தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Dec 28, 2013 9:46 am

205 இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார்.

பொ-ள்.) இன்னர் - இவர்இத்தகையவர், இனையர் - இவர் இவ்வளவினர்; எமர் -இவர் எம்மைச் சேர்ந்தவர், பிறர் - இவர்பிறரைச் சேர்ந்தவர், என்னுஞ் சொல் என்னும்இலராம் இயல்பினால் - என்னுஞ் சொல் சிறிதும்இலராகிய தன்மையினால், துன்னித் தொலைமக்கள்துன்பம் தீர்ப்பாரே - நிலையிழந்த மக்களின்இன்னலைத் தாமே அவரையடைந்து தீர்த்து வைப்பவரே,யார்மாட்டும் தலை மக்களாகற்பாலார் -அனைவரிடத்தும் மேன்மக்களாகக் கருதப்படும்இயல்புடையவராவர்.

(க-து.) அனைவர்க்கும் ஒப்பஇடுக்கண் தீர்த்து ஆதரிப்பவரே அனைவர்க்குந்தலைவராதற்குரியர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Dec 29, 2013 9:11 am

206 பொற்காலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போற் கிளைஞர்மாட்டு
எக்கலத் தானு மினிது.

(பொ-ள்.)பொற்காலத்துப் பெய்தபுலிஉகிர் வான் புழுக்கல் - பொன்னாலானஉண்கலத்தில் இட்டுவைத்த புலியின்நகத்தைப்போன்ற சிறந்த சோற்றை, அக்காரம்பாலொடு - சர்க்கரையோடும் பாலோடும், அமரார்கைத்து - மனம் பொருந்தாதவரிடத்திலிருந்து,உண்டலின் - உண்ணுதலைவிட, உப்பு இலிப்புற்கை -உப்பும் இல்லாததான புல்லரிசிக்கஞ்சியை,உயிர்போல் கிளைஞர்மாட்டு - உயிர்போன்றசுற்றத்தாரிடமிருந்து, எக் கலத்தானும் இனிது -எந்தக் கலத்தினாலும் உண்ணுதல் நன்று.

(க-து.) உள்ளன்புடைய சுற்றத்தார்எளியவராயினும் அவரே இன்பந் தருபவராவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Dec 31, 2013 9:19 am

207 நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;- கேளாய்,
அபராணப் போழ்கின் அடகிடுவ ரேனுந்
தமராயார் மாட்டே இனிது.

(பொ-ள்.) நாள்வாய்ப் பெறினும்தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெம் கருனைவேம்பாகும் - காலத்தில் பெற்றாலும் தம்உறவாகாதவர் வீட்டின் ஒப்புரவோடு கூடிய சூடானகறியுணவு வேப்பங்காயை ஒத்தது; கேளாய் - நீ கேள்;அபராணப் போழ்தின் அடகு இடுவரேனும் தமராயார்மாட்டே இனிது - பிற்பகற்போழ்தில் கீரையுணவுஇடுவராயினும் உறவினரானோரிடமேஇனிமையாயிருக்கும்.

(க-து.) சுற்றத்தா ருதவியே இன்பந்தரும்
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Tue Dec 31, 2013 11:00 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Tue Dec 31, 2013 11:54 am

மிக அருமையான தொடர்... ஆழமான கருத்துக்கள்
மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jan 01, 2014 8:07 am

208 முட்டிகை போல முனியாது வைகலுங்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டா ரெனப்படு வார்.

(பொ-ள்.) முட்டிகை போல முனியாதுவைகலும் கொட்டியுண்பாரும் குறடுபோல் கைவிடுவர் -கம்மாளரின் சம்மட்டிபோல் நாடோறும்வெறுத்தலில்லாமல் தம்மை இடித்திடித்து வயிறுபிழைப்பாரும் நேரத்திற் குறடு போற் கைவிட்டுவிடுவர்; சுட்டுக்கோல்போல எரியும் புகுவர் நட்டாரெனப்படுவார் - ஆனால் உறவானவரெனப் படுவோர்அங்ஙனம் நேரத்திற் கைவிடாமல் உலையாணிக்கோல்போல் தம்முடன் எரியும் புகுந்து உடன்துன்புறுவர்.

(க-து.) உறவினர் உற்ற நேரத்திற்கைவிடாதவராதலின் அவரைத் தாமும் என்றுந் தழுவிநிற்றல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Wed Jan 01, 2014 11:05 am

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Amarkk10
அருமையான பகிர்வு. நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jan 02, 2014 8:03 am

209 நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ! - இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.

(பொ-ள்.) நறுமலர்த் தண் கோதாய்- சிறந்த மலர்களாற் றொடுக்கப்பட்ட குளிர்ந்தமாலையை யணிந்த மாதே, நட்டார்க்கு நட்டார்மறுமையும் செய்வதொன்று உண்டோ - உறவினர்க்குஉறவினர் மறுமையிலும் செய்வதொரு நன்மை உண்டோ?;இறுமளவும் இன்புறுவது இன்புற் றெழீஇ அவரோடு துன்புறுவதுன்புறாக்கால் - இறக்கும் வரையிலும் அவ்வுறவினர்இன்புறுவன தாமும் இன்புற்று எழுச்சியோடிருந்துஅவரோடு துன்புறுவன துன்புறாவிடின்.

(க-து.) சுற்றந் தழுவுதலால் துன்பம்வரினும் அதுவே செய்யத்தக்கது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Thu Jan 02, 2014 8:04 pm

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 8:19 am

210 விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து.

(பொ-ள்.) விருப்பு இலார் இல்லத்துவேறு இருந்து உண்ணும் வெருகு கண் வெம் கருனை வேம்புஆகும் - அன்பில்லாதவர் வீட்டில் தனியே இருந்துஉண்ணுகின்ற, பூனைக் கண்போன்ற ஒளிமிக்க சூடானபொறிக்கறியுணவும் வேப்பங் காய்போல வெறுப்புத்தரும்; விருப்புடைத் தன் போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போடு இயைந்த அமிழ்து -அன்புடைய தன்னொத்தார் வீட்டில் உண்ணுகின்ற விளங்கும் நீரையுடைய குளிர்ந்த புல்லரிசிக்கஞ்சியும் உடம்போடு பொருந்திய அமிழ்தமாகும்.

(க-து.) சுற்றத்தாரிற் சிலர் எளியநிலையினரேனும் அவர் அன்புடையவராகலின் அவர்தழுவுதற்குரியர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Fri Jan 03, 2014 7:28 pm

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 8:40 am

பொருட்பால்
22. நட்பாராய்தல்
நட்புச் செய்தற்குரியாரை அவர் கல்வியறிவு ஒழுக்க முதலியவற்றால் ஆராய்ந்து கொள்ளுதல்
.

211 கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்
குருத்திற் கரும்புதின் றற்றே;- குருத்திற்
கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுர மிலாளர் தொடர்பு.

(பொ-ள்.) கருத்துணர்ந்துகற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் குருத்தின்கரும்பு தின்றற்று - கல்வியின் பயன் தெரிந்துஉரிய நூல்களைக் கற்றுத் தெளிந்த மேலோருடையநட்பு எஞ்ஞான்றும் குருத்திலிருந்து கரும்புதின்றாற் போன்றது; குருத்திற்கு எதிர்செலத்தின்றன்ன தகைத்து என்றும் மதுரம் இலாளர்தொடர்பு - கல்வியின் இனிமையில்லாத கீழோருடையதொடர்பு என்றும் கரும்பை அதன் குருத்திற்கு நேரேசெல்லும்படி அடியிலிருந்து தின்று சென்றாற்போன்றதன்மையுடையது.1

(க-து.) கற்றார் நட்பு மேன்மேலும்இன்பம் தந்து செல்லும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 7:46 am

212 இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது, - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று.

(பொ-ள்.) பொன்கேழ் புனல் ஒழுகப்புள் இரியும் பூ குன்ற நாட - பொன்னின் நிறம்அருவியிற் பொருந்தி வருதலால் பறவைகள் அஞ்சிநீங்குகின்ற பொலிவினையுடைய மலைநாடனே,இல்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்நல்புடை கொண்டமையல்லது மனம் அறியப்பட்டதொன்றன்று - குடிப்பிறப்புக் கருதி இவர் இடையில்வேறு படார் என்பதொரு சிறந்த வகையை உட்கொண்டுநட்புச் செய்ததல்லது மனம் அறிந்த உண்மைவேறொன்றனால் அன்று.

(க-து.) நட்பாராய்தற்குக்குடிப்ப்றிப்பொன்றும் சிறந்த காரணமாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 8:02 am

213 யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.

(பொ-ள்.) யானையனைவர் நண்பு ஒரீஇ- யானையை ஒத்த இயல்புடையாரது நேயத்தை நீக்கி,நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் -நாயை ஒத்த இயல்புடையாரது நேயத்தைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும்; ஏனென்றால், யானைஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் - யானைபலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையேகுற்றங்கண்டு கொல்லும்; எறிந்த வேல் மெய்யதாவால் குழைக்கும் நாய் - ஆனால் நாயோ தன்னைவளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல்தன் உடம்பில் உருவி நிற்க அன்பினால் அவன்பால்வால் குழைத்து நிற்கும்.

(க-து.) பிழை பாராட்டாதஇயல்புடையாரை அறிந்து நட்புச் செய்தல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jan 07, 2014 7:40 am

214 பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்; பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ, தந்நெஞ்சத்
தியாத்தாரோ டியாத்த தொடர்பு.

(பொ-ள்.) பலநாளும்பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும்ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் அருகிலிருந்துபழகினாராயினும் மனத்திற் சில நாளாயினும்நட்புப் பொருந்தாதவரோடு தெரிந்தோர்சேரமாட்டார்; பல நாளும் நீத்தார் எனக் கைவிடல்உண்டோ தம் நெஞ்சத்து யாத்தரோடு யாத்ததொடர்பு - தமது நெஞ்சத்தில் நட்புப்பொருந்தியவரோடு பிணிப்புண்ட தொடர்பு அவர்பலநாட்கள் அருகில்லாமல் நீங்கினாரென்றுகைவிடப் படுதலுண்டோ?

(க-து.) நெஞ்சுப் பிணிப்புஉடையாரோடு நட்புச் செய்தல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jan 08, 2014 8:08 am

215 கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;- தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.

(பொ-ள்.) கோட்டுப்பூப் போலமலர்ந்து பின் கூம்பாது வேட்டதே வேட்டதாம்நட்பாட்சி - மரங்களிற் பூக்கும் பூக்கள் முதலில்மலர்ந்து பின் தாம் உதிரும் வரையிற்குவியாமைபோலத் தலைநாளில் உள்ளம்மலர்ந்துபின் தமது முடிவு வரையிற் சுருங்காமல் விரும்பியதுவிரும்பியதாயிருப்பதே நட்புடைமையாம்;தோட்டகயப் பூப்போல் முன் மலர்ந்து பின்கூம்புவாரை - அவ்வாறின்றி அகழ்ந்தெடுத்தநீர்நிலைகளிற் பூக்கும் இதழ்மிக்க பூக்கள்போல் தலைநாளில் மகிழ்பூத்து நாளடைவில்மனஞ்சுருங்கும் இயல்பினரை, நயப்பாரும் நட்பாரும்இல் - விரும்புவாரும் நேசிப்பாரும் உலகில் இல்லை.

(க-து.) கூடிப் பின் பிரியாஇயல்பினரே நேசித்தற்குரியர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jan 09, 2014 7:48 am

216 கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை
இடையாயார் தெங்கி னனையர்;- தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.

(பொ-ள்.) நட்பில் -நேயமுறைமையில், கடையாயார் கமுகு அனையர் -கீழோர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்;இடையாயார் தெங்கு அனையர் - இடைத்தரமானவர்தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்; ஏனைத்தலையாயார் தொன்மையுடையார் தொடர்பு - ஏனைஉயர்ந்தோரெனப்படும் பழைமை கருதுவாரது நட்பு, எண்அரு பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே - மதிப்புமிக்க பனை மரத்தின் இயல்புபோன்று நேயம்ஊன்றிய போது ஊன்றியதேயாம்.

(க-து.) மேன்மேல் உதவிகளில்லாதபோதும் நட்புக் குறையாதவரிடமே நேயங்கொள்ளுதல்வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Thu Jan 09, 2014 11:06 am

நன்றி!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jan 10, 2014 8:25 am

217 கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் ; - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.

(பொ-ள்.) கழுநீருள் கார் அடகேனும்ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் -கழுநீருட் பெய்து சமைத்த கறுத்த இலைக்கறியேனும்ஒருவன் அன்புடையதாகப் பெற்றால் அஃது அமிழ்தமாய்நன்மை தரும் ; விழுமிய குய்த் துவை ஆர்வெண்சோறேயாயினும் மேவாதார் கைத்து உண்டல்காஞ்சிரங்காய் - சிறந்த தாளிப்புப் பொருந்தியதுவைத்த கறிகளோடு கூடிய வெண்ணிறமான நெல்லரிசியுணவேயாயினும் அன்பு பொருந்தாதவர்கையிலுள்ளதாய் உண்ணுதல் எட்டிக் காய்போல்வெறுப்புத் தருவதாகும்.

(க-து.) உள்ளன்போடு உதவுவோரிடமே நட்புச் செய்தல்வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Fri Jan 10, 2014 9:55 am

நன்றி! நன்றி! புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Jan 11, 2014 8:18 am

218 நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு.

(பொ-ள்.) நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால்துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின்சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிகநெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவிசெய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?;சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும்செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு -கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்தஇயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும்அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும்.

(க-து.) உதவும் இயல்பினரேநட்புச்செய்தற்குரியர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Sat Jan 11, 2014 8:34 am

அருமை அருமை அண்ணா.
நன்றி தொடர் பகிர்வுக்கு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Sat Jan 11, 2014 2:47 pm

நன்றி !
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 12, 2014 7:42 am

தொடர் பதிவுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jan 12, 2014 9:18 am

219 தெளிவிலார் நட்பின் பகைநன்று ; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
புகழ்லின் வைதலே நன்று.

(பொ-ள்.) தெளிவிலார் நட்பின்பகை நன்று - நம்பத் தகாதவரது நட்பினும் அவரது பகைநலந்தரும் ; சாதல் விளியா அருநோயின் நன்று -தீராத கொடிய நோயினும் இறத்தல் நலமாகும் ; அளியஇகழ்தலின்கோறல் இனிது - பிறரை நெஞ்சுபுண்ணாகும்படி இகழ்தலினும் அவரைக் கொல்லுதல்நல்லது ; இல்ல புகழ்தலின் வைதலே நன்று - ஒருவரிடம்இல்லாதன கூறிப் புகழ்தலினும் அவரைப் பழித்தலேநன்மையாம்.

(க-து.) நம்பிக்கையில்லாதவரிடம் நட்புச் செய்தல் ஆகாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 14 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum