தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 4 of 25 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jul 01, 2013 9:23 am


50 உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.

(பொ-ள்.) உயிர் போயார் வெண்தலை - உயிர் போனவரது தசை நீங்கிய வெண்ணிறமான எலும்புத் தலை, உட்கச் சிரித்து - கண்டார் அஞ்சும்படி நகைத்து, செம்மாப்பவரைச் செயிர் தீர்க்கும் - இவ்வுடம்பின் காரணமாக இன்புறுகின்றவரை அக் குற்றத்தினின்றும் விடுவிக்கக் கூடும், செயிர் தீர்ந்தார் - இதற்குமுன் இயல்பாகவே அப்பிழை நீங்கினவர், கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் - தாமே அறிந்து இத்தகையது இவ்வுடம்பின் தன்மை என்னுங் கருத்தினால், தம்மை ஓர் பண்டத்துள் வைப்பது இலர் - தமதுடம்பை ஒரு பொருளில் வைத்து மதிப்பதிலர்.

(க-து.) உடம்பின் தூயதல்லாத தன்மையை நினைத்தால், அதனை இன்புறும் பற்றுள்ளம் நீங்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jul 02, 2013 7:29 am

அறத்துப்பால்
6. துறவு

(உலகத்தின் நிலையாமை உணர்ந்து யான் எனது என்னும் இருவகைப் பற்றும் விட்டு மெய்யுணர்வில் ஒழுகுதல், உடம்பின்மேல் உள்ள பற்று, யான் என்னும் அகப்பற்று. செல்வம் முதலியவற்றின்மேல் உள்ள பற்று, எனது என்னும் புறப்பற்று. துறத்தல் - இவ் விருவகைப் பற்றுகளையும் விடுதல்.)
51 விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
(பொ-ள்.) விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு - ஓரிடத்தில் விளக்கொளி வர அங்கே இருந்த இருட்டு நீங்கினாற்போல, ஒருவன் தவத்தின் முன் நில்லாது பாவம் - ஒருவனது தவமுயற்சியின் முன் அவன் அதற்குமுன் செய்ததீவினை நில்லாது, விளக்கு நெய் தேய்விடத்து - விளக்கின் நெய் குறையுமிடத்தில், சென்று இருள் பாய்ந்தாங்கு - இருட்டு மீண்டும் போய்ப் பரவினாற்போல, நல்வினை தீர்விடத்து நிற்கும் தீது - நல்வினை நீங்குமிடத்தில் தீவினை சென்று சூழ்ந்து நிற்கும்.

(க-து.) இடைவிடாமல் தவஞ் செய்யவேண்டும்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jul 03, 2013 7:19 am

52 நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.

(பொ-ள்.) நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நிலையாமையியல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து, தலையாயார் - சிறந்தவர்கள், தம் கருமம் செய்வார் - தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள், தொலைவு இல்லா சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் - கற்று முடிதலில்லாத இலக்கண நூலும் கோள் நூலும் என்று இவை போல்வன கூவிக்கொண்டிருக்கும் பித்தரைவிட, பேதையார் இல் - அறிவிலாதவர் பிறர் இல்லை.

(க-து.) இலக்கணம் முதலிய கருவி நூல்களையே என்றுங் கற்றுக்கொண்டிராமல் நிலையாமை முதலியன உணர்ந்து உடனே தவஞ்செய்ய வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jul 04, 2013 7:27 am

53 இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம் உய்யக் கொண்டு.

(பொ-ள்.) இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலி என்று இவையெல்லாம் - இல்வாழ்வு, இளமை, எழுச்சி, அழகு, உயர்சொல், பொருள், வலிமை என்று இப்பேறுகளெல்லாம், மெல்ல நிலையாமை கண்டு - மெல்ல மெல்ல நிலையாமற் போதலை அறிந்து, தலையாயார் - பெரியோர்கள், தாம் உய்யக்கொண்டு - தாம் உய்யுங் கருத்துக்கொண்டு, நெடியார் துறப்பர் - காலம் நீட்டியாதவராய் உடனே இருவகைப் பற்றுந் துறப்பர்.

(க-து.) நிலையாமை உணர்ந்து துறவுள்ளங் கொள்வோரே துன்பங்களினின்றும் பிழைப்பவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jul 05, 2013 8:48 am

[b class="pno" style="font-size: 9pt; line-height: 20pt; font-weight: bold; color: rgb(187, 0, 204) !important;"]54[/b][b class="poem" style="font-size: 9pt; color: rgb(187, 0, 0); line-height: 20pt; font-weight: bold;"]துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா
றடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.[/b]
(பொ-ள்.) ஏழையார் - அறிவிலார், துன்பம் பல நாள் உழந்தும் - பல நாட்கள் துன்பத்தால் வருந்தியும், ஒரு நாளை இன்பமே - சிறிதுபோழ்து நுகரும் ஒரு நாளைய இன்பத்தையே, காமுறுவர் - விரும்புவார் ; ஆன்று - கல்வி கேள்விகளால் நிறைந்து, அமைந்தார் - அதற்குத் தக்கபடி அடங்கி யொழுகும் பெரியோர், இன்பம் இடை தெரிந்து -இன்பம் அங்ஙனம் இடையே சிறிது உளதாதல் தெரிந்து - இன்னாமை நோக்கி - துன்பத்தின் மிகுதியை அறிந்து மனை ஆறு - இல் வாழ்க்கையின் வழியில், அடைவு - சார்ந்து நிற்பதை, ஒழிந்தார் - நீங்கினார்.
(க-து.) உலகத்திற் பல துன்பங்களினிடையிற் சிறிது இன்பமுண்டாதலின், அந் நிலை தெரிந்து தவம் முயலுதல் வேண்டும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Jul 06, 2013 8:23 am

55 கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.

(பொ-ள்.) கொன்னே கழிந்தன்று இளமையும் - இளமைப் பருவமும் வீணே கழிந்தது, இன்னே பிணியொடு மூப்பும் வரும் - உடனே நோயோடு கிழத்தனமும் வரும், ஆல் - ஆதலால், துணிவு ஒன்றி என்னொடு சூழாது எழு நெஞ்சே - துணிதல் பொருந்தி என்னோடு ஆராயாமல் புலன்களின் வழியிற் செல்கின்ற நெஞ்சமே, போதியோ நல் நெறி சேர நமக்கு நல்வழி உண்டாக நீ என்னுடன் வருகின்றனையா ?

(க-து.) புலன்வழிச் செல்லுதலைத் தவிர்த்து மனத்தைஅறவழியிற் செலுத்துதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by மகா பிரபு Sat Jul 06, 2013 10:49 am

தொடர் பதிவு அருமை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jul 07, 2013 9:52 am


மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார். 56

மாட்சிமைப்பட்ட குணங்களும், பிள்ளைப் பேறும் மனைவியிடம் இல்லாவிட்டாலும், மணம் செய்து கொண்ட கணவன் அவளை விட்டுவிட முடியாது! எனவே திருமணம் என்பது ஒருவன் தானே மேற்கொண்ட துன்பம் ஆகும். ஆதலால்தான் மேலான ஒழுக்க நூல்களிலே உள்ள கருத்துக்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் 'திருமணம் செய்து கொள்ளாதீர்!' என்றனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jul 09, 2013 8:34 am

57 ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.

(பொ-ள்.) ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய - முயன்று தாம் மேற்கொண்ட நோன்புகள் உள்ளத்தில் தளர்வடையும்படி, தாக்க அருந் துன்பங்கள் தாம் தலைவந்தக்கால் - போக்குதற்குரிய துன்பங்கள் தம்மிடம் வந்தடைந்தால், நீக்கி நிறூஉம் உரவோரே - எப்படியானும் அத் துன்பங்களைப் போக்கித் தம் நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளும் வலியுடையோரே, நல்லொழுக்கம் காக்கும் திருவத்தவர். துறவொழுக்கத்தினைக் காத்துக் கொள்ளும் பேறுடையவராவர்.

(க-து.) இன்னல்களை எதிர்த்துத் தவம் முயலுதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Tue Jul 09, 2013 1:22 pm

நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jul 10, 2013 7:48 am

58 தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.

(பொ-ள்.) தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி - காரணமின்றித் தம்மைப் பிறர் இகழ்ந்தமையைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல், எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால் - எம் போல்வாரை இங்ஙனம் இகழ்ந்த தீவினையின் பயனால் , உம்மை - மறுமையில், எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று - ஒரு கால் அழலிடமான நரகத்தில் அவர் வீழ்வரோ என்று, பரிவதும் சான்றோர் கடன் - இரங்குவதும் தவம் நிறைந்தவரது கடமையாகும்.

(க-து.) தவமுயற்சியில் நிற்பவர், தம்மை இகழ்பவர் பால் பொறுமையும் இரக்கமுங் கொள்ளவேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jul 11, 2013 8:00 am

59 மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும

(பொ-ள்.) மெய் வாய் கண் மூக்கு செவி எனப் பேர் பெற்ற - , ஐ வாய வேட்கை அவாவினை - ஐந்து வழிகளாகச் செல்லுதலையுடைய பற்றுள்ளத்தால் உண்டாகும் அவாவை , கலங்காமல் காத்து - தீயவழிகளில் நிலைமாறிச் செல்லாமல் பாதுகாத்து, கைவாய் உய்க்கும் ஆற்றலுடையான் - ஒழுக்கநெறியிற் செலுத்தும் வல்லமையுடையவனே, விலங்காது வீடு பெறும் - தவறாமல் வீடுபே றடைவான்.

(க-து.) ஐம்புல விருப்பங்களை ஒழுக்கநெறியிற் செலுத்தி உய்தல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jul 12, 2013 9:29 am

60 துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.

(பொ-ள்.) துன்பமே மீதூரக் கண்டும் - வாழ்க்கையில் துன்பமே மேலும் மேலும் மிகுந்து வருதல் உணர்ந்தும் ; துறவு உள்ளார் - பற்றில்லாமலிருத்தலை நினையாராய், இன்பமே காமுறுவர் ஏழையார் - இடையே தினையளவாக உண்டாகும் இன்பமே விரும்பி நிற்பார் மனவலிமையில்லாதார், இன்பம் இசைதொறும் - ஆனால் அச் சிற்றின்பம் கிடைக்கும்போதெல்லாம், அதன் இன்னாமை நோக்கி - அதனால் உண்டாகும் பெருந்துன்பங் கருதி, பசைதல் பரியாதாம் மேல் - அதனை விரும்புதலை மேற்கொள்ளார் மேலோர்.

(க-து.) வாழ்க்கையிற் சிறிய இன்பத்துக்காகப் பெருந்துன்பம் உண்டாதலின், அச் சிற்றின்பத்திற் பற்று வைக்கலாகாது,
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Fri Jul 12, 2013 6:29 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Jul 13, 2013 8:30 am

சினம் இன்மை

அறத்துப்பால்
7. சினமின்மை
(என்றது, குற்றம் ஒருவனிடத்து உண்டானபோதும் சினமில்லாமையை உணர்த்துவது)


மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.


(பொ-ள்.) மதித்து இறப்பாரும் இறக்க - தம்மைப் பொருள் செய்து நடப்பாரும் நடக்கட்டும் ; மதியா மிதித்து இறப்பாரும் இறக்க - அங்ஙனம் மதியாமல் கீழ்ப்படுத்தி நடப்பாரும் நடக்கட்டும், மிதித்து ஏறி ஈயும் தலைமேல் இருத்தலால் - ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் இருத்தலினால், அஃது அறிவார் -அந் நிலைமையைத் தெரிந்து சிந்திக்குஞ் சான்றோர், காயும் கதம் இன்மை நன்று - எரிந்து விழுஞ் சினமிலராயிருப்பது நல்லது.

(க-து.) பிறர் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் சான்றோர் சினம் கொள்ளலாகாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jul 14, 2013 9:03 am

62 தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.

(பொ-ள்.) மண்டி அடிபெயராது ஆற்ற இளிவந்த போழ்தின் - அடர்ந்து அடிதவறாமல் அடுக்கி மிக்க இழிவு நேர்ந்த காலங்களில், முடிகிற்கும் உள்ளத்தவர் - தாம் மேற்கொண்ட காரியங்களை முடிக்கும் ஊக்கமுடைய நல்லோர், தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரை - அழியாச் சிறப்பினையுடைய தமது இனிய உயிரை, தங்காது கண்டுழியெல்லாம் துறப்பவோ - சிறிதே இடர் கண்ட நேரங்களிலெல்லாம் பொறுத்துத் தாங்கிக்கொண்டிராமல், சினந்து விட்டு விடுவார்களோ?

(க-து.) இடர்கள் கண்டு சினத்தால் உயிரை விடுதல் ஆகாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Sun Jul 14, 2013 11:39 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jul 15, 2013 10:28 am

63 காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாத தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

(பொ-ள்.) காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - அடக்காமல் சினத்தினால் ஒருவன் தன் வாய்விட்டுச் சொல்லியே சினச்சொல், ஓவாது தனனைச் சுடுதலால் - என்றைக்குமே தன்னை வருத்துதலால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் - இடைவிடாமல் ஆராய்ந்து பண்பட்ட கேள்வி ஞானத்தையுடையவர்கள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து - மனம் வெதும்புதலால் அமைந்த சுடுமொழிகளைச் சினந்து சொல்லமாட்டார்கள்.

(க-து.) சினப்பது தன்னையே சுடுமாதலால், பண்பட்ட உள்ளமுடையோர் சினங்கொள்ளார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jul 16, 2013 8:05 am

64 நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்தனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

(பொ-ள்.) நேர்த்து நிகரல்லார் - சமானமில்லாதவர்கள் தம்மைச் சமானாமாகக் கருதிக்கொண்டு, நீரல்ல சொல்லியக்கால் - தகைமையல்லாத சொற்களைச் சொன்னால், வேர்த்து வெகுளார் விழுமியோர் - சிறந்தவர்கள் மனம் புழுங்கிச் சினந்து கொள்ளமாட்டார்கள் ; ஆனால் ; கீழ் - கீழ்மக்கள், ஓர்த்து அதனை உள்ளத்தான் உள்ளி - ஆராய்ந்து அத் தகைமையற்ற சொல்லை மனத்தாற் பலகாலும் நினைத்து, உரைத்து உராய் ஊர் கேட்ப - ஊரிலுள்ளவர்கள் கேட்கும்படி அங்கங்கும் சொல்லித் திரிந்து, துளளித் தூண்முட்டும் - அதனால் மேன்மேலும் பெருகுங் கோபத்தினால் உடம்பு துடித்து அருகிலிருக்குந் தூணில் மோதிக் கொள்வார்கள்.

(க-து.) தகுதியல்லாதவர்கள் சொல்லும் சொற்களுக்குச் சான்றோர் சினந்து கொள்ளமாட்டார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jul 17, 2013 9:37 am

65 இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

பொ-ள்.) இளையான் அடக்கம் அடக்கம் - இளமைப் பருவமுடையவனது புலனடக்கமே அடக்கமெனப்படும், கிளைபொருளில்லான் கொடையே கொடைப்பயன் - கிளைக்கும் பொருளில்லாதவனது ஈகையே பயனெனப்படும் ஈகையாம் (அவைபோல) எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை - எதனையும் அழிக்க வல்ல வலிமையறிவினை யுடையோன் பொறுத்துச் சினம் ஆறும் பொறுமையே பொறுமை யெனப்படும்.
(க-து.) தமது சினம் செல்லக்கூடிய இடங்களிற் பொறுத்துக் கொள்ளுதலே சிறந்த பொறுமையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 8:09 am

66 கல்லெறிந் தன்ன கயர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.

பொ-ள்.) ஒல்லை இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் - மந்திரித்து இட்ட திருநீற்றால் உடனே படம் சுருங்கிச் சினம் ஒடுங்கிய நல்ல பாம்பைப்போல, தத்தம் குடிமையான் வாதிக்கப்பட்டு - தங்கள் உயர்குல ஒழுக்கத்தால் தடை செய்யப்பட்டு, கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல் - கற்களை வீசினாற் போன்ற கீழ்மக்கள் வாயிற்றோன்றிய துனபச் சொற்களை, எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர் - அனைவரும் அறியப் பெரியோர் பொறுத்துக் கொண்டு தமது மேற்கோளை நடத்திச் செல்வர்.

(க-து.) தமது உயர்நிலை கருதிச் சான்றோர், கீழ் மக்கள் சொற்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jul 19, 2013 9:22 am

67 மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.

(பொ-ள்.) மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு - தமக்குப் பகைவராயிருநது அப் பகைமையைப் பாராட்டுகின்றவர் பொருட்டு, ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையோர் - தாமும் அப்பகைமையைப் பெரியோர்கள் மேற்கொள்ளாமையை அறிவுடையோர் மாட்டாத தன்மை என்று சொல்லி இகழமாட்டார்கள் ; ஆற்றாமை நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் - தம்முடைய தீய தன்மைகளை அடக்கிக் கொள்ளமாட்டாமல் எதிர்த்து அப்பகைவர் துன்பங்கள் செய்தால், தாம் அவரைப் பேர்த்து இன்னா செய்யாமை நன்று - தாம் அவர்களுக்குத் திருப்பித் துன்பங்கள் செய்யாமை நல்லது.

(க-து.) தமக்குத் துன்பஞ் செய்தவர்களுக்குத் தாமுந் துன்பஞ் செய்வது ஆற்றலன்று ; துன்பஞ் செய்யாமையே ஆற்றலாவது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Jul 20, 2013 8:39 am

68 நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.


(பொ-ள்.) நெடுங் காலம் ஓடினும் - நீண்ட காலம் சென்றாலும், நீசர் வெகுளி - கீழ்மக்கள் கோபம், கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - தணியுங்காலம் இல்லாமலே பெருகிக்கொண்டு போகும் ; ஆனால், அடுங் காலை நீர் கொண்ட வெப்பம்போல் - காய்ச்சுங் காலத்தில் தண்ணீர் அடைந்த வெப்பத்தைப்போல, தானே தணியும் சீர் கொண்ட சான்றோர் சினம் - பெருமை மிக்க சான்றோரது கோபம் தானே தணிந்துவிடும்..

(க-து.) கோபம் விரைவில் தணிந்துவிட வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jul 21, 2013 8:29 am


உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். 69

தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவா¢டம் இல்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jul 22, 2013 8:03 am

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. 70

சினம் கொண்டு நாய் தமது உடம்பைக் கடிப்பதைப் பார்த்தும், அதற்குப் பதிலாகத் தம் வாயினால் நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகில் இல்லை! அதுபோல, தகுதியின்றி, கீழ் மக்கள் கீழ்த்தரமான சொற்களைச் சொல்லும்போது மேன் மக்கள், அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வார்களோ? சொல்லமாட்டார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 4 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 25 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum