தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராமபிரானின் கருணை!

View previous topic View next topic Go down

ராமபிரானின் கருணை! Empty ராமபிரானின் கருணை!

Post by முழுமுதலோன் Wed May 14, 2014 9:40 am

ராமபிரானின் கருணை! Raman

          இறைவன் கருணைக்கடல்; சத்தியசந்தன். பக்தியோடு தஞ்சம் புகுந்தோரைக் காத்தருளும் அன்புள்ளம் படைத்தவன். இயற்கையாகவே தன்னை அண்டியவர்களைக் காப்பது இறைவனது இயல்பு.

இராவணனால் பல தொல்லைகளுக்கு ஆளாகிய தேவர்கள் பரந்தாமனிடம் சென்று, "த்வம் கதி பரமோ தேவ' - நீயே மெய்ச்சரண் என்று சரணடைந்தனர்.

முதலை வாய்ப்பட்ட கஜேந்திரன் "ஆதிமூலமே' என்று அரற்றியபோது, கருடாரூடராக ஓடோடி வந்து தன் சக்ராயுதத்தால் முதலையைச் சேதித்து கஜேந்திரனைக் காப்பாற்றினார் அல்லவா?

"த்வமேவ சரணம் வ்ரஜ' என்று தேவர்கள் வேண்டியதும், "அஞ்சற்க! உங்களைக் காப்பாற்றுவது என் பொறுப்பு. கவலை வேண்டாம்' என அபயப்பிரதானம் அளித்தார் பெருமாள்.

அதற்காகவே தசரத மைந்தனாக- மனிதனாகப் பிறந்து, நல்லோர் வாழ தான் படாத பாடெல்லாம் பட்டு, இறுதியில் இராவண சம்ஹாரம் முடிந்து வைகுண்டம் சேர்ந்தார்.

"ராஜ்யம் ப்ரம்ஸ்ட்ர வனவாஸோ சீதா நஷ்ட' என்றபடி, அயோத்தி மன்னனாக முடிசூட வேண்டிய அண்ணல், கைகேயியின் வரத்தால் கானகம் புகுந்தபோது, சீதையை இராவணன் தூக்கிச் செல்ல, மனைவியை இழந்து துக்கித்தான்.

இராவண சம்ஹாரம், அகலிகை சாப விமோசனம், சபரி மோட்சம், பரத்வாஜர் போன்ற முனிவர்களுக்கு காட்சி அருளுதல், குகன், சுக்ரீவன், வீபிஷணன் போன்றோருக்கு அபயப் பிரதானம் அளித்தல், அனுமனை தனது தாஸ்ய பக்தனாக ஏற்றல்- இப்படி பல காரியங்களைச் செய்ய வேண்டி இருந்ததாலேயே மந்தரையைத் தூண்டிவிட்டு, தசரதனிடம் கைகேயி இரு வரங்களைக் கேட்டு, ஒரு வரத்தால் பரதன் நாடாளவும், மற்றொரு வரத்தால் ராமன் கானகம் ஏகவும் வேண்டும் என்று கைகேயி கோரியது இராமனின் சங்கல்ப வசத்தாலேயே. ஆகவேதான் இராவண சம்ஹாரம் முடிந்து அயோத்தி திரும்பியதும் ராமன் கூனியை வணங்குகிறான். அவளால் அன்றோ ராமன் அரும்பெரும் செயல்களைச் செய்ய நேர்ந்தது.

வானுலகிலிருந்து வந்த தசரதன் தன் மகன் ராமனைப் பார்த்து மகிழ்ந்து, "வேண்டும் வரம் கேள்' என, கைகேயியை தன் தெய்வம் எனப் போற்றி, அவளை மன்னித்து ஏற்கும்படி தந்தையிடம் பிரார்த்தித்தான் ராமன். "தீயள் என நீ துறந்த என் தெய்வமும் மகனும், தம்பியும் தாயுமாம் என வரம் தருக' என்றல்லவா ராமன் கேட்கிறான்.

இராவண சம்ஹாரம் மட்டுமே ராமனின் நோக்கமாக இருக்கவில்லை. 24 வயதில் கானகம் சென்ற இராமன், அடுத்த 14 ஆண்டுகளில் இராவண வதம் முடித்து, தனது பிரதிக்ஞையை நிறைவேற்றியவுடன் தேவர்கள் "மீண்டும் வைகுண்டம் ஏகுக' என்று வேண்டியபோதிலும், பல்லாயிரம் ஆண்டுகள் அயோத்தி மாமன்னனாக நல்லாட்சி புரிந்து அருள்பாலித்தான்.

குகன் தந்த தேனையும் மீனையும் அன்புடன் ஏற்றுக்கொண்டான் ராமன். சபரி எச்சில்படுத்திக் கொடுத்த கனியை அமுதென உண்டது மட்டுமல்ல; தன் தாயாக அவளை நினைத்து, சபரியின் காலில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான்.


ராமபிரானின் கருணை! Raman1

சத்யவாக்கிற்கு என்றுமே மறுபேச்சில்லை; மறுப்பில்லை. ஆகவே அனுமன் சொன்னதை ராமன் மறுக்கவில்லை. விபீஷணன் ராமனைத் தஞ்சம் புகுந்தபோது, சுக்ரீவன் முதலானோர் "இராவணனின் தம்பியான அவனை ஏற்கலாகாது' என்றனர். அனுமன் மட்டும் ஏதும் கூறாமல் இருந்தான். அவனை ராமபிரான் ஏறெடுத்துப் பார்த்து, "உன் அபிப்பிராயம் என்னவென்று சொல்' என, அனுமன் இலங்கை சென்றபோது விபீஷணனை சந்தித்தவன் என்பதால், "தஞ்சம் என்று வந்த அவனை ஏற்கலாம்' என, மாருதி எடுத்துச்சொன்ன பெற்றியே பெற்றி என்று, விபீஷணனுக்கு அபயம் அளித்தான் ராமன்.

விபீஷணனை இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறான் ராமன். இது தன்னைச் சரணடைந்ததற்காக அளித்த பரிசு மட்டுமல்ல; இராவண சம்ஹாரம் முடிந்ததும், விபீஷணனை இலங்கை அரசுக்கட்டிலில் அமர்த்தி, முன்பு தான் அளித்த கொடையை ஊர்ஜிதம் செய்கிறான். 

இராமன் நினைத்திருந்தால் இலங்கையை அயோத்தியின் ஒரு பகுதியாக ஆக்கியிருக்க முடியும். கொடுப்பதுதான் இறைவனது செயலே அன்றி எடுப்பது அல்ல.

இராவணன் தன் தம்பியை இழந்து, தனயனை இழந்து, படைகளை இழந்து தன்னந்தனியனாக தலைதாழ்ந்து நிற்கிறான். ராமன் நினைத்திருந்தால் ஒரே கணத்தில் அவனை வீழ்த்தியிருக்க முடியும். எதிரிக்கும் இரங்கும் அவனது குண இயல்பு இங்கு வெளிப்படுகிறது. "பாவி நீ இறத்தி அது கண்டு நான் வருந்திலன். நின் தனிமை கண்டு இரங்குகிறேன். தேவியை விடுத்து நின் ஆவியைக் காத்துக்கொள். அல்லையாமெனின் நின்வலியெலாம் திரட்டி, இன்று போய் நாளை வா' என்று போகவிடுத்தானே- அதுதான் ராமனின் கருணைக்குச் சான்று!

இவை தவிர ராமனின் கருணைக்கு முத்தாய்ப்பான ஒரு நிகழ்ச்சி. கம்ப ராமாயணத்தின் காவிய நாயகன் ராமன்தான் என்றாலும், அந்தக் காவியத்தின் உயிர்நாடி அனுமன்.

இராவண வதம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பியதும் முடிசூடிக்கொள்கிறான். 

விழாவுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக உரிய பரிசுகளுடன் விடைபெற்றுச் செல்கிறார்கள். கடைசியாக அனுமன் ராமன் முன்வந்து நெடுஞ்சாண்கிடையாக அவன் பாதம் தொட்டு வணங்குகிறான். அவனை அப்படியே வாரி எடுத்து தன் மார்புடன் இறுகத் தழுவிக்கொள்கிறான் ராமன்.

எல்லாருக்கும் பரிசு கொடுத்து அனுப்பியதுபோல, அனுமனையும் எப்படி வழியனுப்புவது? அவன் செய்திருக்கும் உதவிகளுக்கு என்ன பரிசு தருவது? எதைக் கொடுத்தாலும் அந்த உதவிக்குத் தகுந்த கைம்மாறாகுமா? அவனது உழைப்புக்கும், சீரிய தொண்டுக்கும் அது ஈடாகுமா? கம்பன் இந்த இடத்தில் ராமனைப் பேச வைக்கும் காட்சி நம் மனதை நெகிழச் செய்கிறது.

"ஆஞ்சனேயா! உன்னையன்றி எனக்கு இந்த உதவிகளையெல்லாம் செய்ய வல்லவர் யாருளர்? நீ எனக்குச் செய்திருக்கும் பேருதவிகளுக்கு இணையாக நான் திரும்பத் தருவதற்கு எதுவுமே இல்லையே. ஆதலால், நின் திண்தோள்களால் என்னை ஆரத் தழுவிக்கொள்' என்று தன்னையே பரிசாகத் தருகிறான் ராமன்.

மாமன்னன், உலகாளும் சக்கரவர்த்தி அனுமனைக் கட்டித் தழுவுகிறான் என்றால்- "என்னைக் கட்டித் தழுவிக்கொள்' என்று தன்னையே அவனிடம் சமர்ப்பிக்கிறான் என்றால் பக்தனுக்கு இதைவிட மாபெரும் பரிசு வேறு என்ன இருக்க முடியும்.

"நாம் ஓருடல்; ஓருயிர்' என்று ஜீவாத்மா- பரமாத்மா ஐக்கிய பாவத்தையே இதன் மூலம் உணர்த்துகிறான். 

அனுமனை வணங்குவது என்னை வணங்குவது போலத்தான் என்பதையும் இச்செயல் மூலம் ராமன் நமக்கு எடுத்துக்காட்டுகிறான்.

"ஆர் உதவிகளுக்கு ஒத்தார்நீயலால்? 
அன்று செய்தபேர் உதவிக்கு 

யான்செய் செயல்
பிறிது இல்லை; பைம்பூண்
போர் உதவிய திண் தோளாய்
பொருந்துறப் புல்லுக என்றான்.'

அடடா! கம்பனைவிட காகுத்தனின் அளப்பெரும் கருணையை வியந்து பாராட்டக்கூடியவர் வேறு யார் இருக்க முடியும்?

இப்படி இராமாயணம் முழுவதும் இராமனின் அளப்பெருங்கருணை வெளிப்படுவதைக் காணலாம். நீயே மெய்ச்சரண் என்று அவன் தாள் பணிந்து நாமும் அவனது கருணைக்குப் பாத்திரமாவோம்!



http://www.nakkheeran.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ராமபிரானின் கருணை! Empty Re: ராமபிரானின் கருணை!

Post by sreemuky Wed May 14, 2014 4:28 pm

சூப்பர் சூப்பர் 
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

ராமபிரானின் கருணை! Empty Re: ராமபிரானின் கருணை!

Post by ஸ்ரீராம் Thu May 15, 2014 8:54 am

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ராமபிரானின் கருணை! Empty Re: ராமபிரானின் கருணை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum