தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

View previous topic View next topic Go down

இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் Empty இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 9:05 am

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று சென்னையில் துவங்குகிறது. ஹர்பஜன் சிங், 100வது டெஸ்டில் களமிறங்குவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, புத்துணர்ச்சியுடன் களம் காணுகிறது. "சீனியர்' சேவக்குடன், 12 டெஸ்டில் பங்கேற்ற அனுபவம் உள்ள முரளி விஜய் இணைந்து துவக்கம் தருவர் எனத் தெரிகிறது.

அதேநேரம், வலது, இடது கை பேட்ஸ்மேன்கள் கூட்டணி தான் துவக்கம் தர வேண்டும் என, முடிவு செய்தால், சேவக்-ஷிகர் தவான் வரலாம்.

சச்சின் கடைசி:

சென்னை மண்ணில் சச்சின் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் இதுவாகத்தான் இருக்கும் என நம்பப்படுகிறது. தவிர, ஓய்வு பெறும் எண்ணத்தில் சச்சின் இருப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னையில் நல்ல துவக்கம் தர முயற்சிக்கலாம்.

ஜடேஜா உறுதி:

தொடர்ந்த டெஸ்ட் தோல்விகளால், தோனியின் கேப்டன் பதவி விமர்சனத்துக்கு உள்ளானது. இப்போட்டியில் வென்று எதிர்ப்பு கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தோனி முயற்சிக்கலாம். ஆறாவது வீரருக்கான இடத்தில் ரவிந்திர ஜடேஜா, ரகானேவுக்கு இடையே போட்டி உள்ளது. இருப்பினும், "ஆல்-ரவுண்டர்' என்ற முறையில், ரவிந்திர ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கலாம்.

ஹர்பஜன் வருகை:

இரானி கோப்பை போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய "சீனியர்' சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன், இன்று தனது 100வது டெஸ்டில் களமிறங்குகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இவரது "சுழல் வலையில்', விக்கெட் "மீன்கள்' அதிகம் சிக்கட்டும்.

இரண்டு சுழற்பந்து வீச்சாளர் மட்டும் போதும் எனில் பிரக்யான் ஓஜா தேர்வாகலாம். கடந்த ஆறுமாதமாக ஏமாற்றி வரும் தமிழகத்தின் அஷ்வின் இடம் கேள்விக்குறி தான். வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா அல்லது புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இளம் படை:

காயம் காரணமாக பயிற்சி போட்டிகளில் பங்கேற்காத டேவிட் வார்னர், எட் கோவன் ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் தரவுள்ளனர். இவர்களுக்கு அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க், பிலிப் ஹியுஸ், வாட்சன், மாத்யூ வேட் என, பேட்டிங் வரிசை நீள்கிறது. "ஆல் ரவுண்டர்' ஹென்ரிக்ஸ் இன்று தனது முதல் டெஸ்டில் களமிறங்குகிறார்.

வேகத்தில் நம்பிக்கை:

சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் 2004 தொடரில், வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு தான் ஆஸ்திரேலியா, டெஸ்ட் தொடரை வென்றது. இப்போது மீண்டும் இதே பாணியில் துணிச்சலாக களம் காணுகிறது.

சென்னை ஆடுகளம் போகப் போக சுழலுக்கு சாதகமாக மாறினாலும், பழைய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக "சுவிங்' செய்யலாம். ஆனால், இந்திய அணியில் "சுவிங்' செய்வதில் வல்லவரான ஜாகிர் கான் இல்லாதது பலவீனம் தான். இதனால் இஷாந்த் சர்மாவுக்கு சற்று வேலை அதிகம் தான்.

சேப்பாக்கம் மைதானத்தில்

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், இதுவரை 30 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 12 போட்டியில் வெற்றி பெற்றது. 11 போட்டிகள் "டிரா'வில் முடிந்தன. ஒரு போட்டி "டை' ஆனது. மீதமுள்ள 6 போட்டிகளில் இங்கிலாந்து (3 டெஸ்ட்), வெஸ்ட் இண்டீஸ் (1), ஆஸ்திரேலியா (1), பாகிஸ்தான் (1) அணிகள் வெற்றி பெற்றன.

* இங்கு, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 6 டெஸ்டில் மோதின. இதில் இந்தியா 2 (1998, 2001) போட்டியில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி, ஒரு (1969) போட்டியில் வென்றது. இரண்டு (1979, 2004) போட்டிகள் "டிரா'வில் முடிந்தன. கடந்த 1986ல் நடந்த போட்டி "டை' ஆனது.

* கடந்த 1986ல், இங்கு நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 574 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதன்மூலம் இங்கு, தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. கடந்த 2001ல், இங்கு நடந்த டெஸ்டில் 501 ரன்கள் எடுத்த இந்திய அணி, ஆஸ்திரலியாவுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.

* கடந்த 1969ல், இங்கு நடந்த டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி 153 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இங்கு, தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இப்போட்டியில், 163 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த ஸ்கோரை பெற்றது.

* டெஸ்ட் வரலாற்றில், சேப்பாக்கம் மைதானத்தில், அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் முன்னிலை வகிக்கிறார். இவர், 12 டெஸ்டில் 1018 ரன்கள் (3 சதம், 3 அரைசதம்) எடுத்துள்ளார். இவரை அடுத்து, "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (876 ரன்கள்) உள்ளார். இவர், இன்னும் 124 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சேப்பாக்கத்தில் 1000 ரன்களை எட்டிய 2வது வீரர் என்ற பெருமை பெறலாம். ஆஸ்திரேலியா சார்பில், இங்கு அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில், ஆலன் பார்டர் முன்னிலை வகிக்கிறார். இவர், 2 டெஸ்டில் 345 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து, மாத்யூ ஹைடன் (335 ரன்கள்) உள்ளார்.

* டெஸ்ட் அரங்கில், சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில், இந்தியாவின் அனில் கும்ளே முதலிடத்தில் உள்ளார். இவர், 8 டெஸ்டில், 48 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இவரை அடுத்து, கபில்தேவ் (40 விக்கெட்), ஹர்பஜன் சிங் (39 விக்கெட்) ஆகியோர் உள்ளனர். ஆஸ்திரேலியா சார்பில் ஷேன் வார்ன் (13 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார்.





அடுத்த இலக்கு "150'

ஹர்பஜன் சிங் கூறுகையில்,""100வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு வெற்றிதேடித் தருவேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூர் டெஸ்ட்டில் அறிமுகமானேன். அதே அணிக்கு எதிராக 100வது டெஸ்ட் போட்டியில் சென்னையில் விளையாடுவது மிக்க மகிழ்ச்சி. சிறு பதட்டம் உண்டு. இன்னும் 50 டெஸ்டில் விளையாட முயற்சிப்பேன். அதற்கு களத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்,''என்றார்.

சவாலான போட்டி

ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,""இந்தியாவுக்கு சூழற்பந்துவீச்சு சாதகம் என்றால், எங்களுக்கு வேகப்பந்துவீச்சு சாதகம். முதல் டெஸ்டில் முழு திறனையும் வெளிப்படுத்துவோம். சென்னைக்கு பத்து நாட்களுக்கு முன்பே வந்து பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டோம். ஹர்பஜன் சிங், இந்திய அணியில் இடம் பெற்றிருப்பதால். போட்டி சவால் நிறைந்தாக இருக்கும்,''என்றார்.

இரண்டாவது "டை'

கடந்த 1986ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்டில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 574 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின், முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 397 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்ய, இந்திய அணியின் வெற்றிக்கு 348 ரன்கள் தேவைப்பட்டன. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு கவாஸ்கர் (90), அமர்நாத் (51), அசார் (42), ரவி சாஸ்திரி (48*) கைகொடுத்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற, இந்திய அணி 347 ரன்களுக்கு "ஆல்-அவுட்'டாக போட்டி "டை' ஆனது. இதன்மூலம் "டை'யில் முடிந்த 2வது டெஸ்ட் போட்டி என்ற பெருமை பெற்றது. முன்னதாக 1960ல், ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பிரிஸ்பேனில் மோதிய டெஸ்ட் "டை' ஆனது.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் Empty Re: இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

Post by செந்தில் Fri Feb 22, 2013 11:20 am

நண்பேன்டா இந்திய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் Empty Re: இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 11:22 am

செந்தில் wrote: நண்பேன்டா இந்திய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பேன்டா
Australia 112/2 (30.0 ov)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் Empty Re: இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 1:11 pm

ஆஸ்திரே 164/5 (51.0 ov)

அஸ்வின் 5 விக்கெட் எடுத்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் 615537757
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் Empty Re: இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 4:12 pm

அப்பாடா இறுதி ஓவரில் ஒரு விக்கெட்..

ஆறு விக்கெட்டையும் கைப்பற்றினார் அஸ்வின்.. இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் 615537757 இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் 615537757 இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் 615537757
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் Empty Re: இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

Post by Surendhran Sat Feb 23, 2013 9:01 am

இந்தியா வெல்லும்.
Surendhran
Surendhran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் Empty Re: இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

Post by மகா பிரபு Sat Feb 23, 2013 11:50 am

ஆஸ்திரேலியா அணி 380 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.. இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் 2695542999
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் Empty Re: இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

Post by மகா பிரபு Sat Feb 23, 2013 11:52 am

அஸ்வின் 7 விக்கெட்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் Empty Re: இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

Post by மகா பிரபு Tue Feb 26, 2013 11:03 am

இந்தியா வெற்றி.. இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் 615537757 இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் 615537757 இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் 615537757
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட் Empty Re: இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா
» இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட்
» மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
» இந்தியா VS ஆஸ்திரேலிய இரண்டாம் டெஸ்ட் போட்டி -நேரடி ஓளிபரப்பு
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum