தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிறந்த மனம் சேவை மனம்

View previous topic View next topic Go down

சிறந்த மனம் சேவை மனம் Empty சிறந்த மனம் சேவை மனம்

Post by முழுமுதலோன் Mon Apr 29, 2013 4:36 pm

சிறந்த மனம் சேவை மனம்


சமுதாயத்தின் ஒரு அங்கம் தான் மனிதன். மகிழ்ச்சியான சமுதாயத்தில்தான் தானும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். சேவை மனம் கொண்ட மக்களால்தான் மானுடத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது. அந்த மகிழ்ச்சி பெருக, தொடர ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை கட்டாயம் செலுத்த வேண்டும். அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.


மே 1 – இந்த நாள் உலகம் முழுவதும் மே தினம், தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம் என்று பல பெயரில் கொண்டாடப்படுகிறது. 1885ஆம் ஆண்டு இதே நாளில்தான் அமெரிக்காவில் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பினார்கள்.

உலகத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடிக் கொண்டாடும் ஒரே தினம் மே தினம். அந்தக் காலத்தில் வேலைநாள் என்பது அதிகாலை முதல் அந்தி சாயும் வரை எனபதாகவே இருந்து. அதனை எதிர்த்து 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாமென எழுந்த போராட்டத்தின் வெற்றி நாளே மே தினமாகும்.

இந்த மாபெரும் எழுச்சிக்கு ஐரோப்பாவில் பல ஆண்டுளுக்கு முன்பு தோன்றிய இயக்கங்கள் முக்கியக் காரணமாய் இருந்தன. 1948இல் கார்ல்மார்க்ஸ், பிரடரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை தொழிலாளர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை – அடிமைச் சங்கிலியைத் தவிர, ஆனால் வெல்வதற்கு ஒரு புது உலகம் காத்திருக்கிறது. என்று தொழிலாளர்களைத் தட்டி எழுப்பியது.

இந்தியாவில் சென்னை மாநகரில்தான் முதன் முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப் பட்டது. தலைசிறந்த சீர்திருத்தவாதியும் பொதுவுடமைவாதியுமான ம. சிங்காரவேலர் தான் 1923இல் சென்னை உயர்நீதி மன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாள் தின விழாவைக் கொண்டாடினார்.

தொழிலாளர் தினம் என்பது ஒரு புனித நாள் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் இது புனித நாள். இந்தியாவில் 1946 இல் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் தலைமையில் இயங்கிய அரசுதான் மே தினத்தை இந்தியத் தொழிலாளர்களின் தினமாக அறிவித்தது.

மே 8 – உலகெங்கும் செஞ்சிலுவை தினமாக கொண்டாடப்படுகிறது. 1859 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற போரில் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் படுகாயம்மடைந்து மருத்துவ உதவி இல்லாமல் தவித்தனர். போர்வீரர்களின் இன்னலை நேரில் கண்ட சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி டுனான்ட் என்பவர் போரில் காயமுற்ற வீரர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு அமைப்பை நிறுவினார். அதுதான் ‘ரெட்கிராஸ் சொசைட்டி’ எனப்படும் செஞ்சிலுவைச் சங்கம்.

டுனான்ட் என்ற அந்த மனிதாபிமானி பிறந்த நாளான மே 8ஆம் தேதியே உலகெங்கும் செஞ்சிலுவை தினமாக கொண்டாடப் படுகிறது. இளைஞர்களுக்கு உதவும் நோக்குடன் உருவான ஒய்.எம்.சி.ஏ. (YMCA) அமைப்பை தொடங்கியவரும் இவரே. உலகில் செஞ்சிலுவைச் சங்கம் தோன்றக் காரணமான ஹென்றி டுனான்ட்டுக்கு உலகின் முதல் சமாதான நோபெல் பரிசு 1910ல் வழங்கப்பட்டது. செஞ்சிலுவைச் சங்கம் மட்டும்தான் மூன்று முறை அதாவது 1917, 1944 மற்றும் 1963 ஆகிய ஆண்டுகளில் உலக சமாதானத்துக்கான நோபெல் பரிசைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் குறிக்கோள் நலவாழ்வு. நோய் தடுப்பு, துயர் துடைப்பு ஆகியன. போர் எங்கு நடந்தாலும் காயமுற்றவீரர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்து அவர்களைக் காப்பாற்றும் தன்னலமற்ற ஒரு சேவை அமைப்பு. ‘போர் வேண்டாம்- அமைதிதான் வேண்டும்’ என போராடும் முதன்மையான அமைப்பு இது. ஜெனிவாவைத் தலைமையகமாக் கொண்டுள்ளது. தற்போது 176 நாடுகளில் மக்களின் துயர் போக்கவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் சேவை புரிந்து வருகிறது. ஒரு நாட்டின் முதல் குடிமகன்தான் அந்த நாட்டின் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக இருப்பா. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவ் குடியரசு தலைவர்.

போர்க்காலத்தில் மட்டும்தான் என்றில்லாமல், புயல், வெள்ளம், பூகம்பம், தீ விபத்து, சுனாமி போன்ற இயற்கையின் சீற்றத்தினால், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. இரத்த தானம் செய்வதை மக்களிடையே பரப்புவதில் இந்தச் சங்கத்ததின பணி குறிப்பிடத்தக்கது.

மனிதனுக்கு வேறொரு மனிதனுடைய ரத்தத்தைச் செலுத்திப் பார்க்கலாம் என்ற முயற்சியை 18-ம் நூற்றாண்டில் ‘பிளண்டல்’ (Blundell) என்ற விஞ்ஞானி மேற்கொண்டார். இதுதான் ‘மனித ரத்தப் பரிமாற்றத்தின்’ முதல் முயற்சி. செலுத்தப்பட்ட ரத்தத்தின் அளவு மிகக் குறைவு. ரத்தம் செலுத்தப்பட்டவர்களுக்குச் சிறிது நேரத்திலேயே வியர்த்து. நாடித்துடிப்பு பலவீனமாகிற்று, குறைவாயிற்று. முகம் வெளுத்து உடல் ஜில்லிட்டது. அவர்கள் வெளியேற்றி சிறுநீர் கருஞ்சிவப்பு நிறமாக இருந்தது.

இந்தச் செய்திகள் விஞ்ஞானிகளை மேலும் சிந்திக்க வைத்தன. அதன் விளைவு 1909ம் ஆண்டு “கார்ல் லான்ட்ஸ்டீனர்” கண்டுபிடிப்பு ரத்தப்பிரிவுகளை – அதாவது ‘A’ குரூப், ‘B’ குரூப், ‘AB’ குரூப், ‘O” குரூப் என்று ஆங்கில எழுத்துக்களால் குறிக்கப்படும் ரத்தப் பிரிவுகளைக் கண்டுபிடித்து இந்த உலகத்தைக் காப்பாற்றியவர் “கார்ல் லான்ட்ஸ்டீனர்” (Karl Landsteiner) என்னும் மேனாட்டு மருத்துவ விஞ்ஞானி.

“கார்ல் லான்ட்ஸ்டீனர்” ரத்த வங்கிகளின் தந்தை என்றால் அது மிகையாகாது. 1986-ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி வியன்னாவில் ஒரு வழக்கறிஞருக்கு மகனாகப் பிறந்தார். 6-வது வயதில் தந்தையை இழந்தார்.தாய் கஷ்டப்பட்டு இவரை வளர்த்து ஒரு மருத்துவராக்கினார்.

மாணவப் பருவத்திலேயே இவர் ‘உயிர் வேதியல்’ துறையில் சில ஆராய்ச்சிகள் செய்ய முற்பட்டு நல்ல கட்டுரைகளை வெளியிட்டார். ரத்தத்தில் காணப்படும் எதிர்வினைப் பொருள்கள் (Antibody) குறித்து இவர் தொடர் ஆராய்ச்சிகள் செய்து கொண்டே இருந்தார். பால் வினை நோயைக் கண்டறியும் சில சோதனைகளுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தார். ‘போலியோ’ நோய் குறித்து இவர் மேற்கண்ட தீவிர ஆராய்ச்சியின் முடிவுகள் பின்னாளில் அந்நோயின் தன்மையைப் புரிந்து கொள்ள ஓர் அடித்தளம் வகுத்துக் கொடுத்து. ரத்தம் செலுத்தும் துறைக்கு இவர் புரிந்துள்ள மகத்தான சேவைக்காக இவருக்கு 1930-ல் “நோபல் பரிசு” அளிக்கப்பட்டு இவரது ஆராய்ச்சி கௌரவப்படுத்தப்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது இளைஞர்கள் செய்த பெருந்தியாகங்களைப் போன்றே எதிர்காலத்திலும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இளைஞர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு திட்டமே நாட்டு நலப்பணித்திட்டம் எனப்படும் என்.எஸ்.எஸ். நலப்பணித்திட்டம் எனப்படும் என்.எஸ்.எஸ். ஆகும். இந்தத் திட்டம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நூற்றாண்டில் மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி தலைமையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் டாக்டர் வி.கே. ஆர்.வி. ராவ் அவர்களால் 1969ம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் மிகப் பெரிய இளைஞர் அமைப்பு என்.எஸ்.எஸ். இந்தியா முழுவதும் 198 பல்கலைக் கழகங்கள், 9117 கல்லூரிகள், 7542 மேனிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் 26 லட்சம் மாணவத் தொண்டர்கள் சேவை புரிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 33 பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் சுமார் 3 லட்சம் மாணவத் தொண்டர்கள் உள்ளனர்.

“எனக்காக அல்ல, உங்களுக்காக” (Not me But you ) என்ற வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் போதித்து தலைமைத்துவம், நற்பண்பு தோழமையுணர்வு, சமூக சேவை போன்றவற்றை வளர்த்து, இளைஞர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் அந்தந்த மாநில அரசுகளோடு இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கார்கில் யுத்தம், சுனாமி பேரழிவு, குஜராத் பூகம்பம், நெல்லூர் சூறாவளி, கோவை குண்டு வெடிப்பு, குடந்தை சிறுவர் பள்ளி, திருச்சி மணப்பந்தல் தீ விபத்து.. என்று மக்களின் ஓலக் குரல் கேட்டும் போதெல்லாம் அவர்கள் தாங்களாக முன்வந்து கண்ணீரைத் துடைப்பார்கள். கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்ற கீதையின் வரிகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கும்பகோணம் மகாமகத்தின் போது பணியாற்றிய சிறப்பை தொலைக்காட்சியில் நாடே கண்குளிரக் கண்டது. போலி குடும்ப அட்டைகளை கண்டறிதல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், தேர்தல் வாக்குபதிவில் உதவி, விழாக்காலங்களில் போக்குவரத்தை நெறிப்படுத்துதல், கிராமப்புறங்களில் பாதைகளை செப்பனிடுதல், முதியோருக்கு எழுத்தறிவித்தல், அரசு, அசு சாரா மற்றும் தொண்டு அமைப்புகளோடு இணைந்து விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி, மதநல்லிணக்க ஊர்வலம் என்று சமூகத்தில் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் சமுதாயத்தின் உண்மையான உறவினர்கள் இந்த இளைஞர்கள். அரசும் அரசு சாரா அமைப்புகளும் பல நற்காரியங்களை ஆரம்பித்து வைத்தாலும் அதனை நீருற்றி உரமிட்டு வளர்ப்பவர்கள் இவர்களே.

மனித உணர்வுகளிலேயே மகத்தானதாக மதிக்கப்படுகிற உணர்வு சேவை உணர்வு. வேறு எந்தச்செயல்கள் மூலமாகவும் அடைய முடியாத அமைதியை சமுதாயத்திற்கு சேவை செய்வதன் மூலமாக அடைய முடியும். பெறுவதில் கிடைக்கும் இன்பத்தை விட கொடுப்பதில் கிடைக்கும் இன்பமே உயர்வானது. உன்னதமானது. சேவை மனப்பான்மையை பரப்ப முயன்றவர்கள், அதனைத் தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தவர்கள். அவர்கள் மறைந்துவிட்டாலும் வரலாற்றில் மக்களுக்குப் பாடமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாமும் அவ்வழி நடப்போம்.

தன்னம்பிக்கை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum