தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நட்புக்கு காரணம் மரபணுக்களா?

View previous topic View next topic Go down

நட்புக்கு காரணம் மரபணுக்களா? Empty நட்புக்கு காரணம் மரபணுக்களா?

Post by நாஞ்சில் குமார் Thu Jul 17, 2014 10:51 pm

நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக்களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

நல்ல நட்புக்கு மரபணுவும் காரணமா

அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவுகளை அவர்கள் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் சிறு நகரம் ஒன்றில் இவர்கள் மனித இதயம் தொடர்பிலான ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 2000 பேரிடம், இவர்கள் தமது மரபணு தொடர்பான இந்த குறிப்பிட்ட ஆய்வையும் மேற்கொண்டனர். அதன் படி நண்பர்கள் மத்தியில் மரபணுக்கள் எந்த அளவு ஒத்துப்போகின்றன என்று இவர்கள் ஆராய்ந்தனர். அதன் முடிவில் நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையில், மற்றவர்களைவிட குறைந்தபட்சம் 0.1 சதவீத மரபணுக்கள் அதிகமாக ஒரே மாதிரி இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை விட நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். வழக்கமாக இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன் அல்லது சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும். அதுவும் கூட தலைமுறைகள் கடந்து செல்லச் செல்ல, இந்த மரபணு ஒத்துப்போகும் தன்மையும் படிப்படியாக குறையத்தொடங்கும். அப்படி பார்க்கும்போது, ஒருவரின் நான்கு தலைமுறைகள் கடந்த கொள்ளுத்தாத்தா--பாட்டிக்குப் பிறந்த இன்றைய நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாரிசுகளுக்கு மத்தியில் என்ன மாதிரியான மரபணு ஒற்றுமைகள் காணப்படுமோ அதே மாதிரியான ஒற்றுமைகள் நல்ல நண்பர்கள் மத்தியிலும் காணப்படுவதாக இந்த இரண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

நட்புக்கு காரணம் மரபணுக்களா

எந்த ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுவின் மூலக்கூற்றையும் தாங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போகும் போக்கு, அளவு என்பது எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாகவும், ஒரே மாதிரி தொடர்ந்தும் இருக்கிறது என்பது மட்டுமே தங்களின் கண்டுபிடிப்பு என்றும் இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சக விஞ்ஞானிகள் உடன்படவில்லை

ஆனால் இவர்களின் இந்த கண்டுபிடிப்பை சகவிஞ்ஞானிகள் அப்படியே ஏற்க முடியாது என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஒரு சிறு நகரில் இருப்பவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் இவான் சார்னி, இவர்கள் எடுத்த மாதிரிகளில் பெரும்பான்மையானவர்கள் ஒரே இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்றும் அதனாலேயே கூட இந்த ஆய்வின் முடிவுகள் இப்படி வந்திருக்கலாம் என்றும் வாதாடுகிறார்.

மேலும் இந்த ஆய்வில் பெங்கேற்றவர்கள் யாரும் யாருக்கும் உறவு முறையானவர்கள் அல்ல என்பதையும் இந்த ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலையில், இப்படி நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போவதாக பொத்தாம் பொதுவில் சொல்வது சரியான அறிவியல் அணுகுமுறையல்ல என்றும் அவர் கூறுகிறார்.

இவரது விமர்சனத்தை மறுக்கும் ஆய்வாளர்கள் ஜேம்ஸ் பவுலர் மற்றும் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ், தாங்கள் செய்த ஆய்வின் மாதிரிகளில் சுமார் 907 ஜோடி நண்பர்களைத் தனியாக பிரித்து, அவர்களுக்கு இடையில் எந்தவிதமான ரத்த உறவும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு அவர்களின் மரபணுக்களை ஒப்பிட்டு பார்த்ததாக தெரிவிக்கின்றனர். அப்போதும் நண்பர்களுக்கு இடையில் மரபணுக்களின் ஒற்றுமை கூடுதலாக இருந்ததாக இவர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் மத்தியில் இவர்களின் இந்த விளக்கங்கள் இன்னமும் ஏற்கப்படவில்லை. இவர்கள் ஆய்வு மேற்கொண்டவிதம், அதில் கடைபிடித்த அளவுகோல்கள் குறித்த கேள்விகள் தொடரவே செய்கின்றன.

நன்றி: வெப்துனியா
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நட்புக்கு காரணம் மரபணுக்களா? Empty Re: நட்புக்கு காரணம் மரபணுக்களா?

Post by sawmya Fri Jul 18, 2014 3:47 pm

ம் ம் ம்  முழித்தல் முழித்தல் முழித்தல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நட்புக்கு காரணம் மரபணுக்களா? Empty Re: நட்புக்கு காரணம் மரபணுக்களா?

Post by ரானுஜா Fri Jul 18, 2014 3:50 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நட்புக்கு காரணம் மரபணுக்களா? Empty Re: நட்புக்கு காரணம் மரபணுக்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 19, 2014 7:03 am

காரணம் கண்டுபிக்க முடியாதை அனைத்திற்கும் இப்படித்தான் ஒரு சாக்கு இருக்கிறது அறிவியலுக்கு... ஜீன் என்றோ அணுத்துகள் என்றோ... பரம்பறை நோய் - பரம்பரை என்றோ...

எடுத்துக்காட்டுக்கு... நான் கண்ணில் பிரச்சினை என்று மிகப்பெரிய மருத்துவமனைக்குச் சென்றேன்.
இந்த நோய் உன் அம்மா அப்பாவுக்கு இருந்திருக்கும் என்றார்கள் இல்லை என்றேன்.
தாத்தா பாட்டிக்கு என்று கூறியதும் இல்லை என்றேன்...
அப்படியென்றால் அதற்கு முன்தைய தாத்தா பாட்டி என்றார்கள்... அவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது என்றேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நட்புக்கு காரணம் மரபணுக்களா? Empty Re: நட்புக்கு காரணம் மரபணுக்களா?

Post by நாஞ்சில் குமார் Sun Jul 20, 2014 10:27 pm

உங்கள் கூற்றும் ஒரு விதத்தில் சரிதான் கவியருவி ரமேஷ்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நட்புக்கு காரணம் மரபணுக்களா? Empty Re: நட்புக்கு காரணம் மரபணுக்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum