தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ஸ்ரீராம் Tue Feb 24, 2015 11:07 am

[You must be registered and logged in to see this image.]

மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். உலகளவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகிவருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சிலபொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படிசெயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

1. பாதுகாப்பினை உருவாக்குக:
ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது.மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின்வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகையிலாவது, பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். கூகுள் அக்கவுண்ட்டினை இதில் பயன்படுத்தினால், இரண்டு அடுக்கு நிலை பாதுகாப்பினை உருவாக்கி வைக்கவும்.

2. பி.ஓ.பி. (POP) அஞ்சல் முறையைத் தவிர்க்கவும்:
பொதுவாக ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு கேள்வியை எதிர்பார்க்கலாம். ”ஏன் என் மெயில்கள் போனிலிருந்து அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து மறைந்து விடுகின்றன?” இதற்கான அடிப்படை காரணம், நீங்கள் உங்கள் அஞ்சல் கணக்கினை பி.ஓ.பி. வகையில் அமைப்பதுதான். இந்த வகையில், அஞ்சல்கள் எப்போதும் அதற்கான சர்வரில் தங்கி இருக்கும்படி அமைக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க தரவிறக்கம் செய்திடுகையில், சர்வரில் இருந்து மறையும்படி அமைக்கக் கூடாது. பலவகையான வழிகளில் அஞ்சல் அக்கவுண்ட்களை அமைக்கலாம். ஆனால், கூடுமானவரை பி.ஓ.பி. வகை செட் அப்பினைத் தவிர்க்கவும்.

3. விட்ஜெட்டுகள் அதிகம் தேவையா?
சில ஆண்ட்ராய்ட் ஹோம் ஸ்கிரீன்திரைகளில் எக்கச்சக்கமான விட்ஜெட்டுகள் எனப்படும் அப்ளிகேஷன்களைப் பார்க்கிறோம். விட்ஜெட்டுகள் என்பவை எப்போதும் தாமாகவே இயங்கி, தகவல்களைத் தந்து கொண்டிருப்பவை. எந்த அளவிலான எண்ணிக்கையில் இவை அதிகமாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு உங்கள் போனின் பேட்டரி மின் சக்தி வேகமாகத் தீர்ந்துவிடும். எனவே, உங்களுக்குத் தேவையான, அவசியம்தேவையான விட்ஜெட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அதிகமாக வேண்டாம்.

4. ஜிமெயில் தவிர்க்க வேண்டாம்:
ஆண்ட்ராய்ட் மற்றும் ஜிமெயில் பிரித்து வைத்துப் பார்க்க இயலாதவை. இவை இரண்டும் இணைந்த செயல்பாடு மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே, நீங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கிப் பயன்படுத்துவதாக இருந்தால், கட்டாயம் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தவும். ஜிமெயில் அக்கவுண்ட் இல்லை என்றால், பல முக்கிய பயனுள்ள விஷயங்களை இழக்க நேரிடும். கூகுள் பிளே ஸ்டோர், பேக் அப் எடுப்பது எனப்பல முக்கிய செயல்பாடுகளை, ஜிமெயில் அக்கவுண்ட் வழியாகத்தான் மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்ட் போனை செட் அப் செய்வதற்கு முன்னரே, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி, போன் செட் அப் செயல்பாட்டின் போது பயன்படுத்தவும். காலப் போக்கில் போன் பயன்பாட்டில், இதன் வசதிகளை நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள்.

5. அனுமதிகளை அளந்து தரவும்:
அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அந்த அப்ளிகேஷனைப்பயன்படுத்தும்போது, சிஸ்டத்திற்கு எந்த வகை அனுமதியைத் தர இருக்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உங்களுக்குக் கிடைக்கும். சிஸ்டத்திற்கான அனுமதியைக் குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும். சில அப்ளிகேஷன்கள் உங்களுடைய இடம் குறித்த தகவல்கள், மின் அஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். இவற்றைத் தர வேண்டாம். இவை இல்லாமல், இன்ஸ்டால் ஆகாது என்றால், அந்த அப்ளிகேஷனையே புறக்கணித்துவிடவேண்டும். எந்த வகை அனுமதி கொடுத்தால், நம் டேட்டா எந்த அளவில் அப்ளிகேஷன் வசப்படும் என்பதனை நன்கு அறிந்து, அதற்கேற்ப அனுமதி தரவும்.

6. தேவை இல்லாமல் புளுடூத் ஏன்?
நீங்கள் புளுடூத் பயன்படுத்தாதவராக இருந்தால், அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஏன் அதன் இயக்கத்தைத் தொடர்ந்து செயல் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்? இது உங்கள் பேட்டரியின் மின் சக்தியை வேகமாக இழக்கச் செய்திடும். எனவே, போன் செட் அப் செய்திடுகையில், புளுடூத் வசதியை இயங்கா நிலையில் அமைக்கவும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும். இதே போல வை பி வசதியையும் பயன்படுத்தவும்.

7. அப்ளிகேஷன் தணிக்கை:
உங்கள் போனில் எத்தனை அப்ளிகேஷன்களை அமைத்து இருக்கிறீர்கள் என மாதம் ஒருமுறையாவது தணிக்கை செய்திடவும். பயன்படுத்தாதவற்றை அன் இன்ஸ்டால் செய்திடவும். கேம்ஸ்விளையாடுவது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால், அவற்றில் நாளடைவில் ஆர்வம் குறைந்துவிட்டால், அன் இன்ஸ்டால் செய்து விடலாம். பயன்படுத்தாத அப்ளிகேஷன்களும், கேம்ஸ்களும்,பயன்படுத்தாத நிலையிலும் பேட்டரியின் சக்தியை இழக்க வைத்திடும்.

8. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு,
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளைந்து கொடுக்கும் தன்மை தான். இதனாலேயே, புதிதாய் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள், அனைத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அனைத்தையும் பயன்படுத்த எண்ணினால், சில முக்கிய பயன்பாடுகளை இழக்க நேரிடும்.

9. அப்டேட் குறித்து அலட்சியம் வேண்டாம்:
பல வேளைகளில் நமக்கு சில அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அல்லது, புதிய அப்டேட் உள்ளது. தரவிறக்கம் செய்திடவா? என்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் இதனால் தொல்லை ஏற்படுமோ என்று எண்ணி அனுமதி மறுப்பார்கள். சிலர், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அப்டேட் குறித்து அறிவிப்புகள் வருவதற்கு காரணம், பெரும்பாலும் அவை போனின் பாதுகாப்பு குறித்த பைல் அப்டேட் ஆகவே இருக்கும். பொதுவாக, ஆப்பிள் நிறுவனம், தான் பெரிய அளவில் மாற்றங்களைத் தருவதாக இருந்தால் மட்டுமே, இது போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்.

சில வேளைகளில், முன்பாகவே அறிவித்துவிட்டு, தானாகவே ஒரே நேரத்தில், தன் அனைத்து ஐபோன்களிலும் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன்களை அப்டேட் செய்திடும். ஆண்ட்ராய்ட் அப்படி அல்ல. சின்ன விஷயங்களுக்குமான அப்டேட் குறித்தும்அறிவிக்கும். சில அப்டேட் பைல்களை நம் உதவியின்றி போனில்அப்டேட் செய்திட முடியாது. பொதுவாக, நாம் குறிப்பிட்டகால இடைவெளியில் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்ளிகேஷன் மேனேஜர் பிரிவிற்குச் சென்று, அங்கு அப்டேட் செய்ய வேண்டிய பைல்கள்உள்ளனவா என்று சோதனை செய்து, பின்னர் அப்டேட் செய்திடலாம். அல்லது பிளே ஸ்டோர் சென்றும் இதனை அறியலாம்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது இப்போது உலகெங்கும் அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைப் பெற்றுள்ள ஒரு தளமாகும். எனவே, அதற்கு மாறிக் கொள்கையில், சிறிய அளவிலான தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.

நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

நன்றி: தினமலர்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by kanmani singh Tue Feb 24, 2015 11:19 am

மிக மிக மிக சிறப்பான பயனுள்ள பகிர்வு! நன்றி நண்பா!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ரானுஜா Tue Feb 24, 2015 12:13 pm

பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்

நான் வாங்கின மொபைல் 8ஜீபி மெமரி ஆனா எது டவுன்லோட் செய்தாலும் பொன் ஸ்டோரேஜ் இல்லன்னு சொல்லுது .

கேம் எல்லாமே மெமரி கார்ட்ல தான் இருக்கு. என்ன செய்வது???????
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ஸ்ரீராம் Wed Feb 25, 2015 10:06 am

[You must be registered and logged in to see this link.] அக்கா நீங்க என்ன மொபைல் வாங்கி இருக்கீங்க என்று சொல்லவில்லை. மாடல் எண் தாருங்கள்.

நீங்கள்  ஆண்ட்ராய்ட்  மொபைல் வைத்து இருந்தால் அதில் Settings சென்று Storage செல்லுங்கள். அதில் Available என்பதற்கு எதிரே எவ்வளவு GB பேலன்ஸ் இருக்கு என பாருங்கள். அதன் பிறகு கீழே Cached என்பதில் எவ்வளவு இருக்கு என்பதை சொல்லுங்கள். நான் என்ன செய்யலாம் என்று சொல்கிறேன். மொபைல் பற்றிய எந்த கேள்வியையும் என்னிடம் கேட்கலாம் அக்கா.

கீழே ஸ்க்ரீன்ஷாட் போட்டு இருக்கேன் பாருங்கள்.
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ரானுஜா Wed Feb 25, 2015 11:53 am

மொபைல் மாடல் MICROMAX A 106 UNITE 2
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ஸ்ரீராம் Wed Feb 25, 2015 12:15 pm

MICROMAX A 106 UNITE 2

அப்படியானால் மாடல் எண்: A106

நல்ல மொபைல்தான்.

Android v4.4.2 (KitKat) OS
FM Radio
2 MP Secondary கேமரா
8GB Internal Storage
Expandable Storage Capacity of 32 GB
4.7-inch LCD Touchscreen
1.3 GHz MT6582M Quad Core Processor
Wi-Fi Enabled
5 MP Primary Camera
HD Video Recording
Face Recognition

நீங்க செட்டிங்ஸ்ல>> Storage சென்று நான் சொன்னது போல பார்த்தீர்களா? Clean Master இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ரானுஜா Wed Feb 25, 2015 12:40 pm

Clean Master இன்ஸ்டால் இருக்கு ராம்...

செட்டிங்க்ஸ்ல பார்த்தேன் AVAILABLE 195 MB இருக்கு .

Cached இப்பதான் கிளீன் செய்தேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ஸ்ரீராம் Wed Feb 25, 2015 1:27 pm

ஓ கிளீன் செய்தபின் எவ்வளவு இருக்கு?

8GBல 5GB உங்களுக்கு கிடைக்கும். அதில் 195MB பேலன்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி அக்கா. நீங்கள் நான் ஸ்கிரீன்ஷாட் போட்டது போல நீங்க ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவுடுங்கள்.

மாலை வருகிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ரானுஜா Wed Feb 25, 2015 1:41 pm

[You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ரானுஜா Wed Feb 25, 2015 1:49 pm

[You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ஸ்ரீராம் Wed Feb 25, 2015 4:41 pm

Total Internal Storage 1GB கூட இல்லையே [You must be registered and logged in to see this link.] அக்கா

நீங்க வாங்கிய இடத்தில் திரும்ப கேட்டீர்களா?

போனை மாற்றுவது நல்லது
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ரானுஜா Wed Feb 25, 2015 5:18 pm

ஸ்ரீராம் wrote:Total Internal Storage 1GB கூட இல்லையே [You must be registered and logged in to see this link.] அக்கா

நீங்க வாங்கிய இடத்தில் திரும்ப கேட்டீர்களா?

போனை மாற்றுவது நல்லது

போனை எப்படி மாத்த முடியும்ம்... ஆப்ஸ் டவுன்லோட் செய்யும்போது EXTERNAL பாதி இண்டர்நெல் பாதி எம்பி ஸ்டோர் ஆகும்னு சொல்றாங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by ஸ்ரீராம் Thu Feb 26, 2015 9:48 am

ஆப்ஸ் டவுன்லோட் செய்யும்போது EXTERNAL பாதி இண்டர்நெல் பாதி எம்பி ஸ்டோர் ஆகும்னு சொல்றாங்க

இல்லை. உங்கள் மொத்த ஸ்டோரேஜ் ரொம்ப ரொம்ப கம்மியா கான்பிக்குதே. 5GB ஆவது காண்பிக்க வேண்டும். அதுதான் எனக்கு புரியல. அப்புறம் என்ன கேம்ஸ் வைத்து இருக்கீங்க? நான் கேம்ஸ் விளையாடுவதில்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் தவறுகள் தவிர்க்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum