தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 13 of 25 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Sun Dec 08, 2013 4:42 pm

பகிர்வு நன்று. சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Dec 09, 2013 8:18 am

186 பெருவரை நாட! பெரியோர்கட் டீமை
கருநரைமேற் சூடேபோற் றோன்றும்; - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.

(பொ-ள்.) பெரு வரை நாட - பெரியமலைகளையுடைய நாடனே!. பெரியோர்கண் தீமைகருநரைமேல் சூடேபோல் தோன்றும் -மேன்மக்களிடத்தில் உண்டான குற்றம் சிறந்தவெள்ளையெருதின்மேல் இட்ட சூடுபோல் விளங்கித்தெரியும்; கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும்- அச் சிறந்த வெள்ளை எருதினைச் சூடிடுதலே யன்றிக்கொன்றாற்போன்ற துன்பங்களைச் செய்தாலும்,சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும் -கீழ்மக்களிடத்தில் ஒரு குற்றமாவது அவ்வாறுவிளங்கித் தெரியாமல் மறைந்துவிடும்.

(க-து.) மேன்மக்களிடம் சிறுகுற்றமும் உண்டாகாமலிருத்தல் நல்லது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Tue Dec 10, 2013 7:38 am

அற்புத தொடர் நாலடியார். மிக்க நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Dec 10, 2013 10:22 am

187 இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.

(பொ-ள்.) இசைந்த சிறுமைஇயல்பிலாதார்கண் பசைந்த துணையும் பரிவாம் -தமக்குப் பொருந்திய சிறுமைச் செயல்களையுடையபண்பிலாதாரிடத்தில் நேயங்கொண்ட அளவுந்துன்பமேயாம்; அசைந்த நகையேயும் வேண்டாதநல்லறிவினார்கண் - மாறிய செயல்களைவிளையாட்டாகவும் விரும்பாத சிறந்தஅறிஞர்களிடத்தில், பகையேயும் பாடு பெறும் - பகைகொள்ளுதலுங்கூட மாட்சிமைப்படும்.

(க-து.) பெரியோரிடத்துப் பகைசெய்தலினுஞ் சிறியோரிடத்து நட்புச் செய்தல்பெருந்தீங்கு பயக்கும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Dec 11, 2013 10:51 am

188 மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்(து)
ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம்
சலவருட் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.

(பொ-ள்.) மெல்லிய நல்லாருள்மென்மை - மென்றன்மையுடைய மகளிரிடம்மென்றன்மையாகவும், அது இறந்து ஒன்னாருள் கூற்றுஉட்கும் உட்கு உடைமை - பகைவரிடத்தில் அம்மென்றன்மை நீங்கிக் கூற்றுவனும் அஞ்சும்மிடுக்குடைமையாகவும், எல்லாம் சலவருள் சாலச்சலமே- முழுதும் பொய்ராயனாரிடத்து மிக்கபொய்ம்மையாகவும், நலவருள் நன்மை -மெய்யியல்புடைய மேலோரிடம் மெய்ம்மையாகவும்,வரம்பாய் விடல் - அவ்வவற்றின் எல்லையாய்நடந்துகொள்க.

(க-து.) மாந்தரின் பல்வேறுநிலைக்கு ஏற்பப் பல்வேறு வகையாக உலகத்தில்நடந்துகொள்ள வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Dec 12, 2013 11:56 am

189 கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தார்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.

(பொ-ள்.) கடுக்கி ஒருவன்கடுங்குறளை பேசி மயக்கி விடினும் - ஒருவன் முகஞ்சுளித்துப் பிறரைப்பற்றிக் கொடிய கோளுரை கூறித்தம்மை மயக்கினாலும், மனப் பிரிப்பு ஒன்றுஇன்றித் துளக்கம் இலாதவர் - அப் பிறர்பால்மனவேறுபாடு சிறிதுமின்றி முற்கொண்டகருத்துறுதியினின்று அசைதலில்லாதவரே, தூயமனத்தார் விளக்கினுள் ஒண் சுடர் போன்றுவிளக்கினில் எரியும் ஒள்ளியதீப்பிழம்புபோன்று அழுக்கற்ற நெஞ்சுடையவராவர்.

(க-து.) பிறர் சொல்லுங்கோளுரைகட்குச் செவிகொடாமை பெருந்தன்மையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Thu Dec 12, 2013 1:51 pm

பிறர் சொல்லுங்கோளுரைகட்குச் செவிகொடாமை பெருந்தன்மையாகும்
 எற்றுக்கொள்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 1:42 pm

190 முற்றுற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்; -அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.

(பொ-ள்.) முன் துற்றும் துற்றினைநாளும் அறம் செய்து பின் துற்றுத் துற்றுவர்சான்றவர் - முதலில் உண்ண எடுக்குங் கவளத்தைநாடோறும் பிறர்க்கு உதவி செய்து அடுத்தகளவத்தைப் பெரியோர் உண்ணுவர்; அத்துற்று-பிறர்க்கு உதவிசெய்த அந்தக் கவளம், முக்குற்றம் நீக்கி முடியுமளவெல்லாம் துக்கத்துள்நீக்கிவிடும் - அப் பெரியோருடைய காம வெகுளிமயக்கமென்னும் மூன்று குற்றங்களையுங் கெடுத்துப்பிறவி தீருங் கால முழுமையும் அவரைத்துன்பத்தினின்று நீக்கிவிடும்.

(க-து.) முதலில் பிறரை உண்பித்துப்பின்பு தாம் உண்டு துயர் தீர்தலேபெருந்தன்மையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 10:54 am

பொருட்பால்
20. தாளாண்மை
[முயற்சியுடைமை உணர்த்துவது.]

191 கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந்
தாளாளர்க் குண்டோ தவறு.

(பொ-ள்.) கோள் ஆற்றக்கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல் -நீர்கொள்ளுதலை நிரம்பக் கொள்ளாத ஏரியின்கீழுள்ள பயிரைப்போல், கேள் ஈவது உண்டு கிளைகளோதுஞ்சுப - தமக்கு உறவினர் கொடுப்பதை உண்டுசுற்றங்கள் சோம்பிக் கிடந்து பின் அவர்வறுமைப்பட்டபோது தாமும் வருந்தியிறப்பர்; வாள்ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க்குஉண்டோ தவறு - வாட்கூத்து ஆடுகின்ற கூத்துப்பெண்டிருடைய கண்களைப்போல் உழலும்முயற்சியுடையார்க்கு இப் பிழைபட்ட வாழ்வுஉண்டோ?

(க-து.) ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில்முயற்சியுடையரா யிருக்க வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Dec 15, 2013 9:15 am

192 ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.

(பொ-ள்.) ஆடு கோடு ஆகி அதரிடைநின்றதும் காழ் கொண்ட கண்ணே களிறு அணைக்கும்கந்து ஆகும். துவள்கின்ற இளங்கொம்பாகிவழியிடையே நின்ற சிறு மரமும் உள்வயிரங் கொண்டுமுற்றிய காலத்தில் ஆண் யானைகளைக் கட்டுதற்குரியகட்டுத்தறியாக உதவும்; வாழ்தலும் அன்ன தகைத்தேஒருவன் தாழ்வின்றித் தன்னைச் செயின் - ஒருவன்முயற்சியால் தன்னை ஆற்றலிற் குறைவில்லாமற்செய்து கொள்ளுவானாயின் அவன் தனது வாழ்க்கையிற்பெருமை கொள்ளுதலும் அது போன்ற தன்மையதேயாம்.

(க-து.) எளிய நிலையிலுள்ளோரும்முயற்சியால் தம்மை ஆற்றலுடையவராகச்செய்துகொள்ளல்வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Dec 16, 2013 8:17 am

193 உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியுந் தின்னும்; - அறிவினால்
காற்றொழில் என்று கருதற்க கையினால்
மேற்றொழிலும் ஆங்கே மிகும்.

(பொ-ள்.) உறுபுலி ஊன்இரைஇன்றிஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும் - வலிமைமிக்க புலி தனக்கேற்ற இறைச்சியுணவில்லாமல்ஒரோவொருகால் சிறிய தவளையைப் பிடித்துந்தின்னும்; அறிவினால் கால் தொழில் என்று கருதற்க- ஆதலால், தமக்குரிய அறிவு மேம்பாட்டினால்,எதனையும் காலால் செய்தற்குரிய சிறுதொழிலென்றுயாரும் கருதாதிருப்பராக; கையினால்மேல் தொழிலும் ஆங்கே மிகும் - அச்சிறுதொழிலையும் பொருள் செய்தொழுகும்முயற்சியினால் உயர்ந்த தொழிலும் அதிலிருந்தேபெருகிவரும்.

(க-து.) சிறு தொழிலையும்முயற்சியோடு திருத்தமாகச் செய்ய வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Dec 17, 2013 7:42 am

194 இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று.

(பொ-ள்.) கண்டல் திரை அலைக்கும்கானல் தண்சேர்ப்ப - தாழையை அலைகள்சிதைக்கின்ற கடற்கரைச் சோலையையுடையகுளிர்ந்த துறைவனே!, இசையாது எனினும் - மேற்கொண்டகாரியம் ஊழ்வினையினால் எளிதிற் கூடிவராதாயினும், இயற்றி ஓர் ஆற்றால் - அவ்வூழ்இப்பிறவியில் வழி செய்துவிட்ட ஒரு வகையினால்,அசையாது நிற்பதாம் ஆண்மை - தளராமல் நின்றுமுயல்வதே ஆடவர்க்குரிய ஆண்மைப் பண்பாகும்;இசையுங்கால் பெண்டிரும் வாழாரோ மற்று - மற்று, ஊழ்கூட்டுதலால் ஒன்று எளிதிற் கூடி வருமாயின்பெண்மக்களும் அதனை முடித்துப் பெருமையடையாரோ!

(க-து.) ஊழ் கூட்டாதவிடத்தும்,அரிய காரியங்களைச்செய்தலில்தளர்வின்றியிருந்து முயலும் ஆண்மையேதாளாண்மையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 7:21 am

195 நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை; - தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.

(பொ-ள்.) நல்ல குலமென்றும் தீயகுலமென்றும் சொல் அளவு அல்லால் பொருள் இல்லை -நல்ல குலமென்றும் கெட்ட குலமென்றும் உலகத்திற்பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறுஞ்சொல்லளவே யல்லால் அதற்குப் பொருளில்லை.தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை என்று இவற்றான் ஆகும் குலம் - குலம்என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினையுடையசெல்வத்தால் மட்டுமன்று, தவம், கல்வி, முயற்சி எனஇவை தம்மாலெல்லாம் உண்டாவதாகும்.

(க-து.) தவம் கல்வி ஆள்வினைமுதலியவற்றில் முயற்சியுடையாரே பிறரால்நேயங்கொள்ளுதற்குரிய உயர்குலத்தோராவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Dec 19, 2013 9:55 am

196 ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.

(பொ-ள்.) ஆற்றுந் துணையும்அறிவினை உள் அடக்கி ஊக்கம் உரையார்உணர்வுடையார் - நுண்ணுணர் வுடையோர் ஓர்அருஞ்செயலைச் செய்து முடிக்குமளவும் தமதுஅறிவின்றிறத்தை மனத்தில் அடக்கித் தம்முயற்சிகளைப் பிறர்க்குச் சொல்லார்; ஊக்கம்உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார் - மேலும்அவர், தமது ஆற்றலைத் தம்கண் முதலியஉறுப்புக்களாற் பிறர் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுதற்கேற்ற அறிவு விளக்க முடையவர்;குறிப்பின் கீழ்ப்பட்டது உலகு - உலகம் அத்தகையதிறமையான தாளாண்மை யுடையாரின் குறிப்பின்வழிப்பட்டது.

(க-து.) முயற்சிகள்உள்ளுணர்வோடும் அறிவு விளக்கத்தோடும்நடைபெறுதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Dec 20, 2013 7:44 am

197 சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.

(பொ-ள்.) சிதலை தினப்பட்டஆலமரத்தை - கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை,மதலையாய் அதன் வீழ் ஊன்றியாங்கு - அதன் விழுதுஅதனைத் தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றிநின்றாற்போல, குதலைமை தந்தை கண் தோன்றில் -தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால்,தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் - அவன்பெற்றெடுத்த புதல்வன் பாதுகாக்க அது நீங்கும்.

(க-து.) தந்தையின் தளர்ச்சியைக்காத்தற்கு மைந்தன் முயற்சியுடையனா யிருத்தல்வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 7:45 am

198 ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை யவர்.

(பொ-ள்.) யானை வரிமுகம்பண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் அரிமாமதுகையவர் - யானையினறு புள்ளிகளையுடைய முகத்தைப்புண்படுத்தவல்ல கூரிய நகங்கள் பொருந்திய வலியகால்களையுடைய சிங்கத்தைப் போன்ற முயற்சிவலிமை யுடையோர், ஈனமாய் இல் இருந்து இன்றிவிளியினும் - நிலை குறைவாகி வீட்டில் அலுவலில்லாதுதங்கி வருவாயின்றி இறக்க நேரினும், மானம்தலைவருவ செய்பவோ - குற்றம் உண்டாகக்கூடியசெயல்களைச் செய்வார்களோ?

(க-து.) முயற்சியுடையார்க்குஎந்நிலையிலும் பழிப்புக்குரிய தீச்செயல்கள்செய்யும்படி நேராது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Dec 22, 2013 7:49 am

199தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.
(பொ-ள்.) தீம் கரும்பு ஈன்றதிரள் கால்உளை அலரி தேன் கமழ் நாற்றம்இழந்தாங்கு - இனிப்பாகிய கருப்பங் கழி தோற்றியதிரண்ட தாளையுடைய பிடரிமயிர் போன்ற மலர்தேனோடுகூடி மணக்கும் நறுமணத்தை இழந்தாற்போல்,பெயர் பொறிக்கும் பேராண்மை இல்லாக்கடை - தன்புகழைச் சான்றோர் எழுதி நிலைநிறுத்துதற்குரியஅரிய முயற்சித்திறம் இல்லாவிட்டால், ஓங்கும்உயர்குடியுட் பிறப்பின் என் ஆம் - மிக்கஉயர்குடியுட் பிறத்தலால். மட்டும் யாது பயனுண்டு?
(க-து.) அரிய முயற்சித்திறம்இல்லாதபோது உயர் குடிப் பிறப்பும் இனியதோற்றமும் இருத்தலால் மட்டும் பயனில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Sun Dec 22, 2013 9:46 am

அண்ணா,

உங்கள் பதிவுகளை பார்த்துத்தான் வியர்ந்து இருக்கேன். ஆனால் இப்ப உங்கள் கையேப்பம் பகுதியும் அசத்தல் அண்ணா. மேலே அழகான படத்துடன் கீழே படிக்க வந்தமைக்கு நன்றியை சொன்னேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 22, 2013 8:04 pm

தொடர் பதிவுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Dec 23, 2013 9:37 am

200 பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.

(பொ-ள்.) பெருமுத்தரையர் பெரிதுஉவந்து ஈயும் கருனைச் சோறு ஆர்வர் கயவர் -முயற்சியில்லாத கீழ் மக்கள், பெருமுத்தரையர்என்பார் மிக மகிழ்ந்து அளிக்குங் கறிகளோடு கூடியஉணவை உண்டு வாழ்நாட் கழிப்பர்; கருனையைப் பேரும்அறியார் நனிவிரும்பும் - கறிகளைப் பேர்தானும்அறியாத முயற்சியாளர்கள் மிகவும் விரும்புகின்ற,தாளாண்மை நீரும் - தம் முயற்சியுடைமையாற்கிடைத்த நீருணவும், அமிழ்தாய் விடும் -அவர்க்கத் தேவருணவாக மாறி மெய்யின்பந் தருதல்உறுதி.

(க-து.) தன்முயற்சியால் உண்டானதுநீருணவேயாயினும், அஃது அமிழ்த ஆற்றல் உடையதாய்நலம் பயக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Dec 24, 2013 10:54 am

பொருட்பால்
21. சுற்றந்தழால்
[உறவினர் நீங்கிவிடாதபடி அவரைத் தழுவியொழுகுதல்.]


201 வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்
.

(பொ-ள்.) வயாவும் வருத்தமும்ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகன் கண்டு தாய்மறந்தாங்கு - கருவுற்றபோது தோன்றிய வேட்கைத்துன்பமும், இடையிற் கரு சுமந்து வந்த வருத்தமும்,கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும்தாய் தன் தொடையில் மகனைக் கண்டுமறந்துவிட்டாற்போல, அசா தான் உற்ற வருத்தம் -முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்ததுன்பம், உசா தன் கேளிரைக் காணக் கெடும் -ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக்கண்டவளவில் நீங்கும்.

(க-து.) முயற்சிகளினிடையேதோன்றுந் தளர்ச்சியை நீக்குதற்குஅவ்வப்போதும் ஆராய்ந்து சூழ்தற்குரியசுற்றத்தார் இன்றியமையாது வேண்டியிருத்தலின்,அவரை எஞ்ஞான்றும் தழுவி யொழுகுதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Dec 25, 2013 9:04 am

202 அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.

(பொ-ள்.) அழல் மண்டு போழ்தின்அடைந்தவர் கட்கெல்லாம் நிழல்மரம் போல் -வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர்கட் கெல்லாம் ஒப்ப உதவும் நிழல்மரத்தைப்போல், நேர் ஒப்பத் தாங்கி -வறுமையின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர் கட்கெல்லாம் சமம் பொருந்தக்காத்து, பழுமரம்போல் பல்லார் பயன் துயப்ப -பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள்உதவுதல்போல்1 பலரும் பயன் நுகரப் பொருள்உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக்கடன் - தான் மேன்மேலும் பொருளீட்டும்முயற்சியால் உழைப்புடையனாய் வாழ்வதே உயர்ந்ததாளாண்மை மிக்க மகனுக்குக் கடமையாகும்.

(க-து.) மிக்க உழைபெடுத்துச்சுற்றந் தழுவி வாழ்தலே சிறந்த ஆண்மகனதுகடமையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Dec 26, 2013 7:55 am

203 அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பெரியோர்;- அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.

(பொ-ள்.) அடுக்கல் மலை நாட -ஒன்றன் மேலொன்றடுக்கிய மலைகளையுடைய நாடனே,தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர் -தம்மைச் சேர்ந்த சுற்றத்தவரை ஆதரியோம் என்றுகூறார் பெரியோர், அடுத்தடுத்து வன்காய் பல பலகாய்ப்பினும் இல்லையே தன் காய்பொறுக்கலாக்கொம்பு - மேலுமேலும் வலிமைமிக்ககாய்கள் பலப்பல காய்த்தாலும் தன்காய்களைத்தாங்கிக் கொள்ளாத கிளைகள் உலகத்தில்இல்லையே.

(க-து.) தம்மைச் சேர்ந்தவரைஆதரித்து நிற்றலே பெருமையும் இயல்புமாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Dec 27, 2013 11:31 am

204 உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;- நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.

(பொ-ள்.) உலகு அறியத் தீரக்கலப்பினும் - யாவரும். அறியும்படி முழுதும் இணங்கிநேசங் கொண்டாலும், நில்லா சில பகல் ஆம்சிற்றினத்தார் கேண்மை - கீழோர் தொடர்புகள்நிலைபெறுதலில்லாதனவாய்ச் சில நாட்களேநிற்கும் : ஒற்கம் இலாளர் தொடர்பு - பிறரைத்தாங்குதலில் தளர்ச்சியில்லாதவரது தொடர்பு,நிலைதிரியா நிற்கும் பெரியோர்நெறியடையநின்றனைத்து - இயல்பாகவே தமதுபெருந்தன்மையான நிலையில் திரியாமல் நிற்கும்பெரியோர் தமக்கொரு வீடுபேற்றுநெறி வந்துபொருந்த அதன்கண் அழுந்தநின்றொழுகினாற்போன்ற தன்மையுடையது.

(க-து.) சுற்றத்தாரைத்தாங்குவோர் தொடர்பே உலகுக்கு இனிதாவது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Sat Dec 28, 2013 7:31 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 13 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 25 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum