தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிந்தும் அறியாததும்

View previous topic View next topic Go down

அறிந்தும் அறியாததும்  Empty அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:24 pm

அடையாளமாகும் ஆபரணங்கள்
--------------------

நகை மோகம் நங்கையரை மட்டுமின்றி இன்று ஆடவரையும் ஆட்டிப்படைகிறது.

பொட்டுத் தங்கம் கூட போடாத நிலையில் பூவையரின் அங்கங்கள் மூலியாக அழுது வடிவது போல் தருவது என்னமோ உண்மைதான். ஆனால் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ, நம் ஆன்றோர்கள் அந்த அணிகளுக்கு ‘ நகை ‘ என்னும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள்.அணி என்னும் சொல்லும் ‘அணிதல்’ மற்றும் அலங்கரித்தல் என்னும் இரு பொருள் தந்து நகைகளுக்கு மறு பெயராக விளங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் பலப்பெண்களை முதிர்கன்னியாக்கி, வனிதையரை வதைக்கும் இந்த வரதட்சணை கொடுமையில் முக்கிய இடமும் பங்கேற்பதும் இந்த நகை என்றால் அது மிகையான நகையல்ல. சரி… இந்த நகைகள்தோன்றின வரலாறும் தொன்மையும் பார்த்தால் சுவையும் வாய்ந்தது.

தொடக்கம்

காட்டு விலங்களை வேட்டையாடி வாழ்ந்த கற்காலம் அது. நம் மூதாதையர் புலிப்பல், யானைத் தந்தம் போன்றவற்றை மிருகங்களின் நரம்புகளாகிய நான்களில் கோர்த்து கழுத்து, இடுப்பு, கைகளில் அணித்திருந்தார்கள்.

காலச்சுழற்சியில் பருத்தி,பஞ்சு, நூல் என்று நாகரிகம் கிளைகளை பரப்பியபோது நரம்புகளுக்கு பதில் நூலில் கோர்த்து அணியும் வழக்கம் ஏற்பட்டது. பின்னர் இயற்கைத்தாய் வழங்கிய முத்து,பவளம், மணி போன்றவற்றில் மனம் லயித்த அவர்கள், அவற்றில் துளையிட்டு கோர்த்து அணியும் நிலைக்கு முன்னேறினர். நூல் என்பதைக் குறிக்க ‘ இழை ‘ என்னும் இன்னொரு தமிழ்ச்சொல்லும் இருந்ததால், அந்நூலில் கோர்த்து அணிந்த அணிகளுக்கு’ இழை ‘ என்று பெயரிட்டனர். காலப்போக்கில் தங்கம், வெள்ளி போன்ற உலோங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் அவற்றை உருக்கி இழுத்த கம்பிகளில் மணி, பவளம், போன்றவற்றை கோர்த்து செய்யப்பட்ட போதிலும் அந்த பரணங்களுக்கும் ‘ இழை ‘ என்னும் பழைய பெயரே நிலைத்து விட்டது.

‘யிழை ‘ [ய் + இழை — ஆராய்ந்து செய்த ஆபரணம்]
‘அணியிழை ‘[ அழகிய ஆபரணம் ]
என்பன போன்ற இலக்கிய வழக்கு சொற்கள் இதனை உறுதி செய்கின்றன. இதே முறையில் முறுக்கிய கயிறு என்னும் பொருள் தரும் ‘வடம்’ என்னும் தமிழ்ச் சொல், பழங்காலத்தில் கயிற்றில் உருவான ஆபரணங்களை குறித்து நின்றது. இன்று பொற்கம்பிகள் முறுக்கி செய்த ஒருவகை அணிகலனுக்கு ‘வடம்’ என்னும் அந்த பழம் பெயர் வழங்குவதை அறிவோம்.

அடையாளத்திற்காக தோன்றிய அணிகள் அக்கால மக்கள் செயற்கரிய ஒரு செயலை செய்துமுடிக்க உறுதி பூணுங்கால், அதன் நினைப்பு எப்போது தமக்கிருக்க வேண்டும் என்ற குறிகோளில் தம் முன்னங்கைகளில் ‘ கங்கணம் ‘ என்னும் ஒரு வகை வளையத்தை அணிந்தனர். இன்றும் கூட ‘ஒரு காரியத்தை செய்து முடிப்பேன்’ என்று அக்கருமத்திலேயே கண்ணாக இருப்பார்கள். அவர் கையில் எதுவும் கட்டாவிடினும் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார் என்று குறிப்பிடுகிறோம் இல்லையா? அந்த கங்கணத்தின் மறு வார்ப்பு தான் பின்னால் உருவான காப்பு, கடகம், வளையல், வங்கி போன்ற கையணிகள். பண்பாடத காட்டுப்பாதைகளில் படுத்து உறங்கும் பாம்பு போன்ற நச்சுப்பிராணிகளில் அரவம் கேட்டு விலகவும், புள்ளினங்கள் காலடியோசை கேட்ட மாத்திரம் பயந்தோடவும் அக்கால ஆடவரும் மகளிரும் கால்களில் அணிந்திருக்கும் அணிகலன் சுழலும், தண்டையும், சிலப்பும் இன்று எல்லோருமே அணியும் மோதிரத்தின் முன்னோடிதான் பழைய கணையாழி. அன்றைய அரச குடும்பத்தாரும், அரச கட்டளையை நிறைவேற்றும் அமைச்சர்,தளபதி, தூதர், ஒற்றர் போன்ற பொறுப்பான பதவியினரும் மட்டுமே கணையாழி அணிவர். ஆழி என்பதற்கு ‘சக்கரம்’ என்று அர்த்தம்.

கண்ணபிரானது சக்கராயுதம் போல அரசனின் ஆணை சக்கரம் அவனது ஆட்சி எல்லைக்குள் விரைந்து பாயும் என்பதால், மன்னனின் ஆணையை செயல்படுத்தும் அதிகாரிகள் இன்றைய அடையாள அட்டைகள் போல அவற்றைப் பயன்படுத்தினர். பின்னாளில் விரலுக்கு அழகு சேர்க்க விரும்பிய எல்லோருமே அணியத் தொடங்கியதும் அது மோதிரமாகி விட்டது.

அங்கலெல்லாம் தங்கமாக மின்னவேண்டும் என்ற பரண மோகம் சங்க காலத்திலேயே மங்கையர் மனத்தில் புகுந்துவிட்டது போலும். கால் விரலில் அணியும் மெட்டி முதல் சுருங் கூந்தல் வகிட்டில் தொங்கும் நெற்றிச்சுட்டி வரை என்று பாவலர்கள் அணிகளின் பெயரால் ஐம்பெருங்காபியங்களை க்கித்தரும் அளவுக்கு அன்றே நகை மோகம் இருந்திருக்கிறது.

அயல் நாடுகளில் அந்நிய செலாவணிக்கே பயன்படும் தங்கம் ஆடம்பர சின்னங்களாய் நம்மவர்கள் அங்கங்களில் அடைந்து கிடக்கின்றன. ” நான் விரும்புவதெல்லாம்
அணிகலன் ஆடம்பர மின்றி அசோக வனத்தில் இருந்த சீதையைத்தான் ” என்ற அண்ணல் காந்தியின் தங்கத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்.

இன்றைய நவ நாகரீக அணிமணிகலனுக்கு நமது கோவிலுள்ள சிலைக்கு அணிவிக்கப்பட்ட நகைகளின் மறு பதிப்பு கூட கூறலாம்.

‘ கோவில்களுள் கோவில் ‘ என்றும் ‘ தேவாலய சக்கரவர்த்தி ‘ என்றும் ‘தென் திசை மேரு ‘ என்றும் அழைக்கப்படும் இராஜ ராஜீசுவரம் கோவிலை எழுப்பியவர் முதலாம் இராஜாராஜன். இந்தப் பேரரசர் ஒரு பேராற்றலின் மொத்த உரு. இவருடைய 29 ஆண்டுக்கால ஆட்சியில் 20 ஆண்டுகள் பேரரசை விரிவடையச் செய்வதிலேயே கழிந்தன. கடைசி பத்து ஆண்டுகள் இவர் கோவில் கட்டுவதிலும், கலை வளர்ப்பதிலும் கவனத்தை செலுத்தினார். இந்தக் காலக் கட்டத்தில்தான் தமிழரின் கலைகள் வளர்ச்சியடைந்தன. காலம் காலமாக இருந்து வந்த சிற்ப, கட்டட அணுகு முறைகளில் மாறுதல் வந்தன. உலோகத்தை உருக்கி சிலைகள் செய்யும் கலை விரிவடைந்ததும் இந்த மாமன்னரின் கடைசி பத்து ஆண்டு ஆட்சிதான்.

52 கோவில்கள் கட்டப்பட்டன். 66 படிமங்கள். அவற்றில் இராஜ ராஜன் அளித்தவை 23.

தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டிகளின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணிகலன்கள் பூணுவதில் இப்போது போல் அப்போது மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அப்போது அணிந்து மகிழ்ந்த நகைகளின் மாதிரியில் தானே கோவிலுக்கு அணிகலன்களை அளித்திருக்க முடியும்? அதனால் கல் வெட்டுகளில் காணப்படும் நகைகள் அந்த நாள் நடைமுறைப் பாணியில் இருந்தவை எனக் கொள்ளலாம்.

கல்வெட்டுகளின் படி அப்போது பயன்பாட்டில் இருந்து கோவிலுக்கு அளிக்கப்பட்ட சில
நகைகளின் பெயர்கள் :–

ஏகவல்லி [கழுத்து அணி – ஒற்றைச் சரமாலை]
காறை [கழுத்து அணி ]
கச்சோலம் [ இடை அணி]
கலாவம் [இடை அணி]
காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி]
மோதிரம் [இரத்தினம் முத்து ]
முத்து மாத்திரை [காது அணி]
பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ]
பதக்கம்.

என்கிறது கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர் இராஜ ராஜனின் ஆணை. இதில் சிறப்பு என்ன வெனில் ஒவ்வொரு அணிகலனின் முழுவிபரமும் குறிக்கப்பட்டுள்ளது. நகையின் எடை, அது செய்யப்பட்ட தன்மை,
அதில் பொருந்திருக்கும் முத்து,பவளம், வைரம் போன்றவற்றின் விபரம், அதன் மாதிரி ஆகிய எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருகின்றன.

எடுத்துக்காட்டாக பேரரசர் இராஜராஜன், ஒரு தெய்வத்திற்கு 16 தங்க வளையல்களை அளித்திருந்தார். அவை ஒவ்வொன்றின் எடை ஐந்து கழஞ்சி ஆறு மஞ்சடி. ஒவ்வொரு வளையலிலும் ஏறத்தாழ 316 முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன அவற்றின் எடை 155 கல்.

இந்த பதினாறு வளையல்களின் மொத்த மதிப்பு 403 காசுகள். பேரரசரின் பட்டத்து அரசி லோக மகாதேவி 13 வகை நகைகள் அளித்திருந்தார். அவற்றில் 471 முத்துக்களும் 20 பவளங்களும் இருந்தன. பேரரசர் மாத்திரம் கொடுத்திருந்த நகைகள் 42,000 கழஞ்சுப் பொன்.

அணிகலன்களில் பயன்படுத்தப்பட்ட தங்கம், முத்து போன்றவை எப்படி எடை போடப்பட்டனஎன்ற செய்திகளும் தரப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட
”குடிஞைக்கல்” முறையில் ”ஆடவல்லான் மேரு விடங்கன் ” என்ற பெயர் கொண்ட கல்லாலும் எடை போடப்பட்டன. அணிகலன்களை நிறுக்கும்போது, நகைகளின் சரடு, சட்டம், செப்பாணி, அரக்கு ஆகியவையும் நகைகளின் பகுதிகளாகவே கொண்டு எடை போடப்பட்டன என்கின்றன கல்வெட்டுகள். தங்கத்தின் மாற்று
அளவிடப்பட்டது பற்றிய சுவையான செய்தியும் காணப்படுகிறது. பேரரசர் அளித்த பொன் நகையில் தரத்திற்கு கால் மாற்று குறைவாகவே இருந்ததாம்.

தண்டவாணிக்கு கால் கால் காந்திகை ( கழுத்து அணி)
கடகம்,கொப்பு ( காதணி)
மகுடம், குதம்பை ( காதணி)
பட்டம் (மகுடம்)
பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்)
சப்தசரி ( ஏழு சங்கிலிகள்)
சிடுக்கு, சூடகம் (வளையல்)
பாத சாயலம் ( கால் அணி)
சூரி சுட்டி (நெற்றியில் அணிவது)
வீரப்பட்டம் (தலையில் அணிவது)
வாளி (காதணி)
காறை கம்பி (காதணி)
திருகு, மகரம் (காதணி)
உருட்டு திரிசரம் ( கழுத்து அணி)
தூக்கம் (காதணி)
நயனம் (கண்மூடி)
பொற்பூ,பொட்டு.
பாசமாலை
தோள் வளை
தாலி
தாலி மணிவடம்
தாழ்வடம்
தகடு
திரள்மணி வடம்
வளையல்
வடுக வாளி
வடம்
தோடு
திருவடிக்காறை
கால் வடம்
கால் மோதிரம்
சன்ன வடம் திருகு
கால் காறை
கைக் காறை மாலை

பயன் படுத்தப்பட்ட முத்துக்களில் 23 வகையும் இரத்தினங்களில் 11 வகையும், வைரங்களில் 11 இருந்தன என்று தெரிகிறது. சில நகைளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாது போய்விட்டது.

இப்படி மிகுந்த இறை உணர்வுடனும் கலைச் சிந்தையுடனும் உருவாக்கப்பட்ட படிமங்களும் அவற்றிற்கு அணிவித்து அழகு பார்க்க அளிக்கப்பட்ட அணிகலன்களும் உலகின் எந்தக் கோடியில் உள்ளனவா… தெரியவில்லை.

அணிகலன்

பெண்கள் ஏன் நகைகளை குறிப்பாக தங்க நகைகளை, ஆபரணங்களை விரும்பி அணிகிறார்கள். முதலில் ஒரு பாலியல் ஆய்வாளர் சொல்வதைக் காண்போம் :–

ஆதி காலம் தொட்டே பெண்களின் கவர்ச்சிரமான உடல் அம்சங்களை குறிப்பால் உணர்த்தி ஆண்களின் கவனத்தை கவர்ந்து அவர்களை மகிழ்விப்பதற்காக ஆடை அணிகலன்களாக பெண்கள் ஆபரங்களை அணிகிறார்கள். பெண்கள் ஆபரணங்கள்
அணிவது ஆண்களுக்குத்தான்.

பெண்கள் அணியும் ஒட்டியாணம் அவர்களுடைய குறுகலான இடையை வெளிப்படுத்தும்.

கழுத்தில் அணியும் சங்கிலி, நெக்லஸ் போன்றவை பெண்களின் மார்பழகை உயர்த்துவத்துடன் மார்பு மேட்டின் கவர்ச்சியையும் வெளிப்படுத்த உதவுகிறது.

அதேபோல், காதணி கவர்ச்சிகரமான காதமைப்பையும், மூக்கு அணிகள் மூக்கின் அழகை எடுத்துக் காட்டவும் உதவுகிறது.
பெண்களின் கவர்ச்சிமிக்க பகுதியில் கால் பாதங்கள் முக்கியமானவைகள் அதனால்தான் சிலம்பு, கொலுசு, மெட்டி இவற்றை அணிந்து ஆண்களின் கவனத்தை கவர்கிறார்கள்

[ பழைய காலத்தில் பெண்களின் மிக முக்கிய கவர்ச்சி பகுதியை சுட்டிக்காட்ட இடையில் முன்புறமாக ” மேகலை ” என்ற ஆடையை அணிவார்கள் இப்போது அதுவே ‘ ஸ்விம் சூட்’ ஆகிவிட்டது]

சரி…. இது பாலியல் ஆய்வார்கள் கருத்து.

இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.

நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ¡£தியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப்
பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும்.
[பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.]

ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.
பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது
என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.

பொதுவாக, உடல் ¡£திராக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.
உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.

[சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]

அரைநாண்க் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / — ] சம நிலைக்கு
கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.

மகாபாரத்தில் திருடாஸ்தரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்க்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண்க்கொடி உடல் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது.

மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ]

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,
பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.
அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு
அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.
இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.
ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.
இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா
சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):-

1. தலையணி:
தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

2. காதணி:
தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,
கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.

3. கழுத்தணிகள்:
கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,
நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. புய அணிகலன்கள்:
கொந்திக்காய்.

5. கை அணிகலன்:
காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.

6. கைவிரல் அணிகலன்கள்:
சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.

7. கால் அணிகலன்கள்:
மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.

8. கால்விரல் அணிகள்:
கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.

9. ஆண்களின் அணிகலன்கள்:
வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைநாண்,
பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,
கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,
முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.

(குறிப்பு உதவி)..நன்றி: தமிழ் நாட்டு அணிகலன், சாத்தான் குளம் அ. இராகவன்)

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.

படித்தேன் பகிர்ந்தேன்
அறிந்தும் அறியாததும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:26 pm

புத்தரின் தம்ம பதம்
--------------
தம்ம பதம் என்பது என்ன?

புத்தர் பிரான் அருளிய அறிவுரைகளும், சங்க விதிகளும், அவரைப்பற்றிய
விவரங்களும், வரலாறும் பெளத்த மதத் திருமுறைகளாக மூன்று பிரிவுகளாக அல்லது
தொகுதிகளாக உள்ளன. அவற்றைத் திரிபிடகங்கள் என்று அழைக்கிறார்கள்.
மூன்று கூடை அல்லது பெட்டி, பொக்கிஷங்கள் எனவும் கூறுகின்றனர். ஏனெனில் பிடகம்
என்றால் பெட்டி அல்லது கூடை, திரி என்பது மூன்று என்பதுதான்
உங்களுக்குத் தெரியுமே. (திரிபுர சுந்தரி).விநய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம் என மூன்று தத்துவப் பொக்கிஷங்களாக
பெளத்த திருமுறைகள் உள்ளன. தம்ம பதம் , மகாபாரத்தில் உள்ள பகுதியாக
பகவத் கீதை இருப்பதைப்போலவே, சுத்த பிடகத்தில் உள்ள ஐந்து பகுதிகளில்
ஒன்றான குத்தக நியாயம் என்ற பகுதியில் உள்ளது. தம்மத பதம் உலகின்
பல பகுதியில் பிரபலமாயுள்ளது.

ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே 40க்கு
மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் இப்போது அதிகமாகப்
பரவி வரும் மதம் பெளத்தமதம் என்கிறார்கள்.

தம்ம பதத்தின் சூத்திரங்கள் படிப்பதற்கு எளிமையானவை. பெளத்த சமயக்
கொள்கைகளும் வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் தம்மபதத்தில்
நிறையவே இருப்பதால் அவற்றைப் படித்துத் தெளிந்துகொள்ளலாம்.
“இது நமது மொழியிலுள்ள திருவள்ளுவரது திருக்குறளைப் போன்று
அத்துணைச் சிறப்பு வாய்ந்தது” என்று தம்ம பதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய நூல் திருக்குறளே என்கிறார் வையாபுரிப்பிள்ளை. தம் இலக்கிய உதயம் பகுதி 11 எனும் நூலில்.
தம்ம பதத்தின் பெருமையை ஹெர்மான் ஓல்டன்பெர்க் எனும் ஜர்மானியப்
பேராசிரியர் இப்படிக் கூறுகிறார்.

“பெளத்த சமயத்தைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொள்வதற்கு பெளத்த
தர்ம ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும்போதே ஆராய்ச்சியாளனுக்கு ஒரு புனிதமானவரின்
கைகளால் தம்மபதத்தை அளிப்பதைவிட மேலான காரியம் ஒன்றும் இருக்க முடியாது.
தம்மபதம் தன்னிரகற்ற அழகுடையது. பொருள் நிறைந்தபழமொழிக்களஞ்சியம்.
பெளத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத்
திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது.”

தமிழர்கள் புத்தரை, தயாவீரன், தர்மராஜன், அருளறம் பூண்டோன், அறத்தகை முதல்வன்,
பிறவிப் பிணி மருத்துவன், போதி மாதவன், மன்னுயிர் முதல்வன், புத்த ஞாயிறு எனப் பற்பல பெயர்களில் போற்றிப் புகழ்ந்துரைத்து வந்துள்ளனர்.

காஞ்சிபுரம், நாகைப்பட்டினம், மதுரை முதலிய நகரங்களில் பெளத்தம் நிலைத்திருந்தது
தமிழ்ப் பிக்குகள் இலங்கை மட்டுமல்ல சீனாவுக்குக்கூட கடல்கடந்து பெளத்த
மதத்தைப் பரப்பி வரச் சென்றிருக்கின்றனர். பல நூல்களையும் இயற்றியுள்ளனர்.
போதி தருமர், தர்மபால சாரியர், சாரிய புத்ததத்தேரர் ஆகியோர் அத்தகையோரில் அடங்குவர்.
போதி தருமர் காஞ்சியிலிருந்து சீனா சென்று புத்தமதத்தின் தர்மப் பிராச்சாரம் செய்தார். இளம்போதியார், சீத்தலைச் சாத்தனார் போன்ற தமிழ்ப் புலவர்கள் பெளத்த
மதத்தினராய் இருந்தனர்.

கோவலன் தந்தை மாசாத்துவர் பெளத்தர். மாதவியின் மகள் மளிமேகலை பெளத்த பிக்குணியானார். மணிமேகலை பெளத்த நூலே என்றுரைக்கும் திரு வி க” மணிமேலைச் சொல்லெலாம் அறம், பொருளெலாம் அறம், மணிமேகலையின் நாடெல்லாம் அறம், காடெல்லாம் அறம், புத்தர் பெருமானைத் தமிழில் காட்டும் ஒரு மணிநிலையம் மணிமேகலை” என்று கூறிச் சென்றுள்ளார்.

“பொய்யில் மெய்யைக் கற்பனை செய்துகொண்டு,
மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையார்
மெய்ப்பொருளை ஒருபோதும் அடைவதில்லை,
அவர்கள் வெறும் ஆசைகளைத் தொடர்ந்து அலைவார்கள்”

-தம்மபதம்-

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.

படித்தேன் பகிர்ந்தேன்
அறிந்தும் அறியாததும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:28 pm

இல்லறத்தில் ஆன்மீகம்

இறையுணர்வு என்பதே அன்புவுணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.
அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும். அருள் நெறி என்பது அன்பு நெறியின் நீடிய தோன்றமாகும்.எனவேதான் அருள் என்னும் அன்பு ஈன்று குழுவி என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் என்றும் இறைவனை அடையலாம் என்பதை இந்து சமயம் காட்டுகிறது.

இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்

இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று விரியும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் விரிந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.
உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த விரிந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் -வள்ளுவர்.

இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளிலும், ழ்வார் கதைகளிலும் தனை நாம் அறியலாம்.

“காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்ல
நாடேயிடை மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்
வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே”

இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்ததை ஒழித்துவிடின் –

இதைதான் சமயம் கூறுகிறது. உனக்கிட்ட கடமைகளை ஒழுங்காக செய். அதுவே உன்னை உயர்நிலையை அடையும் தகுதியை வளர்த்துக் கொடுக்கும்.

இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்யாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,
மன்னாளும் மன்னர்கள்.

கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறான் :

“அர்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.
எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில்
செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.
அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜிவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.
சுற்றதாத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு
தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை
விதிகளை துறந்து செல்பவனாகிறான்…

இவ்வாறு நாம் பாக்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக
விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க
வேண்டுமே ஒழிய வேண்டியதில்லை.
‘படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது’
என்று அருமையாக வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.
இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியை
காதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கைகையாகும்.
கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.

இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் வாழ்வின் ஆன்மீக வழிகாட்டியில் காணலாம்.

“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போ ஓய்ப் பெறுவதெவன் ”

இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலை”

இல்லறத்தை சா¢யாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும்
தலை சிறந்தவன்.

“அற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து”

சா¢யான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.

“அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ·தும்
பிறன் பழிப்ப தில்லாயின் நன்று”

மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம்
ஆகவே, இல்லறத்தை சா¢யாக நடாத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்
வைக்கப்படுவான்.

எதனைத்தைப் பற்றி ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்ளினால்
இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் பொறுப்புகளும்,
சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.

பொ¢யபுராண வரலாறு மூலம் “அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம்.
“இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை”

என்பதற்கேற்ப நன் மனைவியைப் பெற்ற இளையான் குடிமாற நாயனார், இல்லறத்தில் அன்று வறுமை வந்துற்றபோதும் , காரைக்காலம்மையால் வரலாறும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து போ¢ன்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.
இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள் ஆன்மீக உணர்விற்கு
வழிவகுக்கும் என்பதை அறியலாம்.

ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததா¡க இருக்க வேண்டும். அவ்வாறு அமைவதற்கு இல்லறம் சிறந்த வழியாகும். இந்துமத தத்துவக் கருத்துக்கள் மூலமும் இவற்றை நாம் உய்த்துணரலாம்.

நன்றி ,வணக்கம்.
அன்புடன்,
கிருஷ்ணன்

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.
&
படித்தேன் பகிர்ந்தேன்
அறிந்தும் அறியாததும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:29 pm

இலக்கியத்தில் கூந்தல்
-------------
கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள், குங்குமம்,
பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது.
பெண்கள் அணியும் புறப்பொருள்கள்.
கற்புடைய பெண்கள் வற்றை அணிவதால் சிறப்பு உண்டாகிறது.ஆனால்…. கூந்தலோ, அவள் பிறக்கும்போதே அவளுடன் சேர்ந்தே பிறந்து,
அவள் வளரும்போது தழைத்து நீண்டு அவளுடனே சேர்ந்து வளர்ந்து….
அவள் முதுமை அடையும் காலத்து தானும் நரைத்து அவளுடனே சேர்ந்து
மறையும் தனிச் சிறப்பு உடையது.

பொதுவாக, இருபாலார்க்கும் உரிய தலை மயிருள், குதிரைவாற் சாமை
போன்றும், கமுகோலை போன்றும். மயில் தோகை போன்றும் அடர்ந்தும்
தழைத்தும் நீண்டும் இருப்பதால் பெண்கள் தலை மயிரை ஓதி, குழல்,கூந்தல்,
கூழை, என்றும் கூறினர்.

ஐம்பாற் கூந்தல் என்றும் அலங்கரித்தனர்.

மயிலின் உச்சி போன்று சிறிதாகவும் சிறுமையானதாகவும் இருந்ததினால்,
ஆண்களின் தலைமயிர் குடுமி என்றும் குஞ்சி என்றும் கூறப்பெற்றது.
கோவலன் தலைமயிரைக் ‘குஞ்சி’ என்றும், கண்ணகியின் தலைமயிரை
‘வார்குழல்’ என்றும் குறிப்பிடும் வரிகளை
[சிலப்பதிகாரம்- மதுரை காண்டம்] காணலாம்.

‘கதுப்பு’ என்னும் சொல் ஆண் பெண் இரு பாலரின் தலை முடியை குறிக்கிறது.

கூந்தலையும் மகளிரையும் நம் முன்னோர்கள் ஒன்றாக கருதினர். அதனால்தான்,
மகளிரைத் தழுவுதலைக் கூந்தல் கொள்ளுதல் என்றனர். பிற ஆடவர் கை தம்
கூந்தல் மீது படுவதைக்கூட கற்புள்ள மகளிர் ஒப்புவதில்லை.

மாந்தர், கூந்தலை கோதி கிளர்ச்சி கொள்ளுதல் போல புறா, கோழி போன்ற
பறவை இனங்களும் அலகால் துணைகளின் சிறகை கோதி உணர்வு கொள்கிறன.

கணவன் உடன் இருக்கும்போது மட்டும், கூந்தலுக்கு நறுமணம் தடவி, வகிர்ந்து
வாரி மலர்ச் சூடி கூந்தலை அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.

தலைவன் பிரிவின்போதும் மறைந்த பின்னும் உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்கும்
மலர் சூடுதலை தவிர்க்கிறார்கள்.

பெண்களை முதன்மைப் படுத்தி கொள்ளும் காவியங்களே அதிகம். காரணம்
காவியங்களுக்கு அழகு சேர்ப்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு அழகு தருவதோ,
அவர்தம் கூந்தல்.

எல்லாக் காவியங்களும் காரிருங் கூந்தலைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது.
குறிப்பாக மகாபாரதத்தில் பாஞ்சாலியின் சபதம் காவியத்தின் மிக முக்கியப் பகுதி.
பாஞ்சாலியின் சபதமாக கூந்தலே முதன்மை வகித்தது. கூந்தல், பெண்களின்
மகிழ்ச்சி, அயர்ச்சி, இன்பம், துன்பம்,சினம், வேட்கை முதலான மன
உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாக கையாளப்படுகிறது.

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா ? இல்லையா என்ற சந்தேகத்திற்கு
நக்கீரனும், சிவபெருமானும் சங்க காலத்தில் மாபெரும் பட்டிமன்றம் அந்நாளில்
நடந்தது, ”கொங்கு தேர் வாழ்க்கை” எனத் தொடங்கும் பாடல் மூலம்.

”காரிருங் கூந்தல்…. ”
”குழல்போற் கமழும் மதுமலரே…”
”கருங்குழல் போலுளவோ விரைநாறுங் கடிமலரே…”
”மங்கை வார்குழல்போல் நாற்றமுடைய வுளவோ வறிவு நறுமலரே…”
என்றெல்லாம், மழைக்கண் மாதராரின் நறுங்கூந்தலைப் புகழும் பாண்டிக்கோவை,
மலரை விட கருங்கூந்தல் மணம் மேம்பட்டது என்று கூறுகிறது.

கோவலன், கண்ணகியை மறந்து மாதவி இல்லம் சென்றமையால் கண்ணகி தன்
கூந்தலுக்கு நெய் இடுவதில்லை; அதனால் கூந்தல் மணத்தை இழந்தது.
இதனை இளங்கோவடிகள் ‘மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப’ என்று
கூறுகிறார்.

அதே சிலம்பில், கண்ணகியின் கூந்தல் ஒப்பனையை ‘புரிகுழல் அளகத்து’
என்றும், ‘பல்லிருங் கூந்தல் சில்மலர் அன்றியும்’ என்றும், ‘ தாழிருங் கூந்தல்
தையால் ‘ என்று நீண்டு தாழ்ந்த கரிய அவளுடைய கூந்தலை புகழ்கிறார்.

கம்பரின் காவியத்தில் கூட , மண்டோதரி புலம்பல் மூலம் ஒரு பாடுகிறார்.
இராவணன் மரணத்தின் போது:
”வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும்
இடன் நாடி ழைத்த வாறே?
‘கள் இருக்கும் மலர்க்கூந்தல்’ சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக்கருதி உடல் புகுந்து
தடவிதோ ஒருவன் வாளி ! ”

சிவனுடைய சடை முடியில் வெள்ளெருக்கம் பூ இருந்தது.
அது மயக்கத்தக்க பூவோ, மயங்கத தக்க சடை முடியோ அல்ல;
தலால், இராவணன் மயங்காது அங்கே வீரம் காட்டினான்.
சானகியின் கூந்தலோ மலர்க் கூந்தல்; அதிலே கள் இருந்தது.
அதனால் இராவணன் மயங்கினான்; மடிந்தான்.

சங்ககால இளங்கீரனார் என்னும் புலவர் குறுந்தொகையில் கூந்தலைப்
பற்றிய ஒரு பாடல் :

ஊழின் வலிமையால் தலைவியைக் கண்டு காதல் கொண்டான், தலைவன்.
அவள் அருகில் நின்று பேசும்போது அவளுடைய கூந்தலின் தன்மையை
உணர்ந்து கூறுகிறான்.
”யானந்யந் துறைவோன் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பொருந்துறை
நுண்மணல் அறல் வார்ந்தன்ன
நன்னெறி யவ்வே நறுந்தண்ணியவே. ”

”யான் விரும்பும் தலைவியுடைய கூந்தல் நாள் மலரின் தேன் பாயும் கூந்தல்;
வளமிக்க சோழனுடைய பெரிய துறையில், நுண்மையான கருமணல் நீண்டு
படிந்துள்ளதைப்போல் அடர்ந்த நெறிப்பை உடையது; நறுமணமுள்ளது;
மிக்க குளிர்ச்சியுமுடையது ”

”மென்சீர்க்கலி மயிற்கலாவத் தன்ன
இவள் ஒலிமென் கூந்தல் உரியவா , நினக்கு…

நல்ல நீண்ட கூந்தல் , மயிலின் தோகைப் போலிருக்கும் என்கிறார், கபிலர்.

நற்றிணைப் பாடல் :
”அணிகிளர் கலாவ மைதுவிரித் தியலும்
மணி புரை யெருத்தின் மஞ்ஞை” போல நின்
வீபெய் கூந்தல் வீசுவளி யுளர ”
என்று விரிகிறது.

சாத்தனார் , நரைத்த பின்னுருங்கூடப் பெண்டிர் கூந்தல் நீளம் குறைவதில்லை;
அது நன்கு நீண்டு விளங்குவதாகவே இருக்கும் என்பதை ,
” நன்னெடுங் கூந்தல் நரை மூதாட்டி …”
என்று விளக்குகிறார்.

அறுபது வயது ஆகிறது. அவள் தலை முழுவதும் நரையாகியது. இளமையும், காமமும்
இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

அதனை,
”ஆறைந் திரட்டி யாண்டுனக் காயதென் ,
நாறைங் கூந்தலு நரைவிராவுற்றன,
இளமையும் காமமும் யாங்கொளித் தானவோ ? ”
— என்கிறது மணிமேகலை.

இன்னொரு நரை மூதாட்டியின் தலை,
‘தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி
வெண்மணலாகிய கூந்தல் ‘
– மணிமேகலை.
மேற்கூறிய பாடல் வரிகளிலிருந்து, கரிய அடர்ந்த நீண்ட கூந்தலிருக்கும் இளம்
பருவத்தும் அரிவை தெரிவையாகிய நடு நிலை பருவத்தும் மட்டுமே, மகளிர் காதல்
வயப்படுகிறார்கள் என்பதையும், இளமை மறைந்து முதுமை உற்றபோது காமமும்
மறைந்து நரை முடியினர் ஆகின்றனர் என்பதையும் உணரலாம்.

‘பரட்டை தலையா’ என்று கவுண்டமணி செந்திலைப் பார்த்து கூறுவது சங்க காலத்திலும்
உண்டு. வாராத தலைமுடியை இப்போது போன்று , வாராத தலைகளும் அந்நாளில்
இருந்தது போலும்.

படிய வாராமல் சிதறிக் கிடக்கும் தலை முடியைப் ‘ பாறு மயிர் ‘ என்று
புறநானூற்றுப் பாடல் (374) கூறுகிறது.

‘மயிர்’ என்ற சொல்லை இன்றும் கீழான , இழிவு சொல்லாக பயன்படுத்துகிறார்கள்.
தலையிலிருந்து பிறர் எடுக்காமல் தானாகவும் விழும் தன்மை படைத்தது.
மயிர், உயர்ந்த இடத்திலிருந்து விழும். மேலே போவதில்லை. கீழே வீழ்ந்து கீழ்மை
அடைகிறது. அதனால், இழிந்த தன்மை பெறுகிறது.

‘எண் சான் உடம்புக்கு தலையே பிரதானம்’. மனித உறுப்புகளுள் தலையானது, தலை!
அவ்வளவு உயர்ந்த டத்திலிருந்த மயிர் ஒரு முறை விழ்ந்தால், மீண்டும் அது
உரிய இடத்தில் பொருத்த இயலாது.

நற்குடியில் பிறந்தோர், பெருமை உயர்மைக்குரிய தங்கள் நிலையிலிருந்து
எக்காரணம் கொண்டு தாழ்ந்தாலும் , உயிர் வாழாமையை ‘மானம்’ எனப்படும்.
அத்தகைய சிறப்புக்குரியவர்கள் மானம் ஒருமுறை இழக்கப்பட்டால், எக்காரணம்
கொண்டும் அக்குடி மீண்டும் சிறப்பு ஏற்படாது. இழந்தது இழிந்தது.

மாந்தர் மட்டுமல்ல, மிருங்களில் கவரிமான் தன் மயிர் இழப்பின் உயிர்
நீக்கும் தன்மைப் பெற்றது.

எனவேதான்… மானத்தையும் மயிரையும் ஒப்பிட்டார்கள், தெய்வப்புலவர்கள்.

கூந்தல், மாந்தர் உடலுடன் மட்டும் அல்லாமல், பல்வேறு வகையில் மனித வாழ்க்கையுடன்
இணைந்து, இன்ப துன்பங்களில்இரண்டறக் கலந்து அழகிய காட்சி பொருளாக
அமைந்துள்ளது.

கள்ளிருக்கும் மடவார் மலர் கூந்தல்.

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.

&
படித்தேன் பகிர்ந்தேன்
அறிந்தும் அறியாததும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:31 pm

இசை இன்பம்
------------
“கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம்
பழிபாவங்களும் நிறைந்த இந்த உலகைவிட்டு அழைத்துச்செல்கிறது”
– என்கிறார் கவிஞர் தாகூர்மனதில் தோன்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இசை முத்தமிழுக்கு
முன்னும், இயலுக்கு பின்னும், நாடகத்திற்கு இடையில் நின்று இரண்டொடும் இணைந்து இயங்குவது இசை. ஒசை நயமும் இசைந்து மனதுக்கு இன்பம் அளிப்பது இசை.

இசை மன இறுக்கத்தை தளர்த்துகிறது- கோபதாபங்களை தடுகிறது.
உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தை அமைதிப்படுத்துகிறது.
சிந்தனை தெளிவு உண்டாக்குகிறது. நோய்களை தீர்க்கிறது. உயிர் அணுக்கள் வளர இசை உதவுகிறது, என்று அறிவியல் மேதைகள் தங்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள்.

இசை வாழ்க்கையைத் தெய்வீகமாக்குகிறது. இசை மூலம் இறைவனை அடையலாம் என்று
நிருபித்தவர்கள் நம் பொ¢யோர்கள்.

சங்க காலம், தொல்காப்பிய காலம் அதற்கு பின் வேத காலம் இடைக்காலம்
என்றெல்லாம் வரலாற்று காலங்களில் தோன்றிய நூல்கள் எல்லாம் இசையை வாழ்க்கையின்
ஒரு பகுதியாகவே காட்டுகிறது.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பா¢பாட்டு ரு பாலினும் உரியதுதாகும்.
இசை மக்களுக்குக் காலம் காலமாக பண்பாட்டுக் காவல் கருவியாக ஆன்மீக உணர்வு
சமய நெறி- கோவில் வழிபாடு, நாட்டியம், மொழி உணர்வு என்று இருந்து வருகிறது.
தமிழ் இசை வளர்ச்சி அடைந்தால் தமிழ்ப் பண்பாடும் உரிமையும் உண்டாகும்.

தமிழ் மூன்று வகை

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.
இயற்றமிழ்- சத்து ; இசைத்தமிழ் – சித்து ; நாடகத்தமிழ்- ஆனந்தம்.

இசைத் தமிழின் ஏற்றம்
முத்தமிழ் வித்தகதில் இசை நடுநாயகமாகத் திகழ்கிறது.
“ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” – என்கிறார் அப்பர் பெருமான்.
ஒசையிலிருந்து உலகம் உண்டாயிற்று என்று ஞானநூல் கூறுகிறது.
ஆட வல்லானுடைய திருக்கரத்தில் விளங்கும் உடுக்கையின் ஒசையில் உலகம்
தோன்றியது. அதோற்றந் துடியதனில்” – உண்மை விளக்கம்.
எங்கும் நீர்மயமாகி எல்லாம் ஒடுங்கியபோது சிவபெருமான் வீணை வாசித்து
மீளவும் உலகத்தை மலரச் செய்தார் என்று அப்பர் பெருமான் அருளிச் செய்கின்றார்:

“பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளன் றெம்மிறை நல்விணை வாசிக்குமே”

நவக்கிரங்களாகிய ஒன்பது கோள்களையும் சிவபெருமான் வீணை வாசித்து அவற்றின் கொடுமைகளை நீக்கி நல்லவராகச் செய்கிறார் என்று திருஞான சம்பந்த சுவாமிகள்அருளிச் செய்கிறார்……

“வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லந்தென்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாராவர்க்கு மிகவே”

இறைவனை வேண்டித் தவஞ் செய்து அசுவதரன், கம்பளதரன் என்ற இரு கந்தவர்கள் குண்டலமாகிச் சிவமூர்த்தியின் செவிகளில் அகலமாக இருந்துகொண்டு, இடையறாது
இசைபாடி இறைவனை மகிழ்விக்கின்றார்கள்.

யாழ் வாசித்து உதயணன் மதயானையை அடக்கினான் என்று உதயணகாவியம் கூறுகின்றது. குழந்தையும், பாம்பும், பசுவும் இசையைக் கேட்டுத் தம்மை மறந்துவிடுகின்றன.

உண்மையான இன்பம் ஏது ?

இன்பத்தை விரும்பாத உயிர்களே இல்லை. எல்லா மதத்தவரும், எல்லாத் தேசத்தவரும்
எல்லாக் காலத்தவரும், எல்லாக் கட்சியினரும் இன்பத்தை விரும்புகிறார்கள்.
எனக்குத் துன்பம் வேண்டும் என்று, எங்காவது, எவரேனும் கூறுகிறார்களா ?
இன்பத்தை அடைந்தவர்கள் கோடிக்கொருவரும் இலர். ஏன்?
இன்பத்தை விரும்புகிறார்களே அன்றி இன்பத்தைப் பெறும் வழியைத் தெள்ள
தெளிவாகத் தொ¢ந்தவர் இல்லை.

நம்மில் அநேகர் பொருளால் இன்பம் வரும் என்று பிழையாகக் கருதி வாழ் நாள்முழுவதும் பொருள்
தேடி வாடி வருந்தி ஒடியலைந்து உழன்று இன்பத்தைப் பெறாது துன்புற்று மாய்கிறார்கள்.
பெருந்தனம் படைத்தவர்கள் அல்லும் பகலும் துன்புற்று துடிப்பதைக் கண் கூடாகப் பார்க்கின்றோம்.
ஆதலால் பொன்னால் பொருளால் இன்பம் இல்லை. விளக்கைக் கனியெனக் கருதி அதில் வீழ்ந்து
மாயும் மாந்தர் பலர் துன்புன்றுவதை எங்கும் காண்கிறோம்.

“மதலையைப் பெறுநாள் துன்பம் வளர்த்திடு நாளுந் துன்பம்
விதலை நோயடையில் துன்பம் வியன் பருவத்துந் துன்பம்
கதமுறு காவர் வந்து கைப்பற்றில் கணக்கில் துன்பம்
தமுறு பாலர் தம்மால் எந்நாளுந் துன்பமாகும்…”
– குசேல உபாக்யானம்.

“மனைமக்கள் சுற்றம் என்னும் மாயா
வலையைக்க அறியாதே
வினையிற் செருக்கியடி நாயேன்
விழலுக்கிறைத்து விடலாமே” – திருப்புகழ்

“கற்பகமரத்தின் கீழ்வாழும் பெருஞ்சுகத்தை விரும்பி நான் பெறுந்துன்பம்
அடைந்தேன்” என்று இந்திரனுடைய புதல்வன் ஆ ன்றான்:
அதண்டேன் துளிக்குந் தருழற்கீழ் வாழ்க்கை வெ·கிக்
கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோது என்றே
கண்டேன்”

ஆ தலால் பொன்னாலும், பொருளாலும், நிலபுலங்களாலும் சுகமில்லை என்பது துணிபு.
எங்கே, எதனால் இன்பம் எய்தும்? எங்கே மனம் ஒடுங்குகின்றதோ
அங்கேதான் இன்பம் விளைகின்றது.

மனம் அடங்க இசை….
^^^^^^^^^^^^^^^^^^^^^
மனம் அடங்கி இடம் சுகாரம்பம். இந்தச் சுகத்தை மறைகள் எல்லாம் முழங்குகிறது.

“சும்மா விருக்கச் சுகஞ்சுக மென்று கருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவும் கேட்கும் அறிவின்றியே
பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால்
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்குள் சுகம்…. – வள்ளலார்.

இனிச் சும்மா இருப்பதாகிய மனம் அடங்கும் நிலை எவ்வாறு உண்டாகும்
என்று சிந்திப்போம். பேய் மனம் எளிதில் அடங்காது, ஒடுங்காது. எண்ணில்லாத காலமாக
அலைந்து அலைந்து , அதன் கொட்டத்தை அடங்குவது மிகவும் கடினம்.

வடநாட்டில் மனம் அடங்கக் கஞ்சா , அபின் போன்ற போதை பொருட்களை சில
துறவிகள் கையாளுகின்றார்கள்.

நமது தென்னாட்டில் மனம் அடங்கக் கண்டு பிடித்த வழி இசைப் பாடலேயாகும்.
சங்கீதம் தொ¢ந்தவர் தம்பூராவை மீட்டிப் பாட்டினால் கேட்டவர்கள் மனம் அப்படியே
ஒருமைப் பாட்டையடைந்து விடுகின்றது.

சங்கீதத்தின் மூலம், இசை மூலம் பக்தி என்பது இறைவனோடு நம்மை இணைப்பதுடன்
மனிதருக்கு ஏற்படும் நோய்களையும் குறைபாடுயும் இறைவன் அருளால் அகற்றிடும்
மாமருந்தாகவும் திகழ்கிறது.
பிணி தீர்க்கும் இசை என்பது வழக்கமான சங்கீதமோ அல்லது பாடல்ளோ அல்ல.
அதற்கொன்று தனிப்பட்ட சில சாஸ்திரங்கள், விதிமுறைகள் -இருக்கின்றன.
அந்த சாஸ்திர விதிகளின்படி ஒரு சித்த புருஷன்
ஒரு யோகி முயற்சி செய்தால் இசையின் வாயிலாக பிணிகள் அகற்றும் சாத்தியமுண்டு.

கல்யாணி, வாசந்தி, கோசலம், அனுமத்தோடி, சிவரஞ்சனி, புராகாகிய இராகங்கள்
பிரகிருதி தத்துவத்தின் மாசுபடாத தொனியாக கொண்டவை.
நீலாம்பா¢ ராகம் சுகமான நித்திரை தரும்.
சிறீராகம் நல்ல ஜீரண சக்தியைத் தரும்.
சாமா மன உளைச்சளை தடுக்கும்.
சங்கீத சிகிச்சையும் ஒருவகை மருந்தாக பயன்படுகிறது.

எனவே இ னிய நாதம் மருந்தாக, ஒடியலையும் மனத்தை ஒடுங்கச் செய்யும் பேராற்றலையுடையது.

இசை உயிரையும் உய்விக்கும்; பயிரையும் வளர்க்கும். கயிலை மலையைப் பேர்த்த
இராவணன் இசையால் பாடி உய்வு பெற்றான்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் நாளும் இன்னிசையால் தமிழை வளர்த்தார்கள்.
தமிழ் வேதப் பாடல்களை திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழில் இசைத்து வாசித்து
உலகுக்கு இன்பத்தை வழங்கினார்.

[தமிழ் நாடு, ப.தண்டபாணியின் ‘திராவிட இசை’ என்ற குறிப்பிலிருந்து…]

இன்று உலகெல்லாம் வழங்கி வரும் இசை முறைகள் எல்லாம் திராவிட
இசையினின்றும் தோன்றியவையே. தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவிச் சென்றபோது தங்கள் இசையையும் உடன் கொண்டு சென்றனர். எனினும் அந்தந்தப் பகுதிகளின் தட்பவெப்ப நிலைகளுக்குக்கேற்ப அது சில மாற்றங்களுடன் வளர்ந்து வந்துள்ளது எனக் கூறவேண்டும்.

ச ரி க ம ப த

இப்புவியெங்கும் வழங்கிவரும் சைமுறைகளுக்கெல்லாம் அடிப்படையாய் இசை விளங்குபவை
ச, ரி, க, ம, ப, த,என்னும் ஏழு சுரங்களே. இவற்றை உலகுக்குத் தந்தவர்களும் பழந்தமிழர்களே!
தமிழர்கள் குரல், துத்தம், கைக்கிளை உழை,ளி.விளா¢,தாரம் என்றழைத்த ஏழு
இசையோலிகளுக்கும் முதலில் ,ஈ ,ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கிய ஏழு நெடில் உயிரெழுத்துகளைக்
குறியீடுகளாக வைத்தினர். காலப்போக்கில் அந்த ஏழு சையலிகளுக்கும் பொருத்தமான
தமிழ் எழுத்துகளாகிய ச, ரி, க, ம, ப, த என்பனவற்றைக் குறியீடுகளாகத் தமிழர்கள்
மாற்றியமைத்தார்கள். வாய்ப்பாட்டுக்கு மட்டுமல்லாது இசைக்கருவிளை வாசிக்கக்கூடத் தமிழர்கள்
பின்னர் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தினர்.அப்போது ஏற்பட்டவையே
ச, ரி, க, ம, ப, த, என்னும் ஏழு தமிழ் குறியீடுகள். இது குறித்து சிகண்டி என்னும் முனிவரால்
பண்டை நாளில் இ யற்றப் பட்டுள்ள தமிழ் வெண்பா பின் வருமாறு எடுத்தியம்புகிறது.

‘சா¢க மபத யென றேழெழுத்தாற றானம்
வா¢பாந்த கண்னாய வைத்து – தொ¢வா¢ய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை…’

முற்காலத்தில் இசை வழங்கிய எல்லாக் குழற் கருவிகளுக்கும் ‘வங்கியம்’ என்னும்
பொதுப் பெயர் உண்டு. வங்கியத்தின் ஏழு துளைகளிலிருந்தும் இசை பிறக்கும் பொழுது அது
எழுத்தால் பிறக்கும், ச, ரி ,க, ம, ப, த என்பன அந்த எழுத்துகள். அந்த ஏழு எழுத்துகளையும்
மாத்திரைப் படுத்தி வாசித்தால் அவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும். அவை பிறந்து அவற்றுள்ளே
பண் பிறக்கும் என்பதே அந்தப் பாடலின் பொருள்

குழலும் யாழும்.
^^^^^^^^^^^^^^
இன்று இசைக்கு தாரச் சுருதியைக் கூட்டும் தம்புராவைப் பற்றி ‘கல்லாட்டம்’
என்னும் பழைய பழந்தமிழ் இலக்கிய நூலில்தான் முதன் முதலில் தம்புராவைப் பற்றி
குறிப்பு காணப்படுகிறது.

யாழ்களில் தும்புரு யாழ் என்று ஒரு வகை யாழ் முன்னால் தமிழகத்தில்
இருந்தது. அதுவே பிற்காலச் சுருதிக் கருவிக்கு அடிப்படையாகும். அந்தத் ‘தும்புரு’
என்னும் தமிழ்ப் பெயரே பின்னர் வடமொழியில் தம்புரா எனத் திரிந்து வழங்கப்பட்டது.
குழலும் யாழும் இசைக் கருவிகளில் முதன்மையானவை. முதன்முதலாகக் குழல்
வசித்தவர் குமாரக் கடவுள்.

“குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன்”- திருமுருகாற்றுப்படை.-

முதன்முதலாக யாழ் வாசித்தவர் சிவபெருமான்,
‘வீணா தட்சிணாமூர்த்தியே ‘சான்று.

“குழலினிது யாழ் இ னிது என்ப” என்கிறார் திருவள்ளுவர்.

இறைவனை நமது தாய்மொழியால் பாடித் துதிப்பது மிகவும் சிறந்தது.பொருள் தொ¢ந்து
பாடுகின்றபோது மனம் ஒன்றுகின்றது.

இனிமையும் நீர்மையும் தமிழாகும். மொழிகளில் சிறந்த மொழி தமிழ், ஏனைய
மொழிகள் கனமானவை; தமிழ் இலகுவான மொழி.

கனமான உடம்புடையவனும் மென்மையான உடம்புடைவனும் நடக்கத் தொடங்கினால்
பருத்த உடம்புடையவன் பிந்துவான்; மென்மையுள்ளவன் முந்துவான்.
வன்மையான பிற மொழிகள் பிந்தும், மென்மையான தமிழ் முந்தும். அதனாலே
அருணகிரி சுவாமிகள்,
“முந்து தமிழ்மாலை கோடிக்கோடி”….. -என்கிறார்.

இறைவனுடைய செவியில் முந்திச் சென்றுசேரும் மொழி தமிழ். அது இனிய மொழி.
என்றுமுள்ள இளந்தமிழ், சாவாதது, மூவாதது, தேவாமிர்தம் போன்ற தித்திக்கும் மொழி.
சித்திக்கும் முத்திக்கும் உரியது தமிழ்.

தேவார முதலிய திருமுறைகளும், திருப்புகழ் தமிழ்மறைகளும் இசைமயமானவை.
அகத்திய முனிவருடைய சீடர் பன்னிருவர்களில் ஒருவரான சிகண்டி முனிவர்
‘இசை நுணுக்கம்’ என்ற நுலையாத்தவர்.

மனம் அடங்க – மனம் நிலை பெற இசை இன்பத்தில் நாமும் திளைக்க முயல்வோம்.

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.

&
படித்தேன் பகிர்ந்தேன்
அறிந்தும் அறியாததும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:33 pm

கல்வியின் சிறப்பு
----------
வளைய வேண்டுமென்பதற்காக
நெருப்பில் வாட்டினும்
பொறுத்து – வளைகிற மூங்கில்
வேந்தன் அமரும் பல்லக்கில்
அவனது முடிக்குமேலே நின்று
பெருமை கொள்ளும் !நீண்டுயர்ந்து வளரும் மூங்கிலோ
கழைக்கூத்தாடிகளின் கையக்ப்பட்டு
ஊர் ஊராய்த் திரிந்து
அவர்தம் காலடியில் மிதிபடும் !
இளமையிலே வருந்திக் கற்பவர்
வளையும் மூங்கிலாய்ப் பெருமையடைவர்
வருந்திக் கல்லாதவர்
மிதிபடும் மூங்கிலாய்ச் சிறுமையடைவர்.

வருத்தவன் வேய் அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்- தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்.

-நீதிவெண்பா .7

கற்கும் போது கசப்பாயும், கற்ற பின் கரும்பினை போல் சுவையாக சுவைப்பது கல்வி.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச்சமூகம் கல்வியின் மேன்மைமை
உணர்ந்த சமூகமாக விளங்கியது. கற்றாரையே மேன்மக்களாக மதித்துப் போற்றி மகிழ்ந்தது.

கல்வியில் காலூன்றி, கலை, பண்பாட்டில் மேலோங்கி நின்ற தமிழர்தம் நாகா£க வாழ்க்கை
உலகையே வியக்க வைத்த வழிகாட்டி வாழ்க்கை என்பதை உணர்ந்து புகழ்ந்துள்ளனர்
பிறநாட்டு வரலாற்று நல்லறிஞர்கள்.
கல்வியில் பண்பட்ட ஒரு சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்ததால்தான் அறிவில்
மேலோங்கி அன்றே விளங்கியது.
பரந்தபட்ட உலகப் பார்வையுடன்,

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’
என்ற மனித நேயம் தோய்ந்த வேதம் படித்து உலகிற்கே வழி காட்டியது.
குணங்களால் கொள்கைகளால், பண்பட்ட வாழ்க்கை நெறிமுறைகளால் தலை நிமிர்ந்து
நின்ற தமிழ்ச் சாதி, கல்வியை எப்படி போற்றி, வளர்த்துக் காத்து வாழ்ந்தது என்பதை
விளக்கும் ஒரு புறநானுற்றுக் கவிதை, மனதில் பதிந்த கவிதை.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடையோன் று அரசும் செல்லும்,
வேற்றுமை தொ¢ந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன் காண்படுமே.

[கல்வி கற்பிக்கும் ஆசானை எப்படி முதலில் நாம் மதிக்க வேண்டும், அந்த
ஆ சானுக்கு எத்தகைய பவிடை செய்து அவா¢ன் வாழ்வில் வறுமை இல்லாது
உதவிகளும் செய்து பேண வேண்டும் என்பதை உணர்த்துகிறது.]

இரண்டாவது, பெற்ற தாய்கூட கல்வியிற் சிறக்க பிள்ளையையே மதிப்பாள்,
அன்பு செலுத்துவாள் என்பதையும் தொ¢விக்கிறது. அப்படி என்றால் கல்வி
இல்லாத பெண்கள் களர் நிலம் – அந்நிலத்தில் புல் விளைவதன்றி புதல்வர்கள்
விளைவதில்லை ! என்று புரட்சி கவிஞர் பாரதிதாசனார் ஏங்கினாரே, அந்த
ஏக்கத்திற்குப் பழந்தமிழகத்தில் இடமில்லை. கல்வியை மதிக்கின்ற கல்வி கற்ற
பெண்களே வாழ்ந்தார்கள் என்பது தெளிவாகிறது.

மூன்றாவததாக ஆளுகின்ற அரசனும்,

“ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களில் கல்வி கேள்விகளிற் சிறந்த அறிவுடையவனே வருக”
என வரவேற்றுப் பொறுப்புகளை அளித்துப் பெருமைப் படுத்துவான்
என்று வரையறை வகுக்கிறது.

நான்காவது, தொழில் முதலாகப் பிரிந்த நால்வகைப் பிரிவினுள்ளும் கல்வியிற் சிறந்த
தலைமகனுக்கு மேட்டுகுடி மகன் நான் என மார்தட்டுவனும் அடங்கியவனாவான்.
எனவே, கல்வி மேம்பட்டிருந்தால் எவனுக்கும் அடிமைப்பட்டவனில்லை என்பதை
கடைசி இரண்டு வா¢கள் தெளிவாக்குகின்றன.

கல்வி, கேள்விகளால் தலைநிமிர்ந்து தமிழ் சமூகத்தைப் படம் பிடித்து
உலகுக்குக்காட்டுகிறது மேற்குறித்த புறநானூற்று பாட்டு.

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.

&
படித்தேன் பகிர்ந்தேன்
அறிந்தும் அறியாததும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:35 pm

நலம் தரும் குத்துவிளக்கு
-------------
‘குத்து விளக்கு’ தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது என்பர்.
இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம்,
மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும்
நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ –
மலை மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.

பஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் உகந்தது. மெல்லிய திரிகளாகத் திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும்போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய
பிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.

குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய குறிப்பிட்ட நாள்கள் உண்டு.
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி கிய நாள்களில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல் வேண்டும்.

திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும்,
குககுரு தன தாட்சாயணியும் குத்து விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த நாள்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச் சக்திகள்
விலகிப் போகும் என நம்புகின்றனர். வெள்ளியன்று கழுவுவதால் அதில்
குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப் போய் விடுவாள்
என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.

விளக்கை முதலில் நீரால் கழுவிப் பின்பு எண்ணெய்ப் பிசுக்கு நீங்கும் வண்ணம்
தேங்காய் நார் கொண்டு பச்சைப்பயறு, வெந்தயம், பச்சரிசி, எலுமிச்சைத் தோல்
சேர்த்து அரைத்த சிகைக்காய்ப் பொடி போட்டுத் தேய்க்க வேண்டும்.
கடைசியில் எலுமிச்சைச்சாறு ஊற்றி சுத்தப்படுத்தித் தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும்.

மனம் நிலைப்பட திங்கள் அன்று தீபம் போட வேண்டும்.

‘குரு பார்வை’ இருந்தாலும் கடினமான வேலைகளையும் கூட எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல்
எளிதாகச் செய்ய முடியுமே! வியாழன் அன்று தீபமேற்றினால் ‘குருவின் பார்வையும் –
அது தரும் கோடி நன்மையும்’ நமக்கே கிடைக்கும்.

வாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவுவதுதான் சனியன்று விளக்குத் துலக்கி நாம் போடும் தீபம்.

மற்ற நாள்களில் விளக்குத் துலக்காமல் தீபம் போடலாம்.

விளக்குத் துலக்காத நாள்களில் விசேஷமான நோன்பு, பூஜைகள் வந்தால்,
விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான
துணியினால் விளக்கைத் துடைத்து தீபம் ஏற்றலாம்.

விளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம்
ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில்
செய்யப்பட வேண்டிய ஒன்று. தாமரை நூல் தீபம், மனதுக்குப் பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும்.

வாழைத் தண்டின் நூலில் திரி செய்து தீபம் ஏற்றுவது மக்கட் பேற்றைத் தரும்.

வெள்ளெருக்குப் பட்டையில் திரித்துத் தீபம் ஏற்றுவது காற்று சேட்டையை விலகச் செய்யும்.

பஞ்சமி திதியில் விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும். புதிதாக நெய்த பருத்தி
ஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்துத் தடவிக் காய வைத்து,
அதைத் திரியாக்கி வடக்குமுகமாக வைத்து, ‘பஞ்ச தீப’ எண்ணெய் ஊற்றித்
திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும்.
பல காலமாக வராமலிருந்த பணம் தேடி வரும். இது அருந்ததிக்குச் சாவித்திரி தேவி அருளிய வாக்கு.

ஒரு தீபம் ஏற்றுவது தவறு. சிறிய ஜோதி விளக்கானாலும் இரண்டு திரி போட்டு
இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இது குடும்பத்திற்குப் பல நலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.

&
படித்தேன் பகிர்ந்தேன்
அறிந்தும் அறியாததும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:37 pm

மகளிர் முத்தைப்போன்றவர்கள்

அழகிய ஓர் இளம் பெண் , இளைஞன் ஒருவனைக் காதலித்தாள்.
அவனும் அவளைக் காதலித்தான்.
ஆனால், அவர்கள் காதலை அப்பெண்ணின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் ஒருநாள் அவர்கள் இருவரும் ஒருவரும் அறியாவண்ணம்
எங்கோ சென்றுவிட்டனர்;
தாய் அவளைத் தேடிப் புறப்பட்டாள்;
வழியில் வந்த சிலரைப் பார்த்து…,

”இந்த வழியில் ஒரு ஆண் மகனையும் , ஒரு பெண் மகளையும் கண்டீரா”
என வினவுகிறாள்.
அவர்களில் சிலர்… …,
”தாயே ! உன் மகளையும் , அவள் காதலனையும் வழியில் கண்டோம்;
அவர் போக்கில் தவறு இல்லை என்பது மட்டுமன்று ;
அதுவே உலகியல் முறையாம் என் உணர்ந்து அவர்களைப் போக விடுத்தோம் ;
ஆகவே, அவர் குறித்துக் கவலைப் படாது , திரும்பி வீட்டிற்குச் செல்வாயாக” என்றனர்.
” வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் ! இவ்விடை
என்மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ ? பெரும !
காணேம் அல்லேம் ; கண்டனம் கடத்திடை ;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மான் இழை மடவரல் தாயிர் நீர் போறீர் ?
பலவுறு நாறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுள்ளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என்ன செய்யும் ?

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அல்லதை
நீருள்ளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் ?
தேருங்கால், நும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே;
ஏழ் புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுள்ளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும் ?
சூழுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே; என வாங்கு
சிறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தாளை வழிபடச் சென்றனள்;
அறந்தலை பிரியா ஆறும் மறு அதுவே ”

தாய்:
பெரியோர்களே! என் மகள் ஒருத்தியும் வேறு ஒருத்தியின் மகனும் பண்டு தமக்குத் தாமே காதல் கொண்டனர். அது இன்று பலராலும் அறிந்துக்கொள்ளப்பட்டது. அதனால் அவர்கள் இருவரும் ஒருமனப்பட்டு இனக்காட்டுவழியே வந்துவிட்டன; அவர்களைத் தாங்கள் கடந்து வந்த காட்டு வழியில் எங்கேனும் கண்டீர்களோ ? கண்டீராயின் கண்ட விதத்தை யான் அறியும் வண்ணம் கூறுங்கள்.

பெரியவர் : ஆ ணழகனாகிய அச்சிறந்தானோடு, கடத்தற்கரிய அ க்காட்டு வழியில்
செல்லத் துணிந்த, மாண்புமிக்க குணத்தைச் சிறந்த அணியாகக் கருதிய மடப்பம் மிக்க
அவ்விளையோளைப் பெற்ற பெருமை வாய்ந்த தாயே ! நீ கூறிய அவ்விருவரையும் காட்டு
வழியில் பார்த்தோம்.

தாயே ! பற்பல வகையிலும் பயன்படுத்தப்படும் நறுமணம் மிக்க சந்தனக் கட்டை
மலையில் தான் வளர்கிறது; ஆனால், அது அங்கு வளர்ந்தாலும், அது தன்னை அறைத்துப்
பூசிக் கொள்பவர்க்குப் பயன்படுவதல்லது, பிறந்த மலைக்கு எந்த வகையிலும் பயன்படுவதில்லை.

நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே.
தாயே ! தலைசிறந்த வெண்முத்துக்கள் கடல் நீரில்தான் பிறக்கின்றன; ஆனால், அவை
அங்கே பிறப்பினும் அவை, தம்மை ஆ ரம் ஆ க்கி அணிந்து கொள்பவர்க்கு அழகு தருவதல்லது, தாம் பிறந்த கடலுக்கு எந்த வகையிலும் அழகு தருவதில்லை. ஆராய்ந்து பார்த்தால், உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவும் அத்தகையதே.

தாயே! எழுவகையாக எழும் இனிய இசை, யாழில்தான் தோன்றுகிறது; ஆனால், அது
தன்னை கேட்டு நுகர்வார்க்கு இன்பம் தருவதல்லது. தான் தோன்றிய யாழிற்கு எந்த வகையிலும் இன்பம் தருவதில்லை; ஆராய்ந்து நோக்கினால் உன் மகளுக்கும் உனக்கும்
உள்ள உறவு அத்தகையதே.
ஆகவே, தாயே ! சிறந்த கற்பு தெறியை மேற்கொண்டவளாய் காதலனோடு காட்டு
வழியில் போய்விட்ட உன்மகள் குறித்து வருந்தாதே; அவள் தலைசிறந்த ஒருவனைத் தன்
கணவனாக ஏற்றுச் சென்றுள்ளாள்; அது மட்டுமன்று, அவள் செயல் உலகியல் அறத்தோடு
ஒட்டியது ஆகும்.

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.

&
படித்தேன் பகிர்ந்தேன்
அறிந்தும் அறியாததும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:39 pm

மனம் வெளுக்க
----------
தமிழ் மொழிக்குப் புத்துணர்வு தந்து, பாமரமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இனிய
கவிதைகளை எழுதியவர் மகாகவி பாரதியார். பழைய தமிழை புதிய வடிவில் வடித்து தந்தவர்.
அவர் மனதின் இயல்புகளை மிக அழகாக, எளிய முறையில் வருணித்து இருக்கிறார்.‘கடல் பொங்கி எழுந்தாலும் கலங்க மாட்டோம் !
யாருக்கும் அஞ்சோம் ! எதற்கும் அஞ்சோம் !

என்று கூறித் தன்னுடைய தன்னிகரில்லா நெஞ்சத்துணிவையும், மன உறுதியையும், வினை
நுட்பத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் பாரதியார்.

மனத்தில் பெண்மையின் பண்புகளைக் காண்கிறர் அவர். ஒன்றையே பற்றி ஊசலாடும் என்றும், அடுத்துவரப் போவதை எதிர்நோக்கி உலாவும் என்றும், ஒன்றையே கொள்ளுமாறு கூறும்போது சோர்வுடன் கைநழுவி விட்டுவிடும் என்றும், புறக்கணிக்குமாறு கூறுவதை விரைந்து சென்று
கொழுக் கொம்பாகப் பற்றி நிற்கும் என்றும், தொடங்கிய செயலை மீண்டும் மீண்டும் தொடும் என்றும், புதுமையான ஒன்றைக் கண்டதும் புலன் அழிந்திடும் என்றும் மிக அழகாக ஒப்புநோக்கி வருணித்திருக்கிறார் பாரதியார்.

ஒருபுறம் புதுமையை விரும்பும் மனம், மறுபுறம் அதன் விளைவைக் கண்டு அஞ்சுகிறது.
பழம்பொருட்களாக மீண்டும் மீண்டும் பரிந்து செல்கிறது. இவ்வாறெல்லம் இருப்பினும்
தன்னிடத்தில் நிலையான அன்பு கொண்ட ஒன்றாக மனத்தை விரும்பி வேண்டுகிறார்
பாரதியார். அதனை மேம்படுத்தி, என்றும் அதனிடம் இன்பமே பெற விழைவதாகப் பாடுகிறார்.
அதன் விழிப்படாமல் தன் விழிப்பட்ட சிவம் என்னும் பொருளைத் தினமும் போற்றி மனத்திற்கு இன்பம் ஓங்கிடச் செய்வதாகக் கூறுகிறார்.

மனத்தைச் சக்தியின் கருவியாக ஆக்கிக் காட்டும் பாரதி, அதை நலமுறப் பேணும் வகையையும் நமக்குக் காட்டுகிறார். மனத்தில் கறைபடிந்து விடாமல் இருக்க ஒவ்வொருவரும் முயலவேண்டும். அவ்வாறு மனத்தைத் தூய்மையாக வைத்துக் காப்பது எளிதல்ல என்றும் பாடுகிறார் பாரதியார்.

” துணி வெளுக்க மண்ணுண்டு-
தோல் வெளுக்கச் சாம்பருண்டு

மணி வெளுக்கச் சாணை உண்டு –
மனம் வெளுக்க வழி இல்லை !

– என்கிறார்.
மன உறுதியையும், மனத்துணிவையும் மானிடம் அனைவரும் பெற்றிடல் வேண்டும் என்று
சுட்டிக்காட்டி,

”நெஞ்சிற் கவலைதனை நித்தம் பயிராக்கி
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை”
என்றும்;
”மனத்தில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை !”
என்றும் பாடுகிறார்.

ஆதலால், ஒருவன் அறிவு மிக்கவனாக இருந்தால் மட்டும் போதாது. பரந்து விரிந்த கருணை
உள்ளமும், மாசு நீங்கிய மனமும் அவனுக்கு இன்றியமையாதது. இதை முயன்றே
பெறப் பழகிக்கொள்ள வேண்டும் என்கிறார் பாரதியார்.

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.

&
படித்தேன் பகிர்ந்தேன்
அறிந்தும் அறியாததும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:41 pm

தனிப்பாடல்
-----------
தமிழ் இலக்கியத்தில் தனிப்பாடல்களுக்குத் தனி இடம் உண்டு. அவை வேறுபட்ட காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை. இப்பாடல்கள் சொல் நயமும் சுவை நலமும் தோன்ற எளிமையக எழுதப்பட்டவை. இவற்றை எழுதிய புலவர்களில் காளமேகம், கம்பர், கடிகைமுத்துப் புலவர், ஒளவையார், ஒட்டக்கூத்தர், பலபட்டை சொக்க நாதப்புலவர், ஆண்டாள் கவிராயர் போன்றோர் புகழ் பெற்றவர்கள்.இவர்களில் காளமேகப்புலவரைப்பற்றி இன்று பார்ப்போம் .
இவர் இயற்பெயர் வரதன். இவர் ஆசு கவி பாடுவதிலும் சிலேடைப்படல்கள் பாடுவதிலும் வல்லவர். இவர் காலம் 15ம் நூற்ராண்டின் இடைப்பகுதி.
பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை பெற்றதால் இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

” இத்திரன் கலையா யென்மருங் கிருந்தான்” எனும் இவரது பாடல் தொடரின் மூலம் இவர் கால மன்னன் கல்பாணிச் சாளுவ திருமலைராயன் என்று கொண்டு இவருடைய காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி எனத் தமிழ் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

இவர் ஆசு கவி பாடுவதிலும், வசை பாடுவதிலும் வல்லவர் என்பதை ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்’, ‘வசைபாடக் காளமேகம்’ எனும் தொடர்களால் அறியலாம்.

இவர் கும்பகோணத்திற்குத் தெற்கே இரண்டு கல்தொலைவிலுள்ள நந்திபுரத்தில், தற்போது நாதன்கோயில் என வழங்கப்படும், ஊரில் பிறந்தார்.
‘திருவானைக்காவுலா’ என்பது இவர் இயற்றிய நூலாகும். இவரது தனிப்பாடல்களைத் தனிப்பாடற்றிரட்டு, பெருந்தொகை முதலிய நூல்களில் படித்து மகிழலாம்.

கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது!
நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்!!
வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!!!

பொருள்: நீ£ரே! நீ காயத்தில் இருந்த போது மேகம் என்ற பெயரைப்பெற்றாய். தரையை அடைந்த பிறகு நீர் என்ற பெயர் பெற்றாய். ஆனால், நீண்ட நெடுங் கூந்தலை உடய பால் விற்கும் மாதரின் கையில் வந்ததும் மோர் என்று பேர் பெற்று முப்பேர் பெற்று விட்டாயே என்று கூறுகிறார்.

மேற்கூறிய பாடலில் புலவர் ஆயர் குலப்பெண்ணை நையாண்டி செய்கிறார். அவள் விற்ற மோர் தண்ணீரைப்போல் இருந்தது. அதை நேரடியாகச் சொல்லாமல் அப்பெண்ணைப் புகழ்வதுபோல், அவள் கைவண்ணத்தால் தண்ணீரே மோரானதாகப் பாடுகிறார்.

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:43 pm

மதங்கள்
------------
மதங்கள், காலம், காலமாகத் தோற்றும் காவியங்கள்.

இறைவனைப் பற்றி மதங்கள் கூறுவது என்ன?
எங்கு இருப்பவன் இறைவன். நீக்கமற நிறைந்திருப்பவன்.
எல்லாவிடங்களிலும் வியாபித்து இருப்பவன்.
இது மதங்கள் மூலம் நமக்கு தரும் செய்தி.ஒன்றே ஒரு குலம்; ஒருவனே தேவன் என்று பல முறை படித்துள்ளோம்.
அவன் உருவமற்றவன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆளுக்கொரு கடவுள் என்றும்; அது வித்தியாசம் என்றும்;
அது உன் கடவுள்; அது தாழ்ந்தது, இது உயர்ந்தது…. என்ற தெரு சண்டை தினம்.
இன்னும் இந்த வீணான சர்ச்சை…..

மதங்களின் பெயரால் மனிதகுலம் பிரிந்து, சண்டையிட்டுக் கொண்டுயிருக்கிறது
வேதங்களும், பைபிலும், குர்ரானும் கூறுகிறது ஒரே மொழி.
சமயங்களில் கூறுவதை கூர்ந்து பார்த்தால் மாறான கருத்தில்லை.
சைவம் என்றாலும், அல்லா என்றாலும், பிதா என்றாலும் மூலத்தில் ஒன்றுதான்.
உணர்த்துவது ஒன்றுதான்.

விவேகம் இல்லாதவர்கள், புறவேற்றுமை முக்கியம் கொடுக்கிறவர்கள் சிந்திக்கவேண்டும்.

” சாதியிலே, மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடியிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து விணே அழிதல் அழகலவே ”
என்கிறார் வள்ளலார்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் -நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் இன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்

என்ற பாரதியின் வாக்கு நமது பழக்கத்தை மாற்றவேண்டும்.

மதங்களுக்கு இரண்டு முகங்கள்.
ஒன்று : அதன் தத்துவம் சார்ந்தது. அன்பையும் மனித உறவுகளாகவும்
போற்றுகிற ஆன்மீகம் முகம்.

இன்னொன்று : இந்த ஆன்மீகத்தன்மைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட
சடங்கு, பூசை, யாகம், பலி என்ற சடங்கு.
மறைந்த ஆன்மீகம் முன் நிற்க வேண்டும்.
ஆனால், சடங்குதான் ஆன்மீகத்தை விழுங்கி விட்டு கோணல் பல சிரிக்கின்றன.

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 1:46 pm

நாளை நான் போகாமல் இருப்பேனா?

“புகழ் பெற்ற நந்தன் பாடல்.”

நந்தனோ நாளை என்றான்;
நாமோ இன்றே அவசியம் சென்று பார்க்க வேண்டிய திருத்தலம் தில்லை.
ஆடலரசன் நடராஜன் கனகசபையினில் அம்மை சிவகாமியுடன்
ஆனந்த நடம் புரிந்த ஆலயம்.மற்ற சிவாலயங்களுக்கு இல்லாத பல சிறப்புகள் நடராஜர் குடிகொண்ட இக்கோயிலுக்கென்று உண்டு.

இங்கு உறையும் ஆண்டவன் கனகசபை, பொன்னம்பலம், சபாபதி என்ற பல
பெயர்களைத் தாங்கியவன்.

இக் கோயிலில் மூலவரை விடவும் உற்சவமூர்த்தியான நடராஜருக்கே புகழும்,
பெருமையும் அதிகம். நடராஜரின் கூத்தாடும் வடிவம் யாரால் எப்போது
வடிக்கப்பட்டது என்பதற்கு வரலாறு ஏதுமில்லை. இறைவனின் ஆனந்த
நடனநிலையைக் கற்பனை செய்தவர் யாரோ?
அந்த அழகிய கற்பனையும், அதற்கு வடிவம் கொடுத்த சிற்பியின் திறனும் அற்புதமானது.

நடராசரின் கையில் உள்ள உடுக்கை (துடி) படைத்தலையும், அபயக்கரம் காத்தலையும்,
அக்கினி ஏந்திய கை அழித்தலையும், ஊன்றிய கால் ஆன்மாக்களைப் பாசத்திலிருந்து மறைத்தலையும், தூக்கிய கால் அருளையும் காட்டுகிறது.

தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடும் ஆனந்த நடனமே நித்தியமானது; நிரந்தரமானது;
உலக இயக்கத்துக்கு இதுவே மூலம் என்பதும் மரபு.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லும் ‘பெரியபுராணம்’, சிதம்பரத்தில் கிழக்கு கோபுர வாசல் அருகில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்தான் அரங்கேற்றப்பட்டது. பெரிய புராணத்தைத் தொடங்க இறைவனே முதலடி எடுத்துக் கொடுத்ததாகவும் புராணம் உண்டு.

‘பன்னிரு திருமுறைகள்’ என்று போற்றப்படும் தேவாரப் பாடல் ஏடுகள் பல
நூற்றாண்டுகளாகச் சிதம்பரம் கோயிலிலேயே பாதுகாக்கப்பட்டு 12 ம் நூற்றாண்டுக்குப்
பின் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்னும் அடியாரால் கண்டெடுக்கப்பட்டு பின்னரே தொகுத்து வழங்கப்பட்டது.

அனைத்துக் கோயில்களிலும் இறைவன் எழுந்தருளியிருக்கும் கர்ப்பக்கிரகத்தை
மூலஸ்தானம் என்றழைப்பர். ஆனால், இங்கோ லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்ட
தனிக் கோயிலைத் திருமூலட்டானம் என்ற சிறப்புப் பெயரால் அழைப்பர்.

திருமூலட்டானத்தின் அருகேயே அமைந்துள்ளது அம்மை சிவகாம சுந்தரியின் சந்நிதி.
கலையம்சம் பொருந்தி மிளிர்கிறது சிவகாமி சிற்பம். முழுவதும் வெள்ளியங்கி
சார்த்தப்பட்டு அற்புத அலங்காரியாகக் காட்சி அருள்கிறாள் அன்னை.

இவ்வாலயத்தில் மற்றோர் சிறப்பு பொன்னம்பலம் அல்லது கனகசபை. பொன்னால்
வேயப்பட்ட ஓடுகளுக்குக் கீழே உறைகிறான் அம்பலக்கூத்தன்.
இதில் 21,600 தங்க ஓடுகள் வேயப் பெற்றிருக்கின்றன. அது என்ன கணக்கு?
அதற்கும் ஒரு தத்துவம் உண்டு.

நாம், ஒரு நிமிடத்துக்குப் பதினைந்து முறை சுவாசிக்கிறோம்.

ஒரு நிமிடத்துக்கு 15 முறை
ஒரு மணிக்கு 900 முறை
ஒரு நாளைக்கு 21,600 முறை

இதனைக் கருத்தில் கொண்டே 21600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன.
இந்தக் கனகசபைக்கு அருகிலேயே சிவாலயம் எங்கனும் காணக் கிடைக்காத மற்றோர்
சிறப்பம்சமும் உண்டு. நடராஜர் சந்நிதியின் அருகிலேயே அனந்த சயனக் கோலத்தில்
கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி உள்ளது. இதுவும் ஓர் பூர்வமான ஏற்பாடு.

இந்த கோவிந்தராஜப் பெருமாள், எட்டாம் நூற்றாண்டில் நந்தி வர்ம பல்லவனால்
பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு. இந்த கோவிந்தராஜனை குலசேகர ஆழ்வாரும்,
திருமங்கையாழ்வாரும் தரிசித்து பாசுரங்கள் பாடிப் பரவசமடைந்துள்ளனர்.

கோவிந்தராஜப் பெருமாள் அனேக தொல்லைகளுக்கு ஆளாகி இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் கதைகள் பல உண்டு. பொன்னம்பலத்தானின் முன்னிலையில்
பெருமாள் இருப்பதை விரும்பாத இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளைக் கடலில் எறிந்து
விட்டதாகவும், பல தொல்லைகளுக்குப் பின்னர், 1539 இல் விஜயநகர மன்னன் அச்சுதராயர் பெருமாளை மீட்டு மீண்டும் கோயிலில் பிரதிஷ்டை செய்து, பெருமாள் சந்நிதிக்கு எதிரே கொடிக்கம்பமும் நட்டு, நடராசனுக்கும், பெருமாளுக்கும் ஏக காலத்தில் பூஜைகள்
நடைபெற வழி செய்ததாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன.

கொடிக்கம்பத்தின் அருகே நின்று பார்த்தால் ஒரு சேர பெருமாளையும், நடராஜரையும் வணங்கலாம். சைவர்களால் தில்லையென்றும், சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் இவ்வூர், வைணவர்களால் திருச்சித்திரக்கூடம் என்று அழைக்கப்படுகிறது.

தாழ்ந்த குலத்தில் பிறந்த நந்தன், இறைவனை வணங்கி வழிபட இடையூறு இல்லாமல் நந்தி விலகி வழி விட்ட கதையும் கூட உண்டு.

சிதம்பரம் கோயிலின் உரிமையும், பரிபாலனமும் தில்லை வாழ் அந்தணர்கள்
என்ற தீட்சிதர்களிடம்தான் உள்ளது.

நாயன்மார்களான சுந்தரமூர்த்தி நாயன மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் நான்கு இராஜகோபுர வாசல்களின் வழியாக வந்து வழிபட்டதாக வரலாறு உண்டு. நான்கு கோபுர வாயில்களிலும் அவர்களை தீட்சிதர்கள் வரவேற்ப போன்ற சிற்பங்கள் உள்ளன.
கூத்தரசனின் கோயில் என்பதால் கோபுரவாயில்கள், மற்றுமுள்ள சிற்ப வேலைப்பாடுகளெல்லாம் ஆடற்கலையின் வடிவங்களே. பரத சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 வகைக் கரண பேதங்களையும் புடைச் சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பலதரப்பட்ட நாட்டியக் கலைஞர்களால் நடராசப்
பெருமானுக்கு செய்யப்படும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் ஒரு சிறப்பம்சம்தான்.

முக்தி தரும் தலமென்று கூறப்படும் தில்லைக்கு அவசியம் ஒரு முறை அனைவரும்
சென்று வர வேண்டும்.

பதியப்பட்ட பகுதி: சைவமும் தமிழும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by செந்தில் Fri Sep 09, 2016 12:22 pm

விரிவான பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அறிந்தும் அறியாததும்  Empty Re: அறிந்தும் அறியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum