் சாரம்.
அப்படிப் பேசிக் கொண்டே
போனதில் வீணாய் கழிகிறது
பொன்னான நேரம்.



.

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ஸ்ரீராம் Mon Mar 10, 2014 6:51 pm

சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 10, 2014 8:43 pm

அரட்டையும் அழகாகிறது காதலிலும் நட்பிலும்...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Tue Mar 11, 2014 8:10 am

உண்மை தான் இரமேஷ் நன்றி.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Mon Mar 17, 2014 10:16 am


*
தூக்கமே விழிப்பு{புதுக் கவிதை}
*
தூக்கம் வரவில்லை எனப்
புரண்டுப் புரண்டுப் படுத்தான்.
தூக்காமல் எவ்வளவு நேரந்தான்
விழித்திருப்பதென எழுந்துப் போய்
தண்ணீர்க் குடித்து விட்டு வந்து
படுக்கையில் உட்கார்ந்தான்.
எதையோ யோசித்தவாறு மீண்டும்
படுக்கையில் சாயந்தான்.
*
தூக்கம் வரவில்லை துங்க முயற்சித்தான்
படுத்தவாறே தியானப்
பயிற்சி செய்துப் பார்த்தான்.
தூக்கம் வருவதாகக் காணோம்
மீண்டும் எழுந்துப் போய்
சிறுநீர்க் கழித்து விட்டுவந்துக்
கடிகாரத்தில் நேரம் பார்த்தான்
மணி ஐந்துக் காட்டியது முள்கள்.
*
தூங்க முயற்சிக்காமல் விழித்திருந்தான்
வாசலில் காலிங் பெல் அடிக்கும்
சத்தங் கேட்டுப் போய் கதவைத் திறந்தான்.
எதிரில்,பயணக் களைப்பும்
அசதியுமாய் கலைந்தக் கூந்தலுமாய்
நின்றிருந்தாள். ஊருக்குப் போய்த்
திரும்பி வந்த மனைவி, குழந்தைகள்
அவனுக்குப் பின்னாலேயே நின்று
அவர்களை வரவேற்றதுப் பூனைக் குட்டி…!!
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 8:55 pm

தூக்கம்... கலக்கம்... தூக்கல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 5:18 am

மிக அருமை 
பாராட்டுக்கள் 
 கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ஜேக் Tue Mar 18, 2014 7:31 am

http://www.amarkkalam.net/t21965-topic#147470 - இந்த லிங்க்கில் உள்ளதையும் சேர்த்துப் படித்தால் இன்னும் இதற்கான பதில் கிடைக்கலாம்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Tue Mar 18, 2014 11:04 am

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்
*
சமாளிப்பு{புதுக் கவிதை}
*
தாமதமாகப் போகக் கூடாதென்று
சீக்கிரமாய் வந்துக் காத்திருந்தேன்.
பஸ் போய் வி்ட்டாத வென
அருகிலிருந்தவரிடம் கேட்டேன்
பஸ் போய்விட்டது என்றார்கள்.
வேறொன்றில் போகலாமென
விசாரித்தால்
ரோடு வேலை நடக்கிறது
அந்தப் பக்கம் போகாது என்றார்கள்.
வேறு பஸ் எப்பொழுது வரும் என்று
சொல்வதற்கில்லை.காத்திருப்பதும்
காலவிரயமென சேர் ஆட்டோவில்
ஏறப் போனால் உள்ளே கூட்ட நெரிசல்
உட்கார இடமில்லை.
அடுதது, என்ன செய்வ தென்று
முடிவெடுப்பதற்குள் போக வேண்டிய
பஸ் வந்து நின்றது. ஏறினேன்.
எப்படியோ,
தாமதத்திற்குக் காரணம்
கேட்டால் என்ன சொல்லி
சமாளிக்கலாம்? என்ற சிந்தனையோடு
உள்ளே நுழைந்தேன். சட்டென
மூலையில் உதித்ததொரு
சின்னக் காரணம்…
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Wed Mar 19, 2014 8:37 am

ந.க.துறைவன் புதுக் கவிதைகள்
*
பெரும் தயக்கம்{புதுக் கவிதை}
*
ஊரிலிருந்து வந்தவர்
யாரென்று எனக்குத் தெரியவில்லை.
நீங்க யாரென்று கேட்டதற்கு
உறவினர் ஒருவரின்
பெயரைச் சொல்லி
அவர்களுக்குச் சொந்த மென்று
விவரமாய்ச் சொன்னார்.
என்ன விஷயமாக வந்தீர்கள்
என்று கேட்டேன். தேடி வந்தச்
செய்தியைச் சொன்னார்.
*
ஊர்காரர் என்றாலும்
அறிமுகமில்லாதவர்க்கு
எப்படி உதவி செய்வ தென்று
பெரும் தயக்கம்.
சரி பார்க்கலாம் என்றேன்.
”கொஞ்சம் பார்த்து செய்யுங்க” என்று
கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார்.
மறு முனையிலிருந்து
போன் வந்தது.
“நம்ம ஊரிலிருந்து பையன்
ஒருத்தன் வருவா, வந்தா?
ஏதாச்சும் சொல்லி
சமாளியப்போ” என்றார்
அனுப்பி வைத்த உறவுக்காரர்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 19, 2014 10:59 am

சிறப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Sat Mar 22, 2014 9:45 am

இன்று அதிகம்….!!
*
நம்பிக்கை,அவநம்பிக்கை என்பது
அவரவர்களின் மனநிலைத்
தீர்மானக்கும் செயல்
ஒருத்தரை எப்படி நம்புவது
என்றொரு சந்தேகம் மனதில்
எழுகிறது அனைவருக்கும்.

நம்பிக்கையாளன் என்று
நம்புவதற்கு ஏதேனும்
அளவுக் கோல் உண்டோ? உண்டு.
நம்பிக்கையானவர் என்று
நம்புவதற்கு நம்பிக்கையான
ஒருவர் உறுதியளித்தால்
நம்பி்க்கையாளன் என்று
நம்புகிறார்கள் சந்தேகத்தோடு,
எப்பொழுதும், யாரையும் எடுத்த
எடுப்பிலேயே நம்புவதில்லை.

நம்பிக்கையான மனிதர்களைப்
பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது
.இன்று.
சொல்லும் செயலும்
நம்பிக்கைக் குரியதாக இருந்தாலும்
ஏனோ, அவர்களின் மீது
நம்பிக்கை வருவதில்லை சட்டென
நம்பிக்கையோடு நம்புவர்கள்
கொஞ்சம் பேர் தான்.
நம்பிக்கையோடு ஏமாறுபவர்கள் தான்
அதிகம் இன்று…!!
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Tue Mar 25, 2014 9:58 am

மாயா ஜாலம் { புதுக் கவிதை}
*
வெளியிலிருந்துப்
பார்த்தேன்
உள்ளிருப்பது
எதுவும் தெரியவில்லை
உள்ளிலிருந்துப்
பார்த்தேன்
வெளியிலிருப்ப தெல்லாம்
நன்குத் தெரிந்ததுக்
எல்லாம், அந்தக்
கண்ணாடிக் காட்டும்
மாயா ஜாலம்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Wed Mar 26, 2014 9:35 am

அய்யனாரு…!!
*
அய்யனாரு உருவம் பாரு
கண்களிலே கோபம் பாரு
கருத்த மீசை அழகைப் பாரு
பெரிய வாளைக் கையில் பாரு.
*
குதிரையிலே அய்யனாரு
குந்தியிருக்கும் ஜோரைப் பாரு
பக்கத்திலே துணையைப் பாரு
பத்தினிப் பெண் தாயைப் பாரு.
*
சுட்டெரிக்கும் வெயில் பாரு
வெட்ட வெளியின் தகிப்பைப் பாரு
வேப்ப மர நிழலைப் பாரு
வெப்பந் தணியும் உணர்ந்துப் பாரு.
*
குழந்தைகளின் ஆட்டம் பாரு
வாலிபர்கள் சேட்டைப் பாரு
கன்னிப் பெண்கள் கண்ணைப் பாரு
ஆண்களின் அரட்டைப் பாரு.
*
கிழவிகளின் பக்திப் பாரு
முதியவர்களின் குசும்பைப் பாரு.
பலியாடு முழிப்பைப் பாரு
பூசாரியின் சிரிப்பைப் பாரு.
*
பொங்கப் பானைப் பொங்குதுப் பாரு
பொண்ணுங்க முகத்தில் சிரிப்பைப் பாரு
வாழையிலைப் படையல் பாரு
மாவிளக்கு வரிசைப் பாரு.
*
கற்பூர ஆரத்திப் பாரு
கன்னத்திலே போட்டுப் பாரு
குல தெய்வத்தை வணங்கிப் பாரு
வரம் கொடுப்பாள் நாளும் பாரு.

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.கணேசன் Thu Mar 27, 2014 2:37 pm

அவன்…!!
*
அவன் எப்படிப்பட்ட
மனம் படைத்தவ னென்று
குயிலிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
குணவா னென்று
குருவியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
இயல்புடையவ னென்று
வண்ணத்துப் பூச்சியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
செயல்பாடுகள் நிறைந்தவன் என்று
காக்கையிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்டப்
பேச்சாளன் என்று கிளிகளிடம்
கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்ட
இல்லறத்தான் என்று
அவன் வீட்டின்
பல்லியிடம் கேட்டார்கள்ர
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
விசுவாசமுள்ளவன் என்று
அவன் வீட்டில் வளரும்
நாயிடம் விசாரித்தார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்டவன் என்று
ஒரு மனிதனிடம் கேட்டார்கள்
அவன் படபட வென்று
தப்பும் தவறுமாய்
அவனைப் பற்றின
உண்மையைப் புராணத்தைத்
தைரியமாய் சில நொடிகளில்
புட்டுப் புட்டு வைத்தான்.
*

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by முரளிராஜா Thu Mar 27, 2014 7:35 pm

கவிதை அருமை 
பாராட்டுக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum