Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரமிப்பூட்டும் புலிகள்
Page 1 of 1 • Share
பிரமிப்பூட்டும் புலிகள்
புலிகளின் ஆயுட்காலம் காடுகளில் சுமார் 15 முதல் 25 வருடங்கள் வரை. ஒரு புலியின் உடலில் உள்ள கோடுகள் இன்னொரு புலியின் உடலில் இருக்காது.புலிகள் தனியாக மட்டுமே வேட்டையாடும். புலிகளின் கர்ப்பகாலம் 103 நாட்கள். 2 முதல் 6 புலிக்குட்டிகள் வரை ஒரு பிரசவத்தில் பிறக்கும்.ஒரு தடவைக்கு சுமார் பதினெட்டு கிலோ எடை அளவு மாமிசத்தை புலிகள் உண்ணும். பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய உறுப்பினர்கள் புலிகள். ஆசியக் காட்டுப் பகுதிகளில் காணப்படும் இவற்றில் கேஸ்பியன், பாலி, ஜாவா வகைப்புலிகள் அழிந்து விட்டன.
பெரும்பாலும் ஆரஞ்சு, மஞ்சள் சேர்ந்த நிறத்தில் கறுப்புக்கோடுகளுடன் புலிகள் காணப்படும். அவை வாழும் இடத்தைப் பொறுத்து சற்று அதிகமான நிறத்திலோ அல்லது குறைவான நிறத்திலோ இருக்கும். வெள்ளைப் புலிகளுக்கு கோடுகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். சிங்கங்களில் காணப்படுவது போல வெள்ளைப் புலிகள் குறைபாடுகளுடன் பிறந்தவை அல்ல. புலிகளின் கண்களில் டபீடம் லூசிடம்மால் என்ற ஸ்பெஷல் லேயர் உள்ளது. இதனால் புலிகளால் மனிதனை விட ஆறு மடங்கு நன்றாக பார்க்க முடியும்.
கிட்டத்தட்ட பத்தில் இருந்து முப்பது மைல்கள் வரையுள்ள பகுதியைத் தங்கள் எல்லையாகக் கொள்ளும் புலிகள், மற்ற புலிகள் தங்கள் எல்லைக்குள் வந்தால் அவற்றுடன் சண்டையிடும். ஆண் புலியுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்துக்குப் பிறகு அதே ஆண் புலி தனது எல்லைக்குள் வந்தால் கூட அது தனது குட்டிகளைக் கொன்றுவிடும் என்பதால் அவற்றுடன் பெண் புலி சண்டையிடும். புலிக்கு தண்ணீர் என்றால் மிகப் பிரியம். நீர் நிலைகளுக்கு அருகில் தண்ணீரைக் குடித்துக் கொண்டு காத்திருக்கும் புலிகள் அருகில் வரும் எந்த இரையையும் நீருக்குள் விழ வைத்து எளிதாகப் பிடித்து விடும்.
முதலைகள், கரடிகள், நரிகள், ஓநாய்கள் ஏன் சொந்த தந்தைக் கூட புலிக் குட்டிகளுக்கு எதிரிதான். புலிகளின் காதுகளின் பின்புறம் ஐஸ்பாட்ஸ் இருக்கும். காதுகள் கறுப்பாக இருக்கும். அவற்றில் வெள்ளையாக இந்த ஐஸ்பாட்ஸ் இருக்கும். கோபம் வந்தால் காதுகள் உடலோடு ஒட்டிக்கொள்ளும். அப்போது இந்த ஐஸ்பாட்ஸ் தெரிவதால் புலிகள் கோபமாக இருப்பதை அறியலாம். புலிகள் பெரும்பாலும் மனிதனை உண்பதைத் தவிர்த்து விடும். ஏனெனில் மனித உடலில் போதிய மாமிசம் இருக்காது. வயதாகி, பற்கள் விழுந்து அல்லது காயப்பட்டு, வேட்டையாட முடியாமல் சோர்ந்து போன புலிகள் மட்டுமே மனிதனை உண்ணும்.
சிறுத்தைகளின் உடலில் இருக்கும் புள்ளிகளைப் போலத்தான் புலிகளுக்கும் இருக்கும் என்றும் அவை விரிவடைந்து கோடுகளாகி விட்டன என்றும் நிறைய விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இரையை பதுங்கும்போது புல்லின் நிழல் போல் இருப்பதால் மற்ற மிருகங்கள் எளிதில் இதைக் கண்டுபிடிக்க முடியாது. புலியின் உடலில் 100க்கும் மேற்பட்ட வரிகள் இருக்கும் புலிகளால் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் ஓட முடியும். புலிகள் இரையைத் துரத்தும்போது 9 முதல் 10 மீட்டர் உயரம் வரை கூடத் தாவும்.
புலிகளின் உணவு மான்களின் காட்டுப்பன்றி, ஆடு, மாடுகள், சில நேரங்களில் இளம் யானைகள், கரடி போன்றவையாகும். புலிகள் 3 முதல் 4 நாட்களுக்கு தன் உணவை 50 முதல் 80 கிலோ கிராம் வரை எடுத்துக்கொள்ளும். இது ஒரு தடவையில் 3 முதல் 4 குட்டிகள் வரை போடும். புலிகளின் எடை அளவு ஆண், பெண்ணுக்கு வேறுபட்டு இருக்கும். ஆண் புலிகளின் எடை 200 முதல் 320 கிலோ கிராம் வரை இருக்கும். பெண் புலிகளின் எடை 120 முதல் 181 கிலோ கிராம் வரை இருக்கும்.
ஆண் புலியின் நீளம் 2.06 முதல் 3.03 மீட்டர். பெண் புலியின் நீளம் 2.03 மீட்டர் வரை இருக்கும். சில நேரங்களில் ஜீன் மாறுதலால் ஒரே பிரசவத்தில் ஓரிரு குட்டிகள் வெள்ளையாகவும் இருக்கும். இதைத்தான் வெள்ளைப் புலி என்கிறோம். முப்பது அடிக்கும் அதிகமாக இருக்கும் இரையைக் கூட குறிவைத்து சரியாகத் தாக்கப் புலிகளால் முடியும். பெரும்பாலும் இரையின் பின் கழுத்தில் கடித்து அவற்றின் முதுகெலும்பை முறித்து அல்லது சுவாசத்தடை ஏற்படுத்தி இரையைக் கொன்று விடும்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பிரமிப்பூட்டும் புலிகள்
அறிந்துகொண்டேன்
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» துப்பறியும் புலிகள் 007
» பிரமிப்பூட்டும் மரங்கள் ...
» புதரில் புலிகள்...
» பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!
» பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!
» பிரமிப்பூட்டும் மரங்கள் ...
» புதரில் புலிகள்...
» பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!
» பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|